V
V.Balasubramani
Guest
இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திர
இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை: மருந்துகளில் புதுவிதமான பித்தலாட்டம்
அடுத்த ஆண்டு தேதியிட்டு உற்பத்தியான மருந்து, இன்றே சந்தையில் கிடைக்கும் ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது. உயிர் காக்கும் மருந்துகள், இப்படி முன்கூட்டியே சந்தைக்கு வருவதன் மர்மம் என்ன என, நுகர்வோர் அமைப்புகள் கேள்வி எழுப்பி உள்ளன.
தர நிர்ணய விதிகள்:
பாக்கெட்டில் அடைக்கப்படும் பொருட்களை, பயன்படுத்தும் கால அளவு எவ்வளவு; உற்பத்தி செய்த நாள் எது என்பதை குறிப்பிட வேண்டும் என, இந்திய தர நிர்ணய விதிகள் வலியுறுத்துகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர் சடகோபன் கூறியதாவது:உடல் வலி மற்றும் காய்ச்சலை போக்கும், 'பாரசிட்டமால்' மாத்திரை பாக்கெட்டில், 'உற்பத்தி தேதி, 2016 - பயன்பாட்டு காலம், 2018 வரை' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. உயிர் காக்க உட்கொள்ளும் மருந்து, உற்பத்தி தேதிக்கு முன், எப்படி சந்தைக்கு வந்தது என, தெரியவில்லை.
இதுகுறித்து, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்புகளுக்கு புகார் செய்துள்ளோம். இந்த மருந்தை, சந்தையில் இருந்து உடனே அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1275432