ஆகாச தீபம், யம த்விதியை.

Status
Not open for further replies.

kgopalan

Active member
ஆகாச தீபம், யம த்விதியை.

4-11-13 முதல் 2-12-13 முடிய கடனை போக்கும் ஆகாச தீபம்.

நிர்ணய சிந்து 146. கார்த்திகே தில தைலேன ஸாயங்காலே ஸமாகதே
ஆகாச தீபம் யோ தத்யாத் மாஸமேகம் ஹரிம் ப்ரதி மஹதீம் ஶ்ரீய மாப்நோதி ரூப செளபாக்கிய ஸம்பதம்.

கார்த்திகை 30 நாட்களும்((சாந்திரமான மாதம்)) தினசரி சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளையில் தனது வீட்டு மொட்டை மாடி போன்ற உயரமான இடத்திலும் ஏற்றலாம் .தனது வீட்டுக்கு அல்லது ஆலயத்துக்கு அருகில் வீதியில் உயரமான ஸ்தம்பம் நட்டு

அதன் நுனியில் எட்டு திரியில் நல்ல எண்ணைய் தீபம் ஏற்ற வேண்டும். எட்டு திக்கிற்கும் எட்டு திரிகள் வெளிச்சம் காட்ட வேண்டும்..

4-11-13 அன்று மாலை சூர்யன் மறைந்த பின்னர் ஸ்வாமி சன்னதியில் அஹம் ஸகல பாபக்ஷய பூர்வகம் ஶ்ரீ ராதா தாமோதர ப்ரீதயே அத்ய ஆரப்ய கார்த்திக அமாவாஸ்யா பர்யந்தம் யதா சக்தி ஆகாச தீப தானம் கரிஷ்யே


என்று சங்கல்பம் செய்துகொன்டு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி உயரமான இடத்தில் “”தாமோதராய நபஸி துலாயாம் லோலயா ஸஹ ப்ரதீபம் தே ப்ரயஸ்சாமி நமோ நந்தாய வேதஸே” (நிர்னய சிந்து).

என்று சொல்லி தீபத்தை வைத்து நமஸ்காரம் செய்யலாம். மாதம் முழுவதும் ஏற்ற முடியாதவர்கள் முடிந்த நாட்களில் அல்லது ஒரு நாளாவது ஏற்றலாமே.

இதனால் மஹா விஷ்ணு சந்தோஷ படுவார். அனைத்து கடன்களும் நீங்கும். லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும்..


யம த்விதியை 5-11-13. ஸூர்யனின் பிள்ளகள் யமனும் யமுனா நதியும். ..யமனுக்கு தன் சகோதரியான யமுனையிடம் இருக்கும் அன்பும் யமுநா நதிக்கு தனது சகோத்ரன் யமனிடம் இருக்கும் அன்பும் மிக உயர்வானது.

ஸ்நேஹேந பகினி ஹஸ்தாத் போக்தவ்யம் புஷ்டி வர்த்தனம்
தாநாநி ச ப்ரதே யாநி பகினீப்யோ விசேஷத:

யாது போஜயதே நாரீ ப்ராதரம் யுக்மகே திதெள அர்ச்சயேச்
சாபி தாம்பூலைர் ந ஸா வைதவ்ய மாப்நுயாத். (ப்ருஹ்மாண்ட புராணம்)


எந்த பெண் தனது ஸஹோதரரை யம த்வீதியை நாளில் நல்ல உணவு, வஸ்த்ரம், தாம்பூலம் முதலியவைகளால் ஸந்தோஷ பட செய்கின்றாளோ அந்த பெண் வைதவ்யத்தை ஒரு போதும் அடைய மாட்டாள். என க்கூறுகிறது.ப்ருஹ்மாண்ட புராணம்.

ஸஹோதர ஸஹோதரிகள் ஒருவருக்கொருவர் மகிழ்விக்க செய்ய வேன்டிய நாள் தான் இந்த யமத்வீதியை நாள். ஸஹோதரீ வீட்டிற்கு போக முடியாதவர்கள் பணமாக அனுப்பி வைக்கலாம்.

உடன் பிறந்த சஹோதரீ இல்லாதவர்கள் தனது பெரியப்பா, சிற்றப்பா மாமா, பெரியம்மா சித்தி பெண் முதலியவர்களை உங்கள் உடன் பிறந்த ஸஹோதரியாக பாவிக்கலாம்.
 
Status
Not open for further replies.
Back
Top