Wedding mantram

praveen

Life is a dream
Staff member
திருமணமந்திரம்…!!!

|| மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவிதா ஹேதுநா |
கண்டே பத்நாமி ஸூபகே ஸஜீவ ஸரதஸ்ஸதம் ||

இது மணமகன் சார்பாக சொல்வதாக அமைந்த மந்திரம்.

மந்திரத்தை அய்யர் எடுத்துக்கூற மணமகனும் அக்கினி சாட்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

‘‘உன்னோடு நான் நீடுழி வாழ வேண்டி இந்த மங்கலநாணை உன் அழகிய கழுத்தில் அணிவிக்கிறேன். எல்லாப்பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறைவன் அருள் புரியட்டும்!’’

||ஸோம ப்ரதமோ விவிதே கந்தர்வ விவிதா: உத்ட்ராஹ
த்ரியோ அஹ்னித்தெபிதீஹ||
துரியஷ்டெமனுஷ்யஜஹ :
ஷோம ததத் கந்தர்வ கந்தர்வ த த்தயன; .
யே ரயின்ஷப்பூதரம் ஸ்காதத்
அக்னிர்மஹைமதோ இமாம்.

-★. இதன் பொருள்:★

"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்
பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தால்
மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்
நான்காவதாக, மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"

இதன் உட்பொருள்:

1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம்
எனப்படுகிறது .

2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை. ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம்.
ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது.

3. அதன் பின் 11 - 16 வயது பருவகாலம், உடலில் ஹார்மோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும்
உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.
 
Back
Top