உக்காரை

Status
Not open for further replies.

Brahmanyan

Active member
உக்காரை

தீபாவளி பண்டிகையன்று தெற்கத்து சீமையில் செய்யப்படும் ஓர் இனிப்பு பண்டம் உக்காரை. நாங்கள் கோவையை சேர்ந்தவர்களாகிலும் எனது தாயார் முக்கியமான செய்யும் இனிப்பு ஒக்காரை அல்லது உக்காரை. இதோ அந்த இனிப்பு பண்டத்தை செய்முறையை கொடுத்திருக்கிறேன்.

உக்காரை
தேவையான பொருட்கள்:

1.பாசிப்பருப்பு - 1ஆழாக்கு
(சிலர் கடலைப்பருப்பை உபயோகப்படுத்துகிறார்கள் )
2.பச்சரிசி ரவை -1ஆழாக்கு
3.வெல்லம் - 600 கிராம்
4.தேங்காய் துருவியது - 1 மூடி
5.நெய் -1/4 கிலோ
6.முந்திரி -25 கிராம்
7.ஏலக்காய் - வேண்டிய அளவு.

செய்முறை :

முதலில் பாசிப்பருப்பை நன்கு சிவக்கும் வரை வறுத்து பதமாக வேகவைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பச்சரிசி ரவையை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை விட்டு, அதில் வெல்லத்தைப் போட்டு கொதிக்க விடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டி வைக்கவும்.

பின் அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றிக்காய்ந்ததும் முந்திரியை வறுத்து எடுத்துக்கொண்டு பிறகு அந்த நெய்யில் தேங்காய்த்துருவலை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு மீதி நெய்யையும் பாத்திரத்தில் ஊற்றி காய்ந்ததும் ரவையைக் கொட்டி நன்றாக வறுத்துக்கொண்டு பாசிப்பருப்பு வேகவைத்த தண்ணீரோடு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் கொதிக்கவைத்து ரவையில் ஊற்றிக் கிளறவும் .ரவை நன்றாக வெந்ததும் வடிகட்டிய பாசிப் பருப்பு,வதக்கிய தேங்காய் துருவலை. வடிகட்டிய வெல்ல கரைத்தலில் கொட்டிக்கிளறவும்.நன்றாக சுருண்டு வந்ததும் கிளறி, முந்திரி சேர்த்து, . பாசிப்பருப்பு உதிரியாக பிட்டு பதத்தில் இருக்கும்பொது இறக்கவும்.

நீங்களும் செய்துபாருங்களேன் !

ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
 
நான் பாடுபடாமலேயே உக்காரை கிடைத்தது சார்! எப்படித் தெரியுமா?

ராமின் அக்காவின் இனிய இல்லத்திற்கு வாழ்த்துக் கூறச் சென்றோம்!! :)
 
நான் பாடுபடாமலேயே உக்காரை கிடைத்தது சார்! எப்படித் தெரியுமா?

ராமின் அக்காவின் இனிய இல்லத்திற்கு வாழ்த்துக் கூறச் சென்றோம்!! :)

அம்மணி சிலருக்கு எப்போதுமே அத்ருஷ்டம் உண்டு அதில் நீங்களும் ஒருவர்.
இந்த நன் நாளில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

அன்புடன்
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
 
வணக்கம் சார்! எனக்கு அதிக நேரம் செலவாகும் பண்டங்களைச் செய்வதில் ஈடுபாடு கிடையாது! அதிவேக சமையலில்தான் விருப்பம்!

இம்முறை oats ஐ அடிப்படையாக வைத்து இரண்டு வகை இனிப்புகள் செய்தேன்! மிக நன்றாக வந்துள்ளன. Ideas இழையில் அதன்

செய்முறை கொடுத்துள்ளேன்!


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள்! :)


ராஜி ராம்.
 
Status
Not open for further replies.
Back
Top