What is Pavithrotsavam?

பவித்ரோத்ஸவம் என்றால் என்ன?

ஒவ்வொரு திருக்கோயில்களும் ஆண்டுதோறும் ஆவணி அல்லது புரட்டாசி மாதங்களில் பவித்ரோத்ஸவம் 3 அல்லது 5 அல்லது 7 அல்லது 9 நாட்களுக்குக் கொண்டாடப்படும். எம்பெருமானுக்குத் திருவாராதனம் ஸமர்பிக்கப்படும் போதும் மற்றைய உத்ஸவங்களிலும் மந்த்ர லோபம் (குறைவு) ஏற்படக்கூடும். அதனால் எம்பெருமானுடைய ஸாந்நித்யம் குறைய வாய்ப்பு உண்டு.
அவ்வாறு ஏற்படும் குறைகளைப் போக்குவதற்காகப் பவித்ரோத்ஸவம் கொண்டாடப்படுகிறது.

பவித்ரோத்ஸவம் என்பது புனிதப் படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். கோயிலுக்குப் பலதரப்பட்ட மக்களும் வருவார்கள். தடுக்க இயலாது. அதே போல் பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம் மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம்.

இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்ஸவம் ஆகும். ஆலயங்கள் தொடர்பான பிராயச்சித்தம் என்றும் சொல்லலாம். இந்த உற்சவத்தில் உற்சவ விக்கிரகங்கள் மட்டுமில்லாமல் மூலவருக்கும் சேர்த்தே விசேஷமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும்.

திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது.

கோயிலுக்கு வரும் மகான்கள் துதிக்கும் துதிகளால் இறை சக்தி, புனிதம் ஆகியவை பெருகும். அதே சமயம் அங்கே வரும் பக்தர்களின் குணங்கள், மாறுபட்ட நடத்தைகள், அவர்களால் ஏற்படும் தீட்டுக்கள் போன்றவைகளால் மூர்த்திகளின் இறை அம்சங்களில் மாறுபாடு ஏற்படும். அவைகளை சரி செய்து மூர்த்திகளின் சாந்நித்யம் குறையாமல் இருக்க பவித்ரோத்ஸவம் கொண்டாடப் படுகிறது.

லோக க்ஷேமம் கருதி செய்யப்படுவதுதான் புனிதப்படுத்தும் பவித்திர உத்ஸவம்.
 
Last edited:
ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! பவித்ரோத்சவம்!
இது உலக க்ஷேமத்துக்காகவே நடத்தப்படும் ஒரு உற்சவம்.
ஸ்ரீரங்கம் கோயிலில் பவித்ரோத்சவம் எனச் சொல்லி இருக்கேன். பார்க்கப் போனால் இது எல்லாக் கோயில்களிலும் உண்டு. ஆகம முறைப்படியான அனைத்துக் கோயில்களிலும் பவித்ரோத்ஸவம் கட்டாயம் உண்டு. இது சிராவண மாதத்திலேயே செய்யப்படும். சில சமயங்களில் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும் செய்யப்படும். பவித்ரோத்ஸவம் என்பது புனிதப் படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். கோயிலுக்குப் பலதரப்பட்ட மக்களும் வருவார்கள். தடுக்க இயலாது. அதே போல் பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம் மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம். இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்ஸவம் ஆகும். ஆலயங்கள் தொடர்பான பிராயச்சித்தம் என்றும் சொல்லலாம். இந்த உற்சவத்தில் உற்சவ விக்கிரகங்கள் மட்டுமில்லாமல் மூலவருக்கும் சேர்த்தே விசேஷமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும்.
மேலே சொல்லப்பட்ட மாதங்கள் ஏதேனும் ஒன்றில் சுக்லபக்ஷத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து இந்த உற்சவத்தின் முக்கிய அம்சம் ஆன பவித்ரம் சமர்ப்பித்தல் நடைபெறும். இது அநேகமாகப் பெரிய கோயில்களில் ஏழு தினங்கள் நடைபெறும். கோயிலுக்கு வரும் மகான்கள் துதிக்கும் துதிகளால் இறை சக்தி, புனிதம் ஆகியவை பெருகும். அதே சமயம் அங்கே வரும் பக்தர்களின் குணங்கள், மாறுபட்ட நடத்தைகள், அவர்களால் ஏற்படும் தீட்டுக்கள் போன்றவைகளால் மூர்த்திகளின் இறை அம்சங்களில் மாறுபாடு ஏற்படும். ஆகவே பவித்ரோத்சவம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
பொதுவாக கோயில்களில் நடைபெறும் உற்சவங்களில் ரக்ஷாபந்தனம் என்பது உற்சவருக்கு மட்டுமே இருக்கும். உற்சவ மூர்த்திகளுக்கு மட்டுமே கங்கணம் கட்டுவார்கள். ஆனால் பவித்ரோத்சவத்தில் மூல விக்கிரகங்களுக்கும் ரக்ஷாபந்தனம் நடைபெறும். இதைக் கடவுளே மேற்கொள்ளும் யக்ஞமாகப் பாவிப்பவர்களும் உண்டு. கோயில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களில் ஒருவர் இந்த உற்சவத்தை ஏற்று நடத்தும் தலைமப் பதவியை மேற்கொள்ளுவார். அவர் பெருமாளின் பிரதிநிதியாகக் கருதப் படுவார். உற்சவம் முடியும்வரை ஆசாரியர் எனவும் அழைக்கப்படுவார்.


நன்றி: ஆன்மீக பயணம்
 
Last edited by a moderator:
Back
Top