ஆதித்ய ஹ்ருதயம்.

Status
Not open for further replies.
பலச்'ருதி.
ஏனமாபத்ஸு க்ருச்2ரேஷு
காந்தாரேஷு ப4யேஷு ச |
கீர்தயன் புருஷ: கச்'சின்
நாவ ஸீத3தி ராக4வா || (25)

ராகவா! எவராகிலும் ஆபத்துக் காலங்களிலும், கஷ்டங்களிலும், வன வனாந்திரங்களிலும், பயம் ஏற்படும் சமயங்களில் இதை
ஓது
வாராகில் அவர் தளர்ச்சி அடைய மாட்டார் .
 
பூஜயஸ்வைன மேகாக்3ரோ
தே3வ தே3வம் ஜக3த்பதிம் |
ஏதத் த்ரிகு3ணிதம் ஜப்த்வா
யுத்3தே4ஷு விஜயிஷ்யஸி || (26)


ஒருமைப் பட்ட மனத்துடன் தேவ தேவரும், உலக நாதரும் ஆன இவரைப் பூஜிப்பாய்!
இதை மூன்று முறை ஜெபித்து போரில் வெற்றி பெறுவாய்!
 
அஸ்மின் க்ஷணே மஹா பா3ஹோ
ராவணம் த்வம் வதி4ஷ்யஸி |
ஏவமுக்த்வா ததா3க3ஸ்த்யோ
ஜகா3ம ச யதா2க3தம் || (27)

"பெரும் தோள்கள் படைத்தவனே ! இந்தக் கணத்தில் நீ ராவணனை
வதைப்பாய் !" என்று கூறிவிட்டு, அகஸ்தியர் வந்த வழியே திரும்பிச்சென்றார்.
 
ஏதத் ச்2ருத்வா மஹா தேஜா
நஷ்ட சோ'கோsப4வத் ததா3 |
தா4ரயாமாஸ ஸுப்ரீதோ
ராக4வா ப்ரயதாத்மவான் || (28)

மஹா தேஜஸ்வியான ஸ்ரீ ராமர் இதைக் கேட்டு கவலை நீங்கியவர் ஆனார்.
மிகுந்த பிரியத்துடனும், தன்னடக்கத்துடனும் அதை மனத்தில் தாரணை செய்து கொண்டார்.
 
ஆதி3த்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து
பரம் ஹர்ஷம் அவாப்தவான் |
த்ரிராசம்ய சு'சிர் பூ4த்வா
த4னுராதா4ய வீர்யவான் || (29)

வீர்யவான் ஆகிய ஸ்ரீ ராமபிரான் மும்முறை ஆசமனம் செய்து பரிசுத்தர்
ஆகி;; வில்லை ஏந்திக் கொண்டு ; சூரியனை நோக்கி ஜபம் செய்து பரமானந்தத்தை அடைந்தார்.
 
ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா
யுத்3தா4ய ஸமுபாக3மத் |
ஸர்வ யத்நேன மஹதா
வதே4தஸ்ய த்4ருதோப4வத் || (30)

உள்ளக் களிப்புடன் ராவணனை நோக்கி போர் செய்ய நெருங்கினார்.
எல்லா முயற்சிகளையும் செய்து அவனை வதம் செய்வதில் உறுதி கொண்டவர் ஆனார்.
 
அத2 ரவி ரவத3ன் நிரீக்ஷ்ய ராமம்
முதி3த மனா :பரமம் ப்ரஹ்ருஷ்யமாண :|
நிசி' சரபதி ஸம்க்ஷயம் விதி3த்வா
ஸுரக3ண மத்4யக3தோ வசஸ்த்வரேதி || (31)

அப்போது தேவ கணங்களின் நடுவிலிருந்த சூரிய பகவான் உவகை பூத்து உள்ளக் களிப்புடன் ஸ்ரீ ராமரை நோக்கி ராவண வதத்திற்கு அனுக்ரஹித்து, "விரைந்து முடிப்பாக!" என்றார்.

[வால்மீகி மகரிஷி அருளிய ஆதி காவியமான ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ஆதித்ய ஹ்ருதயம் என்ற பெயர் பெற்ற நூற்று ஏழாவது ஸர்க்கம் முற்றுப் பெற்றது ].

சா2யா ஸுவர்சலாம்பா3 ஸமேத ஸ்ரீ ஸூர்ய நாராயண ஸ்வாமினே நம :
 
Status
Not open for further replies.
Back
Top