அன்னையின் ஆயிரம் நாமங்கள்.

Status
Not open for further replies.
591. சி'ரஸ்தி2தாயை = சிரசில் வீற்று இருப்பவள்.

592. சந்த்3ர நிபா4யை = சந்திரனுக்கு நிகரான ஒளி படைத்தவள்.

593. பாலஸ்தா2யை = நெற்றியில் வீற்று இருப்பவள்.

594. இந்த்3ர த4னுஷ் ப்ரபா4யை = வானவில்லின் பிரபையைப் போன்ற எழில் படைத்தவள்.

595. ஹ்ருத3யஸ்தா2யை = இருதயத்தில் அமர்ந்துள்ளவள்.

596. ரவிப்ரக்2யாயை = சூரியனைப் போன்று பிரகாசித்துக் கொண்டு இருப்பவள்.

597. த்ரிகோணாந்தர தீ3பிகாயை = முக்கோணத்துக்குள் இருந்து தீபமாக இலங்குபவள்.

598. தா3க்ஷாயண்யை = தக்ஷப் பிரஜாபதியின் புதல்வியாகப் பிறந்தவள்.

599. தைத்ய ஹன்த்ர்யை = தைத்தியர்களை சம்ஹாரம் செய்பவள்.

600. த3க்ஷ யக்ஞ வினாசி'ன்யை = தக்ஷனுடைய யாகத்தைப் பாழக்கியவள்.
 
601. த3ரான்தோ3லித தீ3ர்கா4க்ஷ்யை= இனிதாய் அசையும் நீண்ட விழிகளை உடையவள்.

602. த3ரஹாஸோஜ் ஜ்வலன்முக்2யை = தன் புன் சிரிப்பால் மேலும் எழிலுடன் விளங்குபவள்.

603. கு3ரு மூர்த்யை = குருவடிவானவள்.

604. கு3ண நித4யே = குணங்களின் பொக்கிஷம் ஆனவள்.

605. கோ3மாத்ரே = பசு என்னும் தாய் வடிவானவள்.

606. குஹ ஜன்மபூ4வே = கந்தனின் பிறப்பிடம் ஆனவள்.

607. தே3வேச்'யை = தேவர்களின் ஈஸ்வரி ஆனவள்.

608. த3ண்ட3 நீதிஸ்தா2யை = தகுந்த தண்டனை அளிப்பதன் மூலம் ஜீவர்களை நல்வழி நடத்துபவள்.

609. த3ஹராகாச' ரூபிண்யை = இருதய குஹையில் உள்ள சிறிய ஆகாசத்தைத் தன் ஸ்வரூபமாகக் கொண்டுள்ளவள்.

610. ப்ரதிபன்முக்2ய ராகாந்த திதி2மண்ட3ல பூஜிதாயை = பிரதமை முதல் பௌர்ணமி வரையில் உள்ள திதிகளால் ஆராதிக்கப் படுகின்றவள்.
 
611. கலாத்மிகாயை = கலைகளின் வடிவானவள்.

612. கலாநாதா2யை = கலைகளின் தலைவி.

613. காவ்யாலாப விநோதி3ன்யை = காவியத்தின் விளக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைபவள்.

614. ஸசாமர ரமாவாணி ஸவ்யத3க்ஷிண ஸேவிதாயை = சாமரங்களை ஏந்திய லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய தேவிகளால், இட வலப் பக்கங்களில் சேவிக்கப் படுபவள்.

615. ஆதி3ச'க்த்யை = ஆதி சக்தியானவள்.

616. அமேயாயை = அளப்பரியவள்.

617. ஆத்மனே = ஆத்மஸ்வரூபம் ஆனவள்.

618. பரமாயை = பரவஸ்து ஆனவள்.

619. பாவனாக்ருதயே = எல்லாவற்றையும் பரிசுத்தப்படுத்தும் ஆற்றல் பெற்றவள்.

620. அநேககோடி ப்ரம்மாண்ட3ஜனன்யை = கணக்கிடமுடியாத கோடிக்கணக்கான பிரம்மாண்டங்களைத் தோற்றுவித்தவள்.
 
621. தி3வ்ய விக்3ரஹாயை = அழகிய வடிவினை உடையவள்.

622. க்ளீன்கார்யை = 'க்ளீம்' என்னும் பீஜமந்திரத்தில் உறைபவள்.

623. கேவலாயை = தன்னில் தானாக நிற்பவள்.

624. கு3ஹ்யாயை = இருதய குஹையில் ரகசியமாக மறைந்து இருப்பவள்.

625. கைவல்யபத3தா3யின்யை = கைவல்யம் என்னும் பதவியையும் அதற்கு முன்பு உள்ள ஏனைய பதவி முக்திகளையும் தன் உபாசகர்களுக்கு வழங்குபவள்.

626. த்ரிபுராயை = முப்புரங்களுக்கும் அதிபதி ஆனவள்.

627. த்ரிஜ3கத்3 வந்த்3யாயை = மூன்று உலகங்களாலும் தொழப்படுபவள்.

628. திரிமூர்த்யை = மும்மூர்த்திகளாக விளங்குபவள்.

629. த்ரித3சே'ச்'வர்யை = தேவர்களுக்கு எல்லாம் தலைவி ஆனவள்.

630. த்ரயக்ஷர்யை = மூன்று எழுத்து மயம் ஆனவள்.
 
631. தி3வ்ய க3ந்தா4ட்4யாயை = தெய்வீக நறுமணத்தை நிறை நிலையில் பெற்றவள்.

632. ஸிந்தூ3ர திலகாஞ்சிதாயை = சிந்தூர திலகத்தால் அலங்கரிக்கப்பட்டவள்.

633. உமாயை = உமா என்னும் பெயர் உடையவள்.

634. சை'லேந்த்3ர தனயாயை = மலை அரசனின் அருமை மகள்.

635. கௌ3ர்யை = இளம் மஞ்சள் நிறம் உடையவள்.

636. க3ந்த4ர்வ ஸேவிதாயை = கந்தர்வர்களால் தொழப்படுபவள்.

637. விச்'வக3ர்பா4யை = அகிலாண்டங்களைத் தன்னுள் பெற்றவள்.

638. ஸ்வர்ண க3ர்பா4யை = பொன்னர் மேனியனாகப் பொலிகின்றவள் .

639. அவரதாயை = அரக்கர்களைக் கண்டிப்பவள்.

640. வாக3தீ4ச்'வ்ர்யை = வாக்குக்கெல்லாம் தலைவி ஆனவள்.
 
641. த்3யான க3ம்யாயை = தியானத்தின் வாயிலாக அடையப்படுபவள்.

642. அபரிச்சே2த்3யாயை = அளவில் அடங்காதவள்.

643. ஞானதா3யை = ஞானத்தைக் கொடுப்பவள்.

644. ஞான விக்3ரஹாயை = ஞானமே வடிவானவள்.

645. ஸர்வ வேதா3ந்த ஸம்வேத்3யாயை = வேதாந்தங்களால் நன்கு உணரப்படுபவள்.

646. ஸத்யாநந்த3ஸ்வரூபிண்யை = சத்தியம், ஆனந்தம் ஆகியவற்றின் ஸ்வரூபம் ஆனவள்.

647. லோபாமுத்3ரா அர்ச்சிதாயை = லோமுத்திரையால் தொழப்படுபவள்.

648. லீலாக்லுப்த ப்3ரஹ்மாண்ட3 மண்ட3லாயை = பிரம்மாண்ட மண்டலங்களை எல்லாம் விளையாட்டாகத் தோற்றுவிப்பவள்.

649. அத்3ருச்'யாயை = பார்வைக்கு எட்டாதவள்.

650. த்3ருச்'ய ரஹிதாயை = காணும் பொருட்களுக்கு அப்பாற்பட்டவள்.
 
651. விக்ஞாத்ர்யை = பேரறிவின் வடிவானவள்.

652. வேத்3ய வர்ஜிதாயை = தன்னுடைய பேரறிவுக்கு எட்டாதவை என ஏதும் இல்லாதவள்.

653. யோகி3ன்யை = யோக வடிவினள்.

654. யோக3தா3யை = யோகத்தைத் தருபவள்.

655. யோக்3யாயை = யோகத்துக்குத் தகுதி வாய்ந்தவள்.

666. யோகா3னந்தா3யை = யோகத்தின் மூலம் ஆனந்தம் அடைபவள்.

667. யுக3ந்த4ராயை = நுகத்தடியைத் தங்கி இருப்பவள்.

668. இச்சா2ச'க்தி ஞானச'க்தி க்ரியாச'க்தி ஸ்வரூபிண்யை = இச்சை, ஞானம், கிரியை என்னும் மூன்று சக்திகளின் ஸ்வரூபமாக விளங்குபவள்.

669. ஸர்வாதா4ராயை = தன்னிடமிருந்து தோன்றிய உலகத்துக்குத் தானே ஆதாரம் ஆனவள்.

670. ஸுப்ரதிஷ்டா2யை = ஜகத்துக்கு நல்ல அஸ்திவாரம் ஆனவள்.
 
671. வ்ருத்3தா4யை = வயது முதிர்ந்தவள்.

672. ப்3ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிண்யை = பிரமமும், ஆத்மாவும் ஒன்றுபட்ட வடிவினில் உள்ளவள்.

673. ப்3ருஹத்யை = மிகவும் பெரியவள்.

674. ப்3ராஹ்மண்யை = பிராமண ஸ்வரூபமான சிவபிரானின் சகதர்மிணி.

675. ப்3ராஹ்மை = சிருஷ்டி கர்த்தாவான பிரமனின் சக்தியானவள்.

676. ப்3ரஹ்மானந்தா3யை = பிரமானந்த ஸ்வரூபமானவள்.

677. ப3லிப்ரியாயை = நிவேதனத்தில் ப்ரீதி உடையவள்.

678. பா4ஷா ரூபாயை = மொழிகளின் வடிவானவள்.

679. ப்3ருஹத்ஸேனாயை = அளவில்லாத சேனையை உடையவள்.

680. பா4வாபா4வ விவர்ஜிதாயை = தோற்றம், ஒடுக்கம் என்னும் இரண்டுக்கும் அப்பாற்பட்டவள்.
 
681. ஸுகா2ராத்4யாயை = இனிதாகப் போற்றப்படுபவள்.

682. சு'ப4கர்யை = நலனையே செய்பவள்.

683. சோ'ப4நாயை ஸுலபா4யைக3த்யை = சோபனம் என்னும் கதியை சுலபமாக வழங்க வல்லவள்.

684. ராஜ ராஜேஸ்வர்யை = மன்னாதி மன்னர்களுக்கெல்லாம் இறைவி.

685. ராஜ்ய தா3யின்யை = ராஜ்ஜியத்தைத் தருபவள்.

686. ராஜ்ய வல்லபா4யை = ராஜ்ஜியங்களில் பிரியம் வைத்து உள்ளவள்.

687. ராஜத் க்ருபாயை = அத்யந்த கிருபை கொண்டவள்.

688. ராஜபீட2 நிவேசி'த நிஜாச்'ரிதாயை = தன்னை உபாசிப்பவர்களுக்கு ராஜ பீடத்துக்கு ஒப்பான பதவியை அளிப்பவள்.

689. ராஜ்ய லக்ஷ்ம்யை = ராஜ்ஜிய லக்ஷ்மியாக விளங்குபவள்.

690. கோச'நாதா2யை = பொக்கிஷங்களுக்கு எல்லாம் தலைவி ஆனவள்.
 
691. சதுரங்க3 ப3லேஸ்வர்யை = ரத, கஜ, துரக, பதாதி என்னும் நான்கு வகை சேனைகளுக்கும் தலைவி.

692. ஸாம்ராஜ்ய தா3யின்யை = பேராட்சியைத் தருபவள்.

693. ஸத்ய ஸந்தா4யை = ஆணை
பிறழாதவள்.

694. ஸாக3ர மேக2லாயை = கடலைத் தன் ஒட்டியாணமாக அணிந்துள்ளவள்.

695. தீ3க்ஷிதாயை = ஞான தீட்சை அளிப்பவள்.

696. தை3த்ய ச'மன்யை = தைத்தியர்களைத் துடைத்துத் தள்ளுபவள்.

697. ஸர்வலோக வச'ங்கர்யை = அனைத்து உலகையும் தன் வசம் ஆக்குபவள்.

698. ஸர்வார்த்2த தா3த்ர்யை = எல்லாவிதமான புருஷார்த்தங்களையும் தருபவள்.

699. ஸாவித்ர்யை = சாவித்திரி வடிவில் உள்ளவள்.

700. ஸச்சிதா3னந்த3 ரூபிண்யை = மெய்ப்பொருள், அறிவு, இன்பம் ஆகியவற்றின் வடிவாக உள்ளவள்.
 
Last edited:
701. தே3ச'கால அபரிச்சி2ன்னாயை = தேசம், காலம் என்னும் அளவுகளுக்கு உட்படாதவள்.

702. ஸர்வகா3யை = நீக்கமற நிறைந்திருப்பவள்.

703. ஸர்வமோஹின்யை = அனைவரையும் மோஹம் கொள்ளச் செய்பவள்.

704. ஸரஸ்வத்யை = கலைமகளாக இருப்பவள்.

705. சா'ஸ்த்ரமய்யை = சாஸ்திரங்களின் வடிவானவள்.

706. கு3ஹாம்பா3யை = முருகனுடைய தாயானவள்.

707. கு3ஹ்யரூபிண்யை = விளங்கிக்கொள்ள முடியாத வடிவினள்.

708. ஸர்வோபாதி4விநிர்முக்தாயை = எல்லாவிதமான உபாதிகளில் இருந்தும் விலகி நிற்பவள்.

709. ஸதா3சி'வ பதிவ்ரதாயை = சதாசிவனாருடைய பதிவிரதை.

710. ஸம்ப்ரதா3யேச்'வர்யை = சம்பிரதாயங்களுக்கு ஈஸ்வரி ஆனவள்.
 
711. ஸாது4னே = பொருத்தமான பாங்கு உடையவள்.

712. யை = 'ஈ' என்னும் எழுத்தின் வடிவானவள்.

713. கு3ருமண்ட3லரூபிண்யை = வாழையடி, வாழையாக வந்துள்ள குருமார்களின் வடிவில் உள்ளவள்.

714. குலோத்தீர்ணாயை = குலத்திற்கு அப்பாற்பட்டவள்.

715. ப4கா3ராத்4யாயை = சூரிய மண்டலத்தில் ஆராதிக்கப் படுபவள்.

716. மாயாயை = மாயையின் வடிவாக உள்ளவள்.

717. மது4மத்யை = தேனோடு கலந்து உள்ளவள்.

718. மஹ்யை = பூமியின் வடிவானவள்.

719. க3ணாம்பா3யை = கணங்களுக்குத் தாயானவள்.

720. கு3ஹ்யகராத்4யாயை = குஹ்யகாரர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவள்.
 
721. கோமலாங்க்3யை = மெல்லிய அங்கங்களை உடையவள்.

722. கு3ருப்ரியாயை = குருவுக்குப் பிரியமானவள்.

723. ஸ்வதந்த்ராயை= முற்றிலும் தன்னையே சார்ந்து இருப்பவள்.

724. ஸர்வதந்த்ரேஸ்வர்யை = எல்லாத் தந்திரங்களுக்கும் தலைவி.

725. த3க்ஷிணாமூர்த்தி ரூபிண்யை = தக்ஷிணாமூர்த்தியின் வடிவில் உள்ளவள்.

726. ஸநகாதி3 ஸமாராத்4யாயை = சனகன் முதலான சான்றோர்களால் ஆராதிக்கப்படுபவள்.

727. சி'வக்ஞான ப்ரதா3யின்யை = சிவஞானத்தை வழங்குபவள்.

728. சித்கலாயை = ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட கலைகளின் வடிவானவள்.

729. ஆனந்த3கலிகாயை = ஆனந்தத்தின் கிளைகளாக உத்பவிப்பவள்.

730. ப்ரேமரூபாயை = அன்பே வடிவானவள்.
 
731. ப்ரியங்கர்யை = பிரியத்தை உண்டு பண்ணுபவள்.

732. நாம பாராயண ப்ரீதாயை = நாம பாராயணத்தில் மகிழ்பவள்.

733. நந்தி3 வித்3யாயை = நந்திகேஸ்வரரால் உபாசிக்கப்பட்ட வித்யாரூபம் ஆனவள்.

734. நடேஸ்வர்யை = நடேசனுடைய சக்தி ஆனவள்.

735. மித்யாஜக3த் அதி3ஷ்டா2நாயை = தோன்றி மறையும் உலகுக்கு அதிஷ்டான தேவதை.

736. முக்திதா3யை = மோக்ஷத்தை அளிப்பவள்.

737. முக்திரூபிண்யை = முக்தியின் வடிவானவள்.

738. லாஸ்யப்ரியாயை = ஆடலில் விருப்பம் உடையவள்.

739. லயகர்யை = ஒடுக்கத்தை உண்டு பண்ணுபவள்.

740. லஜ்ஜாயை = நாணமே வடிவானவள்.
 
741. ரம்பா4தி வந்தி3தாயை = ரம்பை முதலான அப்சரசுகள்
வணங்கும் தலைவி.

742 . ப4வதா3 வஸுதா4 வ்ருஷ்ட்யை = பிறவி என்னும் காட்டுத் தீயை அணைக்கும் அருள் மழை ஆனவள்.

743. பாபாரண்ய த3வானலாயை = பாபம் என்னும் காட்டை அழிக்கும் காட்டுத்தீ ஆனவள்.

744. தௌ3ர்பா4க்3ய தூல வாதூலாயை = தௌர்பாக்கியம் என்னும் பஞ்சுப்பொதியைச் சிதறடிக்கும் சூறாவளி ஆனவள்.

745. ஜர்ரத்4வாந்த ரவிப்ரபா4யை = முதுமை என்னும் இருளை நீக்கும் சூரியப் பிரகாசம் ஆனவள்.

746. பா4க்3யாப்தி4 சந்த்ரிகாயை = பாக்கியம் என்னும் சமுத்திரத்தைப் பொங்கச் செய்யும் சந்திரனின் ஒளி ஆனவள்.

747. ப4க்த சித்த கேகி க4னாக4நாயை = பக்தர்களின் உள்ளங்களாகிய மயில்களுக்கு உவகை அளிக்கும் கார்மேகம் ஆனவள்.

748. ரோக3பர்வத த3ம்போ4லயே = நோய்கள் என்னும் மலையைத் தகர்க்கும் வச்சிராயுதம் ஆனவள்.

749. ம்ருத்யுதா3ரு குடா2ரிகாயை = மரணம் என்னும் மரத்தை வெ
ட்டிக் களையும் கோடரி ஆனவள்.

750. மஹேச்'வர்யை = பேரிறைவி இவள் ஆவாள்.
 
751. மஹாகாள்யை = கால ஸ்வரூபிணி ஆனவள்.

752. மஹா க்3ராஸாயை = நழுவாத உறுதியான பிடியை உடையவள்.

753. மஹாச'னாயை = பெரும் பசி உடையவள்.

754. அபர்ணாயை = கடமைப்படாதவள்.

755. சண்டி3காயை = சினம் கொள்பவள்.

756. சண்ட3 முண்டா3ஸுர நிஷூதி3ன்யை = சண்டன் , முண்டன் என்னும் இரு அசுரர்களை வதம் செய்தபவள்.

757. க்ஷராக்ஷராத்மிகாயை = அழிபவை, அழியாதவை என்ற இரு பொருட்களின் வடிவானவள்.

758. ஸர்வலோகேச்'யை = உலகம் அனைத்துக்கும் இவளே அரசி.

759. விச்'வதா4ரிண்யை = பிரபஞ்சத்தைத் தாங்குபவள்.

760. த்ரிவர்கதா3த்ர்யை = உயிர் வாழத் தேவையான மூன்று உறுதிப் பொருட்களை அளிப்பவள்.
 
761. ஸுப4காயை = ஞானம், வைராக்கியம், வீர்யம், ஸ்ரீ, ஐஸ்வர்யம், கீர்த்தி என்னும் ஆறு தெய்வ சம்பத்துக்களை உடையவள்.

762. த்ரயம்ப3காயை = மூன்று கண்களை உடையவள்.

763. த்ரிகு3ணாத்மிகாயை =முக்குணங்களின் வடிவானவள்.

764. ஸ்வர்கா3பவர்க3தா3யை = சுவர்க்கத்தையும், நித்தியமான ஆனந்தத்தையும் தர வல்லவள்.

765. சு'த்3தா4யை = தூய்மையானவள்.

766. ஜபாபுஷ்பநிபா4க்ருதயே = செம்பருத்திப் பூவினைப் போன்ற நிறம் உடையவள்.

767. ஒஜோவத்யை = ஓஜஸ் என்னும் அருள் ஒளி உடையவள்.

768. த்3யுதித4ராயை = பிரகாசம் உடையவள்.

769. யக்ஞரூபாயை = வேள்வி வடிவானவள்.

770. ப்ரியவ்ரதாயை = விரதங்களில் மகிழ்ச்சி அடைபவள்.
 
771. து3ராராத்4யாயை = ஆராதனைக்கு அரியவள்.

772. து3ரா த4ர்ஷாயை = வெல்வதற்கு அரியவள்.

773. பாடலீ குஸும ப்ரியாயை = பாதிரிப் புஷ்பத்தை விரும்புபவள்.

774. மஹத்யை = மிகப் பெரியவள்.

775. மேரு நிலயாயை = மேருமலையில் வசிப்பவள்.

776. மந்தார குஸும ப்ரியாயை = மந்தாரப் புஷ்பத்தை விரும்புபவள்.

777. வீராராத்4யாயை = வீரர்களால் போற்றப்படுபவள்.

778. விராட்3ரூபாயை =ஸ்தூலமாக உள்ள அனைத்துமாக வடிவு எடுத்தவள்.

779. விரஜஸே = பாபம் இல்லாதவள்.

780. விஸ்வதோ முக்2யை = எல்லாப் பக்கங்களிலும் முகங்களை உடையவள்.
 
781. ப்ரத்யக்ரூபாயை = உள்ளத்தில் காட்சி கொடுப்பவள்.

782. பராகாசா'யை = ஒப்பில்லாத சிதாகாசம் ஆனவள்.

783. ப்ராணதா3யை = பிராணனைக் கொடுப்பவள்.

784. ப்ராண ரூபிண்யை = பிராணனாக இருப்பவள்.

785. மார்த்தாண்ட3 பை4ரவாராத்4யாயை = மார்த்தாண்ட பைரவரால் ஆராதிக்கப்படுகின்றவள்.

786. மந்திரிணீ ந்யஸ்தராஜ்யது4ரே = மந்த்ரிணியிடத்தில் வைக்கப்பட்ட ராஜ்ய பாரத்தோடு இருப்பவள்.

787. த்ரிபுரேச்'யை = திரிபுரங்களின் தலைவி.

788. ஜயத் ஸேநாயை = வெல்கின்ற சேனையை உடையவள்.

789. நிஸ்த்ரைகு3ண்யாயை = முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவள்.

790. பராபராயை = பரவஸ்துவாகவும், பிரபஞ்சமாகவும் உள்ளவள்.
 
791. ஸத்யக்ஞான ஆனந்த3ரூபாயை = சத்யம், ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவானவள்.

792. ஸாமரஸ்ய பராயணாயை = சமரசத்தில் நிலை பெற்றவள்.

793. கபர்தி3ன்யை = கபர்
தின் என்னும் சிவபிரானின் பத்தினி.

794. கலாமாலாயை = கலைகளையே மாலையாக அணிந்தவள்.

795. காமது3கே4 = காமங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவள்.

796. காமரூபிண்யை = மயக்கும் அழகினை உடையவள்.

797. கலா நித4யே = அனைத்தையும் தன் செல்வமாக உடையவள்.

798. காவ்யகலாயை = காவியக் கலையின் வடிவினள்.

799. ரஸக்ஞாயை = வேறு வேறு பாங்குகளையும் ரசிப்பவள்.

800. ரஸசே'வத4யே = அமிர்த களஞ்சியமாக உள்ளவள்.
 
801. புஷ்டாயை = புஷ்டியோடு கூடி இருப்பவள்.

802. புராதனாயை = அனைத்துக்கும் தொன்மையானவள்.

803. பூஜ்யையை = போற்றுதலுக்கு உரியவள்.

804. புஷ்கராயை = ஜீவர்களுக்கு புஷ்டியைக் கொடுப்பவள்.

805. புஷ்கரேக்ஷநாயை = தாமரை இதழ் போன்ற அழகிய கண்களை உடையவள்.

806. பரஸ்மை ஜ்யோதிஷே = மேன்மை வாய்ந்த ஜோதியின் வடிவானவள்.

807. பரஸ்மை தா4ம்னே = ஒப்புயரவற்ற உறைவிடம் ஆகுபவள்.

808. பரமாணவே = நுண்ணியவற்றையும் விட நுண்ணியமானவள்.

809. பராத்பராயை = மேலானவற்றைவிட மேலானவள்.

810. பாச'ஹஸ்தாயை = பாசத்தைக் கையில் ஏந்தியவள்.
 
811. பாசஹந்த்ர்யை = பாசத்தை நாசம் செய்பவள்.

812. பரமந்த்ர விபே4தி3ன்யை = எதிரிகளின் திட்டங்களைப் பாழாக்குபவள்.

813. மூர்
த்தாயை = வடிவம் கொண்டவள்.

814. அமூர்
த்தாயை = வடிவம் அற்றவள்.

815. அநித்திய த்ருப்தாயை = நிலையற்ற பொருட்களைக்கொண்டு செய்யும் உபசாரத்தில் திருப்தி அடைபவள்.

816. முனி மானஸ ஹம்ஸிகாயை = முனிவர்களின் மனம் என்னும் தடாகத்தில் சஞ்சரிக்கும் அழகிய அன்னப் பறவை ஆனவள்.

817. ஸத்யவ்ரதாயை = சத்தியத்திலிருந்து பிசகாதவள்.

818. ஸத்யரூபாயை = சத்திய வடிவானவள்.

819. ஸர்வாந்தர்யாமின்யை = எல்லோருடைய அந்தக்கரணங்களின் மீதும் ஆட்சி செய்பவள்.

820. ஸத்யை = சிவபிரானுடைய பதிவிரதை.
 
821. ப்3ரஹ்மாணயை = பிரம்ம தேவரின் பாங்கினை விளக்குபவள்.

822. ப்3ரஹ்மணே = பிரமனின் வடிவத்தில் இருப்பவள்.

823. ஜனன்யை = உலகம் அனைத்தையும் உண்டு பண்ணுபவள்.

824. ப3ஹுரூபாயை = பல வடிவங்களில் இருப்பவள்.

825. பு3தா4ர்ச்சிதாயை = அறிஞர்களால் ஆராதிக்கப்படுகின்றவள்.

826. ப்ரசவித்ர்யை = எல்லாவற்றயும் தோற்றுவித்தவள்.

827. ப்ரச்சண்டா3யை = ஆதிக்கம் செலுத்த வல்லவள்.

828. ஆக்ஞாயை = கட்டளையின் வடிவானவள்.

829. ப்ரதிஷ்டா2யை = அனைத்துக்கும் ஆதாரம் ஆனவள்.

830. ப்ரகடாக்ருதயே = எல்லோருக்கும் தெளிவாகும் வடிவத்தில் உள்ளவள்.
 
831. ப்ராணேச்'வர்யை = இந்திரியங்களின் அதிஷ்டான தேவதை ஆனவள்.

832. ப்ராணதா3த்ர்யை = பிராணசக்தியைத் தருபவள்.

833. பஞ்சாச'த்பீட2ரூபிண்யை = ஐம்பது பீடங்களின் ரூபத்தில் உள்ளவள்.

834. விச்'ருங்கலாயை = கர்ம பந்தம் அற்றவள்.

835. விவிக்தஸ்தா2யை = தனிமையான இடத்தில் இருப்பவள்.

836. வீரமாத்ரே = வீரர்களின் தாய் ஆனவள்.

837. வியத்ப்ரஸூவே = ஆகாசத்தை உண்டு பண்ணுபவள்.

838. முகுந்தா3யை = முக்தி அளிப்பவள்.

839. முக்திநிலயாயை = முக்திக்கு இருப்பிடம் ஆனவள்.

840. மூலவிக்3ரஹரூபிண்யை = அனைத்துக்கும் ஆதி மூலம் ஆனவள்.
 
841. பா4வாக்ஞாயை = பாவனைகளை அறிபவள்.

842. ப4வ ரோக3க்4ன்யை = பிறவிப்பிணியை அகற்றுபவள்.

843. ப4வ சக்ர ப்ரவர்தின்யை = சம்சாரச் சக்கரத்தைச் சுழற்றுபவள்.

844. ச2ந்த3: ஸாராயை = வேதங்களின் உட்பொருளாகிய உபநிஷத்துக்களின் வடிவானவள்.

845. சாஸ்த்ர ஸாராயை = சாஸ்திரங்களின் உட்பொருள் ஆனவள்.

846. மந்த்ர ஸாராயை = மந்திரங்களின் சாரம் ஆனவள்.

847. தலோத3ர்யை = மெல்லிய இடையினை உடையவள்.

848. உதா3ர கீர்த்யை = பெரும் புகழ் வாய்ந்தவள்.

849. உத்3தா3ம வைப4வாயை = அளவற்ற செல்வமும், வலிமையையும் படைத்தவள்.

850. வர்ண ரூபிண்யை = நிறங்களின் வடிவானவள்.
 
Status
Not open for further replies.
Back
Top