தீபாவளி; கோவத்ஸ த்வாதசி யம தீபம். ஆகாச தீப&#

Status
Not open for further replies.

kgopalan

Active member
தீபாவளி; கோவத்ஸ த்வாதசி யம தீபம். ஆகாச தீப&#

31-10-2013 வியாழ கிழமை கோவத்ஸ த்வாதசி.

ஐப்பசி மாத க்ருஷ்ண பக்ஷ த்வாதசிக்கு கோவத்ஸ த்வாதசி என்று பெயர்..
இன்று கன்று குட்டியின் கூடிய பசுவை பூஜை செய்ய வேன்டும்.

பசுமாடு, கன்றுக்குட்டி இரண்டையும் குளிப்பாட்ட வேண்டும். சந்தனம், குங்குமத்தால் புஷ்பங்களால் அலங்கரிக்கவும் .பூஜை செய்யவும். வைக்கோல் புல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுக்கவும்.

இன்று மாத்ரம் கன்றுக்குட்டியை முழுவதும் பால் குடிக்க விட்டு விடவும். பால் கறக்க வேண்டாம். நிர்ணய சிந்து-147 “கோக்ஷீரம், கோக்ருதம் சைவ ததி தக்ரம் ச வர்ஜயேத்”” என்று சொல்கிறது.

இன்று மட்டும் பசுவின்,- பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் சாப்பிட வேண்டாம் என்கிறது. பசு மாட்டின் கழுத்து பகுதியை சொறிந்து கொடுக்கலாம்.

கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பசு மாட்டிற்கு சாப்பிட புல் தர வேண்டும்.” “ஸுரபி த்வம் ஜகன்மாதர் தேவி விஷ்ணுபதே ஸ்திதா ஸர்வ தேவ மயே க்ராஸம் மயா தத்தம் இமம் க்ரஸ.””

கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பசுவை வேண்டி கொள்ள வேண்டும்.
“ஸர்வதேவ மயே தேவி ஸர்வ தேவைஸ்ச ஸத்க்ருதா
மாதர் மமா அபிலஷிதம் ஸபலம் குரு நந்தினி.”

இதனால் குடும்பத்தில் அழியாச்செல்வமும் மங்களமும் உண்டாகும்.


1-11-2013. வெள்ளிக்கிழமை. ப்ரதோஷம், மாத சிவராத்திரி; தன்வந்தரி ஜயந்தி, யம தீபம்..

தன்வந்தரி ஜயந்தி.: மஹா விஷ்ணுவின் ஒரு அவதாரம் இது. கையில் அமிர்த கலசத்துடன் பாற்கடலில் தோன்றியவர். தன்வந்தரி பகவான்.
ஆயுர்வேத வைத்யத்தை ஸ்தாபித்த இவரை இன்று பூஜை, அர்ச்சனை, ஸ்தோத்ரம் சொல்லி வழிப்பட்டால் தீராத அனைத்து நோய்களும் விலகும்.


யம தீபம்: 1-11-13 வெள்ளி இரவு சூர்ய அஸ்தமனத்திற்கு பின் ஸ்காந்த மஹா புராணத்தில் கூறிய படிகீழ் கண்ட படி செய்ய வேண்டும்.

“”ஆஷ்வினஸ் யாஸிதே பக்ஷே த்ரயோதச்யாம் நிசாமுகே யம தீபம் பஹிர் தத்யாத் அப ம்ருத்யுர் விநஸ்யதி”’.

ஆஸ்வின மாதம் க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதி நாளுக்கு யம தீப த்ரயோதசி எனப்பெயர்.

அன்று மாலை யம தர்ம ராஜாவைக் குறித்து ,வீட்டுக்கு வெளியில் நல்ல எண்ணைய் விட்டு விளக்குகள் ஏற்றி வைத்தல்
, அறியாமல் செய்த பாபங்களையும் ம்ருத்யு பயத்தையும் போக்கும்.

ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டில் எவ்வளவு நபர்கள் வஸிக்கிறார்களோ , தலா ஒவ்வொரு மண் விளக்கு வீதம் தன் வீட்டு வாசலிலோ அல்லது பக்கத்தில் உள்ள கோவிலிலோ அவரவர்கள் விளக்கு ஏற்ற வேண்டும்.

“மம சர்வாரிஷ்ட நிவ்ருத்தி பூர்வகம் அபம்ருத்யு நிவாரணத்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீப தாநம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ளவும்.

அவரவர்கள் அவரவர் தீபத்திற்கு நமஸ்காரம் செய்யவும். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்தித்து கொள்ளவும்.

“” ம்ருத்யுநா பாச தண்டாப்யாம் காலேந ச்யாமயா ஸஹ த்ரயோதஸ்யாம் தீப தாநாத் ஸூர்யஜ: ப்ரீயதாம் மம”.

ஸூர்ய புத்ரனான யமன் இந்த த்ரயோதசி தீப தாநத்தால் சந்தோஷ மடையட்டும். என்பது பொருள்.



இது வியாதியற்ற நீண்ட ஆயுளை கொடுக்கும். விபத்து நோய் வராமல் பாதுகாக்கும்.
 
தீபஆவளிநிர்ணய சிந்து—147:--- “”தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவள்யாஸ் சதுர்தசீம் ப்ராத: ஸ்நாநம் து ய: குர்யாத் ஸ: யம லோகம் ந பச்யதி””.அதிகாலை 5-30 மணிக்கு முன்பாக நல்லெண்ணை தேய்த்து வெந்நீரில் ஸ்நாநம் செய்ய வேன்டும்.. புதிய வஸ்த்ரம் தரிக்கவும். பட்டாசு வெடித்து சந்தியா வந்தனம் , பூஜை செய்து உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.ஸ்நாநம் செய்யும்போது அபாமார்கம் என்னும் நாயுருவி செடியை கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி மூன்று முறை தலையை சுற்றி தூர எறிந்து விட வேண்டும். இதனால் நரக பயம் ஏற்படாது.நிர்ணய சிந்து-148----அபாமார்க மயே தும்பீம் ப்ரபுன்னாட மதாபரம்ப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாய வைஸீதா லோஷ்ட ஸமாயுக்த ஸ கண்டக தளான்வித ஹர பாபம் அபாமார்கம் ப்ராம்யமாண: புந:புந; தீபோத்ஸவ ச்துர்தஸ்யாம் கார்யம் து யமதர்பணம் என்னும்படி தீபாவளியன்று காலை 7 மணிக்குள் சந்தியாவந்தனம் முடித்துவிட்டு யம தர்ம ராஜாவுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.கிழக்கு நோக்கி அமரவும். ஆச்வயுஜ க்ருஷ்ண சதுர்தஸீ புண்ய காலே யம தர்பணம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ளவும். சுத்த ஜலத்தால் . தர்பணம் செய்யவும். மஞ்சள் கலந்த அக்ஷதை, பூணல் வலம். உபவீதம்.தேவ தர்பணம்.யமாய தர்மராஜாய ம்ருத்யவே தாந்தகாய ச, வைவஸ்வத காலாய சர்வபூத க்ஷயாய ச ஒளதும்பராய தக்னாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாயவை நம: இதயே தர்பணமாக செய்ய வேண்டும்.1. யமாய நம: யமம் தர்பயாமி.2. தர்மராஜாய நம; தர்மராஜம் தர்பயாமி3. ம்ருத்யவே நம: ம்ருத்யும் தர்பயாமி.4. அந்தகாய நம: அந்தகம் தர்பயாமி.5. வைவஸ்வதாய நம: வைவஸ்வதம் தர்பயாமி6. காலாய நம: காலம் தர்பயாமி.7. சர்வபூத க்ஷயாய நம: ஸர்வபூத க்ஷயம் தர்பயாமி.8. ஒளதும்பராய நம; ஒளதும்பரம் தர்பயாமி.9. தத்நாய நம: தத்நம் தர்பயாமி10. நீலாய நம: நீலம் தர்பயாமி11. பரமேஷ்டிநே நம: பரமேஷ்டிநம் தர்பயாமி.12. வ்ருகோதராய நம: வ்ருகோதரம் தர்பயாமி.13. சித்ராய நம: சித்ரம் தர்பயாமி14. சித்ர குப்தாய நம: சித்ரகுப்தம் தர்பயாமி..ஜீவத் பிதாபி குர்வீத தர்பணம் யம பீஷ்மயோ: என்னும் வசனப்படி தந்தை இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்ய வேண்டும்.இதனால் பாபங்கள் யம பயம் விலகி அபம்ருத்யு மற்றும் வ்யாதியும் விலகும்..தீபாவளி யன்று மாலையில் தீபம்
 
Status
Not open for further replies.
Back
Top