கதை கதையாம் - அனாமிகா
ருக்குவா, கொக்கா ?
*************
பகல் மணி பதினொன்று. உண்ட களைப்பில் உருண்டு கொண்டிருந்த ருக்கு என்கிற ருக்மணிக்கு காலிங்பெல் சப்தம் நாராசமாய் ஒலித்தது. வெளியில் போய் 'டபக்' என்று கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டினாள். கூரியரில் தபால் வந்திருந்தது.
"யாரிது? பணம் செலவு செய்து கூரியரில் எனக்கு தபால் அனுப்புவது?" யோசித்தபடி அதைப் பிரித்துப் படித்த ருக்கு, இன்ப அதிர்ச்சியில் "நாயகன்" கமல் போல குரல் எழுப்ப, தூங்கிக் கொண்டிருந்த அவள் மாமனார் அலறிப் புடைத்து ஓடி வந்தார்; கையில் தபால் வைத்தபடி
நின்றிருந்த ருக்குவைப் பார்த்தார்.
"ஐயோ! ருக்கு, யாருக்கு என்ன ஆச்சு! சொல்லிட்டு அழும்மா!"
"மாமா! கொஞ்சம் சும்மாயிருங்கோ" தான் எழுப்பிய சந்தோஷக் கூச்சல் மாமாவுக்கு சோகராகமாய் புரிந்திருப்பது விளங்க, சுர்ரென்று கோபம் ஏறியது ருக்குவுக்கு.
"யாருக்கும் எதுவும் ஆகலே; "கானாபானா" கம்பெனி நடத்தின அதிர்ஷ்டக் குலுக்கல்லே எனக்கு first prize விழுந்திருக்கு!"
தலையை நிமிர்த்தி பெருமையாய் மாமனாரைப் பார்க்க,
"ரொம்ப சந்தோஷம்; என்ன prize?"
"அது வந்து....என்னன்னு போடலே; பரிசுக் கூப்பன்னு மட்டும் போட்டிருக்கு"
ருக்கு இழுக்க, "சரி,சரி" என்று அவர் மீண்டும் தூங்கக் கிளம்ப,
"மாமா! கொஞ்சம் இருங்கோ; ஆத்தைப் பார்த்துக்குங்கோ. நான் போய் அம்புஜத்து கிட்ட மட்டும் சொல்லிட்டு நிமிஷமா வந்துடறேன்"
பதிலுக்கு காத்திராமல் கிளம்பி விட்டாள் ருக்கு.
*****************
சேதி கேட்ட அம்புஜம்," ருக்கு, prize கொடுக்கிற நிகழ்ச்சி டி.வி-ல வருமோல்லியோ? நீ ஒரே நாள்ல பிரபலமாய்டுவே, பாரேன்" என, ருக்கு கற்பனை வானில் பறந்தாள்.
'அம்புஜம், நாழியாறது கிளம்பணும்' என்று சொல்லிக் கொண்டே ஒரு மணி நேரம் ஓட்டிய பிறகு பக்கத்து வீட்டு பார்வதி, அடுத்த வீட்டு அலமு என ஒவ்வொருவராக எட்டிப் பார்த்து விட்டு ( ருக்கு மேல் தப்பே இல்லை; பாவம்; அவள் எட்டிப் பார்த்து விட்டு வருவதற்குள் கடிகாரத்தில் சின்ன முள் இரண்டை எட்டிப் பார்த்து விட்டது!) அவள் வீட்டு வாசற்படியில் கால் வைக்கும் சமயம் தானா, கோடி வீட்டு வனஜா ஞாபகம் வர வேண்டும்?! கூடவே போன மாதம் தான் வனஜா பிரபல பெண்கள் பத்திரிகை 'மங்கையர் மாலை' நடத்திய கோலப்போட்டியில் பரிசு வாங்கி பீற்றிக் கொண்டதும் நினைவில் உறைக்க, முன் வைத்த காலை பின் வைத்து, ருக்கு வனஜா வீட்டுக்கு விரைந்தாள்.
ருக்கு சொல்லச் சொல்ல, வனஜாவுக்கு வயிறு எரிந்தது; புதுவிதமாக இருக்க வேண்டுமென்று, இரண்டு வாரங்கள் தான் மூளையை கசக்கி கோலம் போட்டு பரிசு வாங்க, இந்த ருக்கு எதுவுமே செய்யாமல் அதிர்ஷ்டத்தில் பரிசு வாங்குகிறாளே? எப்படிப் பழி வாங்க? பரபரவென் மனது துடிக்க, யோசனை உருவானது.
ருக்கு ஏற்கனவே சமையல் பைத்தியம்; சாம்பார் பண்ணினால் ரசம் மாதிரி இருக்கும்; ரசம் வத்தக்குழம்பு மாதிரி; இந்த லட்சணத்தில் புதுதினுசாக ஏதாவது செய்கிறேன் என்று அடிக்கடி அனைவரையும் சோதனைக்கு ஆளாக்குவதில் பிடிவாதம் அதிகம்!
"ருக்கு, நீ prize வாங்கினதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்; கோலப் போட்டியில பாவம், உனக்கு ஆறுதல் பரிசு கூட தர்லியே; ஏதோ இதானும் கிடைச்சுதே" என்று குத்திக் காட்டிய வனஜா,
"ஆமாம்; இந்த ஸ்வீட் நியூஸ் சொல்லி இருக்கே! என்ன ஸ்வீட் பண்ணப் போறே?" என்று கேட்க,
ருக்கு அப்பாவியாய் 'சின்னத்தம்பி' ஸ்டைலில் விழித்தாள்.
"ஆமாம், என்ன ஸ்வீட் பண்ணலாம்?"
வனஜாவையே கேட்க, தான் யோசனை பண்ணியிருந்த செய்முறையை அழகாக சொன்னாள். ருக்கு நன்றி சொல்லி கிளம்பியதும், வனஜா பி.எஸ். வீரப்பா பாணியில் கடகடவென்று சிரித்தாள்.
"ருக்கு! ஸ்வீட்டா பண்ணப் போறே! இந்த ஸ்வீட் பண்ண உனக்கு ஆகிற செலவு நீ வாங்கபபோற பரிசை விட டபுளா இருக்கும்; உன்னோட 'கைப்பக்குவத்துல' அது ஸ்வீட்டும் இல்லாம, அல்வாவும் இல்லாம, உன்னை பாடுபடுத்தலே, என் பேரு வனஜா இல்லே" கறுவினாள்.
********************
ருக்கு வீட்டுக்குள் நுழைந்த போது மணி மூன்று. மாமா காஃபி குடித்துக் கொண்டிருந்தார். ருக்கு கண்டு கொள்ளாமல் நழுவி, கடைக்குப் போய் சாமான் வாங்கி வந்து கிச்சனில் பரத்தினாள். நெய், முந்திரி, பாதாம், பிஸ்தா என்று பரப்பி வைக்கப்பட்டிருந்த அயிட்டங்களைப்
பார்த்ததும் மாமாவுக்கு வயிற்றில் ஏதோ குடைந்தது. "யாரோ பொறாமை பிடித்து ருக்குவை ஸ்வீட் பண்ணத் தூண்டிவிட்டு இருக்கிறார்கள். நாம் என்ன சொன்னாலும் அவள் கேட்கப் போவதும் இல்லை; ஆண்டவா, என் பையனையும், அவன் பர்சையும், எங்க எல்லார் வயித்தையும் நீ தான் காப்பாத்தணும்" என இறைவனிடம் வேண்டி விட்டு ஒதுங்கிக் கொண்டார்.
ருக்குவின் ஸ்வீட் படலம் கோலாகலமாகத் தொடங்கியது. வனஜா சொன்னபடி "Instant mix" பாக்கெட்டுகளை பாத்திரத்தில் போட்டு, நெய் விட்டு, முத்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளை பொடி செய்து கலந்து உருண்டைகள் பிடித்தாள். பிறகு சர்க்கரைப் பாகு வைத்து. அவற்றை
ஒவ்வொன்றாகப் போட, படபடவென்று அவை உடைய, கூடவே டமார் என்று சப்தம்! ருக்குவின் இதயம் சுக்குநூறாக நொறுங்கிய ஓசை அது!!
(ருக்குவின் முயற்சி தொடரும்....)