ஆடிப்பெருக்கு

praveen

Life is a dream
Staff member
ஆடிப்பெருக்கு

மங்கலப் பொருட்களை கொடுத்தும், பெற்றும் மகிழ்ச்சியடையுங்கள்....


திருவிடைமருதூர்: நாளை ஆடிப்பெருக்கு விழாவுக்காக மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை தீவிரமடைந்துள்ளது.


ஆடிப்பெருக்கன்று காவிரிக்கரையில் இளம் பெண்களும், புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான பெண்கள் புத்தாடை உடுத்திக் கொண்டு பழங்கள், அவல், ஊறவைத்த இனிப்பு கலந்த அரிசி, புதிய மாங்கல்ய மற்றும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து மஞ்சள் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் முன் படையல் செய்து வழிபடுவார்கள்.


சிறுவர்கள் படையலிட்ட மஞ்சள் கயிற்றினை கழுத்து மற்றும் கைகளில் ஒருவருக்கொருவர் உற்சாகத்துடன் கட்டிக் கொள்வார்கள்.


ஆடிப்பெருக்கு விழா 03.08.2018 கொண்டாப்படுவதையொட்டி திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், ஆடுதுறை, நாச்சியார்கோவில் பந்தநல்லூர், கதிராமங்கலம், சோழபுரம் உள்ளிட்ட கடைவீதிகளில் காதோலை கருகமணி, மஞ்சள், குங்குமம், சந்தனம், மாங்கல்ய கயிறு, மஞ்சள் கயிறு மற்றும் அவல், கடலை பொரி, பேரிக்காய், கொய்யா, மாம்பழம், விளாம்பழம், வாழைப்பழம், மாதுளை, ஆரஞ்சு போன்ற பழ வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


மேலும் ஆடிப்பெருக்கன்று குழந்தைகள் இழுத்து செல்லும் சப்பரம் ஆங்காங்காங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.


கலர் அன்னம் செய்து காவிரித்தாய்க்கு வழிபட்டு உண்டு மகிழ்ந்து உற்சாகமாக பெருக்கெடுத்து ஓடும் நன்நாள்


#வாழீர்_வளமுடன்
 
Back
Top