அன்னையின் ஆயிரம் நாமங்கள்.

Status
Not open for further replies.
161. நிரஹங்காராயை = அஹங்காரம் அற்றவள்.

162. நிர்மோஹாயை = மோஹம் அல்லது மயக்கம் அற்றவள்.

163. மோஹநாசி'ன்யை = மோஹம் அல்லது மயக்கத்தை அழிப்பவள்,

164. நிர்மமாயை = மமகாரம் இல்லாதவள்.

165. மமதா ஹன்த்ர்யை =மமகாரத்தைப் போக்குபவள்.

166.நிஷ்பாபாயை = பாபம் அற்றவள்.

167. பாபநாசி'ன்யை = பாபத்தைப் போக்குபவள்.

168. நிஷ்க்ரோதா4யை = கோபம் அற்றவள்.
 
169. க்ரோத4ச'மன்யை = கோபத்தை நீக்குபவள்.

170. நிர்லோபா4யை = உலோபம் இல்லாதவள்.

171. லோப4நாசி'ன்யை = பக்தர்களின் லோபத்தை நீக்குபவள்.

172. நிஸ்ஸம்ச'யாயை = சந்தேகம் அற்றவள்.

173. ஸம்ச'யக்4ன்யை = சந்தேகங்களை அகற்றுபவள்.

174. நிர்ப4வாயை = பிறப்பு இல்லாதவள்.

175. ப4வநாசி'ன்யை = பிறவிப் பிணியை நீக்குபவள்.

176. நிர்விகல்பாயை = விகல்பம் இல்லாதவள்.
 
177. நிராபா3தா4யை = துன்புறுத்தப் படாதவள்.

178. நிர்பே4தா3யை = பேதம் இல்லாதவள்.

179. பே4த3நாசி'ன்யை = பேதத்தை அக்ற்றுபவள்.

180. நிர்நாசா'யை = அழிவற்றவள்.

181. ம்ருத்யுமத2ன்யை = மரணத்தைத் துடைத்துத் தள்ளுபவள்.

182. நிஷ் க்ரியாயை = கிரியை எனப்படும் வினைகள் அற்றவள்

183. நிஷ் பரிக்3ரஹாயை = பொருட் செல்வம் படையாதவள்.

184. நிஸ்துலாயை = ஒப்பற்றவள்
 
185. நீல சிகுராயை = நீலநிறக் கூந்தலை உடையவள்.

186. நிரபாயாயை = அபாயம் இல்லாதவள்.

187. நிரத்யயாயை = வரம்பைக் கடக்காதவள்.

188. துர்லபா4யை = எளிதில் அடைய முடியாதவள்.

189. து3ர்க3மாயை = அணுக முடியாதவள்.

190. து3ர்கா3யை = கடக்க முடியாதவள்.

191. துக்கஹன்த்ர்யை = துக்கத்தை அழிப்பவள்.

192. சுக2ப்ரதா3யை =சுகத்தைத் தருபவள்.
 
193. து3ஷ்ட தூ3ராயை = துஷ்டர்களால் அடைய முடியாதவள்.

194. து3ராசார ச'மன்யை = துராசாரத்தைப் போக்குபவள்.

195. தோ3ஷ வர்ஜிதாயை =
தோங்களே இல்லாதவள்.

196. ஸர்வக்ஞாயை = அனைத்தும் அறிந்தவள்.

197. ஸாந்த்3ர கருணாயை = எல்லை இல்லா கருணை உடையவள்.

198. ஸமானாதி4க வர்ஜிதாயை = ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவள்.

199. ஸர்வச'க்திமய்யை = எல்லாவித சக்திகளாகவும் இயங்குபவள்.

200. ஸர்வமங்க3ளாயை = எல்லா மங்களங்களுடனும் இருப்பவள்.
 
201. ஸத்3க3தி1 ப்ரதா3யை = நற்கதியைத் தருபவள்.

202. ஸர்வேச்'வர்யை = எல்லோருக்கும் ஈஸ்வரி ஆனவள்.

203. ஸர்வமய்யை = எல்லாவற்றிலும் நிறைந்து இருப்பவள்.

204. ஸர்வமந்த்ர ஸ்வரூபிண்யை = எல்லா மந்திரங்களின் வடிவானவள்.

205. ஸர்வயந்த்ராத்மிகாயை = எல்லாக் கருவிகளாகவும் இருப்பவள்.

206. ஸர்வதந்த்ர ரூபாயை = எல்லாத் தந்திரங்களாகவும் உள்ளவள்.

207. மனோன்மன்யை = மனத்திலே உன்மயத்தைக் கொண்டவள்.

208. மாஹேச்'வர்யை = மஹேஸ்வரனின் சக்தியாக இருப்பவள்.
 
209. மஹாதே3வ்யை = பெரியவற்றில் எல்லம் மிகப் பெரிதானவள்.

210. மஹாலக்ஷ்ம்யை = ஒப்பற்ற திருமகள்.

211. ம்ருட3ப்ரியாயை = சிவனுக்குப் பிரியமானவள்.

212. மஹாரூபாயை = பெரிய வடிவத்துடன் இருப்பவள்.

213. மஹா பூஜ்யாயை = பெரிதும் போற்றப் படுபவள்.

214. மஹாபாதக நாசி'ன்யை = பெரும் கேடுகளை நீக்குபவள்.

215. மஹாமாயாயை = மஹா மாயையாக இருப்பவள்.

216. மஹாஸத்வாயை = மிகப் பெரிய சத்துவத்தோடு இருப்பவள்.
 
217. மஹா ச'க்த்யை = அளவிடமுடியாத வல்லமை படைத்தவள்.

218. மஹா ரத்யை = அனைத்து உயிர்களுக்கும் இன்பம் அளிப்பவள்.

219. மஹா போ4கா3யை = அனைத்து உயிர்களுக்கும் சுகத்தைக் கொடுப்பவள்.

220. மஹைச்'வர்யாயை = எல்லா ஐஸ்வர்யங்களும் பொருந்தியவள்.

221. மஹா வீர்யாயை = அளவிடமுடியாத வீர்யம் உடையவள்.

222. மஹா ப3லாயை = உயர்ந்த வல்லமை உடையவள்.

223. மஹா பு4த்3த்4யை = பேரறிவு படைத்தவள்.

224. மஹா ஸித்3த்4யை = சித்திகளின் ஸ்வரூபம் ஆனவள்
 
225. மஹா யோகே3ஸ்வர ஈச்'வர்யை = அரிய யோகேஸ்வரர்களின் ஈஸ்வரி ஆனவள்.

226. மஹா தந்த்ராயை = தந்திர சாஸ்திரத்தின் வடிவானவள்.

227.மஹா மந்தராயை = மஹா மந்திரங்களின் ஸ்வரூபமாக உள்ளவள்.

228. மஹா யந்த்ராயை = யந்திரங்கள் எனப்படும் சக்கரங்களின் மயமானவள்.

229. மஹாஸநாயை = அமர்வதற்கு பெரிய இடத்தை பெற்றவள்.

230.மஹா யாக3க்ரம ஆராத்4யாயை =முறையான பெரிய யாகங்களால் போற்றப்படுபவள்.

231. மஹா பை4ரவ பூஜிதாயை = மஹா பைரவரால் பூஜிக்கப்படுபவள் .

232.மஹேச்'வர மஹாகல்ப மஹாதாண்ட3வ
ஸாக்ஷிண்யை = மஹா கல்பம் எனப்படும் பெரிய பிரளய காலத்தில் மகேஸ்வரர் புரியும் மஹா தாண்டவத்துக்கு சாட்சியாக இருப்பவள்.


 
233. மஹா காமேச'மஹிஷ்யை = மஹா காமேசனுடைய மகிஷி.

234. மஹா த்ரிபுர ஸுந்த3ர்யை = பூரண அழகோடு மிளிர்பவள்.

235. சது : ஷஷ்ட்யுபசார ஆட்4யாயை = அறுபத்துநான்கு உபசாரங்களால் ஆராதிக்கப் படுகின்றவள்.

236. சது; ஷஷ்டி கலாமய்யை =அறுபத்து நான்கு கலைகள் மயமாகத் திகழ்பவள்.

237. மஹா சது: ஷஷ்டி கோடி யோகி3னிக3ண ஸேவிதாயை = அறுபத்து நான்கு கோடி யோகினிகளின் கூட்டத்தால் சேவிக்கப்படுபவள்.

238. மனு வித்4யாயை = மனுவால் அடையப்பெற்ற வித்தை வடிவானவள்.

239. சந்த்ர வித்4யாயை = சந்திரனால் உபசிக்கப் பட்ட வித்தியா வடிவானவள்.

240. சந்த்3ர மண்ட3ல மத்4யகாயை = சந்திர மண்டலத்தின் மத்தியில் வீற்று இருப்பவள்.
 
241. சாரு ரூபாயை = அழகிய வடியை உடையவள்.

242. சாரு ஹாசாயை = அழகிய புன்சிரிப்பை உடையவள்.

243. சாரு சந்த்3ர கலாத4ராயை = அழகிய சந்திர கலையை தரித்துக்கொண்டு இருப்பவள்.

244. சராசர ஜகன்நாதா2யை = அசையும், அசையாப் பொருட்கள் நிறைந்த உலகின் தலைவி.

245. சக்ரராஜ நிகேதநாயை = சக்கரங்களுள் சிறந்ததான ஸ்ரீ சக்கரத்தில் வீற்று இருப்பவள்.

246. பார்வத்யை = பர்வத ராஜனுடைய புதல்வி.

247. பத்3மநயநாயை = தாமரை
ப் பூவினைப் போன்ற கண்கள் உடையவள்.

248. பத்3மராக3ஸமப்ரபா4யை = பத்மராகம் என்ற ரத்தினத்துக்கு ஒப்பான ஒளி உடையவள்.
 
249. பஞ்சப்ரேதாஸன ஆஸீனாயை = ஐந்து பிரேதங்களால் ஆன ஆசனத்தில் வீற்று இருப்பவள்.

250. பஞ்சப்3ரம்ம ஸ்வரூபிண்யை = ஐந்து மூர்த்திகளின் வடிவத்தில் இருப்பவள்.

251. சின்மய்யை = அறிவே வடிவானவள்.

252. பரமானந்தா3யை = பேரின்ப வடிவானவள்.

253. விஞ்ஞானக4ன ரூபிண்யை = சிறந்த அறிவின் திரண்ட வடிவானவள்

254. த்4யான த்4யாத்ரு த்4யேய ரூபாயை = தியானமாகவும், தியானம் செய்பவராகவும், தியானத்தின் லக்ஷியமாகவும் விளங்குபவள்.

255. த4ர்மாத4ர்ம விவர்ஜிதாயை = தர்மம், அதர்மம் என்ற இரண்டினோடும் சம்பந்தப் படாதவள்.

256. விச்'வரூபாயை = தோன்றியுள்ள அனைத்துமாக விளங்குபவள்.
 
257. ஜாக3ரிண்யை = ஜாக்ரத அவஸ்தையில் இருக்கும் ஜீவாத்ம மயமாக உள்ளவள்.

258. ஸ்வபந்த்யை = ஸ்வப்ன அவஸ்தையின் ஸ்வரூபமாக உள்ளவள்.

259. தைஜஸாத்மிகாயை = தைஜசன் அல்லது ஹிரண்யகர்பன் மயமாக உள்ளவள்.

260. ஸுப்தாயை = சுஷு ப்தி அவஸ்தையாக இருப்பவள்.

261. ப்ராக்ஞாத்மிகாயை = ஈஸ்வரியாக இருப்பவள்.

262. துர்யாயை = துரிய ஸ்வரூபமாக இருப்பவள்.

263. ஸர்வாவஸ்தா2விவர்ஜிதாயை = அவஸ்தைகள் அனைத்துக்கும் அப்பாற்பட்டவள் .

264. ஸ்ருஷ்டிகர்த்ர்யை = படைக்கும் தொழிலைச் செய்பவள்.

 
265. ப்3ரம்ம ரூபாயை = நான்முகன் வடிவத்தில் இருப்பவள்.

266. கோ3ப்த்ர்யை = ரக்ஷிப்பவள்.

267. கோ3விந்த3 ரூபிண்யை = விஷ்ணு ரூபமாக இருப்பவள்.

268. ஸம்ஹாரிண்யை = அழிக்கவும் செய்பவள்.

269. ருத்3ர ரூபாயை = ருத்திரனின் வடிவில் இருப்பவள்.

270. திரோதா4ன கர்யை = தன் மாயையால் மறைத்து வைப்பவள் .

271. ஈச்'வர்யை = ஈஸ்வரனின் மயமாக இருப்பவள்.

272. ஸதாசி'வாயை = ஸதாசிவனின் ஸ்வரூபமாக இருப்பவள்.
 
273. அனுக்ரஹதா3யை = அனுக்ரஹம் செய்பவள்.

274. பஞ்ச க்ருத்ய பராயணாயை = ஐம்பெரும் தொழில்களில் கண்ணும் கருத்துமாக இருப்பவள்.

275. பா4னுமண்ட3ல மத்4யஸ்தாயை = சூரிய மண்டலத்தின் மத்தியில் இருப்பவள்.

276. பை4ரவ்யை = பைரவருடைய பத்தினி.

277. ப4க3மாலின்யை = பகம் என்னும் தெய்வீக மாலையை அணிந்திருப்பவள்.

278. பத்3மாஸநாயை = தாமரை மீது அமர்ந்திருப்பவள்.

279. ப4க3வத்யை = ஆறு தெய்வீக மகிமைகளுக்கும் அதிஷ்டானமாக இருப்பவள்.

280. பத்3மநாப4ஸஹோத3ர்யை = விஷ்ணுவின் சஹோதரி.
 
281. உன்மேஷ நிமிஷ உத்பன்ன விபன்ன பு4வனாவல்யை = கண்களைத் திறந்து மூடுவதலேயே பிரபஞ்சத்தின் உற்பத்தியையும் ஓடுக்கத்தையும் உண்டு பண்ணுபவள்.

282. ஸஹஸ்ரசீ'ர்ஷ வத3நாயை = ஆயிரம் தலைகளையும், முகங்களையுமுடையவள்.

283. ஸஹஸ்ராக்ஷ்யை = ஆயிரக் கணக்கில் கண்களை உடையவள்.

284. ஸஹஸ்ரபதே3 = ஆயிரக் கணக்கில் கால்களை உடையவள்.

285. ஆப்3ரம்மகீடஜனன்யை = பிரம்மன் முதல் புழு, பூச்சிகள் வரையிலும் அனைத்தையும் தோற்றுவிப்பவள்.

286. வர்ணாச்'ரம விதா4யின்யை = வர்ணம், ஆசிரமம் என்ற இரண்டையும் ஏற்படுத்தியவள்.

287. நிஜாஞ்ஞாரூபநிக3மாயை = வேத வடிவில் விளங்குபவள்.

288. புண்யாபுண்யபலப்ரதா3யை = புண்யங்கள், பாவங்கள் ஆகியவற்றில் பலனை அளிப்பவள்.
 
289. ச்'ருதிஸீமந்த ஸிந்தூரி க்ருத பாதா3ப்ஜ தூ4லிகாயை = ஸ்ருதிகள் என்னும் பெண்களுடைய கூந்தல் வகிட்டில் உள்ள சிந்தூரத்தைத் தன் பாத கமலங்களின் துகள்களாகப் பெற்றவள்.

290. ஸகலாக3ம ஸந்தோ3ஹ ஸூக்திஸம்புட மௌத்திகாயை =
வேதங்கள் எனப்படும் முத்துச் சிப்பியாகிய சிமிழுக்குள் வைக்கப்பட்ட முத்தை ஆபரணமாக அணிந்துள்ளவள்.

291. புருஷார்த்த2ப்ரதா3யை = வாழ்வின் புருஷார்த்தங்களைக் கொடுப்பவள்.

292. பூர்ணாயை = குறைவற்ற நிறைநிலையில் உள்ளவள்.

293. போ4கி3ன்யை = போக மயமானவள்.

294. பு4வநேஸ்வர்யை = அகில புவனத்துக்கும் தலைவி.

295. அம்பி3காயை = தாயின் வடிவானவள்.

296. அனாதி3 நித4நாயை = ஆதியும், அந்தமும் இல்லாதவள்.
 
297. ஹரி ப்3ரம்மேந்த்3ர ஸேவிதாயை = ஹரி, பிரம்மன், இந்திரன் ஆகியவர்களால் சேவிக்கப் படுகின்றவள்.

298. நாராயண்யை = சிவ சக்தியையும், விஷ்ணு சக்தியையும் கொண்ட நாராயணி.

299. நாத3 ரூபாயை = ஓசை வடிவானவள்.

230. நாம ரூப விவர்ஜிதாயை =நாம, ரூபங்களுக்கு அப்பாற்பட்டவள் .

231. ஹ்ரீங்கார்யை = 'ஹ்ரீம்' என்னும் பீஜ மந்திர வடிவானவள்.

232. ஹ்ரீமத்யை = லஜ்ஜையே வடிவானவள்.

233. ஹ்ருத்3யாயை = இருதயத்தில் வீற்று இருப்பவள்.

234. ஹேயோபாதே3ய வர்ஜிதாயை = புறக்கணிப்பு, ஏற்பு என்ற இரண்டினாலும் கட்டுப்படாதவள்.
 
305. ராஜ ராஜ அர்சிதாயை = அரசர்க்கரசனால் ஆராதிக்கப்படுபவள்.

306. ராக்ஞ்யை = ராணியாக இருப்பவள்.

307. ரம்யாயை = ரமிக்கச் செய்பவள்.

308. ராஜீவ லோசநாயை = தாமரைக் கண்களை உடையவள்.

309. ரஞ்ஜன்யை = மகிழ்ச்சி அளிப்பவள்.

310. ரமண்யை = விளையாடுபவள்.

311. ரஸ்யாயை = சுவையைத் தருபவள்.

312. ரணத்கிங்கிணிமேகலாயை = சதங்கைகள் ஒலிக்கும் ஒட்டியாணத்தை அணிந்துள்ளவள்.
 
313. ரமாயை = இலக்குமி வடிவானவள்.

314. ராகேந்து3 வத3நாயை = முழு நிலவைப் போன்ற முகம் உடையவள்.

315. ரதி ரூபாயை = ரதியாக வடிவெடுத்தவள்.

316. ரதிப்ரியாயை = ரதி தேவியிடம் அன்பு கொண்டவள்.

317. ரக்ஷாகர்யை = காப்பற்றுபவள்.

318. ராக்ஷஸக்4ன்யை = ராக்ஷதர்களை அழிப்பவள்.

319. ராமாயை = அனைத்துப் பெண்களின் வடிவானவள்.

320. ரமண லம்படாயை = தன் கணவனோடு கூடி இருப்பதில் இச்சை உடையவள்.
 
321. காம்யாயை = எல்லோராலும் விரும்பப் படுகின்றவள்.

322. காம கலா ரூபாயை = காமக் கலையின் வடிவாக இருப்பவள்.

323.
கத3ம்ப குஸுமப்ரியாயை = கதம்ப மலர்களின் மேல் பிரியம் வைத்திருப்பவள்.

324. கல்யாண்யை = மங்கள வடிவானவள்.

325. ஜக3தீ கந்தா3யை = உலகத்தின் வேர் ஆகஇருப்பவள்.

326. கருணாரஸ ஸாக3ராயை = கருணை இரசத்தில் கடலை ஒத்தவள்.

327. கலாவத்யை = கலைகளை உடையவள்.

328. கலா லாபா4யை = கலைகளையே தன் பேச்சாகக் கொண்டவள்.
 
329. காந்தாயை = அழகே உருவானவள்.

330. காத3ம்ப3ரீப்ரியாயை = காதம்பரி என்னும் மதுவில் பிரியம் கொண்டவள்.

331. வரதாயை = வரங்களைத் தருபவள்.

332. வாம நயநாயை = அழகிய கண்களை உடையவள்.

333. வாருணி மத3 விஹ்வலாயை = வாருணி என்ற மதுவைப் பருகி ஆனந்தத்தில் திளைப்பவள்.

334. விச்'வாதி4காயை = விஸ்வத்துக்கு அப்பாற்பட்டவள் .

335. வேத3 வேத்3யாயை = வேதங்களின் மூலம் அறியப்படுகின்றவள்.

336. விந்த்3யாசல நிவாஸின்யை = விந்திய பர்வதத்தில் வசிப்பவள்.
 
337. ஓம் விதா4த்ர்யை = உலகைத் தாங்குபவள்.

338. வேத3 ஜனன்யை = வேதங்களைத் தோற்றுவிப்பவள் .

339. விஷ்ணு மாயையை = மஹா விஷ்ணுவின் மாய சக்தி ஸ்வரூபம் ஆனவள்.

340. விலாஸின்யை = லீலைகள் அல்லது விளையாட்டின் வடிவானவள்.

341. க்ஷேத்ர ஸ்வரூபாயை = க்ஷேத்ரத்தைத் தன் சொந்த வடிவமாகக் கொண்டுள்ளவள்.

342. க்ஷேத்ரேச்'யை = க்ஷேத்ரத்துக்கு இறைவி ஆனவள்.

343. க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலின்யை = க்ஷேத்ரத்தையும்,
க்ஷேத்ரக்ஞனையும் பரிபாலிப்பவள்.

344. க்ஷயவ்ருத்3தி4 விநிர்முக்தாயை = தேய்வும், வளர்ச்சியும் அற்றவள்.
 
345. க்ஷேத்ரபால சமர்சிதாயை = க்ஷேத்திரமாகிய உடலை பரிபாலிக்கும் ஆத்மா சாதகர்களால் நன்கு ஆராதிக்கப் படுகின்றவள்.

346. விஜயாயை = என்றும் எங்கும் வெற்றியைத் தருபவள்.

347. விமலாயை = மாசு இல்லாதவள்.

348. வந்த்3யை = வந்தனைக்கு உரியவள்.

349. வந்தா3ரு ஜனவத்ஸலாயை = வணங்கும் பக்தர்களுக்கு அருள் புரிபவள்.

350. வாக்வாதி3ன்யை = தெளிந்த வார்த்தைகளை இயம்புபவள்.

351. வாம கேச்'யை = அழகிய கூந்தலை உடையவள்.

352. வஹ்னி மண்ட3லவாஸின்யை = வஹ்னி மண்டலத்தில் வசிப்பவள்.
 
353. பக்திமத் கல்பலதிகாயை = பக்தர்களுக்குக் கற்பகக் கொடி போன்றவள்.

354. பசு'பாச'விமோசின்யை = ஜீவாத்மாக்களை பிறவி என்னும் பாசத்திலிருந்து விடுவிப்பவள்.

355. ஸம்ஹ்ருதாசேஷ பாக2ண்டா3யை = பாக்கண்டாக்களை ஸம்ஹாரம் செய்பவள்.

356. ஸதா3சார ப்ரவர்த்திகாயை = நல்ல ஒழுக்கத்தில் செல்லப் பணிப்பவள்.

357. தாபத்ரயாக்3னி ஸந்தப்த ஸமாஹ்லாத3ன சந்த்3ரிகாயை = மூன்று வித தாபங்களால் தகிக்கப்படுபவர்களை குளிர் நிலவைப் போல் இரக்கத்தோடு உற்சாகப்படுத்துபவள்.

358. தருண்யை = திரட்சி அடைந்து இருப்பவள்.

359. தாபஸஆராத்4யாயை = தபஸ்விகளால் ஆராதிக்கப்படுகின்றவள்.

360. தனு மத்4யாயை = மெல்லிய இடையை உடையவள்.
 
Status
Not open for further replies.
Back
Top