• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

yatkinjcha brAhmaNOttamam

Status
Not open for further replies.

saidevo

Active member
This little story of mine is inspired by the discussions in the 'engE brAhmaNan' thread:

யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம் - 01
’ப்ராஹ்மண-பந்து’

"பாட்டி பாட்டீ, நோக்கு நான் ஹெல்ப் பண்ணறேன்", என்றான் ஆறு வயதுப் பேரன். "நீதான் நேக்கு சொல்லிக்கொடுத்திருக்கையே!"

பாட்டியின் கையை பேரன் பிடித்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து ஹாலில் உயரே மூங்கில் கொடியில் உலர்த்தியிருந்த பாட்டியின் மடிப்புடவையை லாவகமாக ஒரு நீண்ட மூங்கில் கழியால் மேலே படாமல் எடுத்துவிட, பாட்டி, "இனி நான் பாத்துக்கிரேண்டா கண்ணா!", என்றாள். அம்மா முகவாய்க்கட்டையை ஒருதரம் தன் தோளில் இடித்தவாறே கிச்சனுக்குள் சென்றாள். அப்பா வழக்கம்போல் சோஃபாவில் உட்கார்ந்தபடி பேப்பரில் மூழ்கியிருந்தார்.

பாட்டி மடியாக ஸ்நானம் பண்ணியவுடன், பேரனும் ஸ்நானம்பண்ணிவிட்டு ரெடியாக, இருவரும் அந்த சின்ன பூஜை அறைக்குள் சென்றனர்.

"பாட்டி, இன்னிக்கு ஞாயித்துக்கிழமை. அதனால, நான் ஸந்த்யா வந்தனம் பண்ணறதை நீ கூட இருந்து பார்க்கணும்". "ஆட்டும்டா கண்ணா", என்றாள் பாட்டி. பேரனின் ஸந்தியில் பாட்டி சிற்சில உச்சரிப்பு திருத்தங்கள் செய்தபோது, "எப்படி பாட்டி உனக்கு இதெல்லாம் தெரியும்? தாத்தா வாத்யாரா இருந்தார்னு சொல்வியே, அவர் உனக்கு சொல்லிக்கொடுத்தாரா?" என்றான் பேரன். "நானும் நாளைக்குத் தாத்தா மாதிரி ஆவேன், அதுதான் நேக்குப்பிடிக்கும்".

பின்னர், பாட்டி ஷ்லோகங்கள் சொல்ல, பேரன் அவற்றை அழகாகத் திருப்பிச் சொல்ல பூஜையறை களைகட்டியது. இதற்குள் அப்பாவும் குளித்துவிட--அம்மா காலையிலேயே வழக்கம்போல் பாட்டியைத் திட்டியபடி குளித்துவிட்டிருந்தாள்--பாட்டியும் பேரனும் தரையில் உட்காந்துகொண்டு சாப்பிட்டனர். அதன்பின், அம்மாவும் அப்பாவும் டைனிங் டேபிளில் அமர்ந்து அரட்டையடித்தாவாறே சாப்பிட்டு முடிக்க, பேரன் அதுவரை பாட்டியிடம் கதைகள் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, அம்மாவின் "போதும் கதை கேட்டது, போய் ஹோம்வர்க் பண்ணு" குரல் ஒலிக்க, படிக்கச் சென்றான்.

மாலை அம்மாவும் அப்பாவும் ஷாப்பிங் சென்றுவிட, பாட்டியும் பேரனும் கோவிலுக்குப் போனார்கள். பாட்டி பேரனை வழக்கம்போல் ஒவ்வொரு ஸந்நிதியாக அழைத்துப்போய், அந்தந்த ஸ்வாமிகளுக்குரிய ஷ்லோகங்களையும் கதைகளையும் சொன்னாள். தீபாராதனை பார்த்துவிட்டு ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு, பேரன் கையில் விபூதி-குங்குமம் ஈரமாகக் கொண்டுவந்தபோது அப்பா-அம்மா இன்னும் வீடு திரும்பவில்லை என்று தெரிந்தது. பாட்டி தன் ஜபமாலையை உருட்டத்தொடங்க, பேரன் கொஞ்சநேரம் பாட்டியிடம் கதைகேட்டுவிட்டு, ஸ்கூல் பாடங்களை உரக்கப் படிக்க ஆரம்பித்தான்.

அம்மா பாட்டியைக் கரித்துக்கொட்டுவது வழக்கம்தான் என்றாலும் ஒரு நாள் இரவு மென்குரலில் அப்பாவிடம் தீர்மானமாகச் சொன்னாள்:

"இதப்பாருங்கோ, இதுக்கு ஏதாவது வழி பண்ணியே ஆகணும். என்னால இப்படி கஷ்டப்பட முடியாது. இந்தப்பிள்ளையும் உங்கம்மாவையே சுத்திச்சுத்தி வரது, நானும் தாத்தா மாதிரி வேத வாத்யாராவேன்னு இப்பவே பெருமையா சொல்லிக்கறது. தான் கண்ணைமூடறதுக்குள்ள பேரனுக்குப் பூணல் போடனும்னு சொன்னா உங்கம்மா. நீங்களும் சரின்னு ஆறு வயசுலேயே போட்டுவெச்சேள். இப்ப இந்தப்பிள்ளை நம்பளையே அலக்ஷியம் பண்ணறது. ஏம்மா உனக்கு பாட்டி மாதிரி ஸ்தோத்ரம்லாம் தெரியலே, நீ ஏன் பூஜை பண்றதில்ல, அப்பா ஏன் ஸந்திகூடப் பண்ணமாட்டேன்றா-ன்னு கேள்விவேற. அப்படியே தாத்தாவை உரிச்சு வெச்சிருக்கு. எல்லாம் அந்தக்கிழம் பண்றவேல. நாம் ரெண்டுபேரும் ஒடியாடி ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கறதால கிழம் சொகுசா அனுபவிக்கிறது. இல்லேன்னா என்னிக்கோ ஓல்டேஜ் ஹோம்ல சேர்த்திருங்கோன்னு சொல்லியிருப்பேன்."

"இவ்வளவுநாள் தள்ளினே. அம்மாக்கு வயசு எண்பதைத்தாண்டியாச்சு. வியாதி-வெக்கை இல்லேனால்லும் எவ்ளோ வீக்கா இருக்கா பாரு. எதோ ஒரு ஸங்கல்பத்ல மற்றவாளுக்கு சுமையா இருக்கக்கூடாதுன்னு தன் கார்யத்த தானே பார்த்துக்க்கறா. அந்த அளவுக்கு உனக்கும் எனக்கும் வசதிதானே? நம்ப சம்பாத்யத்ல குழந்தையை எஞ்ஜினீரிங், சீ.ஏ.ன்னு படிக்கவெக்க முடியாதுதான். நடக்க நடக்க பார்த்துப்பமே."

அவர்கள் அதிர்ஷ்டமோ என்னவோ பாட்டி அடுத்த வாரமே ஒருநாள் ராத்ரித் தூக்கத்திலேயே தன் உடலை நீத்தாள். இவர்களுக்கு ஒரு சொல்லமுடியாத ரிலீஃப். பேரனால்தான் தாங்கமுடியவில்லை.

பாட்டியின் படுக்கையில் தலையணை அடியில் அப்பா-அம்மா ஒரு கவரைப் பார்த்தார்கள். பிரித்தபோது அதில் இரண்டு லக்ஷம் ரூபாய்க்கு அப்பா பேரில் ஒரு செக் இருந்தது. கூடவே ஒரு சின்னக்கடுதாசி, ஒரு மாதம் முந்தய தேதியிட்டு. "ப்ரிய புத்ர, ஸ்னுஷா! உங்களுக்கு அதிக ஷ்ரமமாக, பாரமாக இல்லாமல் ஷீக்ரமே கண்ணைமூடிவிடவேணுமின்னுதான் அனுதினமும் பகவானைப் ப்ரார்த்தனை பண்ணினேன். உங்கப்பா ஆசீர்வாதத்தால் அது விரைவில் நிறைவேறும்னு நினைக்கிறேன். உங்கப்பா சேமிப்புடன் நான் சிறுகச்சிறுக சேர்த்து வைத்திருந்த இந்தப் பணத்தையும், லாக்கரில் உள்ள என் பத்துப்பவுன் நகைகளையும் நீங்கள் இஷ்டம்போல் உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். என் பேரனை,--அவன் விரும்பினால் மட்டுமே--அவனது ஏழாவது வயதில் ஒரு வேதபாடஷாலையில் சேர்த்து அவன் (தன் தாத்தா போல) தொடர்ந்து வேத அத்யயனம் பண்ண நீங்கள் அனுமதிக்கவேண்டும். செய்வீர்கள் என்று நம்புகிறேன்."

பேரனுக்குப் பாட்டியின் பணமோ கடிதமோபற்றி ஒன்றும் தெரியாது. பாட்டியின் அந்திம காரியங்கள் முடிந்ததும் அப்பாவின் முன்னிலையில் அம்மா ஒரு நாள் மாலை பேரனிடம் சொன்னாள்: "கண்ணா, கவலைப்படாதே. உனக்கு நாங்கள் இருக்கிறோம்."

"போம்மா, எனக்கு பாட்டிதான் வேணும். உனக்கு அவா மாதிரி கதை சொல்லத்தெரியுமா? நாலு ஷ்லோகம் சொல்லித்தரத் தெரியுமா? கோவிலுக்கு கூடவந்து எனக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா? யாருக்கு வேணும் நீயும் இந்த ஸ்கூல்லயும் சொல்லித்தற நர்சரி ரைம், அலைஸ் இன் வொண்டர்லாண்ட், மடில்டா கதைலாம்?"

"அதுதாண்டா இனிமே நமக்கு லைஃப் கண்ணா! நீ நல்லாப்படிச்சு, எஞ்ஜினீரிங் காலேஜ் சேர்ந்து கம்ப்யூட்டர் எஞ்ஜினீயர் ஆகணும். அப்போதான் எங்களமாதிரி இல்லாம, கைநிறைய சம்பாதிக்கலாம். உன்கூடப்படிக்கற ஜனனியோட அண்ணா மாதிரி ஃபாரின் போகலாம், புரிஞ்சுதா?" என்றனர் அம்மாவும் அப்பாவும் கோரஸாக.

"அதெல்லாம் முடியாது. நான் தாத்தா மாதிரி வேத பாடசாலைல படிச்சு வேதம்தான் சொல்வேன். அதுல உங்களுக்கென்ன கஷ்டம்?" என்றான் பேரன்.

"கிழம் தப்பாம ஒரு வாரிசை உருவாக்கிட்டுத்தான் போயிருக்கு", என்றாள் அம்மா.

**********
 
Last edited:
The tragedy is that modern ways of living even make young parents lose their values and
respect to elders and even teach their children false ideas on life. Even if the child wants to go in the correct direction, they do not alllow. Is the young mother in the story not brought up properly or is it Angnanam on her part?
 
I find the story well written but it is not at all realistic. If the parents of that young boy are not earning well, they will not be able to leave a large savings for their son. supposing another child is born, the savings will be much less. in today's world, though some vaideekans make fortunes, there are others who are ஓட்டாண்டிs. and most important have we any TB parents bringing up their daughter in old-world values and to live within the earnings of a not-so-lucky vaideekan?
 
யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம்
குழந்தையும் தெய்வமும்
’ப்ராஹ்மண-பந்து’

குடும்பம் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருந்தது. அம்மாவுக்கும், அவளது இரட்டைக் குழந்தைகளான அரவிந்த், பத்மாவுக்கும் மிகவும் மகிழ்ச்சி: அப்பா அன்று சீக்கிரமே வீடு திரும்பி அவர்களுடன் சாப்பாட்டுக்கு உட்கார்ந்து விட்டார். எல்லோரும் அமர்ந்ததும், அம்மா, முதல் தடவைக்கு உணவு வகைகளைப் பரிமாறிவிட்டு---வட்டமான கோதுமை ரொட்டிகள், தால், ஆனியன் பச்சடி---அரவிந்த் அருகில் உட்கார்ந்தாள். பத்மா அப்பாவின் அருகில் அமர்ந்திருந்தாள். அன்று மாலை அவர் மிகவும் ஆசுவாசமாகத் தெரிந்தார்.

அம்மா தன் குழந்தைகளைப் பெருமையுடன் பார்த்தாள்: ’வயஸுக்கு மீறின ஞான விசாரத்துல இவாளுக்கு எப்பவும் இஷ்டம்தான். இன்னிக்கு அப்பாவை என்ன கேக்கப் போறதுகளோ? இவாளுக்கு பதில் சொல்றதுல அப்பாவுக்கு ஏகப் பொறுமை.’

"அப்பா," என்றார்கள் குழந்தைகள் இருவரும் சேர்ந்து. "உன்னை ஒண்ணு கேக்கலாமா?"

"ஷூட் இட்", என்றார் அப்பா.

"ஒரே கொழப்பமா இருக்கு அப்பா", பத்மா ஆரம்பித்தாள். "எங்க க்ளாஸ் டீச்சர் இன்னிக்கு க்ளாஸ் முடியற சமயத்துல, ம்..., நாம ஹிந்துக்களுக்கு உண்மையில் ஒரே ஒரு கடவுள்தான் உண்டு, ப்ரம்மம்-ங்கற பேர்ல, நாம நெனக்கறபடி பல கடவுள் கெடையாதுன்னு சொன்னாப்பா."

"டீச்சர் அதை எக்ஸ்ப்ளைன் பண்ணறதுக்குள்ள, பெல் அடிச்சு க்ளாஸ் முடிஞ்சுபோச்சு!", அரவிந்த் தொடர்ந்தான்.

"அப்பா", பத்மா கேட்டாள்: "நமக்கு ஒரே கடவுள்தான்-ங்கறது உண்மையாப்பா?"

"கெடையாது, நம்ம ஸ்வாமி ரூம்ல பல கடவுள் இருக்கே", அரவிந்த் தர்க்கம் செய்தான். விரல்விட்டு எண்ணியபடி அவன், "கணேஷா, ஷிவா, விஷ்ணு, முருகா, ராமா, க்ருஷ்ணா, துர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ, இன்னும் பலபேர் இருக்காளே!" என்றான்.

"அதுவும் கணேஷா நாம ரெண்டுபேர்க்கும் இஷ்ட தெய்வம் வேற", என்றாள் பத்மா, தலையை விரைவாக மேலும் கீழும் ஆட்டியபடி.

"அந்த ப்ரம்மம் யார்னே எனக்குத் தெரியாது!" என்றான் அரவிந்த், தன் கையை விரித்தபடி. "நான் அவரைப் பார்த்ததே இல்லை. அவர் எப்படி இருப்பாருப்பா?"

"எப்படி இருந்தாலும் அந்த ப்ரம்ம்த்துக்காக நான் கணேஷாவை விட முடியாது", என்றாள் பத்மா தீர்மானமாக.

"அல்லது வேற எந்தக் கடவுளுக்காகவும்தான்", என்றான் அரவிந்த்.

"கவலைப்படாதேங்கோ, நான் எல்லாத்தையும் விஸ்தாராம சொல்றேன்", என்றார் அப்பா. "உங்கம்மா என்ன சொன்னா இந்தக் கேள்விக்கு?"

"நான் சொன்னேன், எப்படி நாம நாலு பேரும் சேர்ந்து ஒரே குடும்பமா இருக்கமோ, அதே மாதிரி அந்த ஒரு கடவுளும் பல கடவுளர் சேர்ந்த ஒரு குடும்பமா இருக்கார்."

"ஆல்ரைட். இதை இப்போ நான் சொல்ற மாதிரி நெனச்சுப் பார்க்கலாம். பத்மா, நீ யாரு?"

"நான் ஒரு பொண்ணுப்பா".

"நீ எனக்கு யாரு?"

"நான் உனக்கு மகள்."

"அதாவது, பத்மாக்கு ரெண்டு உருவம்: ஒரு பொண்ணு, ஒரு மகள். அடிப்படையா அவள் ஒரு பொண்ணுதான், ஆனா எனக்கும் அம்மாக்கும் அவள் ஒரு மகள், இல்லையா?"

"அதே மாதிரி நானும் ஒரு பையன், ஒரு மகன்", என்றான் அரவிந்த்.

"நான் என்ன சொல்றேன்னு புரியறதா? பத்மா, உனக்கு வேற ஏதாவது உருவம் இருக்கா?"

பத்மா அந்தக் கருத்தை உடனே க்ரஹித்துக்கொண்டாள். கண்களை உருட்டிக்கொண்டு, தலையை ஆட்டயபடியே அவள் சொன்னாள்: "ஆமாப்பா, பல உருவம் இருக்கே! அரவிந்துக்கு நான் ஸிஸ்டர், க்ளாஸ்ல ஒரு ஸ்டூடண்ட், வளர்மதிக்கு ஒரு ஃப்ரெண்ட், அப்பறம், எங்களோட நா..லு பாட்டி-தாத்தாக்கும் ஒரு பேத்தி!"

"ரொம்ப ஸரி. நீ இந்த எல்லா உருவத்துலயும் ஒண்ணா இருக்கையா, அல்லது வேற வேறயா இருக்கையா?"

"கண்டிப்பா ஒண்ணாதான் இருக்கேன். ஏன்னா, எல்லாமே நான்தானே?"

"இல்ல, அவள் வித்யாஸமா இருக்கா," என்றான் அரவிந்த். "ஸ்கூல் போகும்போது ஸ்மார்ட்டா ட்ரெஸ் பண்ணிண்டிருக்கற பொண்ணா இருக்கா, எனக்கு, அடிக்கடி கொனஷ்டைபண்ற ஸோதரியா இருக்கா, அம்மாவுக்கு ஒரு ஹெல்ப்பிங் டாட்டர், அப்பறம், பாட்டி-தாத்தாக்கு செல்லப் பேத்தி!"

"நீங்க ரெண்டுபேர் சொல்றதும் ஸரி. பத்மா, நீ சொன்னபடி, நீ உன் எல்லா உருவத்துலயும் ஒண்ணாவும் இருக்கே, அதே நேரத்துல ஒவ்வொண்ணாவும் இருக்கே. அதாவது, நீ உன் ஒவ்வொரு உருவத்துலயும் வேற வேறயாத் தெரிஞ்சாலும், எல்லா உருவத்துலயும் இருக்கறது ஸாக்ஷாத் நீதான், இல்லையா?"

ஒரு கவளம் விழுங்கிவிட்டு அப்பா தொடர்ந்தார்: "பத்மா, நீ உண்மைல ஒருத்தியா இருந்தாலும், ஏன் இப்படி பல பேர்க்கு பலவிதமாத் தெரியறே? ஏன்னா, உன்னோட சொந்தம், நட்பு இதைப்பொறுத்து நீ பலவிதமான ரோல்ஸ் ப்ளே பண்ண வேண்டியிருக்கு, அதுக்குத்தகுந்த மாதிரி வேஷம் போட வேண்டியிருக்கு, ஒரு ட்ராமால வர மாதிரி. அதேமாதிரிதான் உனக்கும் அரவிந்த், இல்லையா?"

"அது புரியறதுப்பா, ஆனா பத்மாவும் நானும் வேற வேற தானே? ஏன்னா, அவ ஒரு பொண்ணு, நான் பையன்?"

"யெஸ் அன்ட் நோ. நீ ஒரு பையன் அவள் ஒரு பொண்ணுங்கறது ஸரிதான், ஆனா அதே நேரத்துல, நீங்க ரெண்டு பேரும், நானும், அம்மாவும் மனிதர்கள், இல்லையா? ஆகையினால, நாம எல்லோரும் பொதுவா மனித உருவங்கள், ரைட்?"

"ஆனா அப்பா," அரவிந்த் கேட்டான்: "கடவுளும் ஒரு மனிதரா? ஏன்னா, நாம வணங்கற ஒவ்வொரு கடவுளும் மனித உருவத்தில்தானே இருக்கா?"

"கணேஷாவைத் தவிர," என்றாள் பத்மா. "அவர் ஸ்பெஷல். மனித உருவம், ஆனை முகம்."

"ஆமாம். ஒரு உருவம் எடுக்க நினக்கும்போது கடவுள் பெரும்பாலும் மனித உருவத்திலேயே வருகிறார். ஏன்னா அவர் படைத்த உருவங்கள்லேயே மனித உருவம்தான் சிறந்தது. ’தெய்வம் மானுஷ ரூபேண’ அப்படீன்னு வசனமே இருக்கு."

"ஆனா இந்த மனுஷ ரூபங்கள்லயும் வித்யாஸம் இருக்கில்லப்பா?" என்றான் அரவிந்த். "நீ, அம்மா, பத்மா, நான் எல்லோரும் வித்யாஸப்படற மாதிரி."

"ஆமாம் அரவிந்த். எப்படி நாம வேற வேற ரூபங்கள்ல தெரிஞ்சாலும் அது எல்லாத்துலயும் மனுஷன்-ங்கற அடிப்படையா இருக்கமோ, அதே போல கடவுளோட உருவங்கள் வேறயா இருந்தாலும் அந்த எல்லாத்துலயும் இருக்கறது ஒரே கடவுளாகிய ப்ரம்மம்தான். இப்ப புரிஞ்சுதா?"

"ஆனா அப்பா", பத்மா கேட்டாள்: "கடவுள் ப்ரம்மம்-ங்கற ஒண்ணா இருக்கும்போது நாம ஏன் அவரை விதவிதமான மனுஷ ரூபங்கள்ல கும்பிடறோம்?"

"நம்மளோட இந்த லோகம் இருக்கே, அது ஒரு கலர்ஃபுல் வர்ல்ட். அதுல பலதரப்பட்ட மனுஷா இருக்கா. சில பேருக்கு செல்வம் வேணும், சில பேருக்கு ஆரோக்யம் வேணும், சிலருக்கு ஞானம், இன்னும் சில பேருக்கு கடவுள் என்ன கொடுக்கறாரோ அதைத் தவிர வேற ஒண்ணும் வேண்டியிருக்காது. கடவுள் இந்த லோகத்தைப் படைத்ததால, எல்லாத்தையும் அவர்தான் கண்ட்ரோல் பண்றார். அதனால, செல்வம் வேணுங்கறவாளுக்கு அவர் லக்ஷ்மீயா வரார், ஆரோக்யம் வேணுங்கறவாளுக்கு பிள்ளையாரா வரார், ஞானம் வேணுங்கறவாளுக்கு ஸரஸ்வதீயா, இன்னும் இதுமாதிரி பல வடிவத்துல வரார்."

"ஆனா நம்ம ஸ்வாமி ரூம்ல பல கடவுள் இருக்கே?" என்றான் அரவிந்த். "அப்போ நமக்கு எல்லாம் வேணும்னு அர்த்தமா?"

அப்பா சிரித்தார். "நீ ஸொல்றது ஒருவிதத்துல ஸரிதான். உனக்கும் பத்மாக்கும் கணேஷா இஷ்ட தெய்வம். இதே மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒரு இஷ்ட தெய்வம். நமக்கு எல்லா தெய்வ வடிவங்களும் இஷ்டம், அதனால நாம பல தெய்வங்களைக் கும்பிடறோம்."

"லக்ஷ்மீ செல்வத்தையும் ஸரஸ்வதீ அறிவையும் கொடுக்கறான்னா, ஶிவாவும் விஷ்ணுவும் என்ன தராப்பா?", என்றாள் பத்மா.

"அதைப்பத்தி பேசணும்னா, ஒரு நீளமான வியாக்யானமாப் போகும். இன்னொரு நாள் பார்க்கலாம். இப்ப நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது ரெண்டு. முதலாவது, கடவுள் என்பது ப்ரம்மம் ஒன்றுதான், அதை ஹிந்துக்கள் பலவிதமா வடிவங்கள்ல வழிபடறா. ரெண்டாவது, நாம கடவுளை பலவிதமான வடிவங்கள்ல வழிபட்டாலும், நமக்கு கடவுள் ஒன்றுதான்னு ரொம்ப நல்லாவே தெரியும். வயல்ல வேல செய்ற ஒரு ஸாதாரண விவசாயிக்குக்கூட இந்த உண்மை தெரியும்."

"இப்ப நல்லாப் புரியறதப்பா", என்றார்கள் குழந்தைகள் இருவரும் சேர்ந்து. அரவிந்த் கேட்டான்: "அப்பா, கடவுள் மனுஷ ரூபத்துல வரார்னா, மனுஷாளான நாம எல்லோரும் கடவுளாப்பா?"

"ஆமாம், அடிப்படையா நாம கடவுள்தான். ஆனால் நமக்கு அது தெரியறதில்ல. வெளி வேஷங்கள்தான் உண்மைன்னு நம்பிண்டு நாம ஒவ்வொருத்தரும் நம்மைத் தனித்தனி மனுஷாளா நெனைச்சுக்கறோம்."

"மனுஷாள்லாம் கூடக் கடவுள்தான்னா அப்பாதான் என்னோட ஃபேவரிட் ஹ்யூமன் காட்", என்றாள் பத்மா.

"அம்மாதான் என்னோட ஃபேவரிட் ஹ்யூமன் காட்", என்றான் அரவிந்த்.

"உங்க டீச்சரையும், வீட்டுக்கு வர கெஸ்ட்டையும் மறந்துவிடாதீங்கோ!" எல்லாவற்றையும் ஆர்வத்துடன் கேட்டு ரஸித்துக்கொண்டிருந்த அம்மா சொன்னாள்.

"யெஸ் மாம்", குழந்தைகள் குதூகலத்துடன் கூறினர். "நீ எங்களுக்கு மின்ன சொல்லிகொடுத்தது, இப்பதான் அர்த்தம் புரியறது. மாத்ரு தே3வோ ப4வ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ*".

*தைத்தீரிய உபநிஷத் 1.11.3.

~*~*~*~*~*~*~*~*~*~
 
Yes sir ; Truth is one and it is called by different names. Only the names and forms
are different, and these are just super-impositions like the famous and oft-quoted
example of snake and rope. Brahman is the thread which unifies all from ant to Bramha,
as sri Adi Sankara says in one of his hymns.

Regarding post no.1, what our friend hints is quite true. Parents do not like their
children to take to Athma vidya nowadays; they prefer them to become technocrats
and earn good remuneration. It is plain economics which governs our lives. But still
one or two , here and there, want their boys to learn veda adhyayanam. But again
this tribe is vanishing ! The parents have taken back their boys from veda patasala.
 
namaste shrI Ranganathan, sir.

The idea of this thread is to fictionally explore the life situations in some brahmin families who try to retain some of their tradition, culture and dharma, even in these days of inevitable materialism where cut-throat competition is the order.
 
To post my next instalment shortly, so just bumping this thread to keep it from getting locked...
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top