அனுபவத் துளிகள்

Status
Not open for further replies.

saidevo

Active member
அனுபவத் துளிகள்

அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)

ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!

[வாயசம் = காக்கை]

--ரமணி, 21/09/2015

*****
 
02. வானம்
(ஆசிரியத் தாழிசை)

வானம் பார்த்தேன் வரப்பில் நின்றே
தானே எல்லாம் தாங்குவ தாகி
ஊனம் நீங்க உயரும் உளமே.

வானம் பார்த்தேன் சாலை நின்றே
மானிட வண்ண மாளிகை பிரிக்க
ஈனம் தன்னில் இழியும் உளமே.

கானம் போற்றும் கடவுள் முன்னே
ஞானம் சற்றே ஞாபகம் ஏற
வானம் என்னுள் வதியும் உளமே!

--ரமணி, 29/09/2015

*****
 
03. ஆன்மா
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா)

கண்முனே தோன்றும் யாவும்
. காட்சியே உண்மை யல்ல
உண்ணுதல் உறங்கல் யாவும்
. உடலிதன் பொருட்டே ஆகும்
மண்ணிலே நீரைப் போல
. மறைந்தசீ வான்மா விற்கோ
எண்ணமே பகையென் றாகும்
. இம்மையே சிறையென் றாமே!

--ரமணி, 05/10/2015

*****
 
04. மழைத்துளி
(அளவியல் நேரிசை வெண்பா)

ஈரமாய்க் காற்றில் இழைய இலைகளின்
ஓரம் மழைத்துளி ஒண்டுமே - தூரத்தில்
தேன்சிட்டு முள்மரத்தில் தேடுவது என்னவோ?
வான்பட்டு நெஞ்சினில் வால்.

--ரமணி, 07/10/2015

*****
 
05. காலாற...
(அளவியல் நேரிசை வெண்பா)

காற்றில் தடுமாறும் கட்டெறும்பு; சூரியன்
மேற்கில் சிவந்து மெருகிடும் - போற்றியே
மாலையில் காலாற மாடி உலவுகையில்
காலில் நடமாடும் கண்.

--ரமணி, 07/10/2015

*****
 
06. வாழை
(அளவியல் நேரிசை வெண்பா)

வாழைமரக் கன்றின் வனப்பிலென் னுள்ளத்தில்
ஏழையாய் நிற்கும் எளிமையே! - சூழும்
இலைக்குழல் மெல்ல விரியும் எழிலில்
அலையற்றுப் போமென் அகம்.

--ரமணி, 07/10/2015

*****
 
07. ஒன்பது வாசல்
(அளவியல் நேரிசை வெண்பா)

ஒன்பதில் ஏழெனும் ஓயாத வாசல்கள்!
தின்பதில் ஏதுமிலை தேர்வென! - என்றே
அறிந்தும் உணர்ந்தும் அறியா நிலைநான்!
இறந்த பொழுதில் இறை.

--ரமணி, 09/10/2015

*****
 
08. தலையைக் கண்டு கல்!
(அளவியல் நேரிசை வெண்பா)

அலுவல் முடித்தே அகம்நான் திரும்பத்
தலைகண்டு கல்போட்டாள் தாரம்! - இலையில்
மொறுமொறு தோசை மொளகாய்ப் பொடியும்!
பெறுவதற் கேதினி பேறு!

--ரமணி, 09/10/2015

*****
 
09. சட்டுவம் தந்த நுதற்கண்!
(அளவியல் நேரிசை வெண்பா)

சாம்பும் மலர்ச்செடிக்குப் பாத்தியிட்ட சட்டுவத்தின்
காம்பினால் கண்ணுதற் காயமெழத் - தாம்கண்டே
தந்தையார் டிங்சர் தடவியொற் றும்பஞ்சு
தந்தகு ணத்தில் தழும்பு.

--ரமணி, 10/10/2015

*****
 
10. அன்னை தந்த காப்பி!
(அளவியல் நேரிசை வெண்பா)

குமுட்டி அடுப்பில் கொதித்திடும் தண்ணீர்
குமிழ்க்கக் கஷாயத்தில் கூட்டி - அமுதமாய்க்
காலையில் அன்னையார் காப்பி அளித்திடும்
கோலமின்றென் எண்ணக் குமிழ்!

--ரமணி, 10/10/2015

*****
 
11. எல்லாம் எதற்குள்ளும்!
(அளவியல் நேரிசை வெண்பா)

இழைவண்ணம் எங்கும் இயற்கையில்; நல்ல
மழைபெய்தே ஓய்ந்தது வானம் - குழைந்த
மழைத்துளியில் மெய்மறந்தேன் மாவிலை யோரம்
மழைத்துளியில் சிக்கும் மலை!

--ரமணி, 11/10/2015

*****
 
12. பானுமதியின் தூளி!
(அளவியல் நேரிசை வெண்பா)

காலத்தாய் கீழ்மேலாய்க் கார்வானத் தூளியிலே
தாலாட்டக் கண்வளர் பானுமதி - கோலரங்க
ராட்டினமாய் பூமியே ராப்பகல் சுற்றியவள்
ஆட்டும் கிலுகிலுப்பை யாம்.

--ரமணி, 12/10/2015

*****
 
13. குளியலறை சலதரங்கம்!
(அளவியல் நேரிசை வெண்பா)

குளித்து முடித்துக் குளியல் அறையில்
துளித்துளிநீர் சல்லடையில் சொட்டி - அளிக்கும்
சலதரங்க ஓசையின் சன்னம் ஒலிக்க
நலிவில் விளையும் நலம்.

--ரமணி, 14/10/2015

*****
 
14. தென்னை மரம்
(அளவியல் நேரிசை வெண்பா)

ஓலைகள் ஒவ்வொன்றும் ஓர்பாளை தாங்கிட
கோலத்தில் பின்னலாய்க் கொள்பூக்கள் - காலத்தில்
சின்னப்பூ வொன்றே சிதறாது காயாகும்
தென்னையென வாழ்வதென்றோ தேர்ந்து?

--ரமணி, 14/10/2015

*****
 
15. புளிய மரம்
(அறுசீர் விருத்தம்: விளம் மா காய் . மா மா காய்)

இலையதன் புளிப்புத் தொண்டையிலே
. இனிதே இறங்க நான்சுவைத்தேன்
இலைமறை காயின் புளிப்பதுவோ
. என்றன் பல்கூ சச்செய்யும்
வலியதாம் ஓட்டின் உள்ளாடும்
. மதுரக் கனியில் நாவினிக்கத்
தலைமிசைக் கல்தான் விழுந்ததுவே
. தரையில் பழத்தைப் பொறுக்கிடவே!

--ரமணி, 15/10/2015

*****
 
15. புளிய மரம்
(அறுசீர் விருத்தம்: விளம் மா காய் . மா மா காய்)
இலையதன் புளிப்புத் தொண்டையிலே
. இனிதே இறங்க நான்சுவைத்தேன்
இலைமறை காயின் புளிப்பதுவோ
. என்றன் பல்கூ சச்செய்யும்
வலியதாம் ஓட்டின் உள்ளாடும்
. மதுரக் கனியில் நாவினிக்கத்
தலைமிசைக் கல்தான் விழுந்ததுவே
. தரையில் பழத்தைப் பொறுக்கிடவே!
--ரமணி, 15/10/2015

எனதருமை நண்பர் சாய்தேவுக்கு,

இந்த மின்னிழையின் நீங்கள் இடும் அனுபவத்துளிகளை நான் அனுபவித்து படித்து மகிழ்கிறேன்.

மேற்குறிப்பிட்டுள்ள கவிதையில் என் மனதுக்கு நெருடியதை எழுத விழைகிறேன். தவறாயிருந்தால் மன்னிக்கவும்.

"இலையதன் புளிப்பு.......சுவைத்தேன்", "வலியதாம் ஓட்டின் உள்ளாடும்.....நாவிலினிக்க", இவை இரண்டும் நடந்த விஷயங்கள். அதே போல "தரையில் பழத்தை பொறுக்கிடவே........விழுந்ததுவே" என்ற இரண்டும் கூட நடந்து முடிந்த விஷயங்கள். முத்தாய்ப்பாக கவிதையென்னும் அனுபவத்துளியையும் புளியமரத்துடனான அனுபவத்துளியையும் அழகாகவே முடிக்கின்றன. இடையே "இலை மறை காயின் புளிப்பதுவோ என்றன் பல் கூசச்செய்யும்" என்பது மட்டும் தன் நிலை அனுபவங்களின் தொடர்ச்சியாக அமைந்து ஒன்றாமல் ஒரு செய்தியாக தனித்து நிற்கிறது. இது ஒரு ஸின்டாஃஸ் எரர் (syntax error) போன்று நின்று நெருடி வருத்துகிறது. அசையும் தளையும் கெடாமல் இதை சற்றே மாற்றி எழுதினால் இனிய இயற்கையான எண்ண ஓட்டத்துடன் அமைந்து சிறக்கும் என்பது அடியேனின் கருத்து. ஏற்புடைத்தாயின் ஆவன செய்க.
 
16. மூக்கில் வடையுடன் விமானம்!
(இருவிகற்ப அளவியல் இன்னிசை வெண்பா)

காக்கை வடையொன்றைக் கவ்வியே வானில்நான்
பார்க்கச் சிறகிரண்டைப் பக்கம் விரித்தேதன்
போக்கிலே போவது போலோர் விமானம்தன்
மூக்கில் விளக்குடன்கண் முன்பு.

--ரமணி, 15/10/2015

*****
 
நண்பர் வாக்மி அவர்களே!

வணக்கம். உங்களைப் போன்ற விமரிசக வாசகர் கிடைத்தது என் பேறு. உங்கள் திறனாய்வில்தான் என்னவொரு surgical precision! தொடர்ந்தென் பாக்களை இதுபோல் திறனாய வேண்டுகிறேன்.

திருத்திய பாடல் கீழே.

அன்புடன்,
ரமணி

*****

15. புளிய மரம்
(அறுசீர் விருத்தம்: விளம் மா காய் . மா மா காய்)

இலையதன் புளிப்புத் தொண்டையிலே
. இனிதே இறங்க நான்சுவைத்தேன்
இலைமறை காயின் புளிப்பதுவோ
. என்பல் கூசச் செய்ததுவே
வலியதாம் ஓட்டின் உள்ளாடும்
. மதுரக் கனியில் நாவினிக்கத்
தலைமிசைக் கல்தான் விழுந்ததுவே
. தரையில் பழத்தைப் பொறுக்கிடவே!

--ரமணி, 15/10/2015

*****



எனதருமை நண்பர் சாய்தேவுக்கு,

இந்த மின்னிழையின் நீங்கள் இடும் அனுபவத்துளிகளை நான் அனுபவித்து படித்து மகிழ்கிறேன்.

மேற்குறிப்பிட்டுள்ள கவிதையில் என் மனதுக்கு நெருடியதை எழுத விழைகிறேன். தவறாயிருந்தால் மன்னிக்கவும்.

"இலையதன் புளிப்பு.......சுவைத்தேன்", "வலியதாம் ஓட்டின் உள்ளாடும்.....நாவிலினிக்க", இவை இரண்டும் நடந்த விஷயங்கள். அதே போல "தரையில் பழத்தை பொறுக்கிடவே........விழுந்ததுவே" என்ற இரண்டும் கூட நடந்து முடிந்த விஷயங்கள். முத்தாய்ப்பாக கவிதையென்னும் அனுபவத்துளியையும் புளியமரத்துடனான அனுபவத்துளியையும் அழகாகவே முடிக்கின்றன. இடையே "இலை மறை காயின் புளிப்பதுவோ என்றன் பல் கூசச்செய்யும்" என்பது மட்டும் தன் நிலை அனுபவங்களின் தொடர்ச்சியாக அமைந்து ஒன்றாமல் ஒரு செய்தியாக தனித்து நிற்கிறது. இது ஒரு ஸின்டாஃஸ் எரர் (syntax error) போன்று நின்று நெருடி வருத்துகிறது. அசையும் தளையும் கெடாமல் இதை சற்றே மாற்றி எழுதினால் இனிய இயற்கையான எண்ண ஓட்டத்துடன் அமைந்து சிறக்கும் என்பது அடியேனின் கருத்து. ஏற்புடைத்தாயின் ஆவன செய்க.
 
நண்பர் வாக்மி அவர்களே!

வணக்கம். உங்களைப் போன்ற விமரிசக வாசகர் கிடைத்தது என் பேறு. உங்கள் திறனாய்வில்தான் என்னவொரு surgical precision! தொடர்ந்தென் பாக்களை இதுபோல் திறனாய வேண்டுகிறேன்.

திருத்திய பாடல் கீழே.

அன்புடன்,
ரமணி

*****

15. புளிய மரம்
(அறுசீர் விருத்தம்: விளம் மா காய் . மா மா காய்)

இலையதன் புளிப்புத் தொண்டையிலே
. இனிதே இறங்க நான்சுவைத்தேன்
இலைமறை காயின் புளிப்பதுவோ
. என்பல் கூசச் செய்ததுவே
வலியதாம் ஓட்டின் உள்ளாடும்
. மதுரக் கனியில் நாவினிக்கத்
தலைமிசைக் கல்தான் விழுந்ததுவே
. தரையில் பழத்தைப் பொறுக்கிடவே!

--ரமணி, 15/10/2015

*****

Thank you.
 
17. நித்யமல்லிப் பூநிரை
(அறுசீர் விருத்தம்: தேமா மா மா மா மா காய்)

சின்னச் சின்ன இதழாய் ஏழில்
. செல்லும் விழிகாண
என்னை மயங்கச் செய்யும் மணமே
. ஏறும் நாசியிலே
சன்னப் பூவாம் நித்ய மல்லி
. சேரும் அர்ச்சனையில்
பொன்னன் சடையன் பித்தன் பாதம்
. போற்றி மகிழ்ந்தேனே.

--ரமணி, 15/10/2015

*****
 
18. வாத்துகளின் கவாத்து!
(இருவிகற்ப அளவியல் இன்னிசை வெண்பா)

சாலிக் கதிர்தலை சாய்க்கும்தென் காற்றினில்
மாலைப் பொழுதாக வாத்துகள் - கோலவெண்
தீற்றாய்ப் பயிலும் சிறுநடை; கோலுடன்சேய்
ஆற்றுப் படுத்தும் அழகு!

--ரமணி, 18/10/2015

*****
 
19. மழைத்துளி மழலைகள்!
(அளவியல் நேரிசை வெண்பா)

கருக்கொளும் வானம் கடிபொழு தில்தன்
உருவெதும் அற்ற உதரம் - பருக்க
மழைத்துளி வீழ்ந்தே மழலைக ளாகத்
தழைத்தே விரையும் தவழ்ந்து.

--ரமணி, 19/10/2015

*****
 
20. முழுவெண்ணிலவு!
(அறுசீர் விருத்தம்: புளிமா மா காய் . புளிமா மா காய்)

முழுவெண் நிலவைக் குளத்தினிலே
. முழுக வைத்தே சிற்றலைகள்
கழுத்தை நெரித்துத் துண்டாக்கிக்
. கடித்துத் தின்ன முயன்றதுவே!
முழுவெண் நிலவோ துண்டுகளில்
. முழுதாய் நின்று சிரித்ததுவே!
முழவாய் எண்ணம் அதிர்த்தாலும்
. முழுதாய் நிற்கும் என்மனதே!

--ரமணி, 19/10/2015

*****
 
21. பல்லாங்குழிப் பயிர்கள்
(இருவிகற்ப அளவியல் இன்னிசை வெண்பா)

பல்லாங் குழிபோன்ற பாத்திக் குழித்தட்டில்
மெல்லிய பைங்கூழ் விதைபல தென்னையின்
நார்கழிவில் மேலெழும் நாற்றுக்கைப் பிள்ளைக்கு
நீர்புகட்ட நெஞ்சில் நெகிழ்வு.

--ரமணி, 20/10/2015

*****
 
22. காகிதமும் கணினியும்
(எழுசீர் விருத்தம்: கூவிளம் விளம் மா விளம் . விளம் விளம் காய்)

ஏகமாய் அடித்ததைத் திருத்தி மறுபடி
. இன்னொரு வரைவென எழுதியுமே
காகித நாட்களில் கதையும் கவிதையும்
. கலகலப் பாகநான் எழுதினனே
வேகமாய்க் கணினியின் விசைகள் தட்டியே
. விழைவது திருத்துதல் எளிதாகக்
காகமாய்க் கணினியில் விரல்கள் கொத்தியும்
. கதைகளும் கவிதையும் வந்திலையே!

--ரமணி, 22/10/2015

*****
 
Status
Not open for further replies.
Back
Top