அன்னையின் ஆயிரம் நாமங்கள்.

Status
Not open for further replies.
361. தமோபஹாயை = தாமஸ குணத்தை நீக்குபவள்.

362. சித்யை = ஞான வடிவானவள்.

363. தத்பத3 லக்ஷ்யார்த்தாயை = 'தத்' என்ற சொல்லின் குறியாக இருப்பவள்.

364. சிதே3கரஸ ரூபிண்யை = ஞானானந்த வடிவானவள்.

365. ஸ்வாத்மானந்த3லவீ பூ4த ப்3ரஹ்மாத்3யானந்த3 ஸந்தத்யை = எப்போதும் எங்கும் பரமானந்தத்தில் திளைத்து இருப்பவள்.

366. பராயை = 'பரா' என்ற சொல்லின் ஸ்வரூபம் ஆனவள்.

367. ப்ரத்யக்சிதீரூபாயை = அந்தர் முக திருஷ்டியில் அறிவு வடிவாக இருப்பவள்.

368. பச்'யந்த்யை = 'பச்யன்தீ' என்னும் ஓசை வடிவானவள்.
 
369. பரதே3வதாயை = எல்லா தேவ, தேவதைகளுக்கும் மேலானவள்.

370. மத்4யமாயை = 'மத்யமா' என்னும் வாக்கு வடிவத்தில் இருப்பவள்.

371. வைகரீ ரூபாயை = 'வைகரீ' என்னும் வாக்கு வடிவத்தில் இருப்பவள்.

372. ப3க்த மானஸ ஹம்ஸிகாயை = பக்தர்களின் மனதில் வீற்று இருக்கும் அன்னப் பறவைக்கு ஒப்பானவள்.

373. காமேச்'வர ப்ராணநாட்3யை = காமேஸ்வரருடைய உயிர் நாடி ஆனவள்.

374. க்ருதக்ஞாயை = நிகழும் அனைத்தையுமே அறிந்து இருப்பவள்.

375. காமபூஜிதாயை =மன்மதனால் பூஜிக்கப் படுபவள்.

376. ச்'ருங்கா3ரரஸ ஸம்பூர்ணாயை = சிருங்கார ரசத்தை பூரணமாக அடைந்திருப்பவள்.
 
377. ஜயாயை = வெற்றி வடிவானவள்.

378. ஜாலன்த்3ரஸ்தி2தாயை = ஜாலந்தரம் என்ற க்ஷேத்திரத்தில் விஷ்ணு முகீ என்ற பெயருடன் விளங்குபவள்.

379. ஓட்3யாணபீட2நிலயாயை = ஓட்யாணபீடத்தில் வீற்று இருப்பவள்.

380. பி3ந்து3 மண்ட3ல வாஸின்யை = பிந்து மண்டலத்தில் வசிப்பவள் .

382. ரஹோயாக3 க்ரமாராத்4யாயை = ரஹோயாகம் என்னும் முறையோடு கூடின வழிபாட்டினால் ஆராதிக்கப்படுகின்றவள்.

382. ரஹஸ்தர்ப்பண தர்பிதாயை = ரஹஸ்யமான தர்பணத்தால் மகிழ்கின்றவள்.

383. ஸத்3ய ப்ரஸாதி3ன்யை = முறையாக வழிபடுபவர்களுக்கு உடனடியாக அநுக்ரகம் செய்பவள்.

384. விச்'வஸாக்ஷின்யை = அகிலத்தில் நிகழும் அனைத்து செயல்களுக்கும் சாக்ஷி ஆனவள்.
 
385. ஸாக்ஷி வர்ஜிதாயை = தான் இருப்பதற்கு சாட்சியாக வேறு யாரும் இல்லாதவள்.

386. ஷட3ங்க3தேவதா யுக்தாயை = ஆறு அங்க தேவதைகளோடு கூடி இருப்பவள்.

387. ஷாட்3கு3ண்ய பரிபூரிதாயை = ஆறு குணங்கள் நிரம்பியவள்.

388. நித்யக்ளின்னாயை = எப்போதும் இரக்கத்தோடு கூடியவள்.

389. நிருபமாயை = தனக்கு நிகராக எவரும் இல்லாதவள்.

390. நிர்வாண ஸுகதா3யின்யை = முக்தி என்னும் நிலையான சுகத்தை அளிப்பவள்.

391. நித்ய ஷோட3சி'கா ரூபாயை = பதினாறு அற்புதமான விபூதிகள் பெற்றவள்.

392. ஸ்ரீ கண்டா2ர்த்த4 ச'ரீரிண்யை = பரமசிவனின் உடலில் சரிபாதியை தனதாக்கிக் கொண்டவள்.
 
393. ப்ரபா4வத்யை = பிரபைகளோடு கூடினவள்.

394. ப்ரபா4ரூபாயை = பிரபைகளையே தன் ஸ்வரூபமாக உடையவள்.

395. ப்ரஸித்3தா4யை = கண்கூடாக விளங்குபவள்.

396. பரமேச்'வர்யை = அனைத்துக்கும் ஈஸ்வரி ஆனவள்.

397. மூல ப்ரக்ருத்யை = அனைத்துக்கும் முதல் காரணமாக இருப்பவள்.

398. அவ்யக்தாயை = தோற்றத்தில் துலங்காதவள்.

399. வ்யக்தா வ்யக்த ஸ்வரூபிண்யை = தோன்றி இருப்பவை, தோன்றாது இருப்பவை ஆகிய அனைத்தின் வடிவு எடுத்தவள்.

400. வ்யபின்யை = எங்கும் நிறைந்திருப்பவள்.
 
401. விவிதா4காராயை = வேறு வேறு வடிவங்களை எடுத்திருப்பவள்.

402. வித்3யா அவித்3யா ஸ்வரூபிண்யை = வித்யா மற்றும் அவித்யா என்னும் இரண்டின் வடிவானவள்.

403. மஹாகாமேச' நயன குமுத3 ஆஹ்லாத3 கௌமுத்3யை = மஹாகாமேசருடைய கண்களாகிய குமுதமலர்களை விரியச்செய்யும் சந்திரிகை ஆகயிருப்பவள்.

404. ப4க்தஹார்த3 தமோபே4த3 பா4னுமத் பா4னுஸந்தத்யை = பக்தர்களின் உள்ளங்களில் இருக்கும் அறியாமை இருளை அகற்றவல்ல சூரியனின் கிரணக் கற்றைகளை ஒத்தவள்.

405. சி'வதூ3த்யை = சிவனைத் தூதாக அனுப்பியவள்.

406. சி'வ ஆராத்4யாயை = சிவனாலேயே ஆராதிக்கப் படுகின்றவள்.

407. சி'வ மூர்த்யை = சிவனையே தன்னுடைய வடிவமாகக் கொண்டவள்.

408. சி'வங்கர்யை = மங்களத்தையே உண்டக்குபவள்.

409. சி'வப்ரியாயை = சிவனுடைய அன்புக்கு பத்திரம் ஆனவள்.

410. சி'வபராயை = சிவனுக்கும் மேலானவளாக இருப்பவள்.
 
411. சி'ஷ்டே2ஷ்டாயை = சிஷ்டர்களைத் தனக்கு சொந்தம் ஆக்கிக் கொள்பவள்.

412. சிஷ்ட2 பூஜிதாயை = சிஷ்டர்களால் துதிக்கப்படுகின்றவள்.

413. அப்ரமேயாயை = அளவிட முடியாதவள்.

414. ஸ்வப்ரகாசா'யை = இயல்பாகவே ஒளி மயமானவள்.

415. மனோவாசாம் அகோ3சராயை = மனத்துக்கும், வாக்குக்கும் எட்டாதவள்.

416. சித்ச2க்த்யை = பேரறிவும், பேருணர்வும் கொண்டவள்.

417. சேதனா ரூபாயை = சைதன்ய வடிவானவள்.

418. ஜட3சக்த்யை = ஜடசக்தியாகவும் இருப்பவள்.

419. ஜடா3த்மிகாயை = ஜடசக்தியின் வடிவமாக உலகில் உள்ள அனைத்து ஜடப்பொருட்களிலும் இருப்பவள்.

420.கா3யத்ர்யை = காயத்ரீ ஆக இருப்பவள்.
 
411. சி'ஷ்டே2ஷ்டாயை = சிஷ்டர்களைத் தனக்கு சொந்தம் ஆக்கிக் கொள்பவள்.

412. சிஷ்ட2 பூஜிதாயை = சிஷ்டர்களால் துதிக்கப்படுகின்றவள்.

413. அப்ரமேயாயை = அளவிட முடியாதவள்.

414. ஸ்வப்ரகாசா'யை = இயல்பாகவே ஒளி மயமானவள்.

415. மனோவாசாம் அகோ3சராயை = மனத்துக்கும், வாக்குக்கும் எட்டாதவள்.

416. சித்ச2க்த்யை = பேரறிவும், பேருணர்வும் கொண்டவள்.

417. சேதனா ரூபாயை = சைதன்ய வடிவானவள்.

418. ஜட3சக்த்யை = ஜடசக்தியாகவும் இருப்பவள்.

419. ஜடா3த்மிகாயை = ஜடசக்தியின் வடிவமாக உலகில் உள்ள அனைத்து ஜடப்பொருட்களிலும் இருப்பவள்.

420.கா3யத்ர்யை = காயத்ரீ ஆக இருப்பவள்.
 
421. வ்யாஹ்ருத்யை = உச்சரிப்பு மயமானவள்.

422. ஸந்த்4யாயை = காலை, நண்பகல், மாலை என்ற மூன்று ஸந்தி நேரங்களுக்கும் அதிபதி ஆனவள்.

423. த்3விஜப்3ருந்த நிஷேவிதாயை = த்விஜர்களின் கூட்டத்தால் ஊக்கத்துடன் ஆராதிக்கப் படுகின்றவள்.

424. தத்வாஸநாயை = தத்துவங்களைத் தன் இருப்பிடமாகக் கொண்டவள்.

425. தஸ்மை = 'அது' ஆக இருப்பவள்.

426. துப்4யம் = 'நீ' என்னும் சொல்லுக்கு இலக்காக இருப்பவள்.

427. அய்யை = தன் குழந்தைகள் அனைவருக்குமே 'ஆயா' வாக இருப்பவள்.

428. பஞ்சகோசா'ந்தர ஸ்தி2தாயை = பஞ்ச கோசங்கள் என்னும் ஐந்து கோசங்களின் நடுவில் இருப்பவள்.

429. நி : ஸீமமஹிம்னே = வரம்புகள் இல்லாத மகிமை பொருந்தியவள்.

430. நித்ய யௌவநாயை = என்றமே இளமை மாறாதவள்.

 
431. மத3 சா'லின்யை = மதத்தில் யாண்டும் தோய்ந்து இருப்பவள்.

432. மத3 கூ4ர்ணித ரக்தாக்ஷ்யை = பேரானந்தத்தில் சுழன்று கொண்ருக்கும் சிவந்த கண்களை உடையவள்.

433. மத3பாடல க3ண்ட பூ4வே = மதத்தினால் இளம்சிவப்பாகக் காட்சி அளிக்கும் கன்னங்களை உடையவள்.

434. சந்த3ன த்3ரவ தி3க்3தா4ங்க்3யை = அரைத்த சந்தனம் பூசிய மேனியை உடையவள்.

435. சாம்பேய குஸும ப்ரியாயை = சம்பகப் புஷ்பத்தில் மிகுந்த விருப்பம் உடையவள்.

436. குச'லாயை = மிகுந்த சாமர்த்தியசாலி ஆனவள்.

437. கோமலாகாராயை =அழகிய அவயவங்களை உடையவள்.

438. குருகுல்லாயை =அஹங்காரம், மனம் என்ற இரண்டின் அதிஷ்டான தெய்வமாக இருப்பவள்.

439. குலேச்'வர்யை = குலத்தின் தலைவியானவள்.

440. குல குண்ட3 ஆலயாயை = குல குண்டத்தைத் தன் ஆலயமாகக் கொண்டுள்ளவள்.
 
441. கௌலமார்க3 தத்பர ஸேவிதாயை = கௌல மார்க்கத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்களால் உபாசிக்கப் படுகின்றவள்.

442. குமார க3ணநாதா2ம்பா3யை = குமாரக் கடவுளுக்கும், கணபதிக்கும் தாயானவள்.

443. துஷ்ட்யை = திருப்தி வடிவானவள்.

444. புஷ்ட்யை = நிறைவு வடிவானவள்.

445. மத்யை = அறிவு வடிவானவள்.

446. த்4ருத்யை = உறுதி வடிவானவள்.

447. சா'ந்த்யை = அமைதி வடிவானவள்.

448. ஸ்வாதிமத்யை = மெய்ப்பொருள் வடிவானவள்.

449. காந்த்யை = அழகு வடிவானவள்.

450. நந்தி3ன்யை = மகிழ்ச்சி வடிவானவள்.
 
451. விக்3ன நாசி'ன்யை = இடையூறுகளை அகற்றுபவள்.

452. தேஜோ3வத்யை = பொலிவு உடையவள்.

453. த்ரினயநாயை = மூன்று கண்கள் உடையவள்.

454. லோலாக்ஷி காம ரூபிண்யை = அசைகின்ற கண்களும், காதலின் வடிவமும் உடையவள்.

455. மாலின்யை = மாலைகளை அணிந்து இருப்பவள்.

456. ஹம்ஸின்யை =அன்னப் பறவையை ஒத்தவள்.

457. மாத்ரே = அன்னையானவள்.

458. மலயாசலவாஸின்யை = மலயபர்வதத்தில் வசிப்பவள்.

459. ஸுமுக்2யை = மலர்ந்த முகம் உடையவள்.

460. நளிந்யை = தாமரைப் பூப் போன்றவள்.
 
461. ஸுப்4ருவே = அழகிய புருவங்கள் உடையவள்.

462. சோ'ப4நாயை = பேரழகு வடிவானவள்.

463. ஸுரநாயிகாயை = தேவர்களின் தலைவி.

464. காலகண்ட்2யை = காலகண்டருடைய ஸ்வரூபத்தில் இருப்பவள்.

465. காந்திமத்யை = ஒளி மயமானவள்.

466. க்ஷோபி4ண்யை = உணர்ச்சியை உறுதிப் படுத்துபவள்.

467. ஸூக்ஷ்ம ரூபிண்யை = நுண்ணிய வடிவானவள்.

468. வஜ்ரேச்'வர்யை = வஜ்ரம் என்ற பேராற்றல் வடிவானவள்.

469. வாமதே3வ்யை = வாம தேவருடைய சக்தியானவள்.

470. வயோsவஸ்தா விவர்ஜிதாயை = வயது ஆகும் தன்மை இல்லாதவள்.
 
471. சித்3தே4ச்'வர்யை = சித்தர்களின் ஈஸ்வரி ஆவாள்.

472. ஸித்3த4வித்4யாயை = சித்த வித்யா வடிவானவள்.

473. ஸித்3த4மாத்ரே = சித்தர்களின் தாய் ஆனவள்.

474. யச'ஸ்வின்யை = கீர்த்தி மிகுந்தவள்.

475. விசு'த்3தி4சக்ர நிலயாயை = விசுத்திச் சக்கரத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டவள்.

476. ஆரக்த வர்ணாயை = இளம் சிவப்பு நிறம் உடையவள்.

477. த்ரிலோசநாயை = மூன்று கண்களை உடையவள்.

478. க2டவாங்கா3தி3 ப்ரஹரணாயை = கட்வாங்கம் முதலிய ஆயுதங்களை உடையவள்.

479. வத3னைக ஸமன்விதாயை = ஒரு முகத்துடன் திகழ்பவள்.

480. பாயஸான்ன ப்ரியாயை = பாயசத்தை புசிப்பதில் விருப்பம் கொண்டவள்.
 
481. தவக்ஸ்தா2யை = 'த்வக்' என்னும் உடலின் மேல் தோலுக்கு அபிமான தேவதை ஆனவள்.

482. பசு'லோக ப4யங்கர்யை = பசுலோகத்துக்கு பயத்தை உண்டு பண்ணுபவள்.

483. அம்ருதாதி3 மஹாச'க்தி ஸம்வ்ருதாயை = அம்ருதம் முதலான மஹா சக்திகளால் சூழப் பெற்றவள்.

484. டா3கிநீச்'வர்யை = டாகினி என்ற பெயர் பெற்ற ஈஸ்வரி இவளே.

485. அநாஹதாப்3ஜ நிலயாயை = அனாஹதச் சக்கரத்தில் எழுந்தருளி இருப்பவள்.

486. ச்'யாமாபா4யை = சியாமள வர்ணம் உடையவள்.

487. வத3ன த்3வயாயை = இரண்டு முகங்கள் கொண்டவள்.

488. த3ம்ஷ்ட்ரோஜ்ஜ்வலாயை = கோரைப் பற்கள் உடையவள்.

489. அக்ஷமாலாதி3 த4ராயை = அக்ஷ மாலை முதலானவற்றை அணிந்து இருப்பவள்.

490. ருதி4ரஸம்ஸ்தி2தாயை = உதிரம் என்னும் தாதுவின் அபிமான தேவதை இவள்.
 
491. காலராத்ர்யாதி3 ச'க்த்யௌக4 வ்ருதாயை = காலராத்திரி முதலிய சக்திக் கூட்டங்களால் சூழப் பட்டவள்.

492. ஸ்நிக்3தௌ4த3னப்ரியாயை = நெய் கலந்து சமைத்த அன்னத்தில் விருப்பம் உடையவள்.

493. மஹா வீரேந்த்3ர வரதா3யை = மஹா வீரேந்திரர்களுக்கு வரங்களை அளிப்பவள்.

494. ராகிண்யம்பா3 ஸ்வரூபிண்யை = ராகிணீ என்று அழைக்கப்படும் யோகினி வடிவானவள்.

495. மணிபூராப்3ஜ நிலயாயை = மணிபூரம் என்ற யோகச் சக்கரத்தில் வசிப்பவள்.

496. வத3னத்ரய ஸம்யுதாயை = மூன்று முகங்களை உடையவள்.

497. வஜ்ராதி3க ஆயுதோ4பேதாயை = வஜ்ராயுதம் மற்றும் ஏனைய ஆயுதங்களையும் உடையவள்.

498. டா3மர்யாதி3பி4: ஆவ்ருதாயை = டாமரி முதலான மூர்த்திகளால் சூழப்பெற்றவள்.

499. ரக்த வர்ணாயை = சிவந்த நிறம் உடையவள்.

500. மாம்ஸ நிஷ்டாயை = மாமிசம் என்னும் தாதுவின் அதிஷ்டான தேவதை ஆனவள்.
 
501. கு3டா3ன்ன ப்ரீத மானஸாயை = சக்கரைப் பொங்கலில் பிரியம் கொண்ட மனத்தினள்.

502. ஸமஸ்த ப4க்த ஸுக2தா3யை = எல்லா பக்தர்களுக்கும் சுகத்தை அளிப்பவள்.

503. லாகின்யம்பா ஸ்வரூபிண்யை =லாகினீ என்ற அம்பிகையின் வடிவில் இருப்பவள்.

504. ஸ்வாதி4ஷ்டா2னாம்பு3ஜக3தாயை = ஸ்வாதிஷ்டான கமலத்தில் இருப்பவள்.

505. சதுர்வக்த்ர மனோஹராயை = நான்கு முகங்களுடன் மனத்தைக் கவருபவள்.

506. சூ'லாத்3யாயூத4 ஸம்பன்னாயை = சூலம் முதலான ஆயுதங்களை வைத்துள்ளவள்.

507. பீதவர்ணாயை = மஞ்சள் நிறம் கொண்டவள்.

508. அதிக3ர்விதாயை = கர்வம் மிகக் கொண்டவள்.

509. மேதோ3நிஷ்டா2யை = மேதஸ் என்னும் கொழுப்பு தாதுவுக்கு அதிஷ்டான தேவதை.

510. மது4ப்ரீதாயை = மதுவில் விருப்பம் கொண்டவள்.
 
511. ப3ந்தி4ன்யாதி3 ஸமன்விதாயை = பந்தினீ முதலிய தேவிகளுடன் கூடி இருப்பவள்.

512. த3த்4யன்னா ஸக்த ஹ்ருத3யாயை = தயிர் கலந்த அன்னத்தில் விருப்பம் கொண்டவள்.

513. காகினி ரூப தா4ரிண்யை = காகினீ தேவியின் உருவம் படைத்தவள்.

514. மூலாதா4ராம்பூ3ஜாரூடா4யை = மூலாதாரத்தில் வீற்றிருப்பவள்.

515. பஞ்ச வக்த்ராயை = ஐந்து முகங்களை உடையவள்.

516. அஸ்தி2ஸம்ஸ்தி2தாயை = எலும்பு தாதுவின் அதிஷ்டான தேவதை.

517. அங்குசா'தி3 ப்ரஹரணாயை = அங்குசம் முதலிய ஆயுதங்களை உடையவள்.

518. வரதா3தி3 நிஷேவிதாயை = வரதா முதலான தேவிகளால் சேவிக்கப்படுகின்றவள்.

519. முக்3தௌ3த3னா ஸக்தசித்தாயை = கிச்சடி அன்னத்தில் பிரியம் கொண்டவள்.

520. ஸாகின்யம்பா3 ஸ்வரூபிண்யை = ஸாகினீ தேவி வடிவத்தில் உள்ளவள்.
 
521. ஆக்ஞாசக்ராப்ஜ நிலயாயை = ஆக்ஞா சக்கரம் என்ற ஆறாவது ஆதாரத்தில் இருப்பவள்.

522. சு'க்லவர்ணாயை = வெள்ளை நிறம் படைத்தவள்.

523. ஷடா3னநாயை = ஆறு முகங்களைக் கொண்டவள்.

524. மஜ்ஜாஸம்ஸ்தா2யை = மஜ்ஜை என்னும் தாதுவின் அதிஷ்டான தேவதை.

525. ஹம்ஸவதீ முக்2யச'க்தி ஸமன்விதாயை = ஹம்சவதீ முதலிய சக்திகளுடன் இருப்பவள்.

526. ஹரித்3ரான்னைக ரஸிகாயை = மஞ்சள் நிற அன்னத்தில் பிரியம் உடையவள்.

527. ஹாகினீ ரூப தா4ரிண்யை = ஹாகினீ என்ற ரூபம் தரித்தவள்.

528. ஸஹஸ்ரத3ள பத்3மஸ்தா2யை = ஸஹஸ்ரார கமலத்தில் வீற்றுள்ளவள்.

529. ஸர்வவர்ண உபசோ'பி4தாயை = எல்லா வர்ணங்களாலும் அலங்கரிக்கப்படுகின்றவள்.

530. ஸர்வாயுத4த3ராயை = எல்லா விதமான ஆயுதங்களையும் உடையவள்.
 
531. சுக்ல ஸம்ஸ்தி2தாயை = சுக்லம் என்னும் மானிட பீஜத்தின் அபிமான தேவதை.

532. ஸர்வதோமுக்2யை = எல்லாப் பக்கங்களிலும் முகங்களைக் கொண்டவள்.

533. ஸர்வௌத3ன ப்ரீதசித்தாயை = சமைக்கப்பட்ட எல்லா அன்னவகைகளிலும் விருப்பம் உடையவள்.

534. யாகின்யம்பா3 ஸ்வரூபிண்யை = யாகினீ தேவியின் வடிவை எடுத்துள்ளவள்.

535. ஸ்வாஹாயை = ஸ்வாஹா என்னும் மந்திர ஸ்வரூபமாக உள்ளவள்.

536. ஸ்வதா4யை = ஸ்வதா என்னும் வடிவத்தில் உள்ளவள்.

537. அமத்யை = அவித்யா ரூபமாக இருப்பவள்.

538. மேதா4யை = பேரறிவின் வடிவாகவும் இருப்பவள்.

539. ச்'ருத்யை = காதால் கேட்டு அறியப் படுபவள்.

540. ஸ்ம்ருத்யை = ஞாபக சக்தியின் வடிவினளாக உள்ளவள்.
 
541. அனுத்தமாயை = தனக்கு மிக்கார் எவரும் இல்லாதவள்.

542. புண்ய கீர்த்யை = புண்ணியத்தை வழங்குபவள்.

543. புண்யலப்4யாயை = புண்ணியத்தால் அடையப்படுபவள்.

544. புண்யச்'ரவண கீர்த்தநாயை = அவள் மகிமைகளைக் கேட்பதாலேயே புண்ணியத்தைத் தருபவள்.

545. புலோமஜா அர்ச்சிதாயை = இந்திராணியால் பூஜிக்கப் பெற்றவள்.

546. ப3ந்த4 மோசன்யை = பந்தங்களில் இருந்து விடுவிப்பவள்.

547. ப3ப்3ராலகாயை = சுருண்ட கூந்தலை உடையவள்.

548. விமர்ச'ரூபிண்யை = தன்னைத் தானே விளக்குபவள்; தன்னில் தானே திருப்தி அடைபவள்.

559. வித்3யாயை = வித்யா ரூபமாக இருப்பவள்.

550. வியதா3தி3 ஜக3த்ப்ரஸூவே = ஆகாயம் முதலான உலகத்தின் அன்னையானவள்.
 
551. ஸர்வ வியாதி4ப்ரச'மன்யை = எல்லாவிதமான நோய்களையும் நீக்குபவள்.

552. ஸர்வம்ருத்யு நிவாரிண்யை = எல்லாவிதமான மரணங்களையும் தடுப்பவள்.

553. அக்3ரக3ண்யாயை = முதலாவதாக எண்ணப்படுபவள்.

554. அசிந்த்ய ரூபாயை = மனதுக்கு எட்டாத வடிவினள்.

555. கலிகல்மஷ நாசி'ன்யை = கலியுகத்துக்கு உரிய கல்மஷங்களை எல்லாம் நீக்குபவள்.

556. காத்யாயன்யை = காத்யாயனீ என்ற பெயர் படைத்துள்ளவள்.

557. காலஹன்த்ர்யை = காலத்தைத் துடைத்துத் தள்ளுபவள்.

558. கமலாக்ஷ நிஷேவிதாயை = கமலக் கண்ணனான விஷ்ணுவினால் சிறப்பாக பூஜிக்கப்படுகின்றவள்.

559. தாம்பூ3ல பூரிதமுக்2யை = தாம்பூலம் தரித்த இனிய வாயினள்.

560. தா3டி3மீ குஸுமபிரபா4யை = மாதுளம் பூவின் பொலிவை உடையவள்.
 
561. ம்ருகா3க்ஷ்யை = மானின் கண்களை ஒத்த அழகிய விழியினள்.

562. மோஹின்யை = மோஹம் கொள்ளச் செய்பவள்.

563. முக்2யாயை = அனைத்திற்கும் முழு முதற் காரணமானவள்.

564. ம்ருடா3ன்யை = பரமசிவனுடைய பத்தினியாக மிளிர்பவள்.

565. மித்ர ரூபிண்யை = அன்பே வடிவானவள்.

566. நித்ய த்ருப்தாயை = எப்போதும் திருப்தி கொண்டிருப்பவள்.

567. ப4க்த நித4யே = பக்தர்களின் பொக்கிஷமாக விளங்குபவள்.

568. நியந்த்ர்யை = அகிலாண்டங்களை நல் வழியில் நடத்துபவள்.

569. நிகிலேச்'வர்யை = பிரபஞ்சம் முழுவதற்கும் இவளே ஈஸ்வரி.

570. மைத்ர்யாதி3 வாஸனா லப்4யாயை =மைத்ரீ முதலான நறுமணங்களால் அடையக் கூடியவள்.
 
571. மஹாப்ரளய ஸாக்ஷிண்யை = மஹா பிரளயத்துக்கு சாக்ஷியாக இருப்பவள்.

572. பராச'க்த்யை = ஒப்பு உயர்வற்ற சக்திஆனவள்.

573. பராயை நிஷ்டாயை = பேரியக்கத்தின் வடிவானவள்.

574. ப்ரக்ஞானக4ன ரூபிண்யை = திரண்ட பேரறிவின் வடிவானவள்.

575. மாத்4வீ பானாலஸாயை = மாத்வீ பானத்தில் இருந்து உண்டாகும் உள்முக நோக்கத்தோடு இருப்பவள்.

576. மத்தாயை = மயக்கத்தில் இருப்பவள்.

577. மாத்ருகா வர்ண ரூபிண்யை = எழுத்துக்களின் வடிவில் குடி இருப்பவள்.

578. மஹா கைலாஸ நிலயாயை = மஹா கைலாசத்தில் உறைபவள்.

579. ம்ருணாள ம்ருது3 தோ3ர்லதாயை = தாமரைத் தண்டின் மிருதுவான கொடி போன்ற கைகளை
உடையவள்.

580. மஹநீயாயை = எல்லோராலும் வணங்கப்படுபவள்.
 
581. த3யாமூர்த்யை = கருணையே உருவெடுத்தவள்.

582. மஹா
ஸாம்ராஜ்ய சா'லின்யை = மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவி இவளே.

583. ஆத்மா வித்3யாயை = ஆத்மா ஞானவடிவானவள்.

584. மஹா வித்3யாயை = வித்தைகளில் சிறந்த வித்தையின் வடிவானவள்.

585. ஸ்ரீ வித்3யாயை = ஸ்ரீ வித்தையின் ஸ்வரூபம் இவளே.

586. காமஸேவிதாயை =மன்மதனால் தொழப்படுபவள்.

587. ஸ்ரீ ஷோட3சா'க்ஷரீ வித்யாயை = மேன்மை பொருந்திய 16 எழுத்துக்களின் வடிவானவள்.

588. த்ரிகூடாயை = மும்மையாக மிளிர்பவள்.

589. காமகோடிகாயை = சிவனை விட்டுப் பிரிக்க முடியாதவள்.

590. கடாக்ஷ கிங்கரீபூ4த கமலாகோடி ஸம்ஸேவிதாயை = தன்னுடைய கடைக்கண் பார்வைக்குப் பணிவிடை செய்யத் துடிக்கும் கோடிக் கணக்கான தேவிகளைப் பெற்றுள்ளவள்.
 
Status
Not open for further replies.
Back
Top