Tamil Brahmins
Page 781 of 782 FirstFirst ... 281681731771777778779780781782 LastLast
Results 7,801 to 7,810 of 7817
 1. #7801
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,797
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  12. புவனாபதிச் சக்கரம்

  12. புவனாபதிச் சக்கரம் = புவனத்தின் அதிபதிக்கு உரிய சக்கரம்

  #1306 to #1310


  #1306. சூதனும், சூதியும்

  உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே
  அணைந்தெழும் ஆங்கதன் ஆதியது ஆகும்
  குணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடி
  கணந்தெழும் காணும் அக்காமுகை யாலே


  ஓம் என்னும் பிரணவம் சீவனின் உள்ளே உணர்ந்து எழும். சிவசக்தியருடன் சீவனை இணைப்பது அந்த மந்திரம்தான். உயிர்களைச் செலுத்துகின்ற சிவனும் சக்தியும் ஒன்றாகக் கூடி இணைந்து எழுந்து அருள் புரிவார்கள்.

  #1307. போகமும், மோட்சமும் தரும்


  ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
  அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
  சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
  ககாராதி மூவித்தை காமிய முத்தியே.


  ககாரத்தை முதலில் உடைய ஐந்தெழுத்துக்களும் பொன்னிறம் உடையன;
  அ காரத்தை முதலில் உடைய ஆறெழுத்துக்களும் செந்நிறம் உடையன;
  சகாரத்தை முதலில் உடைய நான்கெழுத்துக்களும் தூய வெண்ணிறம் உடையன.
  இந்த மூன்று வித்தைகளும் `போகம், மோட்சம்` என்ற இரு பயன்களையும் தரும்.

  #1308. சிவன் வடிவாகும்


  ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத்
  தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
  வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும்
  தேரில் அறியும் சிவகாயந் தானே.


  மாணவனே! நான் உனக்கு ஒன்று சொல்லுகின்றேன். நன்கு கேள். உண்மையையில் இந்தப் பதினைந்து எழுத்து மந்திரமே மந்திரங்கள் அனைத்திலும் தலையாயது. இந்த மந்திரத்திற்கு உரிய தேவியின் பெருமையை ஆராய்ந்திடில் இவளை அன்றி வேறு தெய்வம் இல்லை. இந்த மந்திரத்தைக் கொண்ட ஸ்ரீசக்கரம் என்னும் முக்கோணச் சக்கரமே பேரின்ப வீடு. இதுவே தெளிந்தவர்கள் அறிந்து கொள்ளும் சிவன் வடிவாகிய சிதாகாசம்.

  #1309. சக்திக்கு எட்டு வடிவங்கள்


  ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
  ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
  ஏகம் பராசத்தி யாகச் சிவன்உரு
  யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.


  பராசத்தி ஒன்றே. அவளே பரசிவத்தின் வடிவம். அந்தச் சத்திக்கு வடிவம், `பராவித்தை` எனப்படும் ஸ்ரீ வித்தை. அந்த ஸ்ரீ வித்தையால் முத்தி, சித்தி இரண்டும் சித்திக்கும். பராசத்தி ஒன்று என்றாலும் சிவன் அங்கியாய் நிற்கச் சத்தி அவனுக்கு அங்கமாய் நிற்பதால் சக்தி எட்டாகத் தோன்றுகின்றாள்.

  #1310. பராவித்தை பராசக்தியின் வழிபாடு


  எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
  கட்டாகும் நாதாந்தத் தெட்டும் கலப்பித்த (து)
  ஒட்டாத விந்துவும் தான்அற் றொழிந்தது
  கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.


  பராசத்தி வழிபாடு பராவித்தை. இது சத்தியின் பேதங்களாகிய எட்டினையும் அட்டாங்க யோகத்தின் வழியே அடையச் செய்து, முடிவில் நாதாந்தத்தில் கொண்டு சேர்க்கும். அதன் பின்னர் பரசிவத்தை அடைவதற்குத் தடையாக இருந்த விந்து நாதங்களும் அகலும் .அப்போது சீவன் பரசிவத்தைக் கூடிப் பராமானந்தம் எய்தலாம். பராவித்தை வழிபாடு அறிவிலும், ஆற்றலிலும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் செய்ய இயலாதது. 2. #7802
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,797
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #1311 to #1314

  #1311. அறுகோண யந்திரம்

  ஏதும் பலமாம் இயந்திரரா சன்னடி
  ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
  நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
  சாதங் கெடச் செம்பில் சட்கோணந் தான்இடே.


  புவனாபதி சக்கரம் வழிபடுவோர் விரும்பும் பயனைத் தரும். இயந்திர ராசன் எனப்படும் இந்த புவனாபதி சக்கரத்தை எந்தத் துதியினாலும் துதிப்பாய். அதனை வழிபடும் முறையைக் குருவின் உபதேசத்தால் அறிவாய் . கர நியாச, அங்க நியாசங்களை இந்த வழிபாட்டிற்கு ஏற்ற முறையில் செய்வாய். பிறவிப் பிணியின் நீக்கத்தை விரும்புவாய். செப்புத் தகடு ஒன்றில் முதலில் அறுகோணச் சக்கரத்தை வரைவாய்.


  #1312. அறு கோணச் சக்கரம்


  சட் கோணந் தன்னில் சிரீம்இரீம் தானிட்டு
  அக்கோணம் ஆறின் தலையில்இரீங் காரம்இட்
  டெக்கோண முஞ்சூழ் எழில்வட்டம் இட்டுப்பின்
  மிக்கீரெட் டக்கரம் அம்முதல் மேல்இடே.


  வரையப்பட்ட அறுகோணச் சக்கரத்தின் அறைகளில் `ஸ்ரீம், ஹ்ரீம்` என்னும் பீசங்களைப் பொறிக்க வேண்டும். அந்தச் சக்கரத்தின் ஆறு மூலைகளின் `ஹ்ரீம்` என்னும் பீசத்தை மட்டும் எழுதவேண்டும். எல்லா மூலைகளும் உள்ளே அடங்கும்படி அவற்றைச் சுற்றி ஒரு பெரிய வட்டம் வரைய வேண்டும். அந்த வட்டத்திற்கு வெளியில் திசைக்கு ஒன்றாக எட்டுத் தாமரை இதழ்களை அமைக்க வேண்டும். அந்த இதழ்களின் கீழே, வட்டத்தில் வடக்கில் அகாரத்திலிருந்து இதழ் ஒன்றுக்கு இரண்டு, இரண்டாக உயிரெழுத்துப் பதினாறையும் முறையாக எழுத வேண்டும்.


  #1313. அறுகோணச் சக்கர அமைப்பு


  இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
  அட்டஹவ் விட்டிட் டதன்மேலே உவ்விட்டுக்
  கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
  இட்டுவா மத் (து) ஆம் கிரோம்என் மேவிடே.


  சக்கரத்தைச் சூழ்ந்த வட்டத்திற்கு வெளியில் உள்ள இதழ்களின்
  இடைநிலம் எட்டிலும் எட்டு ஹகார மெய்யை உகார உயிர் புணர்த்து எழுதி, அவ் இதழ்கள் எட்டிலும் பொருந்தி நிற்க, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றைப் பொறித்து, இதழ்களின் இடப்பக்கங்களில் `ஆம், க்ரோம், என்னும் பீசங்களை எழுதுக.


  #1314. புவனாதிபதியை பூசிப்பாய்


  மேவிய சக்கர மீது வலத்திலே
  கோவை யுடைய குரோம்சிரோம் என்றிட்டுத்
  தாவில் இரீங்காரத் தால்சக் கரஞ்சூழ்ந்து
  பூவை புவனா பதியைப்பின் பூசியே.


  பொருந்திய சக்கரத்தின் வெளியே உள்ள இதழ்களின் வலப்பக்கங்களில் எங்கும் வரிசையாக, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றை எழுதி, எல்லாவற்றையும் கேடில்லாத ரீங்காரத்தால் வளைத்து முடித்தபின், புவனாபதியாகிய அம்மையை வழிபடு.

 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #7803
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,797
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #1315 to #1318

  #1315. வழிபடும் முறை

  பூசிக்கும் போது புவனா பதிதன்னை

  ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
  பேசிப் பிராணப்பிர திட்டை யதுசெய்து
  தேசுற் றிடவே தியான மதுசெய்யே.


  புவனாபதி அம்மையை வழிபடும் விதம்:

  முதலில் மனத்தில் உள்ள காமம் ஆதி குற்றங்களை நீக்கித் தூய்மையுடையதாகப் பண்ணவேண்டும். அகத்தில் அம்மையின் உருவத்தை நினைவு கூர வேண்டும். வெளியில் கும்பம், பிம்பம், சக்கரம் இவற்றில் அவற்றுக்கு உரிய மந்திரங்களால் ஆவாகனம், தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம் என்பவற்றைச் செய்ய வேண்டும். எல்லா உபசாரங்களையும் செய்து முடித்த பின் ஒளிமிக்க அம்மையின் வடிவம் மனத்திலே நன்கு பொருந்தும்படி அவளை நன்கு தியானிக்க வேண்டும்.


  #1316. அம்மையின் வடிவம்


  செய்ய திருமேனி செம்பட் டுடைதானும்

  கையில் படைஅங் குசபாசத் தோடபயம்
  மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி
  துய்ய முடியும் அவயவத் தோற்றமே.


  புவனாபதி அம்மையின் வடிவம்:

  அவள் நிறம் செம்மை; அணியும் உடை செம்பட்டு; இரு கரங்களில் ஏந்துபவை அங்குசம், பாசம்; இரு கரங்கள் அளிப்பது அபய வரதம்; மற்றும் அங்கங்களுக்கு ஏற்ற அழகிய அணிகலன்கள், தலையில் இரத்தின கிரீடம்.


  #1317. பால் அடிசில் நிவேதனம்


  தோற்போர்வை நீக்கித் துதித்தடைவில் பூசித்துப்

  பாற்போ னகம்மந் திரத்தால் பயின்றேத்தி
  நாற்பால நாரதாயா சுவாகா` என்று
  சீர்ப்பாகச் சேடத்தை மாற்றியபின் சேவியே.


  புவனாபதிக்கு வழிபாடு செய்யும் பொழுது, மேலாடையை எடுத்து அரையில் கச்சு போலக் கட்டிக் கொள்ள வேண்டும். நிவேதனம் பால் அடிசில். நிவேதிக்கும் மந்திரம் ஓம் நாரதாயா சுவாஹா: இந்த மந்திரத்தால் நான்கு திசைகளிலும் நிவேதனம் செய்தல் வேண்டும். வழிபாடு முடிந்த பின்பு பாரங்முக அர்க்கியத்தால் அம்மையை முகம் மாற்றிய பின்பே நிர்மாலிய நிவேதனத்தைக் கைக்கொள்ளல் வேண்டும்.


  #1318. விரும்பியது கிடைக்கும்


  சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாபனத்தால்

  பாவித் திதய கமலம் பதிவித்தங்
  கியாவர்க்கு மெட்டா இயந்திர ராசனை
  நீவைத்துச் சேமி நினைந்த தருமே.


  நிவேதனப் பொருளைக் கைக் கொள்வதற்கு முன்னர், கும்ப விம்ப சக்கரங்களில் நிறுவப்பட்ட தேவியை உரிய மந்திரம், கிரியை, பாவனைகளால் தன் இருதயத்தில் ஒடுக்க வேண்டும். யாவர்க்கும் அணுகுதற்கு அரிய மேலான சக்கரத்தை நீ உள்ளத்திலே மறவாது வைத்தால் பின்பு இது நீ விரும்புகின்ற எல்லாம் உனக்குக் கொடுக்கும்.

 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #7804
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,797
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  13. நவாக்கரி சக்கரம்

  13. நவாக்கரி சக்கரம்

  #1319 to #1322

  #1319. ஒன்பது ஒன்பது எழுத்துக்கள்

  நவாக்கரி சக்கரம் நான்உரை செய்யின்
  நவாக்கரி ஒன்று நவாக் கரியாக
  நவாக்கரி எண்பத் தொருவகை யாக
  நவாக்கரி அக்கிலீம் சௌம்முதல் ஈறே.


  நவாக்கரி சக்கரத்தின் இயல்பை நான் உனக்குச் சொல்லுவேன்.
  ஒன்பது எழுத்துத் தொகுதியில் ஒவ்வொன்றும் ஒன்பது எழுத்தாகின்ற முறையால், ஒன்பது ஒன்பது எழுத்துக்கள், எண்பத்தோரெழுத்து என்னும்படி நிற்கும். அந்தத் தொகுதி `ஸௌம்` என்று தொடங்கி, `க்லீம்` என்று முடியும்.


  #1320. நவாக்கரியின் உரு


  சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம்
  கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என்
  றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச்
  செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே.

  The Nine Mantras: 1) Srim 2) Hrim 3) Aim 4) Gaum 5) Krim 6) Haum 7) Aum 8) Saum 9) Klim

  ஒவ்வொரு முறையும் முடிவில் `சிவாய நம` என்று சொன்னால் நவாக்கரி சக்கர வழிபாடு கைவரும்.


  #1321. நலம் தருவாள்


  நவாக் கரியாவதும் நானறி வித்தை
  நவாக் கரியுள்எழும் நன்மைகள் எல்லாம்
  நவாக் கரிமந்திரம் நாவுளே ஓத
  நவாக் கரிசத்தி நலந்தருந் தானே.

  நவாக்கரி சக்கர வழிபாடு நான் அறிந்த சிறந்த வழிபாடாம். அதனால் நலங்கள் விளையும். நவாக்கரி மந்திரத்தை நாம் உருச் செய்தால் அந்த மந்திரத்திற்குரிய சத்திதேவி நமக்கு எல்லா நன்மைகளையும் தருவாள்.


  #1322. தீவினைகள் ஓடி விடும்


  நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
  உரந்தரு வல்வினை உம்மைவிட் டோடிச்
  சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
  வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.


  நவாக்கரி சக்கர வழிபாடு பெரும் நன்மை புரியும் அனுபவ ஞானம் தரும். அதற்கு ஏதுவாகிய கலா ஞானம் வலியுறும். உம் வல்வினைகள் உம்மை விட்டு ஓடிவிடும். இந்த வழிபாட்டினால், வேண்டுபவர் வேண்டுவதைத் தருகின்ற சிவனது திருவருள் கைக்கூடும். அது உமக்குத் துன்பத்தைத் தரவிருந்த தீய வினைகளை ஓட்டி விடும்
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #7805
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,797
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  திருமந்திரம் - நான்காம் தந்திரம்

  #1323 to # 1325


  #1323. நினைத்த மாத்திரத்தில் பயன்கள்

  கண்டிடும் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
  கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
  வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
  நின்றிடும் சக்கரம் நினைக்கு மளவே.


  நவாக்கரி சக்கரத்தை வெள்ளி அல்லது பொன் அல்லது செம்புத் தகட்டிலே அமையுங்கள். பின்பு மனத்தில் அதை ஊன்றி நினையுங்கள். உள்ளத்தில் நிலை பெறுகின்ற அந்தச் சக்கரம் உம்மை நோக்கி வருகின்ற வினைகளை நீங்கள் வெல்ல உதவும். உம்மால் உலகத்தை வெற்றி கொள்ள இயலும். அது நினைத்த அளவிலே நினைத்த பயன்களைத் தரும்.


  #1324. தேவிக்கு உகந்த அர்ச்சனை


  நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா
  நினைத்திடும் சக்கரம் ஆதியும் அந்தமும்
  நினைத்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே
  நினைத்தி (டு) அருச்சனை நேர்தரு வாளே.


  நினைக்கத் தகுந்த க்லீம் என்பதை ஈறாக உடைய நவாக்கரங்களை, நினைக்கின்ற சக்கரத்தின் முதலெழுத்து முதல் ஈற்றெழுத்து முடிய, இந்தச் சக்கரத்தின் சக்தி விரும்புகின்ற செந்நெல், அறுகம்புல் என்பவற்றைக் கொண்டு அருச்சனை செய்தால் அந்த அருச்சனையை அந்த சக்தி ஏற்றுக்கொள்வாள்.


  #1325. எண்ணிய எண்ணியாங்கு எய்தலாம்


  நேர்தரு மந்திர நாயகி யானவள்
  யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை
  கார்தரு வண்ணம் கருதின கைவரும்
  நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.


  வழிபடுபவருக்கு நேரே வந்து அருள் புரிகின்ற அந்தச் சக்கரத்தின் சக்தி என்ன நிறத்தை உடையவள்? அழகிய தேவியாகிய அவள் மேகம் போன்ற நிறத்தை உடையவள். இதனை அறிந்து கொண்டு அவளிடம் மாறாத அன்பு செலுத்து. அப்பொழுது நீ எண்ணியவற்றை எண்ணியவாறு எய்தலாம்.
 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #7806
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,797
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  திருமந்திரம் - நான்காம் தந்திரம்

  #1326 to #1330


  #1326. பராசக்தி பொருந்திட நடந்து கொள்!

  நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
  கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
  படர்ந்திடும் நாமமும் பாய்கதிர் போல
  அடைந்திடும் வண்ணம் அடைந்திடு நீயே.


  உலகில் எல்லா நன்மைகளும் கிடைக்கும். காலன் விதித்த வாழ்நாட்கள் கடந்திடும். பரவிச் செல்லும். கதிரவன் கதிர்கள் போல உன் புகழ் புகழ் நாற்றிசையும் பரவிச் செல்லும். இவை அனைத்தும் நிகழப் பராசக்தி உன்னிடம் வந்து பொருந்தும் வண்ணம் நீ நடந்து கொள்ள வேண்டும்.


  #1326. பராசக்தி பொருந்திட நடந்து கொள்!


  அடைந்திடு பொன் வெள்ளி கல்லுடன் எல்லாம்
  அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
  அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
  அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.

  பொன்னும், வெள்ளியும், மணியும் உன்னிடம் தாமே வந்து சேரும். பராசக்தியின் அருளும், ஞானமும் தாமே கைவரும். அமரர்களின் வாழ்வினை நீ அடையலாம். இதற்கு அந்தப் பராசக்தியை அடையும் வழியை முதலில் நீ அறிந்து கொள்ள வேண்டும்.


  #1328. சிவனை அடைய முயற்சி செய்


  அறிந்திவார்கள் அமரர்களாகத்
  தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
  பரிந்திடும் வானவன் பாய் புனல் சூடி
  முறிந்திடு வானை முயன்றிடு நீரே


  அமர வாழ்வு பெறுவதற்காக மக்கள் நவாக்கரியை அறிந்து கொள்கின்றார்கள். தன்னைத் தெரிந்து கொண்ட தன் அன்பர்களுக்குத் தேவர்களின் தேவன் சிவபெருமான் பரிந்து வந்து அருள்வான். பாய்ந்து வந்த கங்கையின் பொங்கும் நீரைத் தன் புரிசடையால் முறித்த அந்தச் சிவபெருமானை அடைவதற்கு நீ முயற்சி செய்வாய்.


  #1329. மேக மண்டலத்தில் காணலாம்


  நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
  பாரணி யும்ஹ்ரீம் முன் ஸ்ரீம் ஈறாகத்
  தார்அணி யும்புகழ்த் தையல்நல் லாள்தன்னைக்
  கார்அணி யும்பொழில் கண்டு கொள்ளீரே.


  நீங்கள் வணங்கும் இந்த நவாக்கரிச் சக்கரத்தில் பொருந்தியுள்ளன பாரோர் பணியும் ஹ்ரீம் முதல் ஸ்ரீம் ஈறாக ஒன்பது எழுத்துக்கள். இதனை நீங்கள் நன்கு வழி பட்டால், தார் அணிந்த, புகழ் மிகுந்த, தையல் நல்லாளைக் கார்மேகம் போன்ற மண்டலத்தில் உங்களால் காண முடியும்.

  சரியான உச்சரிப்பு இதோ!

  (1). Hrim, (2). Aim, (3). Gaum, (4). Krim, (5). Haum, (6). Aum, (7). Saum, (8). Klim, (9). Srim.


  #1330. முகம் வசீகரம் அடையும்


  கண்டு கொள்ளுந் தனிநாயகி தன்னையும்
  மொண்டு கொளும் முக வசியம தாயிடும்
  பண்டு கொளும் பரமாய பரஞ்சுடர்
  நின்று கொளுந் நிலை பேறுடையாளையே.


  தனக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லாத அந்தத் தனிநாயகி சக்தி தேவியைக் கண்டு கொண்டால், அள்ளி அருந்தும் வண்ணம் அழகிய முகப் பொலிவு உண்டாகும். மேன்மை பொருந்திய பரமசிவன் மஞ்சமாக இருந்து தாங்குகின்ற பேறு பெற்ற சக்தி தேவியை நிலையாக உங்கள் உள்ளத்தே கொள்ளுங்கள்.
 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #7807
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,797
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!

  4. திருமந்திரம் - நான்காம் தந்திரம்

  #1331 to #1335

  #1331. மன்னன் வசமாகிப் பகை அழியும்

  பேறுஉடை யாள் தன் பெருமையை எண்ணிடல்
  நாடுஉடை யார்களும் நம்வசம் ஆகுவர்,
  மாறுஉடை யார்களும் வாழ்வது தான் இலை;
  கூறுஉடை யாளையும் கூறுமின் நீரே.


  நீங்கள் அடையும் பேற்றினால் நாட்டை ஆளும் மன்னன் உங்கள் வசமாவான். உங்கள் பகைவர் அழிவர். ஆகையால் தன் உடலின் ஒரு பாதியில் இறைவனைக் கொண்டுள்ள அந்தச் சக்தி தேவியைத் இடையறாது துதியுங்கள்.


  #1332. பிறவிப் பிணி அறுப்பீர்


  கூறுமின் எட்டு சைதலைவியை,
  ஆறுமின் அண்டத்து அமரர்கள் வாழ்வுஎன,
  மாறுமின் வையம் வரும்வழி தன்னையும்,
  தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.


  எட்டு திசைகளுக்கும் தலைவியாகிய சக்திதேவியை வழிபடுங்கள். அமரர்களின் வாழ்வை பெறக் கொண்ட அவாவினை மாற்றி விடுங்கள். மீண்டும் மீண்டும் பிறந்து இந்த பூமிக்குத் திரும்பும் வழியினை அகற்றி விடுங்கள். நாயகியின் சேவடிகளைச் சேர்ந்து பிறவியில் முன்னேற்றமடையுங்கள்.


  #1333. திருவடிகளைக் காணுவர்.


  சேவடி சேரச் செறிய இருந்தவர்
  நாவடி யுள்ளே நவின்று நின்றேத்துவர்
  பூவடியிட்டுப் பொலிய இருந்தவர்
  மாவடி காணும் வகையறி வாரே.


  சக்திதேவியின் திருவடிகளை இடையறாது நினைவில் கொள்ளுபவர்கள் அவள் திருநாமத்தை நாவசையாமல் மௌனமாக மனதில் செபம் செய்வர். அங்ஙனம் தங்கள் பார்வையும் அகத்துள்ளே செலுத்தி இருப்பவர்கள் அவள் பெருமை வாய்ந்த திருவடிகளைக் காணும் பேறு பெறுவார்.


  #1334. நவாக்கரியின் பீச மந்திரம்


  ஐம் முதலாக வளர்ந்து எழு சக்கரம்
  ஐம் முதலாக அமர்ந்து, இரீம் ஈறாகும்;
  ஐ முதலாகிய யவர்க்கு உடையாள் தனை
  ஐம் முதலாக வழுத்திடு நீயே.


  ஐம் முதலாக வளர்ந்து தோன்றும் இந்தச் சக்கரம். ஐம் முதலாகப் பிற பீசங்களுடன் இறுதியில் ஹ்ரீம் என்ற பீசம் வரும். அகர எழுத்தின் பொருளாகிய சிவனுக்கு உரிய சக்தி தேவியை மாயைக்கு முதல்வியாகப் போற்றுவாய் நீ!


  #1335. வாகீஸ்வரி தோன்றுவாள்


  வழுத்திடும் நாவுக்கரசு இவள் தன்னைப்
  பகுத்திடும் வேதம் மெய் ஆகமம் எல்லாம்
  தொகுத்து ஒரு நாவிடை சொல்ல வல்லாளை
  முகத்துளும் முன் எழக் கண்டு கொளீரே.


  வாகீஸ்வரியாகிய சக்தி தேவியை, வேதங்களும் ஆகமங்களும் போற்றிப் புகழ்ந்திடும். அந்த வேதங்களையும், ஆகமங்களையும் நாம் பயின்றிட வாகீஸ்வரியின் அருள் மிகவும் அவசியம். அவளைத் துதித்து அவளை நாம் முகத்தின் உள்ள அண்ணாக்குக்கு முன்னே எழச் செய்ய இயலும்.
 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 14. #7808
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,797
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  திருமந்திரம் - நான்காம் தந்திரம்

  #1336 to #1340


  #1336. எல்லாம் அறியும் அறிவு தரும்

  கண்ட இச்சக்கரம் நாவில் எழுதிடில்
  கொண்ட இம் மந்திரம் கூத்தன் குறியதாம்;
  மன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய்
  வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.


  இந்தச் சக்கரத்தை ஒருவர் நாவில் எழுதினால் அது கூத்த பிரானின் வடிவமாகிவிடும். பொன்மன்றில் விளங்கும் உயரிய சபாவித்தையும் கைகூடும். மெல்லியல் நங்கையாகிய நவாக்கரியின் அருள் இருந்தால் ஒருவர் உலகையே வெல்ல இயலும்.


  #1337. நல்லியல்பாகிய நாட்களை நல்கும்


  மெல்லியல் ஆகிய மெய்ப்பொருளாள் தன்னைச்
  சொல்இயலாலே தொடர்ந்து அங்கு இருந்திடும்
  பல்லியல் ஆகப் பரந்துஎழு நாள் பல
  நல்லியல் பாலே நடந்திடும் தானே.


  மெல்லியல் ஆகிய அந்த மெய்ப்பொருள் சக்தி தேவியைக் குருவின் உபதேசத்தின்படி நீங்கள் இடையறாது தியானம் செய்யுங்கள். இன்பமும், துன்பமும் கலந்த மனித வாழ்வு அப்போது துன்பம் அற்ற, இன்பம் உற்ற வாழ்வாக மாறிவிடும்.


  #1338. சொல்லும் வண்ணம் செயல்கள் நிகழும்


  நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம்
  தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள் தானும்
  கடந்திடும் கல்விக்கு அரசு இவனாகப்
  படர்ந்திடும் பாரில் பகை இல்லை தானே.


  நல்ல செயல்கள் பல இவன் நாவால் கூறிய வண்ணம் நிகழும். இவன்
  செப்பியவாறே செயல்களின் பயன்களும் விளையும். கல்வியின் அரசி இவன் நாவில் குடி இருப்பாள். எனவே இவனும் நாவரசனாகத் திகழ்ந்திடுவான். பரந்து விரிந்த இந்த உலகில் இவனுக்கு பகைவர் என்று எவரும் இரார்.


  #1339. வந்து வணங்கி நிற்கும்


  பகை இல்லை கௌ முதல் ஐ ஈறா
  நகை இல்லை சக்கர நன்று அறிவார்க்கு
  மிகை இல்லை சொல்லிய பல் உரு எல்லாம்
  வகை இல்லை ஆக வணங்கிடும் தானே.

  பகையைக் கெடுக்கும் கௌம் முதல் ஐம் இறுதியாய் உள்ள இந்தச் சக்கரத்தை நன்கு அறிந்த ஒருவனை, எவரும் இகழ்ந்து பேச மாட்டார். பல வேறுபட்ட வடிவங்களாக இருப்பவை எல்லாம் இவருக்கு மாறுபட்டவை அல்ல. அவை வேறு வழியின்றி வந்து இவரை வணங்கி நிற்கும்.


  #1340. எண்ணிய எண்ணிய வண்ணம் எய்துவர்


  வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னை
  நலங்கிடு நல்லுயிரானவை யெல்லாம்
  கலங்கிடும் காம வெகுளி மயக்கம்
  துலங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே.


  இந்தத் தத்துவ நாயகியை எல்லோரும் வணங்கி நிற்பர். நல்ல சீவன்கள் எல்லாம் அவளுடன் நன்கு பொருந்தி நிற்கும். அவர்களைக் கலங்கச் செய்யும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களும் அகன்று விடும். அவர்கள் எண்ணியவற்றை எண்ணிய வண்ணம் எய்துவர்.
 15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 16. #7809
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,797
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  The increase in the traffic in this thread means that some people are realizing that these are from Thiru Moolar's Thiru Manthiram.
  Here are the links to all the nine thanthirams of Thiru manthiram.

  Thiru Moolar's Thirumanthiram blogs:


  1. திருமந்திரம் - முதலாம் தந்திரம்

  2. திருமந்திரம் - இரண்டாம் தந்திரம்

  3. திருமந்திரம் - மூன்றாம் தந்திரம்

  4. திருமந்திரம் - நான்காம் தந்திரம்

  5. திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

  6. திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

  7. திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

  8. திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

  9. திருமந்திரம் - ஒன்பதாம் தந்திரம்


  திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறை ஆகும். தமிழில் முதல் முதலில் தோன்றிய யோக நூல் இது என்பது இதன் தனிச் சிறப்பு. முதல் சித்தர் திருமூலரே ஆவார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர் மட்டுமல்ல. அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் ஒருவர் ஆவார் திருமூலர். திருவாவடுதுரையில் ஓர் அரச மரத்தின் கீழ் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். ஆண்டுக்கு ஒரு பாடல் என்று மூவாயிரம் பாடல்களை இவர் இயற்றினார் என்பர்.
 17. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 18. #7810
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,797
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #1341 to #1345

  #1341. நினைத்ததைப் பேசுவான்

  தானே கழறித் தணியவும் வல்லனாய்,
  தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
  தானே தனி நடம் கண்டவள் தன்னையும்
  தானே வணங்கித் தலைவனும் ஆமே.


  மேற்
  கூறிய மனிதன் தானே தனக்கு மேலே எவரும் இல்லாத வண்ணம் பேசுவான். தானே எண்ணியவற்றை எல்லாம் ஒளிக்காமல் பேசுவான். தானே ஊழிக் காலத்தில் சிவபெருமானின் சங்காரத் தாண்டவம் காண்பான். தானே வணங்கித் தலைவனும் ஆவான்.

  #1342. தீ வினைகள் போகும் புண்ணியம் வரும்


  ஆமே யனைத்துயி ராகிய அம்மையும்
  தாமே சகலம் ஈன்றவத் தையலும்
  ஆமே யவளடி போற்றி வணங்கினால்
  போம் வினைகளும் புண்ணிய னாகுமே.


  சக்தியே அனைத்து உயிர்களாகவும் தோன்றி உள்ளாள். அனைத்து உயிர்களின் அன்னையும் அவளே ஆவாள். அவள் திருவடிகளைப் போற்றிப் பணிந்தால் நம் தீ வினைகள் அகன்று செல்லும். புண்ணியம் வந்து சேரும்.

  #1343. அவனியில் இனியவன் ஆவான்


  புண்ணியன் ஆகிப் பொருந்தி உலகெங்கும்
  கண்ணியன் ஆகிக் கலந்து அங்கு இருந்திடும்
  தண்ணியன் ஆகித், தரணி முழுதுக்கும்
  அண்ணியன் ஆகி அமர்ந்திருந் தானே.


  புண்ணியன் ஆனவன் உலகம் முழுவதும் பொருந்தும் ஒரு கண்ணியன் ஆவான். அனைவருடன் கலந்து சிறந்து விளங்குவான். அவன் அனைத்துயிர்களின் மீதும் தண்ணருள் கொண்டிருப்பான் . அவனியில் அனைவருக்கும் அவன் மிகவும் இனியவனாக இருப்பான்.

  #1344. வையம் கிளர் ஒளியாவாள்


  தான் அது கிரீம் கௌ அது ஈறாம்
  நான் அது சக்கரம், நன்று அறிவார்க்கு எல்லாம்
  கான் அது கன்னி கலந்த பராசத்தி
  கேள் அது வையம் கிளர் ஒளியானதே.


  நவாக்கரிச் சக்கரத்தின் பீசம் கிரீம் முதல் கௌம் வரை ஆகும். அது நானாக உள்ள சக்கரம் என்ற உண்மையை நன்கு அறிந்தவர்களுக்கு; அஞ்ஞானம் என்கின்ற வனத்தில் இருள் மயமாக இருந்து வந்த த சக்தி தேவி அழியாத உறவாக ஆகிவிடுவாள். அவள் அறிவு நிலையில் ஒளியாகி எல்லா உயிர்களிடமும் பொலிவாள்.

  #1345. அறிந்து கொண்டவர் அருள் பெறுவர்


  ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில்
  களிக்கும் இச்சிந்தையில் காரணம் காட்டித்
  தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
  அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே.


  ஒளிரும் பராசக்தி உள்ளத்தில் ஒருவரின் எழுந்தருளினால், அவர் மனம் களிக்கும்வண்ணம் உண்மைப் பொருள் அவருக்கு நன்கு விளங்கும். நல்ல தெளிவு பிறக்கும். அருள் மழை பொருட் செல்வதை உண்டாக்கும். இவளை நன்கு அறிந்து கொண்டவருக்கு இவை அனைத்தும் நிகழும்.
 19. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •