• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

VIVAAHAM-1.

kgopalan

Active member
.
பாக்கு வெற்றிலை மாற்றுதல்:-= நிச்சயதார்த்தம்

ஜாதகம் பொருந்தி, பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பிடித்து , எல்லோர் மனதிற்கும் த்ருப்தி ஏற்பட்ட பின் ,சம்பந்தம் கொள்வது என்று உறுதியானபின்

, பிள்ளை வீட்டில் பாக்கு வெற்றிலை மாற்றி கொள்வது வழக்கம். அந்த காலத்தில் வாய் வார்த்தையின் நிச்சயத்திலேயே நம்பி இருந்தனர்.

இக் காலத்தில் விவாஹத்திற்கு முன்னதாகவே ஒரு நல்ல நாளில் பிள்ளை வீட்டில் இந்த நிகழச்சி நடை பெறுகிறது.

இதற்கு பெண் வீட்டார் ஒரு புதிய சம்படத்தில் திரட்டி பால் 500 கிராம்,, பருப்பு தேங்காய் ஒரு ஜோடி, ஏதோ ஒரு வகை இனிப்பு 31;

வெற்றிலை, பாக்கு, புஷ்பம், மாலை, கல்கண்டு, சந்தனம், குங்குமம். , மஞ்சள் தூள், ஆப்பிள், ஆரஞ்ச், பைன் ஆப்பிள்,
பன்னீர் திராட்சை, கொய்யா, மாதுளை, வாழை பழம், பலா பழம், மாம்பழம் (கிடைக்கும் சீசனில்)
வகைக்கு ஒரு டஜனும், வாதாம் பருப்பு, பேரீச்சை, பிஸ்தா பருப்பு, வால்னட்,கிஸ்மிஸ் பழம், முந்த்ரி பருப்பு வகைக்கு ஒரு கிலோவும்; சக்கரை பொம்மைகள்;

சர்க்கரை, அதில் கலர் பெப்ப்ர் மின்டால் பெயர்கள் எழுதி வைக்கிறார்கள்.
ட்ரேகளில் இவைகளை வைத்து அலங்கரிக்கி றார்கள்.

மணமகனுக்கு பேண்ட், ஷர்ட். டை; ஷூ மணமகள் வீட்டார் வாங்கி செல்ல வேண்டும்.
திருமணதிற்கென வைக்க இருக்கும், வெள்ளி சந்தன பேலா, குங்கும சிமிழ், இவற்றை இந்த வைபவத்தின் போது பிள்ளை வீட்டாரிடம்

சேர்பிக்க வேண்டும். கல்யாண தினதன்று இவைகளை பிள்ளை வீட்டார் கல்யாண மணடப
திற்கு கொண்டு வருவார்கள். இதை முன் கூட்டியே பேசி கொள்ளலாம். பெண் வீட்டு புரோஹிதரும், பிள்ளை வீட்டு ப்ரோஹிதரும் இந்த வைபவத்திற்கு வருவார்கள்.

பிள்ளை வீட்டார் அவர்களது மொட்டை மாடியில் இடமிருந்தால் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் ஷாமினா போட்டு, டேபிள், நாற்காலி

போட்டு, தண்ணீர், ப்ளாஸ்டிக் டம்ப்ளர்கள் வாங்கி கேடரர் இடம் சொல்லி டிபனோ அல்லது சாப்பாடோ சமயத்திற்கு ஏற்றார்

போல் போட்டு, தாம்பூல பையில் தாம்பூலம், பழம் அல்லது தேங்காய், பரிசு பொருள், பணம் போட்டு கொடுக்க வேண்டும். மாதர்களுக்கு

இத்துடன் ரவிக்கை துண்டும் சேர்த்து கொடுக்க வேண்டும். சாப்பாடு அல்லது டிபன், காபி, தாம்பூல பை இவைகள் பிள்ளை வீட்டார் சிலவு.

மொட்டை மாடியில் இடமில்லா விட்டால் பக்கத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் செய்ய வேண்டும். இதுவும் பிள்ளை வீட்டார் சிலவு.

முதலில் பெண் வீட்டார் விக்னேஸ்வர பூஜை; கிரஹ ப்ரீதி செய்து வாங் நிச்சய பத்திரிக்கை
வைத்து தாம்பூலம், பழம், தேங்காய் புஷ்பம் உள்ள தாம்பாலத்தை பிள்ளை வீட்டு தலைவரிடம் கொடுப்பார்

பிறகு பிள்ளை வீட்டு தலைவரும் பெண் வீட்டு தலைவரிடம் பத்ரிக்கை, தாம்பூலம், பழம், புஷ்பம் தேங்காய் கொடுப்பார்.

இப்போது வந்திருக்கும் அனைவருக்கும் சக்கரை, கற்கண்டு, சந்தனம் கொடுக்க வேண்டும்.

செளகரிய பட்டால் மண மகனையும், மண மகளையும் தனி தனியே கிழக்கு நோக்கி உட்கார வைத்து , பிள்ளைக்கு பெண்ணீன் தந்தையும், பெண்ணிற்கு பிள்ளையின் சகோதரியுமாக சந்தனம் கொடுத்து, , பெண்ணுக்கு

குங்குமமும், பூவும் கொடுத்து பிள்ளைக்கு பெண் வீட்டார் உடை அளித்து அதை அணிந்து வந்த பிறகு, மாலை போட்டு, அதே போல் பெண்ணிற்கு

பிள்ளை வீட்டார் வாங்கி கொடுத்த , புடவை கட்டி வர பெண்ணிற்கும் மாலை போடுவார்கள்.
வசதி உள்ளவர்கள் பிள்ளை வீட்டார் பெண்ணிற்கு நகையும், பெண் வீட்டார் பிள்ளைக்கு கை கடிகாரம், மோதிரம், மைனர் செயின் ,ப்ரேஸ்லெட் இத்யாதிகளில் ஏதோ ஒன்று வாங்கி போடு
வார்கள்.

பெண்ணின் பெற்றோர்கள் பிள்ளையின் பெற்றோர்களுக்கு புடவை, வேட்டி, துண்டு வாங்கி கொடுப்பார்கள்.
பிள்ளையின் பெற்றோர்கள் பெண்ணின் பெற்றோர்களுக்கு வேட்டி, துண்டு, புடவை வாங்கி தருவார்கள்.
அதன் பின்னர் ஆரத்தி எடுப்பார்கள். பெண் வீட்டு உறவுகாரர்களை பிள்ளைக்கும், பிள்ளை வீட்டோருக்கும், பிள்ளை வீட்டு உறவு காரர்களை பெண்ணுக்கும் பெண் வீட்டோருக்கும் அறிமுகம் செய்து வைப்பார்கள்.

பிள்ளை வீட்டிலேயே நடக்குமானால் குத்து விளக்கு, திரி நூல், எண்ணெய், கற்பூரம்,தீபெட்டி, ஊதுபத்தி, பஞ்ச பாத்திர உத்திரிணி ஆசன பலகை கொடுப்பார்கள்,

கல்யாண மண்டபம் என்றால் பெண் வீட்டார் தடுக்கு, பஞ்ச பாத்திர உத்திரிணி, குத்து விளக்கு, எண்ணெய், திரி நூல், தீப்பெட்டி, ஊதுவத்தி, கற்பூரம், கற்பூர கரண்டி முதலியவை எடுத்து செல்ல வேண்டும்.

திருமணம் ஆகாததால் பெண் தனியாகவும், பிறகு பிள்ளை தனியாகவும் நமஸ்காரம் செய்ய வேண்டும். இருவரும் சேர்ந்து இப்போது நமஸ்காரம் செய்ய கூடாது.
இரு தரப்பினரும் வாக்கு மாறாமல் இருப்பதற்காக இந்த வாங் நிச்சயம் செய்ய படுகிறது.

பெண் வீட்டுக்காரர்.

நிகழும் மங்களகரமான -------- வருஷம் ------
மாதம் ------ தேதி ----- கிழமை ----- திதி ------
நக்ஷத்திரம் -------- யோகம் கூடிய ஶுப
தினத்தில் உதயாதி நாழிகை ----- மேல் ----- குள்

------- ( ஊரின் பெயர் ) --------- கோத்ரம் --------
பேரனும் --------- குமாரனுமான சிரஞ்சீவி --------
ஊர் ------ கோத்ரம் --------- பெளத்ரியும் -------
குமாரியுமான ---------- யை பகவத் க்ருபையுடன் -------- தேதி நிச்சயமானால்) ------- வருஷம் ------- மாதம் -------- தேதி அன்று
சுப முஹூர்த்தத்தில் கன்னிகா தானம் செய்து

கொடுப்பதாய் இரு பக்கத்தாரின் ஸம்மதத்துடன்
பெரியோர்களால் நிச்சயிக்க பட்டது
இடம் --------- இப்படிக்கு.
தேதி --------

பிள்ளை வீட்டுக்காரர்.
நிகழும் மங்களகரமான -------- வருஷம் ------
மாதம் ------ தேதி ----- கிழமை ----- திதி ------
நக்ஷத்திரம் கூடிய -------- யோகம் கூடிய ஶுப
தினத்தில் உத்யாதி நாழிகை ----- மேல் ----- குள்

------- ( ஊரின் பெயர் ) --------- கோத்ரம் --------
பேரனும் --------- குமாரனுமான சிரஞ்சீவி --------
ஊர் ------ கோத்ரம் --------- பெளத்ரியும் -------
குமாரியுமான ---------- யை பகவத் க்ருபையுடன் -------- தேதி நிச்சயமானால்) ------- வருஷம் ------- மாதம் -------- தேதி அன்று
சுப முஹூர்த்தத்தில் பாணி க்ரஹணம் செய்து

கொள்வதாய் இரு பக்கத்தாரின் ஸம்மதத்துடன்
பெரியோர்களால் நிச்சயிக்க பட்டது
இடம் --------- இப்படிக்கு.
தேதி --------
நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவி கைஎழுத்திட்டு கவரில் போட்டு கொடுக்கவும்.
இதை தாம்பாளத்தில் வைத்து பழம், புஷ்பம், இரு தேங்காய் களுடன் கொடுக்கும் போது
ஶோபனம், ஶோபனம் என்று சொல்லி கொண்டு இரு தரப்பினரும் பெற வேண்டும்.

ஒரு தேங்காயை பிள்ளையாருக்கு சதுர் தேங்கா யாக உடைக்கவும். மற்றொன்றை சுவீட் செய்து சாப்பிடலாம். திருமணத்திற்கு நாளாகும் என்றால்.

பெண்ணின் தகப்பனார் ஆசமனம் செய்து, சுக்லாம்பரதரம் சொல்லி, ப்ராணாயாமம் செய்து ஸங்கல்பத்தில் சுபே சோபனே முஹூர்த்தே -----

சுப திதெள ---------நக்ஷத்ரே -------- ராசெள ------ ஜாதாயாஹா --------- நாமின்யாஹா அஸ்ய:

மம குமார்யாஹா -------- வத்வாஹா---------
---------- நக்ஷத்ரே -------- ராசெள -------ஜாதஸ்ய

--------- சர்மன: அஸ்ய வரஸ்ய அனயோஹோ வதூ வரயோ: உத்வாஹார்த்தம்
வாங்க் நிச்சயம் கரிஷ்யே. ததங்கம் க்ரஹ ப்ரீதி தானம் ச கரிஷ்யே. அப உபஸ்பர்ஸ்ய.

பிறகு பிள்ளையார் பூஜை. பிறகு யதா ஸ்தானம். பிள்ளையாரை சிறிது வடக்கே நகர்த்தவும். க்ஷேமாய புணராகமனாய ச. என்று சொல்லவும். புஷ்பத்தை கர்த்தா மனைவி தலையில் வைத்து கொள்ளலாம்.

கிரஹ ப்ரீதி: ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஶாந்திம் ப்ரயஸ்சமே.

வதூவரயோ: உத்வாஹா வாங் நிச்சய முஹூர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யாதீனாம்
நவானாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதா ப்ரீத்யர்த்தம் இதம் ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய:
ஸம்ப்ரததே ந மம. என்று சொல்லி ஜலத்தை கீழே விட்டு தக்ஷிணையை ப்ராஹ்மணர்களுக்கு கொடுக்கவும்.

இரு பக்கத்து வாத்யார்களுக்கும் ஸம்பாவனை கொடுக்கவும்.

பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் கொடுத்த பழங்கள், உலர் பழங்கள்; ஸ்வீட், இத்யாதிகளை காலி அட்டை பெட்டிகளில் மாற்றி கொண்டு
தனது வீட்டிற்கு எடுத்து செல்வார்கள். தனது உறவினர்களுக்கு அதை பகிர்ந்து கொடுப்பார்கள்.

பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் அவரவர் வீடுகளில் சமாராதனை; ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்வார்கள்.

பிள்ளை வீட்டார் மறுமகள் வீட்டிற்கு வந்த பின்னும் சிலர் ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்வார்கள். ஒரு நல்ல நேரத்தில் ஒரு மஞ்சள் துணியில் பத்து ரூபாய் நாணயம் வைத்து

முடிந்து ஸுமங்கலி ப்ரார்த்தனை மறுமகள் வந்த பிறகு செய்கிறேன் என்று வேண்டி கொண்டு பிறகு செய்யலாம். வருடத்திற்கு ஒரு முறை தான் ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்ய முடியும்.
 
கல்யாண பத்திரிக்கை அடித்து வந்தவுடன் குல தெய்வம் கோயிலுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை செய்து வஸ்த்ரம் வாங்கி சாற்றி, கோயிலுக்கு காணிக்கை செலுத்தி பத்ரிக்கை கோயிலுக்கு கொடுத்து நல்ல படியாக கல்யாணம்
நடக்க வேண்டும் என வேண்டி கொண்டு வர வேண்டும்.
பிறகு காஞ்சி அல்லது சிருங்கேரி அல்லது உங்கள் மடாதிபதியிடம் வெற்றிலைபாக்கு, பழம், புஷ்பம் பத்ரிக்கை தக்ஷிணை வைத்து ஆசீர்வாதம் பெற்று வர வேண்டும்.

பிறகு உங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு தாம்பூலம், பழம், புஷ்பம், தேங்காய், மஞ்சள், குங்குமம் , பத்ரிக்கையும் வைத்து கல்யாணத்தை வந்து நடத்தி கொடுக்கும் படியாக கூப்பிட வேண்டும்.

மற்றவர்களுக்கு நேரிலும், கம்ப்யூட்டர் மூலமும் பத்ரிக்கை அனுப்பி கூப்பிடலாம்.
உறவினர்களுக்கு ஜவுளி வாங்க வேண்டிய லிஸ்ட் தயார் செய்து புடவை,ரவிக்கை துண்டு, சுடிதார்; வேட்டி, துண்டு, பேன்ட், ஷர்ட்
இத்யாதிகள் வாங்கி அவரவர் பெயர் கவர் மேல் எழுதி வைத்து கொள்ள வேண்டும்.
கட்டு சாத கூடைக்கும் இருக்க வேண்டும் என்ற கட்டு பாடுடன் மேளத்திற்கு அட்வான்ஸ் ,கேடரரிடம் கொடுக்க சொல்லவும்.

இக்காலத்தில் எல்லாம் கேடரர் பார்த்து கொள்கி றார். குடை, பாத ரக்ஷை, தடி கம்பு, பரதேச கோல துண்டு, சோப்பு, சீப்பு,கண்ணாடி, ஷேவிங்க்
செட்; பற்பசை; டூத் ப்ரஷ்; துண்டு , மண மக்கள் பெயரிட்ட பட்டு பாய் இவைகளும் கேட்டரர் வாங்கி கொடுத்து விடுவார். பர தேச கோல
துண்டில் அரிசியும், பருப்பும் போட்டு கட்டி வைக்க வேண்டும். ஊஞ்சல் , அதற்கு புஷ்ப அலங்காரம், மண மேடை புஷ்ப அலங்காரம் இவைகளும் கேடரர் பார்த்து கொள்வர்.
நல்ல நாள் பார்த்து கூறை புடவை, ரவிக்கை, திரு மாங்கல்யம், காலுக்கு மெட்டி, வெள்ளி குங்கும சிமிழ், பஞ்ச பாத்திரம் உத்திரிணி, சந்தன பேலா, தாம்பாளம், பால் இட கிண்ணம் 2,
வாங்கி வைத்து கொள்ள வேண்டும். பிள்ளை வீட்டாரிடம் , திருமாங்கல்யம் எடை, தினுசு அவர்கள் பாதி பெண் வீட்டார் பாதியும் போட வேண்டுமா என்பதை எல்லாம் கேட்டு செய்ய வேண்டும்.

திருமண கல்யாண மண்டபம் தேர்ந்து எடுத்து பிள்ளை வீட்டாரும் வந்து பார்த்து த்ருப்தி சொன்ன பிறகே அட்வான்ஸ் தர வேண்டும்.
ஜெனெரேட்டர், ஏ. சி ; ஏ சி இல்லாத ரூம்கள் தேவையானவை உள்ளதா , தண்ணீர் , கார் பார்கிங்க் ஏரியா த்ருப்தி கரமாக உள்ளதா; ஜீஸர் உள்ளதா என்று எல்லாவற்றையும் கவணிக்கவும்
போதிய அளவு ஜமக்காளம், தலை காணி உள்ளதா?.
பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் தங்கும் அறைகளில் சோப், சீப்பு, தேங்காய் எண்ணைய்,
மஞ்சள் தூள், குங்குமம், பற்பசை, வீபுதி இவைகளை சிறிய அளவில் வாங்கி ஜிப் ப்ளாஸ்டிக் பையில் போட்டு ஒரு அறைக்கு ஒன்றாக வைத்து விடவும்.

திருமணத்திற்கு முதல் நாள் காலை பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்திற்கு வருவார்கள். இதற்கும் முதல் நாள் இரவு கல்யாண
மண்டபத்திற்கு சென்று , திருமண மண்டபத்தை அலம்பி அரிசி மாவில் 2 டிராப் பெவிகால் கலந்து இழை கோலம் போட்டு வைத்திருப்பார்கள் உங்கள் கேடெர்ரர் ஆட்கள். வாசலிலும், மண்டபத்
திலும், பிள்ளை வீட்டார் தங்க இருக்கும் அறையிலும் , பெண்ணின் சீர் பொருட்கள் வைக்கும் அறையிலும், இழை கோலம் போட வேண்டும்.

நுழை வாயிலில் வாழை மரம், தோரணம் கட்டி இருப்பார்கள். பூந்தோரணம் மண்டபத்திலும் அலங்கரிக்க வேண்டும். இதுவும் கேடரர் வேலை.

பிள்ளை வீட்டார் தங்கி இருக்கும் அறையில் ஒரு இடத்தில் கிழக்கு பக்கமாக சுவாமி படம் வைத்து குத்து விளக்கு திரி,எண்ணைய், தீபெட்டி வைத்து
தயாராக இருக்க வேண்டும். அவர்கள் வரும் சமயத்தில் விளக்கு ஒருவர் ஏற்றவேண்டும்.
மற்றொரு அறையில் பெண்ணின் சீர் வரிசைகள் பாத்திரங்கள் அழகாக வரிசை படுத்தி வைத்து
அரிசி, பருப்பு, வெல்லம்,நெய், அப்பளம், வடகம், சீர் பக்ஷண வகைகள், தீபாவளி லேஹியம், அங்கமணி சாமாங்கள் வைக்க வேண்டும்.
சீரில் வைக்க வேண்டிய பக்ஷணங்கள்:-
திரட்டி பால் 500 கிராம்; 7 சுற்று கை முறுக்கு 31; மற்ற உபயோகத்திற்காக 5 சுற்று முறுக்கு 51; முள்ளு தேங்குழல் 40; ஒன்பது அங்குல
அளவில் அதிரசம் 31; ஆறு அங்குல அளவில்51;
விரத அப்பம் 11; பெரிய சைஸ் லட்டு 31; சிறிய சைஸ் லட்டு 51; மைசூர் பாகு பெரிது 31. சிறியது 51; ப்ளாஸ்டிக் கவர்களில் ஒரு கை முறுக்கும், சிரிய சைஸ் லட்டு, அல்லது சிறிய சைஸ் அதிரசம் ஒன்றும் போட்டு வைக்கலாம்.

முன்னதாக பிள்ளை வீட்டாரிடம் இது பற்றி பேசி அதன் படி, அவரவர் வசதிபடி செய்துகொடுங்கள்.
இது தவிர ஒரு சம்படத்தில் 500 கிராம் திரட்டி பால் கையில் வைத்து கொண்டு, பிள்ளை வீட்டாரின் வருகையின் போது , பெண்ணீன் தாயார் பிள்ளையின் தாயாரிடம் கொடுக்க வேண்டும்.

மாப்பிள்ளை அழைப்பிற்கு சர்கரையில் செய்த பருப்பு தேங்காய்.(மைசூர் பாகு பருப்பு தேங்காய்.) இதை நிச்சயதார்தத்திற்கு பிள்ளை வீட்டார் கொண்டு வந்து வைப்பர்.
ஊஞ்சலுக்கு வெல்லம் போட்ட மனோகரம் பருப்பு தேங்காய். ஊஞ்சல் முடிந்தவுடன் இதை முஹூர்தத்தில் மேடையில் வைக்க வேண்டும்.
வெல்லம் போட்ட பொட்டு கடலை 5 சிறிய பருப்பு தேங்காய் ஆசீர்வாதத்திற்கு.
கிரஹ ப்ரவேசத்திற்கு1 ஜோடி பருப்பு தேங்காய்.
(லட்டு பருப்பு தேங்காய்) இது முதல் நாள் விரததிற்கு பெண் வீட்டார் வைத்தது. இதை பிள்ளை வீட்டார் கிரஹ ப்ரவேசத்திற்கு வைப்பர்.
உதக சாந்திக்கு ஒரு ஜோடி பருப்பு தேங்காய். (பர்பி பருப்பு தேங்காய்).

ஒரு பித்தளை குடம், பச்சைபிடி சுற்ற ஒரு பித்தளை தாம்பாளம், 2 பித்தளை சொம்பு; சிறிய அடுக்கு; ஐந்து முகமுள்ள குத்து விளக்கு; இவை பித்தளை யில் போதும்.

திருமண பெண்ணிற்கான புடவைகள்:-
நிச்சய தார்தத்திற்கு ஒன்று; பிள்ளை வீட்டார் வாங்குவார் இது சிலர் வீட்டு பழக்கம்.முதலில் பேசி தெரிந்து கொள்ளவும்.

ஊஞ்சலுக்கு ஒன்று; பெண்ணின் மாமா வாங்குவர்.
முஹூர்தத்திற்கு 9 கஜம் புடவை ஒன்று. கிரஹ
ப்ரவேசத்திற்கு ஒன்று; உதக சாந்திக்கு ஒன்று.
வரவேற்புக்கு ஒன்று. மொத்தம் ஆறு புடவைகள்.
விளையாடல் புடவை - பிள்ளை வீட்டார் வாங்குவர்.

மணமகனுக்கு வேஷ்டி.
9x5வேஷ்டி முஹூர்தத்திற்கு.ஒரு ஜோடி.
மாற்று வேஷ்டி 8 முழம். ஒரு ஜோடி.
கிரஹ ப்ரவேசத்திற்கு ஒன்று.
9x5 பட்டு வேஷ்டி ஒன்று.
மாப்பிள்ளை அழைப்பிற்கென டிரஸ் தைக்க முன் கூட்டியே பெண் வீட்டார் பிள்ளை வீட்டாரிடம் பணம் கொடுக்க வேண்டும். இதில்
பேண்ட், ஷர்ட், கோட், டை; ஷூ, ஸாக்ஸ், யாவும் அடங்கும்.
காசி யாத்திரைக்காக விசிறி, குடை, காலணி,
கைத்தடி, புத்தகம், துண்டு; வாங்கி வைக்கவும்
முஹூர்தத்தன்று காலையில் மண மகனுக்கு அளிக்க என ட்ரேயில் டூத் பேஸ்ட்; ப்ரஷ்;டவல்
ஷேவிங்க் செட்; சீப்பு; கண்ணாடி. ஹேர் ஆயில்;
டால்கம் பவுடர், செண்ட், ஆகியவை தேவை.

மாப்பிள்ளை வீட்டார் உள்ளூரிலேயே இருந்தால் அவர்களை நேரில் சென்று பத்திரிக்கை, தாம்பூலம்,பழம், புஷ்பம் வைத்து திருமணத்திற்கு அழைக்க வேண்டும்.
அவர்களை வேன் வைத்து கொண்டு வரசொல்லி
வேன் டிரைவருக்கு பணம் கொடுத்து விடவும்.
வெளியூரிலிருந்து வருபவர்களை, ரயில் நிலைய த்திலிருந்து/பேருந்து நிலையதிலிருந்து யாராவது சென்று அழைத்து வர வேண்டும்.

அவர்கள் மண்டபம் வரு முன்பே மண்டபத்தின் நுழை வாயிலில் சந்தனம், குங்குமம், சக்கரை கல்கண்டு, புஷ்பம் இவற்றுடன் வர வேற்க தயாராக இருக்க வேண்டும்.

சிற்றுண்டி, காபி தயாராக உள்ளதா என்பதையும் பார்த்து கொள்ளவும். மாப்பிள்ளையை வரவேற்க கையில் தயாராக மாலையும், ஆரத்தி கரைசலும்
இருக்க வேண்டும்.மாப்பிளை வீட்டார் மண்டபத்தின் முன் வந்ததும் , மணப்பெண்ணின் தந்தை அல்லது மணப்பெண்ணின் சகோதரர்
மாப்பிளைக்கு மாலை இட பெண் வீட்டார் ஒருவர், ஆரத்தி எடுத்து அழைக்க சந்தனம், குங்குமம், சக்கரை, கல்கண்டு, புஷ்பம் இவற்றை
கொடுத்து , பெண்ணின் தாய், பிள்ளையின் தாயிடம் திரட்டு பால் கொடுத்தும் வர வேற்று உபசரிக்க வேண்டும்.
வசதி உள்ளவர்கள் மாப்பிளை வீட்டார் எல்லோருக்கும் சிறிய சந்தன மாலை அணிவித்து அழைக்கிறார்கள்.

அவர்களுக்கு என ஏற்பாடு செய்துள்ள அறையில் தயாராக உள்ள குத்துவிளக்கை ஏற்றி பிறகு அவர்களை அழைத்து செல்லுங்கள்.

அவர்களுக்கான வசதி அனைத்தையும் கவனித்து செய்யவும். இந்த சமயத்தில் பெண் வீட்டு புரோகிதர் பந்தகால் முஹுர்த்தம் செய்ய கூப்பிடுவார்.

பந்தகால் முஹுர்த்தம் ஆன பிறகு தான் திருமண விழா துவங்குவது வழக்கம். சாஸ்திரப்படி மந்திரங்க ளை கூறி ஒரு மூங்கில் கம்பை வைத்து பூஜை செய்து தூணில் கட்டுவர்.

கல்யாண மண்டபத்தில் ஒரு பக்கம் பிள்ளை வீட்டாரும், மற்றொரு பக்கம் பெண் வீட்டாரும்
தனி தனி இடங்களில் வைதீகரது அறிவிப்பின் படி அவரவர் வைபவத்தை தொடங்குவார்கள்.
கேடரர் வைதீகரர்களுக்கு தேவையானவைகளை இங்கு தயாராக வைத்திருப்பார்கள்.
பிள்ளை வீட்டார் விரதம் செய்ய துவங்கும் போது பெண்ணின் அத்தையானவள் ஒரு ஜோடி பருப்பு தேங்காய், அதிரசமும், அப்பமும், ஒரு
முகம் பார்க்கும் கண்ணாடியும் அங்கு கொண்டு வந்து வைக்க வேண்டும்.இந்த அத்தைக்கு பதில் மரியாதையாக பிள்ளை வீட்டார், தாம்பூலம், பழம், புஷ்பம், பணம் வைத்து கொடுப்பார்கள்.

மணமகன்/ மனமகள் தாய் தந்தையர் மடிசாரும், பஞ்ச கச்சமும் அணிந்திருக்க வேண்டும்.
 
vivaaham-3.
வட ஆற்காடு சேர்ந்தவர்கள் , யஜுர் வேதம் இல்லா மற்ற வேத காரர்களும் 4 பாலிகை வைத்து பூஜிக்கிறார்கள்.
யஜுர் வேத காரர்கள் 5 பாலிகை நடுவில் ஒன்றும், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என வைக்கிறார்கள்.

ஊர வைத்த விதைகளை முதலில் நடுவிலும், பின்னர், கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்ற வரிசையிலும் ப்ரதக்ஷிண மாகவும் விதைகளை தெளிக்க வேண்டும்.

கருப்பு எள் சீக்கிரமாக முளை விட்டு வேகமாக வளரும் சுபாவ முள்ளது. ஆதலால் இங்கு இதை சேர்க்கிறார்கள். இதை சுப காரியங்களுக்கும் தாராளமாக சேர்க்கலாம். எந்த தவறும் இல்லை.

மொத்தம் தெளிப்பது ஒற்றை படையில் இருக்க வேண்டும், எத்தனை பேர் வேண்டுமானாலும் தெளிக்கலாம். பெண் வீட்டு பாலிகைகளில்

தெளிக்கும் சுமங்கலிகளுக்கு பெண் வீட்டினரும், பிள்ளை வீட்டு பாலிகைகளில் தெளிப்பவர்களுக்கு பிள்ளை வீட்டினரும், தாம்பூலம், சந்தனம், குங்குமம், பணம் கொடுக்க வேண்டும்.

நாந்தி இரு வீட்டாரும் செய்வர். பிறகு ரக்ஷா பந்தனம் என்னும் ப்ரதிஸர பந்தம்.
வெறும் வயிற்றுடன் தான் நாந்தி செய்ய வேண்டும். நாந்தி செய்பவர்களும், ப்ரதக்ஷிணம் வருபவர்களும், நாந்தி முடிந்த பிறகே டிபன் சாப்பிட செல்வார்கள்.

பிள்ளைக்கு வலது கையிலும், பெண்ணுக்கு இடது கையிலும் அவரவரது தந்தை கங்கணம் கட்டுவர்.
பெண்ணிற்கு பெண் வீட்டினரும், பிள்ளைக்கு பிள்ளை வீட்டினரும் ஆரத்தி எடுக்க வேண்டும். ஆரத்தி இருவர் எடுக்க வேண்டும்.

வடக்கு பக்கமாக இருக்கும் பெண்டிர் அந்த தட்டிலுள்ள ஆரத்தி கரைசலை வாசலில் கோலத்தின் மீது கொட்ட வேண்டும்.

ஆரத்தி தட்டில் போட்ட காசை இருவரும் சமமாக எடுத்து கொள்ள வேண்டும்.
பிறகு மணமகன் ஸர்வாங்க க்ஷவரம் செய்து கொள்ள வேண்டும். நாவிதர் ஸர்வாங்க க்ஷவரம் செய்யும் போது மணமகனின் தொடை இடுக்குகளில் தோல் வியாதி இருக்கிறதா

வீரியம் சீக்கிரம் வெளி வரும் நிலையில் இந்த மணமகன் இருக்கிறாரா என்பதை கண்டு பெண் வீட்டாரிடம் சொல்வர். அந்த காலத்து நாவிதர் களுக்கு நாட்டு வைத்தியம் நன்கு தெரியும்.
தற்காலம்போல் அந்த காலத்தில் வைத்திய வசதி இல்லாததால் , குழந்தை பிறந்த வுடன் தாயார் இறப்பதும், அக்குழந்தைக்காக வேறு திருமணம் செய்து கொள்வதும் அதிக மாக இருந்திருக்கிறது.

பிறகு எல்லோரும் சாப்பிட செல்ல வேண்டும்.
பிறகு ஸாயங்கால டிபன், காப்பி.
பிறகு மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடுகள். இது முழுவதும் லெளகீகம் தான்,இதில் வைதீக நிகழ்ச்சி இல்லை. இக்காலத்தில் இதுவும் தேவை இல்லா ஒன்று.

முன்பாகவே திருமண மண்டபத்திற்கு அருகாமையில் உள்ள கோயிலில் மாப்பிள்ளை அழைப்பிற்கு சொல்லி ஏற்பாடுகள் செய்து வைத்து,

தெருவில் மாப்பிள்ளை அழைப்பு கார் வருவதற்கு போலீசிடம் பர்மிஷன் , தேவைபடும் மற்ற பர்மிஷன்களும் வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.

மாலை 6 மணிக்கு சந்தியாவந்தனம், காயத்ரி ஜபம் எல்லா ஆண்களும் செய்து விட்டு கோயிலுக்கு மெதுவே நடந்து செல்வர், கீழே விரிக்கும் ஜமக்காளம் போன்றவற்றையும் எடுத்து செல்வர்.
பெண்கள் , வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம், மஞ்சள் தூள், கல்கண்டு, சக்கரை, பருப்பு தேங்காய் ஒரு தாம்பாளத்தில் ஒரு ஜோடி உச்சியில் பூ சுற்றி அதில் 4 வெற்றிலை, பாக்கு
மஞ்சள் வைத்து வாழைபழங்கள், தேங்காய்கள், பன்னீர் பாட்டில், மணமகனின் டிரஸ், மாலை,பூ செண்ட்; புஷ்பம் ஆகியவற்றை தாம்பாளம் டிரேகளில் வைத்து எடுத்து செல்வர்.
கோயிலில் மணமகனை கிழக்கு முகமாக அமர செய்து புரோஹிதர் டிரஸ்ஸை ஓதி

கொடுக்க அதை மனப்பெண்ணின் சகோதரன் மணமகனுக்கு அணிய செய்து ,
மாலை போட்டு பூசென்டை கையில் கொடுத்து சந்தனம் குங்குமம் இட்டு, பன்னீர் தெளித்து , பரிசு பொருட்கள் ஆன

மோதிரம், அல்லது, ப்ரேஸ்லெட், அல்லது செயின், கை கடிகாரம் முதலியன போட்டுவிட்டு
சர்க்கரை கல்கண்டு கொடுத்து பின்னர் அங்கு வந்துள்ள பிள்ளை வீட்டாருக்கு சந்தனம் கல்கண்டு கொடுத்து உபசரிக்க வேண்டும்.

பின்னர் கோயிலுக்குள் மாலையை கழற்றி கையில் வைத்து கொண்டு, சுவாமிக்கு அர்ச்சனை செய்து கொண்டு, பிறகு வெளியே தயாராக
இருக்கும் அலங்காரம் செய்த காரில் ஏறி உட்கார்ந்து கொண்டு மாலையை போட்டு கொண்டு, மணமகனை ஊர்வலமாக

மண்டபத்திற்கு அழைத்து வருவார்கள். இந்த ஊர்வலத்தில் பாண்ட் வாத்ய காரர்கள், பின்னர் நாதஸ்வர இசை மழையை பொழிந்து கொண்டு

வர, மாப்பிள்ளையின் பக்கத்தில் மழலை செல்வங்கள் நிரம்பி வழிய காற்றே இல்லாமல் உடல் வியர்த்து கொட்டும். மாப்பிள்ளையின் காரின் பின் பக்கம் பெண் வீட்டு பெண்டிர்கள்

பருப்பு தேங்காய், தேங்காய், பழம் என பல தாம்பாளங்கலை ஏந்திய வண்ணம் எல்லா உறவினர்களும் காரை தொடர்ந்து வருவார்கள்.

இடை இடையே வாண வேடிக்கையும் செய்கிறார்கள். மணப்பெண்ணை மற்றொரு காரில் அழைத்து வந்து ஊர்வலத்தை காணச்செய்
கிறார்கள். மண்டபம் வந்தவுடன் மண ப்பெ ண்ணையும் மாப்பிள்ளை அருகில் அமர வைத்து போட்டோ, வீடியோ எடுக்கிறார்கள்.

ஊர்வலம் வரும்போது மிக அதிக வயதான வர்கள், மண்டபத்திற்கு வர முடியாத நிலையில் உள்ளவர்கள் தங்கள் வீட்டு வாசலில் இருந்த படியே மணமகனை
பார்த்து ஆசீர்வதிக்கட்டும், என்பதற்கோ, அல்லது ஊர்வலம் வரும் போது மணமகனை பற்றிய தகவல்கள் ஊரில்லுள்ளவர்கள் எவரேனும்

பார்த்து, பெண் வீட்டாரிடம் சொல்லி ஆவன செய்யலாம் என்பதற்கோ இம்மாதிரி வைத்திருக்கலாம் அந்த காலத்தில்.

ஊர்கோலம் முடிந்து மணமகன் மண்டப வாயிலில் வந்து இறங்கியவுடன் முதலில் மணமகளின் தாயார் மணமகனுக்கு வெற்றிலை, பாக்கு பழம், ஒரு மட்டை தேங்காய் கொடுக்க வேண்டும். அதை வாங்கி மணமகன் மேளக்கா ரரிடம் கொடுப்பான்.

அதன் பின்னர் பெண் வீட்டார் இருவர் ஆரத்தி எடுக்க , யாராவது ஆண் நபர் ஒரு தேங்காயால் மணமகனின் தலையில் திருஷ்டியாக சுற்றி, சதுர் தேங்காயாக கீழே போட்டுடைக்க வேண்டும்.

இதன் பின்னர் மண மகளின் தந்தையாரும், மணமகனின் தந்தையாரும் சேர்ந்து நிச்சய தார்த்தம் செய்து கொள்ள வேண்டும். இதிலும் வைதீக கர்மா எதுவுமில்லை.

விக்னேஸ்வர பூஜை செய்த பின்னர், இன்னாருடைய குமாரியை இன்னாருடைய குமாரனுக்கு கொடுக்க இருப்பதாய் நிச்சயித்து,

இருப்பதையும் இந்த லக்னத்தில் பாணி கிரஹணம் செய்து கொடுக்க போவதாய் லக்ன பத்ரிக்கை வாசிப்பர்.

மணப்பெண்ணை நன்கு அலங்கரித்து , தலையில் ராக்கோடி வைத்து பின்னி ஜடை நாகம் வைத்து, பூவினால் அலங்காரங்கள் செய்து

மண மேடையில் அந்த காலத்தில் அமர செய்வார்கள். மாப்பிள்ளை அழைப்புக்கு வைத்த பருப்பு தேங்காயை பிள்ளை வீட்டினர் மண மேடையில் கொண்டு வந்து வைக்க வேண்டும்.

வெற்றிலை, பாக்கு பழங்கள், பன்னீர்,சந்தனம், குங்குமம். சக்கரை, கல்கண்டு, புஷ்பம் யாவற்றையும் வைத்து , மணப்பெண் மேடைக்கு வரு முன்னர் பிள்ளை வீட்டினர் எல்லோரையும்

நிச்சய தார்த்ததிற்கு வரும் படி அழைத்து வந்தவர்களுக்கு, சந்தனம், குங்குமம், சக்கரை, கல்கண்டு கொடுத்து உபசரிக்க வேண்டும்.

பெண்ணின் தந்தை, பிள்ளையின் தந்தையிடம் தாம்பூலம், பழங்கள், தேங்காய், புஷ்பம் இவற்றுடன் கல்யாண பத்ரிக்கை வைத்து ,

மறு நாள் இந்த லக்னத்தில் கன்னிகா தானம் செய்து கொடுப்பதாய் தெரிவிக்க , பிள்ளை வீட்டு புரோஹிதர் அந்த பத்ரிக்கையை எடுத்து எல்லோர் முன்னிலையிலும் வாசிப்பர்.

மணமகனின் தந்தை பழத்தட்டுடன் தனது சம்மதத்தை தெரிவித்தவுடன் மணப்பெண்ணை அழைத்து வரச்சொல்வர்.

மணப்பெண்ணிற்கு மாலை அணிவித்து அழைத்து வர ,அவளது தந்தைக்கு வலது பக்கம் அருகில் மணையில் உட்கார சொல்லி, பிள்ளையின் தந்தை

நிச்சயதார்த்த புடவையை புரோஹிதர் மந்திரம் முழங்க கெட்டி மேளம் கொட்ட பெண் தனது மாமனாருக்கு நமஸ்காரம் செய்து பெற்று கொள்ள வேண்டும்.

அந்த புடவையை பெண்ணிற்கு நாத்தனார் ஆக போகும் பெண் அழைத்து சென்று மணமகளுக்கு தலைப்பு நிறைய விட்டு கட்டி விட வேண்டும்.

புடவை கட்ட நாத்தனார் வர வேண்டும் என்று வைத்ததிற்கு காரணம், மணப்பெண்ணை மிக அருகில் பார்த்து ஏதேனும் குறை கண்டால் , அவர்களது ஆயிரம் காலத்து பயிரான வாழ்க்கையை காக்க வழி வகுக்கலாம் என்பதே.

அவர்களது உறவு சுமுகமாக இருக்க வழி கோலும். மணப்பெண்ணுக்கும் பிள்ளை வீட்டினர் மீது இருக்கும் பயம் சிறிது தெளியும். தைரியத்தை ஏற்படுத்தும் ஒரு வாய்ப்பு. அந்த காலத்தில் இதற்காக இம்மாதிரி வைத்து இருக்கி றார்கள்.

பெண் புது புடவை கட்டி கொண்டு வருவதற்குள்
பெண்ணின் தந்தை பிள்ளையார் பூஜை செய்து , எந்த வித விக்கினமும் இன்றி திருமணம் இனிதே நடைபெற ப்ரார்த்தித்து கொள்ள வேண்டும்.

மணப்பெண் தன் தந்தையின் அருகில் உட்கார, பெண்ணின் நாத்தனார் பெண்ணின் கழுத்திலும், கைகளிலும் சந்தனம் பூசி , நெற்றியில் குங்குமம் இட்டு,சர்க்கரை, கல்கண்டு கொடுத்து , தலையில் சிறிது புஷ்பம் வைத்து

மாலை ஒன்றை போட்டு , ஒரு ப்ளாஸ்டிக் பையில் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் போட்டு, இந்த பையை மணமகளின் புடவை தலைப்பில் வைத்து, கீழே விழாதபடி சொருகி விட வேண்டும்.

வட ஆற்காடு, தென் ஆற்காட்டை , சேர்ந்தவர்கள் இதை அவர்களது இல்லத்திற்கு வந்த பிறகு செய்கிறார்கள்.

திரு நெல்வெலி காரர்கள் இத்துடன் பயறு அல்லது பொட்டு கடலையும் சேர்த்து வைத்து கட்டுகிறார்கள்.

புடவை தலைப்பில் ப்ளாஸ்டிக் பை பொருட்களை வைத்து கட்டுவதை மட்டும் மண பெண்ணை நிற்க வைத்த படி கட்டலாம்.

அந்த காலத்தில் மணமகன் இங்கு வர மாட்டார். இந்த காலத்தில் வந்தால் தகப்பனாருக்கு வலது பக்கத்தில் உட்காரலாம்.

இதன் பின்னர் பெண் அவளது பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் நமஸ்காரம் செய்த பிறகு அமர வேண்டும்.
இப்போது ஒரு பெண் வீட்டாரும் ஒரு பிள்ளை வீட்டாரும் என இருவர் பாட்டு பாடி ஆரத்தி எடுத்து இவ்வைபவத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஆரத்தியில் பெண்ணும், பெண்ணின் அப்பாவும் காசு போட வேண்டும். இதன் பின் மணபெண் அவளது மடியில் கட்டபட்டுள்ள தாம்பூலத்தை வெளியே எடுத்து வைத்து விடலாம்.
மணமகனுக்கான முஹூர்த்த வேஷ்டியையும், மணமகளுக்கான கூறை புடவையையும் ஓதி பெண்ணின் தந்தை பிள்ளையின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும்.
மணமகனுக்கு மட்டும் தனியாக இன்று இரவு மாமியார் சாப்பாடு பரிமார வேண்டும். அந்த காலத்து வழக்கம்.

இதன் பிறகு நெருங்கிய உறவினர்களுக்கு தனது சக்திக்கேற்ப துணி மணிகளோ, பணமோ புரோஹி தர் ஓதிட அளிக்கலாம்.

இதன் பின்னர் விருந்தினர்களை உணவு உண்ண செய்து தாம்பூலம் அளிக்க வேண்டும்.
பிள்ளை வீட்டார் விளையாடல் சாமான் களையும்

விளையாடல் சாமான் என்பதில் பெண்ணுக்கு வேண்டிய அலங்கார பொருட்கள் இருக்கும்.
இதை பிள்ளை வீட்டார் வாங்கி வைத்திருக்க வேண்டும். இப்போது பிள்ளை வீட்டார்
விளையாடல் சாமான் களையும், பிள்ளயின் தாயார்

கூறை புடவையையும், அதன் மேல் திருமாங்க ல்யமும் வைத்து கையில் வைத்திருக்க வேண்டும்.
இன்றும் மணமகன்/ மணமகள் பெற்றோர் மடிசார், பஞ்ச கச்சத்துடன் இருக்க வேண்டும்.
 
vivaaham-4.

பெண் ஆண் (வதூ, வரன் ) ( மணமகள்) (மண மகன்) இருவருக்கும் திருமணத்திற்கு முதல் நாள் காலை செய்ய வேண்டியது. ஏற்கனவே செய்திருந்தாலும் மறுபடியும் இப்போது செய்ய வேண்டும்.

ஜாதகாதி:- இரு வீட்டாருக்கும் சேர்த்து :- பெண் வீட்டார் வாங்கி கொடுக்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:- மஞ்சள் தூள் 100 கிராம்; குங்குமம் 50 கிராம்; சந்தனப்பொடி 100 கிராம்; வெற்றிலை 100; பாக்கு 100 கிராம்; வாழைப்பழம் 50; உதிரி புஷ்பம் 250 கிராம்;

தொடுத்த புஷ்பம் 20 முழம்.; மாலை-2; அன்ன ப்ராஸ்னத்திற்கு ஹவிஸ் 100 கிராம்; வெல்லம், தயிர், தேன், நெய் தனிதனியே வகைக்கு 20 கிராம்; தேங்காய் 20.; ஊதுவத்தி-2 பாக்கெட்;
கற்பூரம்2 பாக்கெட்; பூஜை மணி-2; கற்ப்பூரதட்டு-2; பஞ்ச பாத்திர உத்திரிணி-2. ;கிண்ணம் 2; டிரே4
வாழை இலை 20; கோதுமை 2கிலோ; பச்சரிசி 2 கிலோ. மாவிலை கொத்து 20; சுண்ணாம்பு-2 பாட்டில்;
நாந்திக்கு பச்சரிசி , பயற்றம் பருப்பு; வாழைக்காய் ; 9x5 வேஷ்டி- 9 பேருக்கு: வாத்யார் சொல்படி தலைக்கு 250 கிராம் பச்சரிசி; பருப்பு 50 கிராம்;

வாழைக்காய் 1; வேஷ்டி-1; தேங்காய் 1; வெற்றிலை, பாக்கு. பழம்; புஷ்பம். மாப்பிள்ளை வீட்டார்க்கு 9 பேருக்கு தலைக்கு 250 கிராம் பச்சரிசி, பயற்றம் புருப்பு 50 கிராம் ,தேங்காய் :வாழைக்காய், வாழை இலை, பழம், புஷ்பம்.

நாந்தி முடிந்தவுடனும் புண்யாஹ வசனம் செய்ய வேண்டும்.
ஹாரத்தி தாம்பாளம்; ஹாரத்தி கரைசல்; குத்து விளக்கு-2; திரிநூல்; எண்ணெய்; தீப்பெட்டி.-2;
பாலிகை-10; பாலிகை த்ரவியம்;- 250 கிராம். பாலிகை தெளிப்பதற்கு முதல் நாளே

தண்ணிரில் ஊற போட வேண்டும். பாலிகை திரவியம் என்பது
மிகவும் சீக்கிரமாக முளைக்க கூடிய
கடுகு, உளுந்து, பயறு, நெல், கருப்பு எள்ளு. இவை மட்டும். வகைக்கு 50 கிராம் இரு வீட்டார்க்கும். சேர்த்து , வீபூதி 2 பாகெட்; கலசத்திற்கு சொம்பு-2; புது துண்டு கலசத்திற்கு சாற்ற 2;

ஆஸன பலகை அல்லது தடுக்கு 8;
ஹோம குண்டம்-1; பிள்ளை வீட்டார்க்கு மட்டும்.
வைதீக விவரம்:- அநுக்ஞை=பர்மிஷன்; 10 பேர்; விக்னேஸ்வர பூஜை;
ஆரம்ப க்ருஹ ப்ரீதி; முக்ய கால க்ரஹ ப்ரீதி; நாமகரண புண்யாஹ வசனம்; ஜப

தக்ஷிணை; அன்ன ப்ராஸ்ன க்ரஹ ப்ரீதி; தேன் தயிர் ஹவிஸ் கொடுத்தல்.
பாலிகை தெளித்தலுக்கு புண்யாஹ வசனம்; ஓஷதி ஸூக்த ஜப தக்ஷிணை; ரக்ஷா பந்தன க்ரஹ ப்ரீதி; ஜப தக்ஷிணை; சூடா கர்மா; ஹாரத்தி

பருப்பு தேங்காய்:-

முந்திரி, பருப்பு தேங்காய் ஒரு ஜோடி; அல்லது
தேங்காய் பர்பி பருப்பு தேங்காய் ஒரு ஜோடி;
பொட்டு கடலை அல்லது நிலக்கடலை புருப்பு தேங்காய் சிறியது 5 .

லட்டு பருப்பு தேங்காய் ஒரு ஜோடி.
மனோகரம் பருப்பு தேங்காய் ஒரு ஜோடி;
மைசூர் பாகு பருப்பு தேங்காய் ஒரு ஜோடி;

4 தினுசுகள் வழக்கம். சக்திக்கு தகுந்தார் போல் செய்து கொள்ளவும்.
கை முறுக்கு 31; அதிரசம் 31; லட்டு-31.
முறுக்கு 31; முள்ளூ தேங்குழல் 31. மூடி போட்ட பாத்திரங்களில் வைக்க வேண்டும்.
பித்தளை குடம், குத்து விளக்கு. வெங்கல பானை கரண்டி, அருக்கஞ்சட்டி, சொம்பு மிக

முக்கியம். சீர் பாதிரங்கள் லிஸ்ட் போட்ட படி வாங்கி வைக்கவும்.
அரிசி, வெல்லம், அங்க மணி சாமான்கள் வாங்கி வைக்க வேண்டும்.


புஷ்ப வகையராக்கள்.

மாப்பிள்ளை அழைப்பு மாலை-1;
நிச்சய தாம்பூலத்திற்கு பெண்ணுக்கு மாலை 1;
புஷ்ப சரம் 20 முழம்;

ஜாதகாதிக்கு பெண்ணுக்கு மாலை 1
விரதத்திற்கு மாப்பிளைக்கு மாலை-1.
முஹூர்த்த மாலை ஒரு ஜோடி;

மாற்று மாலை -5.
முஹுர்த்ததிற்கு புஷ்ப சரம் 25 முழம்.
நலங்கு , ரிசெப்ஷன் மாலை ஒரு ஜோடி.

நலங்கிற்கு புஷ்ப பந்து 2
புஷ்ப சரம் 15 முழம்;
சேஷ ஹோமத்திற்கு மாலை 2.
பாலிகை 10; ஒளபாசன பானை-1; மடக்கு பெரிது 5; சிறியது 5.

நெல் விதை கோட்டை-1; நெல் பொரி 1 லிட்டர்
உமி 2 கிலோ; விசிறி 2; விராட்டி-10; நெய் 500 கிராம்; சிறாய் தூள் 2 கிலோ; அம்மி-1;

மாப்பிள்ளைக்கு அஷ்ட விரதம்:-
அனுக்ஞை 8 பேர்; விக்னேஸ்வர பூஜை; காலா தீத க்ரஹ ப்ரீதி; ஆரம்ப க்ருஹ ப்ரீதி; கும்ப ரத்னம்; ப்ரதிமை; ஸ்வர்ண புஷ்பம்;ப்ருஹ்ம

தக்ஷிணை; ஜப தக்ஷிணை;உத் ஸர்ஜன அனுக்ஞை; க்ரஹ ப்ரீதி; நாந்தி 9பேர்;

புண்யாஹ வசனம்; ஜப தக்ஷிணை; மதந்தீ ஜப தக்ஷிணை; அங்குர புண்யாஹ வசனம்; பாலிகை ஜப தக்ஷிணை; ஓஷதீ ஸூக்த ஜப தக்ஷிணை;

ப்ரதி ஸர கும்பம்; ஜப தக்ஷிணை; ரக்ஷா பந்தன க்ரஹ ப்ரீதி, சாத்குண்யம், ஹாரத்தி.

அஷ்ட விரதமென்பது 8 விரதம். மிகவும் சுருக்கமாக இதை திருமணத்திற்கு முதல் நாள்
செய்கிறோம். பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் சந்தனம், குங்குமம் எடுத்து கொண்டு போய் கொடுத்து விரதம் நடந்து கொண்டிருக்கிறது.

விரதம் பார்க்க பாலிகை தெளிக்க வர வேண்டும் என்று அழைக்க வேண்டியது. பெண் வீட்டார் அப்பம், கண்ணாடி, பக்ஷணங்களை எடுத்து கொண்டு வந்து கெளரி கல்யாணம் பாடி சபையில் வைக்க வேண்டியது.

பிள்ளை வீட்டார் வந்த பெண் வீட்டார்களுக்கு பாலிகை தெளித்த பின் சந்தனம், குங்குமம், சக்கரை, தாம்பூலம் ,பணம் வைத்து கொடுக்க
வேண்டும். கங்கணம் கட்டும் போது கெளரி கல்யாணம் பாட வேண்டும். பாலிகை தெளிக்க மடிசார் புடவை, கட்டி கொண்டிருக்க வேண்டும்.

விரதம் முடிந்த பின் மாப்பிள்ளை ஸர்வாங்க க்ஷவரம் செய்து கொள்ள வேண்டியது. அஷ்ட விரதம் செய்வதனால் ப்ருஹ்மசாரியாக இருந்த போது செய்த எல்லா பாபமும் போய் விடுகிறது.

வைதீக கர்மாக்களை செய்யாதவர்கள் கடமையை கை விட்டவராகிறார்கள். நாம் நம் கடமையை செய்வதனால் நம் குடும்பம் க்ஷேமம் அடைகிறது
 
vivaaham-5.
காசி யாத்திரை:-


திருமணதினதன்று விடியற்காலையில் நாதஸ்வர இசையுடன் மணமகனுக்கென ஒரு ட்ரேயில், பற்பசை, ப்ரஷ், துண்டு, பற்பொடி, ஹேர் ஆயில், சோப், சீப்பு, கண்ணாடி, ஷேவிங்க் செட்;






செண்ட் போன்றவை வைத்து ஒரு இனிப்பும் கொண்டு சென்று வைக்க வேண்டும். மணமகன் ஸ்நானம் செய்வதற்கென நல்லெண்ணெய்,


சீயக்காய் பொடி, வாசனை பொடி வைக்க வேண்டும். ஒரு பித்தளை தவலையில் வென்னீர் வைக்க வேண்டும். தற்போது கீஸர் உள்ளது.


காலையில் மணமகனின் அத்தையோ அல்லது மாமியோ மணமகனின் தலையில் சிறிது எண்ணய் எடுத்து தேய்த்த பின் ஸ்நானம் செய்ய வேண்டும்.


அறுபது வருடங்களுக்கு முன்னால் டயரியில் எழுதி வைத்திருந்ததை பார்த்து எழுதுகிறேன்.






ஸ்நானம் செய்த பின் முதல் நாள் கொடுத்த முஹுர்த்த வேஷ்டியை பஞ்ச கச்சமாக கட்டி கொள்ள வேண்டும். வீபூதி சந்தனம் குங்குமம் இட்டுக்


கொண்டு, புது பூணல் இரண்டு போட்டுகொண்டு, கண்ணுக்கு மைதடவிகொண்டு,திருஷ்டி பொட்டு வைத்து கொண்டு, கழுத்தில் தங்க சங்கிலி,


கையில் விசிறி ஊன்று கோல், ஒரு ஆன்மீக புத்தகம்,காலில் புது செறுப்பு, ஒரு புதிய துண்டில் சிறிது அரிசி, பருப்பு, தாம்பூலம் வைத்து கட்டி,


இதையும் கையில் வைத்து கொண்டு, மாப்பிள்ளையின் தோழன் குடை பிடிக்க காசி யாத்திரைக்கு கிளம்ப வேண்டும்.


சிலர் வலது கையில் குடை பிடித்து, புத்தகம், விசிறி வைத்து கொண்டு இடது கையில் பரதேச கோல மூட்டையை மாட்டி கொண்டு,தடி கம்பை


எடுத்து கொண்டு,, பாதரக்ஷை தரித்து, கெட்டி மேளம் முழங்க சுற்றத்தார் புடை சூழ கிழக்கே சென்று வடக்கே போய் திரும்பி பெண் வீட்டார்


(கல்யாண மண்டபத்திற்கு)அருகில் கிழக்கு முகமாக நிற்க வேண்டும். அரிசி, பருப்பு தேங்காய், கூறை புடவை,ரவிக்கை, விளையாடல்


சாமான்கள்,இவைகளை கையில் எடுத்து கொண்டு. பிள்ளை வீட்டார் பரதேசி கோலத்துடன் வர வேண்டும்.


பெண் வீட்டார் பருப்பு தேங்காய், மஞ்சள், குங்குமம், சந்தனம்,பழம்,புஷ்பம் சக்கரை வெற்றிலை,பாக்கு, மஞ்சள் தேங்காய் இவைகளை வைத்து கொண்டு மாப்பிள்ளையை எதிர் கொண்டு அழைக்க வேண்டும்.


அப்போது அவனது கழுத்தில் முஹுர்த்த மாலையும், மாற்று மாலை இரண்டும் அணிவிக்க வேண்டும். இதற்கு பரதேச கோலம் என்று பெயர்.






இந்த கோலத்தில் மணமகன் தனது உறவினர் புடை சூழ சிறிது தூரம் செல்ல , பெண்ணின் தந்தை இரு மஞ்சள் தடவிய தேங்காய் களை


மணமகனுக்கு அளித்து தமது பெண்ணை அவனுக்கு மணமுடிப்பதாக வாக்களித்து மீண்டும் அழைத்து வருவார்.


அந்த தேங்காய்களை மணமகன் சோபனம் என இரு முறை சொல்லி வாங்கிக்கொண்டு தனது தந்தையிடம் தருவான்.


ஒவ்வொரு ப்ராஹ்மணனும் தனக்கு ஏற்பட்ட ரிஷி கடன், தேவ கடன், பித்ரு கடன் என்ற மூன்றையும் தீர்த்து விட்டே மோக்ஷத்தை பற்றி எண்ண வேண்டும்.






ப்ருஹ்மசர்ய நியமத்துடன் வேத அத்யயனம் செய்வதால் ரிஷி கடன் அகல்கிறது. தேவ கடன் யக்ஞம் செய்வதால் அகலும். நல்ல சந்ததி பிறந்தால் தேவ பித்ரு கடன் அகலும்.


ஆதலால் தேவ பித்ரு கடன் தீர விவாஹம் செய்து கொள்வது அத்யாவசிய மாகிறது.


நான் எனது கன்னிகையை அலங்காரம் செய்து


உமக்கு தானமாக தருகிறேன். அவளை மணம் புரிந்து கொண்டு ஒளபாசன அக்னியுடன் காசி செல்லலாம் தம் வீட்டிற்கு வாரும் என அழைத்து செல்வதாக இது அமைகின்றது.






நாரதர் ஸ்ம்ருதி கூறுகிறது:- கன்னிகா தானம் ஆவதற்குள் வதூ அல்லது வரன் தோஷமுள்ளவர் என அறிந்தால், இந்த கல்யாணத்தை நிறுத்தி வேறு விவாஹம் செய்யலாம் என்கிறது.






விளையாட்டில் காலிறுதி போட்டி, அரை இறுதி போட்டி, இறுதி போட்டி என்று இருப்பது போல் அக்காலத்தில் இதிலும் அமைந்துள்ளன.






மணமகளுக்கும் திருமண தினத்தன்று காலையிலேயே எண்ணெய் தேய்த்து மங்கள ஸ் நானம் செய்வித்து, நன்கு அலங்கரித்து


தலையில் ஜடை நாகம் வைத்து ஊஞ்சல் புடவையை கட்டிகொண்டு, முஹூர்த்த மாலை ஒன்றும் மாற்று மாலை மூன்றும் அணிவித்து தயாராக இருக்க வேண்டும்.


மாலை மாற்றும் நிகழ்ச்சி வரை மணமகளோ


மணமகணோ ஒருவரை ஒருவர் பார்த்தது கிடையாது. அந்த காலத்தில்.


வட ஆற்காட்டை சேர்ந்தவர்கள் பெண்ணுக்கு கொண்டை போடுவார்கள். காசி யாத்திரை முடிந்து மணமகன் ஊஞ்சல் அருகில் வந்ததும் பெண்ணை கூப்பிடுவர். அப்போது பெண்ணுடன்






இருக்கும் தோழி அழைத்து வர , பெண்ணின் மாமா அவள் கழுத்தில் இருக்கும் ஒரு மாற்று மாலையை எடுத்து அவள் கையில் தருவார்.


அதை அவள் தனக்கு வரவிருக்கும் கணவனுக்கு முதலில் அணிவிக்க வேண்டும். அதே போல் வரனின் மாமா ,


வரனின் கழுத்தில் இருக்கும் மாற்று மாலையை எடுத்து கொடுக்க அவன் அவளுக்கு அணிவிக்க வேண்டும்.


இம்மாதிரி மூன்று முறை செய்ய வேண்டும். அந்த காலத்தில், எட்டு அல்லது பத்து வயது பெண் குழந்தைக்கும், பத்து அல்லது பதினைந்து வயது ஆண் குழந்தைக்கும் திருமணம் நடக்கும்.


பெண்கள் மாலை மாற்றும் பாடல்கள் பாடுவது வழக்கம். மாலை மாற்றுவதை எல்லோரும் பார்ப்பதற்காக குழந்தைகளை தனது தோள்களில்


தூக்கி வைத்து கொண்டு மாலை மாற்றினார்கள்.






மணமகளோ மணமகணோ தனது என்று தனி தன்மையாக இல்லாது, விருப்பு, வெறுப்பு எல்லாவற்றிலும் ஒன்றாக , எண்ணம், செயல்,


வாக்கு யாவற்றிலும் ஒன்றி இருந்து வாழ்க்கை நடத்தி இனிய பேற்றை பெற வேண்டும்.என்பதை உணர்த்துகிறது.


சாதாரண மாக ஒருவர் அணிந்த மாலையை மற்றவர் அணிய கூடாது என்பது சாஸ்திரம்,


ஆனால் இங்கு ஒரு கன்னிகை தனது மணாளனுக்கு தனது மாலையையே அணிவிக்கும் போது அவர்கள் இருவரது உள்ளங்களுமொன்றாக


கலந்து ஈருடல் ஓருயிர் என இணைந்து விட்டதை காண்பிக்கிறது. ஆதலால் அன்னியர் அணிந்த மாலை என்ற பேச்சுக்கே இங்கு இட மில்லை.


மாலை மாற்றும் நிகழ்ச்சி முடிந்தவுடன் மாமாகளுக்கு சந்தனம், வஸ்த்ரம் அளிக்கும் வழக்கம் உண்டு.


மணமகளின் வலது கரம் எல்லா விரல்களும் சேர்ந்து குவிந்த வண்ணம் இருக்க வேண்டும். மாலை மாற்றுதல் ஆனதும் மணமகன் தனது


வலது கரத்தால் மணமகளின் குவிந்த வண்ணம் இருக்கும் மண மகளின் வலது கரத்தை பற்றிய வண்ணம் இருவரும் அலங்கரிக்க பட்ட


ஊஞ்சலில் அமர வேண்டும். மணமகள் மணமகனின் வலது பக்கத்தில் அமர வேண்டும்.


மழ நாட்டு ப்ரஹசரணம் பிரிவை சேர்ந்தவர் களுக்கு மணப்பெண் மணமகனின் இடது பக்கம் அமர வேண்டும்,


ஊஞ்சல் முடிந்த பிறகு பெண், மணமகனின் வலது பக்கத்தில் இருக்க வேண்டும்.


திருமணத்தன்று காலையிலும் மணடபத்தின் நுழை வாயிலில் ஒரு மேஜையின் மீது ஒரு தட்டில், சக்கரை,கல்கண்டு,புஷ்பம், சந்தனம், குங்குமம்,பன்னீர் இவற்றை வைத்து கொண்டு






திருமணத்திற்கு வருவோற்கு கொடுத்து வர வேற்க வேண்டும்.மண்டபத்தின் நுழை வாயில் முன்பாக கிழக்கு மேற்காக கட்டபட்டுள்ள ஊஞ்சலை புஷ்பங்களால் அலங்கரித்து






அதன் பலகையில் பட்டு பாயை நான்காக மடித்து போட்டு மணமக்கள் இருவரும் மழலை செல்வங்கள் புடைசூழ இந்த ஊஞ்சலில் அமர்வர்.






அப்போது பெண்கள் ஊஞ்சல் லாலி பாட்டு பாடுவர். குரல் வளம் படைத்த அனைவருக்கும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பம். நாதஸ்வர காரர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கொள்வர்.






இச்சமயத்தில் பெண் வீட்டார் ஊஞ்சலுக்கான பருப்பு தேங்காய் ஜோடியில் தலையில் பூ சுற்றி, சந்தனம் குங்குமம் இட்டு, தாம்பூலம்,வாழை பழம் நிரம்பிய தாம்பாளங்களை ஏந்தி கொண்டும்






பிள்ளை வீட்டார் விளையாடல் சாமான் களையும். பிள்ளையின் தாயார் கூறை புடவையையும் அதன் மேல் திருமாங்கல்யமும் வைத்திருக்க வேண்டும்.






இந்த நிகழ்ச்சிக்கு பெண்ணிற்கு சீராக வைக்கபட்ட வெள்ளிகிண்ணம் ஒன்றில் சக்கரை, வாழை பழ துண்டங்கள்,கலந்த பாலையும் அதில் ஒரு தேக்கரண்டியும், , மற்றொரு கிண்ணத்தில் வெறும் பாலும் வைத்து கொள்ள வேண்டும்.


ஒரு தாம்பாளத்தில் பச்சை பிடி சுற்ற கேடரர் சாத உருண்டைகள் செய்து கொடுப்பார். அவரிடம் முன் கூட்டியே இந்த மாதிரி வேண்டும் என்று சொல்லி விட வேண்டும்


இந்த உருண்டைகளின் நிறம் அவரவர் ஊரை பொருத்து மாறுகிறது.


தஞ்சாவூர், திருச்சியை சேர்ந்தவர்கள் சிவப்பு நிற உருண்டைகள் போதும் எங்கிறாகள்.


மதுரையை சேர்ந்தவர்கள் மஞ்சள், சிவப்பு எனும் இரண்டு நிறங்களில் தனி தனியே தயாரித்து பிறகு அதை கலந்து வைக்கிறார்கள்.


வட ஆற்காடு,செங்கல்பட்டை சேர்ந்தவர்கள் வெள்ளை,மஞ்சள், சிவப்பு என மூன்று விதமாக தயார் செய்து வைக்கிறார்கள்.


இரண்டு பித்தளை சொம்புகளில் ஜலமும்,ஒரு அகல சிறிய பித்தளை அடுக்கில் நெல் இட்டு அதில் ஐந்து முகமுள்ள பித்தளை விளக்கின்


மேற்பகுதியை மட்டும் அந்த அடுக்கினுள் வைத்துஎண்ணய் திரி இட்டு ஐந்து முகங்களையும் ஏற்றி வைக்க வேண்டும்.






ஊஞ்சலில் அமர்ந்துள்ள மணமக்களது கால்களை பாலால் அலம்பி ,மணமக்கள் கையில் ஒரு கிண்ணத்தை அல்லது அட்டை யிலான கப்பில் பாலும் பழமும் ஒவ்வொருவராக தருவார்கள்.






மணமகள், மணமகன் இருவரது நெருங்கிய உறவு பெண்டிர்கள் ஒருவர் பின் ஒருவராக இதை செய்ய வேண்டும்.


முதலில் வெறும் பாலாக இருக்கும் கிண்ணத்தை இருவரது கால்களுக்கு அருகே வைத்து கொண்டு, இரு கை விரல்களாலும் பாலை தொட்டு


அவர்களது இரு கால்களிலும் என மூன்று முறைதொட்டு அலம்பி தமது புடவையின் மேல் தலைப்பால் துடைப்பது வழக்கம்.


பின்னர் பாலும் பழமுமாக இருக்கும் கிண்ணத்திலிருந்து தேக்கரண்டியால் மூன்று முறை மணமகளுக்கும், மணமகனுக்கும்


அவர்கள் கையில் வைத்துள்ள கப்பில் கொடுக்க வேண்டும். அவர்கள் அதை சாப்பிட வேண்டும்.


கை துடைக்க கர்சிப்பும் முதலிலேயே இருவருக்கும் கொடுத்து விடுங்கள்.


இவ்வாறு ஐந்து பேருக்கு குறையாமல் எத்தனை பேர் வேண்டுமானாலும் செய்யலாம்.ஒற்றை படையில் இருக்க வேண்டும்.






அடுத்த படியாக தாம்பாளத்தில் தயாராக வைக்க பட்டிருக்கும் சாத உருண்டைகளை தாங்கிய தாம்பாளத்தை கைகளில் எடுத்து தூக்கி






பிரதக்ஷிணமாக அதாவது தனது இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக , கீழிருந்து மேலாக மண மக்களின் முன்பு மூன்று முறை சுற்ற வேண்டும்.


தட்டை கீழே வைத்து பின்னர் அதிலிருந்து தனது வலது கையால் ஒரு உருண்டை எடுத்து மணமக்களின் இருவரது தலை மேல் மூன்று


முறை பிரதக்ஷிணமாக சுற்றி, முதலில் கிழக்கு பக்கத்திலும், பிறகு மேற்கிலும், பிறகு தெற்கிலும் பிறகு வடக்கு பக்கத்திலும் என வீசி எறிய வேண்டும்.


வடக்கு பக்கத்தில் தான்முடிக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.


இவ்வாறு ஒருவருக்கு நான்கு உருண்டைகள் . நான்கு முறைகள் செய்ய வேண்டி வருகிறது.


இதற்கும் ஐந்து பேருக்கு குறையாமல் ஒற்றை படையில் எத்தனை பேர்கள் வேண்டு மானாலும் செய்யலாம்.


இதை பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் என மாறி மாறி செய்யலாம்.


பிறகு நெருங்கிய உறவினர் இருவர் பித்தளை சொம்பில் ஜலத்துடன் , மணமகளின் தாயார் விளக்கு வைத்த அடுக்கை வலது கையில் வைத்து கொண்டு ,


விளக்கு அணையாதிருக்க இடது கையால் புடவை தலைப்பால் மறைத்து கொண்டு மெதுவாக ஊஞ்சலில் உட்கார்ந்தி


ருக்கும் மணமக்களை சுற்றி வலம் வரவேண்டும். இது தஞ்சாவூர் பழக்கம்.


வட ஆற்காட்டை சேர்ந்தவர்கள் மூன்று பேர் சொம்புகளில் ஜலமும், இரண்டு பேர் விளக்குமாக ஏற்றி சுற்றுவார்கள்.


மழ நாட்டு ப்ருஹ சரணத்தை சேர்ந்தவர்கள், இரண்டு பேர் சொம்பில் ஜலமும், ஒருவர் விளக்கும், ஒருவர் பாலும், பழ கிண்ணத்துடனும்,


ஒருவர் பித்தளை படியில் அரிசியை நிரப்பி அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து கொண்டும் சுற்றுவார்கள்.


ஜலம் நிரம்பிய சொம்பை லேசாக சாய்த்த வண்ணம், வலது கையால் நீரை சிறிது சிறிதாய் தரையில் விட்ட வண்ணமும், சுற்ற வேண்டும்.






இவ்வாறு மூன்று முறை சுற்று ஆனவுடன் , மீதியுள்ள சொம்பு ஜலத்தினால் பிள்ளை, பெண் கால்களில் சிறிது விட்டு அலம்பிய பின்னர்


தாம்பாளத்தில் சுற்றபடாமல் மீதி இருக்கும் சாத உருண்டைகளை தண்ணீர் விட்டு கரைத்து பெண் வீட்டார் ஒருவரும், பிள்ளை வீட்டார் ஒருவரும்


சேர்ந்து மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வாசலில் கொட்டி விட வேண்டும்.


வட ஆற்காட்டை சேர்ந்தவர் இதன் பின்னர் தனியாக ஒரு ஆரத்தி எடுப்பர்.


அதன் பின்னர் பெண்ணின் மாமியார் பெண்ணுக்கும், பிள்ளையின் மாமியார் பிள்ளைக்கும் முறையே வெற்றிலை,பாக்கு,


வாழை பழம், மட்டை தேங்காய் கொடுக்க அவற்றை மணமக்கள் மேளக்காரருக்கு கொடுத்து விடுவார்கள்.


யாராவது ஒருவர் ஒரு தேங்காயால் மணமக்கள் தலைகளில் மூன்று முறை இடமிருந்து வலமும்


பின்னர் வலமிருந்து இடமும் சுற்றி மணமக்கள் உள்ளே சென்றதும் தேங்காயை வாசலில் போட்டு சதுர் தேங்காயாக உடைக்க வேண்டும்.


மணமக்கள் இருவரும் முன்பு கூறிய படி மணமகன் மணமகள் கரத்தை பிடித்த படி இருவரும் முதலில் வலது காலை எடுத்து


வைத்து கெட்டி மேளம் முழங்க , பெண்டிர் கெளரி கல்யாணம் பாட முஹூர்த்த மேடை நோக்கி செல்ல வேண்டும்.


சிலர் இப்போது, மணமகன் மாமியார் கைகளை பிடித்து கொண்டு, மணமகள் மாமியார் கைகளை பிடித்து கொண்டு மணமேடை சென்று அமருகி றார்கள்.






இவை யாவும் வைதீகத்தை சேர்ந்தவை அல்ல.


ஊஞ்சலில் உள்ள சங்கிலிகள் கர்ம பாசத்தினால் மேலான வைகுண்டத்திலிருந்து பூமியில் இறங்கி இந்த மானிட பிறவியை பெற்றுள்ளோம் என்பதையும்






ஊஞ்சல் முன்னும், பின்னும் செல்வது வாழ்வில் நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை அறிவுரு த்துகிறது. நமது வாழ்க்கை சமுத்திர அலை போல் சஞ்சல மானது.


என்றாலும் எல்ல நிலைகளிலும் இந்த புது மண தம்பதிகள் மனதாலும் உடலாலும் ஒன்றி ,நிலையான அமைதியான இனிமையான ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.






வாழ்க்கையில் நல்லவைகளை தேர்ந்தெடுத்து அசைவில்லா நிலையில் ஸ்திரமான ஒன்றை பின்பற்றி வாழ வேண்டும் என்பதை காட்டுகிறது.


நமது கண்களுக்கு புலப்படாத எத்தனையோ கிருமிகள் நம்மை தாக்க முற்படுகின்றன.என்பது நிரூபிக்க பட்ட உண்மை.


மஞ்சள் போன்ற கிருமி நாசினியும், சுண்ணாம்பு போன்ற பூச்சி கொல்லியும் சுற்றி சூழ்ந்துள்ள காற்றில் உள்ள கிருமிகளை அழிக்க உஷ்ணத்தை


ஏற்படுத்தும் . விளக்கும் உஷ்ணத்தை கொடுக்கும். பஞ்ச பூதங்களான ஆகாயம், பூமி, காற்று, ஜலம், நெருப்பு ஆகிய சாக்ஷியில் ,


திருமணம் நடக்கட்டும், என்பதனாலேயோ என்னமோ அக்காலத்தில் இம்மாதிரி வைத்திருக்கிறார்கள். பூத ப்ரேதாதிகள் தூரே


விட்டெரியும் அன்னத்தை பலியாக புசித்து துர் தேவதைகள் , பூத ப்ரேத ராக்ஷஸ பிசாசாதிகள் தம்பதிகளை அண்டாதிருக்கும் படி அந்த காலத்தில் இம்மாதிரி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.






கெட்டி மேளம் வாசிப்பது மற்ற அபசகுனமான வார்த்தைகள் எதுவும் காதில் விழாமல் தடுப்பதற்கே ஆகும்.


வெளி நாட்டில் எதிர் பாரா விபத்தில் உயிரிழந்த


வரின் இருதயம், கல்லீரல், சிறு நீரகம் எடுத்து உடனே ஆஸ்பத்ரியில் , இந்த அங்கங்கள் செயல் இழந்து போன நோயாளிகளுக்கு பொருத்தி குணமாக்குகிறார்கள்.


இது இவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. இத்துடன் விபத்தில் உயிரிழந்தவரின் குணங்களும் இவர்களுக்கு ஏற்படுகிறது.


இது வரை படம் வரைய தெரியாதவர்கள் இப்போது சிறு நீரகம் மாற்றிய பிறகு இவர்கள் அலக்ஷியமாக மிக நன்றாக படம் வரைகிறார்கள்.






விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரிடம் கேட்டத்தில் விபத்தில் உயிரிழந்த என் மகன் மிக சிறப்பாக ஓவியம் தீட்டுவான் என்று அவன்


வரைந்த ஓவியத்தையும் காண்பிக்கிறார்கள். இம்மாதிரி பலருக்கு அங்கு நடக்கிறது


இது வரை பாட்டு பாட தெரியாதவர்கள் இப்போது நன்றாக ப்பாடுகிறார்கள். இருதயம் மாற்றப்பட்ட ஒருவர்.






ஆதலால் மனம் எங்கு உள்ளது. உடலில் இருந்து யாரும் இது வரை கான்பிக்காததால் மனம் என்று ஒன்று கிடையாது. இதுவரை






இந்த இடத்தில் உயிர் இருக்கிறது என்று யாரும் காண்பிக்கவில்லை. ஆதலால் யாருக்கும் உயிர் இல்லை என்று சொல்கிறீர்களா.


இப்போது வைதீக முறைப்படி செய்ய வேன்டிய வைகள் ஆரம்பம். மண மேடையில் புரோஹிதர் குறிப்பிட்டவை எல்லாம் தயாராக வைக்க வேண்டும்.


ஊஞ்சலுக்கு வைத்திருந்த பருப்பு தேங்காய் , தாம்பூலம், பழம், தேங்காய்கள், விளையாடல் சாமான். யாவற்றையும் கொண்டு வந்து இங்கு






மணமேடையில் வைக்க வேண்டும். புஷ்பம், ஹோமம் செய்வதற்கான பொருட்கள், , மஞ்சள் பொடி, சந்தனம்; குங்குமம்,அக்ஷதை,சக்கரை,


கல்கண்டு,பஞ்ச பாத்திரத்தில் ஜலம், என யாவற்றயும் வைத்து, கூறைபுடவை, திருமாங்கல்யத்தையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
 
vivaaham-6.
முதலில் விவாஹம், பின்னர் ப்ரவேச ஹோமம், ஸ்தாலி பாகம், ஒளபாஸனம், சேஷ ஹோமம் என ஐந்தும் நடக்கும்.


திருமண மேடையில் கோலம் போட்ட இடத்தில் பட்டு பாயை நான்றாக மடித்து போட்டு, அதில் மணமக்களை கிழக்கு பக்கம் பார்த்தபடி அமர செய்ய வேண்டும்.


இப்போது பெண் வீட்டு புரோஹிதர், பிள்ளை வீட்டு புரோஹிதர் என இரு புரோஹிதர் இருப்பர்.


மனப்பெண்ணின் தாயாரும், தப்பனாரும் இப்போது அவசியம் பெண் பக்கத்தில் இருக்க வேண்டும்.


வைதீகருக்கு தேவை படும் சில்லரை நாணயங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.


விவாஹ மந்திரங்களின் அர்த்தம் முன் கூட்டியே கேட்டு புரிந்து கொண்டு, அவசர படாமல் கல்யாண காலத்தில் சொல்லபடு மெல்லா மந்திரங்களையும் சரியாக நன்றாக உச்சரித்து, சடங்குகளையும், ஹோமங்களையும்






குறிப்பட்ட படி செவ்வனே செய்வதால் புது மண தம்பதிகளின் வாழ்வு சீரோடும், சிறப்போடும்,


பாசப்பிணைப்போடும், இன்பம் நிறைந்ததாக இருக்கும் என்பது திண்ணம்.






விவாஹத்தில் 1, அனுக்ஞை;2.கணபதி பூஜை;


  1. வர ப்ரேக்ஷனை;4.கன்னிகா தானம்;5. கூறை புடவை அளித்தல்;6. மதுபர்கமும் கோ தானமும் 7. நுகத்தடி வைத்தலும் மாங்கல்ய தாரணமும்; 8.பாணி க்ரஹனம்

  1. ஸப்த பதி; 10. லாஜ ஹோமம். என்று வரிசை யாக நடைபெறும்.விவாஹம் என்பது நிறைவு பெறுகின்றது இந்த லாஜ ஹோமத்துடன் தான்.

    அனுக்ஞை= சம்மதம் என்று இந்த இடத்தில் அர்த்தம். தாம்பாளத்தில் தாம்பூலம், தக்ஷிணை வைத்து கையில்

    ஏந்திய வண்ணம் அஶேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் ஸெளவர்ணிம் யத் கிஞ்சித் தக்ஷி

ணாமபி யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய ஆவயோ: உத்வாஹ கர்ம கர்த்தும் யோக்கிதா ஸித்தி ரஸ்து இதி அனுக்ரஹான.






என்று கூறி தக்ஷிணை தந்து விவாஹம் செய்து கொள்வதற்கு ஏற்ற யோக்கியதையை பெற்று கொள்கிறான் மணமகன்.






ஒ வித்வாங்களது ஸபையே தங்களது திருவடியில் ஏதோ கொஞ்சம் ஸ்வர்ண தக்ஷிணை ஸமர்பிக்கிறேன். இதை உயர்ந்த


தக்ஷிணையாக தாம்பூலத்துடன் பெற்றுக்கொண்டு, எங்களுக்கு விவாஹம் செய்து கொள்வதற்கு ஏற்ற யோக்கியதை உண்டாக வேன்டுமென்று அனுகிரஹம் செய்யுங்கள்.


என்பதாகும். தக்ஷிணையை பெற்றுக்கொண்ட அந்தணர்கள், ததாஸ்து; யோக்கியதா ஸித்திரஸ்து என்று சொல்வார்கள்.


எல்லா வித கர்மாக்களிலும் துவக்கத்தில் இதை சொல்வார்கள். அந்தணர்கள் சொல் தேவ வாக்கா க கருத படுகிறது.


2, விக்னேஸ்வர பூஜை:-


மஞ்சள் பொடியால் கணபதி பிடித்து வைத்து த்யானம், ஆவாஹனம் என்ற 16 உபசார பூஜை கணபதிக்கு செய்து விக்னங்கள் வராமல் காத்தருள ப்ரார்திக்க வேண்டும்.






சங்கல்பத்தில் ஸுபே ஸோபனே ---- ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் தர்ம ப்ரஜா ஸம்பத் யர்த்தம் வரான் ப்ரேஷயிஷ்யே. என்று கூறி


ஸங்கல்பம் செய்து பின்னர் கணபதி யதா ஸ்தானம் செய்து அக்ஷதை புஷ்பங்களை புரோஹிதர் ஆசீர்வாதம் செய்து அளிக்க






அதை சிரசில் தரித்து கொள்ள வேண்டும். இங்கு வரனால் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களின் பொருள்.






க்ருஹஸ்தாஸ்ரமத்தை அடைந்த பின் நான் செய்ய போகும் யாகத்தில் நான் அளிக்க போகும்


ஸோம ரஸத்தை பருக போகும் இந்திரன் , நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதை விரும்புகிறான்.என்றும் தேவர்களை






ப்ரார்த்தித்து, தேவர்களே எனக்காக செல்லும் இவர்களது மார்கங்கள் நல்ல படியாக இருக்கு மாறு செய்வீராக. அர்யமா, பகன் என இரு தேவர்களும் எங்களை நல்ல முறையில் சேர்த்து






வைக்கட்டும்.எங்களுடைய தாம்பத்யம் ஒற்றுமையுடன் கூடியதாக இருக்கும்படி நீங்கள்அருள் புரிவீர்களாக என்றுமாகும்.






  1. வர ப்ரேஷனை.

    பெண்ணின் தந்தை தனது மனைவி ஸமேதராக அந்தணர்களை நமஸ்கரித்து தாம்பாளத்தில் தாம்பூலம், தக்ஷிணை

    வைத்து அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் ஸெளவர்ணிம் யத் கிஞ்சித் தக்ஷிணாமபி

யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலம் ச ஸ்வீக்ருத்ய






தசானாம் பூர்வேஷாம் தசானாம் பரேஷாம் ஆத் மனஸ்ச ஏக விம்சதி குலோத்தாரன த்வாரா நித்ய நிரதிசயானந்த சாஸ்வத ப்ருஹ்ம லோகா அவா


ப்தியர்த்தம் ஸ்ரீ மஹா விஷ்ணு ப்ரீத்யர்த்தம் கன்யகா தானாக்ய மஹா தானம் கர்த்தும் யோக்யதா ஸித்திம் அனுக்ரஹாண. என்று சொல்லி கன்யகா தானம் செய்ய சம்மதம் கேட்கிறார்.






அதாவது திதி வார நக்ஷத்திரங்கள் சொல்லி எனக்கு முன்னால் என் குலத்தில் பிறந்த பத்து பேரும், நானும், எனக்கு பின்னே என் குலத்தில்






பிறக்க போகும் பத்து பேரும், ஆகிய 21 பேரை நற்கதி அடைவிப்பதின் மூலமாக அழிவற்றதும். அளவற்ற ஆனந்தமும் உள்ளதான சாஸ்வதமான






ப்ருஹம லோகத்தை அடைவதற்காக , மஹா விஷ்ணு வின் ப்ரீதியை பெறுவதற்காகவும்,


கன்னிகாதானம் என்னும் மஹா தானத்தை செய்கிறேன் என்று ஸங்கல்பம் செய்து கொண்டு,


விக்னேஸ்வர பூஜை செய்து கன்னிகா தானம் செய்கிறார். மஹா விஷ்ணுவே மாப்பிள்ளை வடிவில் வந்து தனது கன்னிகையை ஏற்பதாக


கருதி அவரது பாதங்களை பூஜிகின்றார்.


விக்னேஸ்வரரை யதா ஸ்தானம் செய்த பின்னர் க்ரஹ ப்ரீதி செய்ய வேண்டியது அவசியம். கன்யா தான காலத்தில் உண்டாகும்


தோஷங்களை நிவர்த்திக்கும் பொருட்டு நவகிரஹ ப்ரீதிக்காக சிறிது தக்ஷிணையை ப்ராஹ்மணர்களுக்கு கொடுப்பதே க்ரஹ ப்ரீதியாகும்.


இதன் பின்னர் மணமகனை விஷ்ணு ஸ்வரூபமாக எண்ணி , மஹா விஷ்ணு ஸ்வரூபஸ்ய வரஸ்ய இதம் ஆஸனம்;






ஸகல ஆராதனை: ஸ்வர்ச்சிதம் மஹா விஷ்ணூ ஸ்வரூப வர ஸ்வாகதம்; இதம் தே பாத்யம். என்று கூறி மணமகனுக்கு நல்வரவு கூறுவதாகவும்,அர்க்கியம், பாத்யம், ஆசமனீயம்


அளித்து வரனின் கால்களை அலம்பி இருவரும் ஆசமனீயம் செய்வதாகவும் கூறப்படுகிறது.


கால்களை அலம்பும் போது தத் விஷ்ணோ: பரமம் பத்ஸதா பஶ்யந்தி ஸுரய: என்ற வேத மந்திரத்தை உச்சரிக்கிறார்கள். இதன் கருத்து.


மஹா விஷ்ணுவினுடைய உயர்ந்த பரம பதமானது உலகெல்லாம் ப்ரகாசமாக விளங்குகிறது. அதை குற்ற மற்ற புண்யசீலர்கள்


ஆன பெரியவர்கள் எப்பொழுதும் பார்த்து போற்றுகின்றனர்.அத்தகைய மஹா விஷ்ணுவின் பாதமாக ,வரனான உம்மை கருதி பூஜிக்கிறேன்


என்பதாகும்.






இப்போது பெண்ணின் தந்தை தனது பெண்ணை குறிப்பிட்ட மணமகனுக்கு கன்னிகாதானம் செய்வதாக கூறி , பெண்ணின் முந்தய மூன்று


தலைமுறை பெரியவர்களின் பெயர்களையும் அவரது கோத்திரத்தையும் சொல்லி, அதே போல்


பிள்ளையின் முந்தய மூன்று தலை முறை பெரியவர்களின் பெயர்களையும், அவர்களது கோத்திரத்தையும் சொல்லி இந்த திருமணம்






எல்லோருக்கும் சம்மதமா என்று முஹூர்த்த திற்கு வந்துள்ள எல்லா பந்துக்களிடமும் சம்மதம் கேட்பதாக அமைந்துள்ளது.


எல்லோரது சம்மதமும் கிடைத்த பிறகு தான் விவாஹம் தொடரும். அந்த காலத்தில்.


  1. கன்னிகாதானம்:-

    வர ப்ரேஷனை ஆனபின்னர், ( நெல் நிரம்பிய மூட்டை) நெல் கோட்டை என்பர். நெல் கோட்டை ஒன்றின் மேல் பெண்ணின் தகப்பனார் கிழக்கு முகமாக

    அமர்ந்திருக்க அவரது மடியில் மணப்பெண் அமர அவளது கைகளில் பழம் தேங்காய், தாம்பூலம், ஆகியவற்றை

    வைத்து ,பெண்ணின் தாயாரை தீர்த்தம் விட சொல்லி பிள்ளைக்கு தனது மகளை தானமாக அளிப்பார். அப்போது

    கன்யாம் கனக ஸம்பன்னாம் கனகாபரணைர் யுதாம் தாஸ்யாமி விஷ்ணவே துப்யம் ப்ருஹ்ம லோக

ஜினீஷயா வஸ்வம்பரா: ஸர்வ பூதா: ஸாக்ஷண: ஸர்வ தேவதா: இமாம் கன்யாம் ப்ரதாஸ்யாமி பித்ரூனாம் தாரணாய ச கன்யே மாமாக்ரதோ


பூயா: கன்யே மே பவ பார்ஸ்வயோ: கன்யே மே ஸர்வதோ பூயா: த்வத்தானான் மோக்ஷ மாப்னு யாம் ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம்


விபாவஸோ; அநந்த புண்ய பலதம் அதஶ் சாந்தி ம் ப்ரயஸ்சமே.என்று கூறி தானம் செய்கிறார்.


இதன் பொருள்;- தங்க நகைகள் பூட்டிய எனது கன்னிகையை , ப்ருஹ்ம லோகம் செல்ல வேண்டும் என்ற ஆசையினால் விஷ்ணு ரூபமான உமக்கு அளிக்கிறேன்.


உலகை தரிகின்ற ஸர்வ தேவர்களும்,ஸர்வ பூதங்களும் ஸாக்ஷியாக இருக்கட்டும். பித்ருக்கள் நன்மை


பெற இந்த கன்னிகையை தானம் செய்கிறேன். ஓ கன்யே தேவி எனக்கு எதிரிலும் பக்கத்திலும் எங்கும் இரு.உன்னை தானம் செய்வதால் மோக்ஷம் அடைய வேண்டும், குழந்தைகளை


பெறுவதற்காகவும்,புருஷனுடன் கூட இந்த கன்னிகை இருந்து ஸர்வ கர்மாக்களையும் செய்யும் பொருட்டும் தானம் செய்கிறேன்.






தானம் செய்பவர் கிழக்கு நோக்கியும், மணமகன் மேற்கு நோக்கியும் கன்னியின் தாய் வடக்கு


நோக்கியும் இருக்க வேண்டும்.என்பது கன்னிகா தான முறை.


மேற்கண்ட ஸ்லோகங்கள் எல்லாம் சொல்லி , கன்னிகையின் வலது கரத்தை ஜலதாரையுடன் தாம்பூல தக்ஷிணையுடன் வரனது கரத்தில் அளிக்க வேண்டும்.


அப்போது மண மகன் தேவஸ்ய த்வா ஸவிது ப்ரஸவே அசுவினோர் பாஹுப்யாம் பூஷணோ ஹஸ்தாப்யாம் ப்ரதிக்ருஹ்ணாமி என்ற மந்திரம் கூறி கன்னிகையை ஏற்று கொள்ள வேண்டும்.


ஸவித்ரு தேவன் நமக்கு நன்மை தருவத ற்காக அஸ்வினி தேவர்களுடைய பாஹு `களாலும் பூஷாவினுடைய கரங்களினாலும் இதை பெற்று கொள்கிறேன்.


சிறந்தவரான ஆங்கீரஸ் உன்னை ஏற்றுக்கொள் ளட்டும். நமது தோளிலிருந்து முழங்கை வரை உள்ள பகுதிக்கு பாஹு என்று பெயர்.


அங்கு அதிஷ்டமான தேவதையாக வசிப்பவர் அசுவினி தேவர்கள்.அதற்கு கீழே உள்ளது கரம் எனப்படும். இதற்கு அதிஷ்டான தேவதை பூஷா,






இந்த இருவர் பெயராலும் வாங்கி ஆங்கீரஸிடம் அளிக்கிறோம்.ஆகையால் இந்த பொருள் நேரிலோ, மறைமுகமாகவோ பரமாத்மாவிற்கு அளிக்கபடுகிறது.


அவ்வாறு நாம் தானம் வாங்கிய பொருளை நல்ல விதத்தில் பயன் படுத்தினால் தான் தானம்


வாங்கிய பாபம் அகலும். ஆதலால் தானம் வாங்கிய கன்னிகையை கண்ணும் கருத்துமாக காக்க வேண்டிய கடமை அதிக மாகிறது.


5, கூறை புடவை அளித்தல்.


முன் சொன்னது போல் மணமகள் தன் தந்தையின் மடி யில் அம்ர்ந்திருக்க மணமகன் ஒரு தட்டில் புடவை, ரவிக்கையை அவளிடம் கீழ் கண்ட மந்திரம் சொல்லி கொடுப்பான்.






பரித்வா நிர்வண கிர: இமா: பவந்து விசுவத: வ்ருத்தாயும் அனுவ்ருத்தய: ஜுஷ்டா பவந்து ஜிஷ்டவ:






அதாவது ஏ தேவேந்திரனே உன் அருளால் இந்த கன்னிகையை சுற்றி கட்டப்பட்ட புடவை அவளுக்கு சுகத்தையும் பெருமையையும் தரட்டும்






உம்மை விட சிறந்த தேவர்களை நீங்கள் உபாசி க்கிறீர்கள். ஆதலால் நாங்கள் கூறுகின்ற இந்த வாக்கும் வ்ருத்தி அடைந்து உம்மை ஸேவிக்க


ட்டும். நீங்கள் இவளுக்கு பரம ஸெள பாக்கி யங்களை தாருங்கள் என்பதாகும். மணமகள் தனது மணாளனுக்கு நமஸ்காரம் செய்து விட்டு புடவையை வாங்கி கொள்ள வேண்டும்.


மணமகனின் சகோதரியே இப்பவும் புடவை கட்டி விட செல்ல வேண்டும்.


ஒன்பது கஜ புடவையான அதன் உள் தலைப்பை நான்கு விறர்கடையான அகலத்தில் எட்டு முதல் பன்னிரன்டு வரை அவரவர் உடல்






சரீர வாகிற்க்கு தக்க வாறு கொசுவம் வைத்து கொண்டு,, இடது காலின் பின் பக்கத்தில் கொசுவம் வரும்படியாக புடவையை பிடித்து


கொண்டு , மீதியுள்ள புடவையை முன்பக்கமாக சுற்றி வலது பக்கத்தில் கொசுவிய பகுதியோடு சேர்த்து இறுக்க மாக முடிச்சு போட வேண்டும்.






இவ்வாறு செய்த பின் வலது காலின் கீழ்பகுதி புடவை கரை பகுதியை அந்த காலின் அடியில் குதி காலால் அழுத்தி பிடித்து கொண்டால்


( புடவை கட்டி முடியும் வரை) கால் பகுதியில் புடவை தூக்கி கொள்ளாமல் தழைய இருக்கும்.


முடிச்சு போட்ட பகுதியின் மற்றொரு பக்கத்தை


சிறிது முன் பக்கமாக இடுப்பில் இடது பக்கத்தில் சொருகி கொள்ள வேண்டும்.பின்னர் முன் பகுதியிலுள்ள புடவையை சிறிது தளர்த்திய வண்ணமாக ,






இரு பார்டர்களும் சேர்த்த வண்ணம் நேராக முன் பக்கம் வயிற்று பக்கமாக நடுவில் செருகி


கச்சமாக, முழு புடவையும் பின் பக்கம் கொண்டு வந்து இடுப்பில் பின் பகுதியின் நடுவில் நன்றாக அவிழாமல் செருக வேண்டும்.


இவ்வாறு சொருகிய மேல் பகுதியின் இடது பக்க கரையிலிருந்து புடவையின் மீதி பகுதியை மட்டும் வலது பக்கமாக கொண்டு வந்து ,


வயிற்றின் நடுவில் செருகி,மீதி புடவையை இடது பக்கதிலிருந்து கொன்டு வந்து ஒரு சுற்று சுற்றிய பின் வலது தோள் வழியாக மேலாக்காக






போட்டு, தலைப்பு பகுதியை இரண்டாக மடித்து இடுப்பின் வலது பக்கத்தில் செருக வேண்டும். இவ்வாறு செய்ய சாதாரணமாக நீளம் சரியாக இருக்கும்.


தலைப்பு கட்ட நீளம் போதாமல் போனால் உள்ளே வைத்து கொசுவிய கொசுவங்களை குறைத்து கட்டலாம்.


தலைப்பு நீளம் அதிகம் ஆனால் தலைப்பு போடும் முன்னால் சிறிது புடவையை சற்று அதிக மாக செருகி சரி செய்து கொள்ளலாம்.


புடவை முழுவதும் கட்டிய பின்னர் ,வலது குதி காலால் அழுத்திய பகுதியை தளர்த்தி விடலாம்.


ஒரு காலின் பக்க கொசுவமும்,மற்றொரு காலின் பகுதியும் நன்கு தழைத்து ஒன்றுடன் ஒன்று இணையாக உள்ளதா என்று பார்த்து இழுத்து சரி செய்து கொள்ள வேண்டும்.






உட்காரும் போது கட்டை தளர்த்தி கொள்ள வேண்டும் என்றால் , வலது தோள் பகுதி புடவையின் கைபக்கத்திலுள்ள பகுதியை மேலிருந்து கீழ் பக்கமாக இழுத்த படி சரி செய்து கொள்ளலாம்.


புடவையை கட்டிய பின் மண மகள் முன்பு அணிந்து இருந்த மாலைகள் யாவற்றையும் மறக்காமல் அணிவித்து மண மேடைக்கு அவளது நாத்தனார் அழைத்து வர வேண்டும்.






சிலர் மடிசார் புடவை கட்டியதும் , முன்பு கட்டியிருந்த ஊஞ்சல் புடவையை ஒரு நாற்காலி யில் போட்டு அதில் மணப்பெண்ணை உட்கார


வைத்து ஊஞ்சலில் சுற்றிய எரிந்து கொண்டி ருக்கும் விளக்கை ஒரு தட்டில் வைத்து பெண்ணின் முன்பு மூன்று முறை சுற்றி ஏற்றி இறக்கும் பழக்கத்தை செய்வர்.
 
vivaaham-7.
6. மது பர்கமும் கோதானமும்.:-

கன்னிகா தானம் ஆனதுமே பெண்ணின் தாயார் ஹோமம் செய்வதற்கான அக்னியை கொண்டு வந்து வைப்பர். மாப்பிளைக்கு ஒரு தேங்காயை
கொடுத்து அதன் பின்னர் தாம்பாளத்தில் அக்னி

கொண்டு வந்து ஹோம குண்டத்தில் போட வேண்டும். மண பெண்ணிற்கு கூரை புடவை அளித்த பின்னர் , மணமகள் புடவை கட்டி
வருவதற்குள் மணமகனுக்கு பெண்ணின் தந்தை
அளிக்கும் மதுபர்க்கம்.

வரனை மஹாவிஷ்ணு ஸ்வரூபமாக எண்ணி உபசாரம் செய்வதே ஆகும். கன்னிகையின் அப்பா மணமகனின் காலை அலம்ப ஆப: பாதாவ நேஜனி த்விஷந்தம் நாசயந்து மே . அஸ்மின் குலே ப்ருஹ்ம வர்ச்சஸீ அஸானி

அதாவது பாதத்தை அலம்பும் ஜலம் என்னுடைய பகைவர்களை நாசம் செய்யட்டும். இந்த குலத்தில் நான் ப்ருஹ்ம தேஜஸுடன் விளங்குவேனாக.

என்ற அர்த்தம் கொண்ட மந்திரத்தை மணமகன் கூறி வலது காலை நீட்டுவான். முதலில் வலது பாதத்தையும் பிறகு இட து பாதத்தையும் மணமகளின் தந்தை அலம்ப வேண்டும்.

பிறகு மணமகளின் தந்தை மஹா விஷ்ணு ஸ்வரூபஸ்ய வரஸ்ய இதம் ஆசனம். என்றும், மஹா விஷ்ணு ஸ்வரூப வர ஸ்வாகதம்.

இதம் தே பாத்யம். என்று கூறி மஹா விஷ்ணு ஸ்வரூபியான வரனுக்கு இந்த ஆசனத்தை சமர்ப்பித்து , நல் வரவு உண்டாக இந்த ஜலத்தை

சமர்பிக்கிறேன். என்பதான அர்தத்தில் இதை தமது மனைவியுடன் செய்ய வேண்டும்.
பெரியவர்கள் நம் காலை தொடும் போது நம் சக்தி குறைகிறது. அவ்வாறு குறையாமல்

இருக்க மணமகன் மயி மஹோ வீர்யம் என்ற மந்திரத்தை உச்சரித்து , கால்களை அலம்பும் வரை தன் கைகளால் மாமனாரின் தோளை தொட்டு கொண்டிருக்க வேண்டும்.

பின்னர் பெண்ணின் தாயார் மணமகனுக்கு மூன்று முறை உத்தரிணியால் ஜலம் அளிக்க
மணமகன் ஆசமனம் செய்ய வேண்டும். அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: என்று.
பின்னர் மணமகனுக்கு பாலும் பழமும் கொடுத்து கால்களுக்கு சந்தனம் இட்டு, விஷ்ணுவாக கருதி காலில் துளசி தளம் போட்டு,பூஜிப்பர்.

பின்னர் தயிரில் தேன் கலந்து ஒரு பித்தளை கிண்ணத்தில் வைத்து இரு கூர்சங்களால்/ பவித்ர ங்களால் மூடி, மது பர்க்க; என்று கூறி தந்தை கொடுக்க வரன் த்ரய்யை, பசூனாம் என்ற இரு மந்திரங்களை கூறி ஏற்க வேண்டும்,

யன்ம துனவ்யோ ஸ்ஸானி என்ற மந்திரம் கூறி ஒரு முறையும் மந்திரமில்லாமல் இரு முறையும் மது பர்க்கத்தை புசித்து அம்ருதா பிதா நமஸி என்று கூறி ஜலம் அருந்த வேண்டும்.

மூன்று வேதங்களிலும் புகழ் பெற்றதும்,வேதத்தையே ப்ரகாச படுத்தும் தன்மை உடைய அம்ருதமானது பிரஜை களுக்கு எல்லாம்

பிரியனாக செய்து பசுக்களுக்கெல்லாம் அதிபதியாக ஆக்க கூடிய வல்லமை பெற்றது இந்த மது பர்க்கம்.என்பதே இதன் கருத்து.

இந்த மதுபர்க்கத்தில் சிலர் நெய்யும், சிலர் பொரியும், சத்து மாவும் சேர்த்து கலந்து தரும் வழக்கம் சிலருக்கு உண்டு.

மது பர்க்கம் கொடுத்த பின்னர் கெள: எனக்கூறி மணமகன் எதிரே பசு மாட்டை கன்று குட்டியுடன் நிறுத்தி மது பர்க்க பூஜை செய்ய வேண்டும்.

இந்த காலத்தில் இம்மாதிரி செய்ய முடியாததை கருத்தில் கொண்டு ஒரு முழு மட்டை தேங்காயை மணமகனிடம் அளித்து பசு மாட்டை போற்றும் மந்திரங்களை கூறுவார்.

மது பர்கத்தை பெற்ற வரன் இதை அங்கீகரித்தேன் விட்டு விடுங்கள் என்று உறக்க கூறி,பசுவின் பெருமைகளை எல்லாம் எடுத்துறைத்து, மக்களை பார்த்து பசுவை விட்டு விடுங்கள் ஹிம்சிக்காதீர்கள் என்று கூறி ( பசுவை

ஓட்டி செல்வது போல தேங்காயை உருட்டி விட வேண்டும்.அந்த தேங்காயை புரோஹிதர் எடுத்து கொள்வார்.

மது பர்க்கமும் கோதானமும் செய்த பிறகு பூஜிக்க பட்ட விருந்தினருக்கு சாப்பாடு போட வேண்டும்.

இங்கு இப்போது வரன் ஹோமங்கள் செய்ய வேண்டும். இதை சாப்பிட்டு விட்டு செய்ய கூடாது. ஆதலால் சாப்பாட்டிற்கு பதிலாக
மாமனார் மருமகனுக்கு ஒரு வாழை பழம் தருவார். அவசியமிதை வாங்கி சாப்பிட வேண்டும்.

இதை அன்னமாக பாவித்து உண்ணும் போது ஓ அன்னமே எனக்கு பலத்தை அளி என்று சொல்லி உண்பதாக மந்திரம் அமைந்துள்ளது.

7. நுகத்தடி வைத்தலும், மாங்கல்ய தாரணமும்.
மணமகன் ஒரு தாம்பாளத்தில் திருமாங்கல்யம் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, அக்ஷதை புஷ்பங்கள் போட்டு பூஜிக்க வேண்டும்.

மணமகள் கூரை புடவையுடன் மேடைக்கு வந்தவுடன் வரன் , கன்னியின் வலது கரத்தை பிடித்த வண்ணம், வரன் அக்னியின் அருகில் அழைத்து வந்து கன்னிகையிடம் கூறும்
மந்திரம் நீ எனது வீட்டிற்கு தலைவியாகவும் அடக்கி ஆள்பவளாகவும் நற்காரியம் எவை என அறிவித்து, செயல்

படுபவளாகவும் இருப்பாயஹ எனும் கருத்து உள்ள மந்திரம் கூறப்படுகிறது. குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இன்று
முதல் உனக்கு கொடுக்க படுகிறது.அந்த கெளரவத்தை காப்பாற்றி கொள்வது அவளது கையில் உள்ளது.
புரோஹிதர்க்கு அருகே மணமகன் அமர்ந்த படி நாமிருவரும் கர்மாகளை செய்வோம். நல்ல புத்திரர்களை உண்டு பண்ணுவோம்.

தீர்காயுள் உள்ள பிள்ளைகளை பெறுவதற்காகவும்,தெய்வ பக்தி உள்ள வளாகவும் என்னை சேர்ந்த மனித ர்களிடமும், நாற்கால் மிருகங்க ளிடமும் நீ நன்மை பயப்பவளாக இருப்பாயாக.
என்ற கருத்துடைய மந்திரம் கூறப்படுகிறது.

இதன் பின்னர் பெண்ணின் தகப்பனார் முன்பு கன்னிகா தானத்தின் போது , அமர்ந்தது போல விதை கோட்டையில் பெண்ணின் தந்தை வீற்றிருக்க , அவரது மடியில் பெண் அமர்ந்திருக்க

மணமகன் இதமஹ யா த்வயீபதிக்னீ அலக்ஷ்மீ:
தாம் நிர் நிஷாமி என்ற மந்திரத்தை உச்சரித்த படி தனது வலது கட்டை விரலாலும் மோதிர விரலாலும் தர்பையை பிடித்து கொண்டு , மண பெண்ணின் இரு புருவங்களிடையே துடைத்து

தர்பையை மேற்கு பக்கமாக எறிந்து விட்டு கை அலம்ப வேண்டும்.
அதாவது கன்னி பருவமாய், தனது வீட்டில் செல்ல மகளாய் , வளர்ந்து வந்த அந்த பெண்ணிடம்
ஏதேனும் தீய குணங்கள், தீய சக்திகள் அவளை யே அழிக்க கூடிய வகையில் இருந்தால் அவை யாவும் தூக்கி எறிய படட்டும் என கருத்து.

இதன் பின்னர் கன்னியின் தலைமீது தர்பையால் ஆன சிறிய பிரிமணை போல் வடமாக செய்து,அதை வைத்து, அதன் மேல் சிறிய
நுகத்தடி , அதன் வலது துவாரத்தில் ஸ்வர்ணம் வைத்து( தற்போது திருமாங்கல்யம் வைக்கிறார்கள் ) ஜலத்தால் மந்திர ஸ்நானம் செய்யபடும்.


ஸ்வர்ணத்தில் பட்ட இந்த நீர் துவாரத்தின் வழியாக பெண்ணின் தலையில் பட வேண்டும்.
நுகத்தடி வைக்கும் போது கேநஸ: கேரத: கேயு
கஸ்ய ஷஸீப்தே அ பாலாம் இந்திர த்ரி: பூர்த்வீ
அகரத் ஸூர்ய வர்ச்சஸம்.
அதாவது:- சசி தேவியின் கணவனான இந்திரனே
அத்ரி முனிவரின் பெண்ணான அபாலையை சக்கிரத்தின் துவாரத்திலும், நுகத்தடியின் துவாரத்திலும் மூன்று முறை சுத்தம் செய்து
சூரியனை போல் ஒளி வீசுபவளாய் ஆக்கினாய்
அது போல இவளும், தனது உடலிளுள்ள நோய்கள் நீங்கி ஒளிவீசுபவளாக ஆக வேண்டும்
பிறகு ஐந்து மந்திரங்கள் உச்சரிக்க பட்டு ஜலம் ப்ரோக்ஷிக்க படுகிறது.
நுகத்தடி வைக்கும் வைபவம் யஜுர வேத காரகளுக்கு மட்டுமே உண்டு.

நுகத்தடி வைபவம் ஆன பின்னர்,முன்பு போல
கன்னிகை கிழக்கு பக்கமாக உட்கார்ந்திருக்க , மணமகன் மேற்கு பக்கமாக நின்று கொண்டு.
பெண்ணுக்கு மாங்கல்ய தாரணம் செய்ய வேண்டும்.
மாங்கல்ய தந்துனானேன மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாபி சுபகே த்வம் ஜீவ சரதஸ்சதம்
என்ற மந்திரத்தை உச்சரித்து திருமாங்கல்யம் கட்ட வேண்டும்.இதன் அர்த்தம்:-
நான் சிரஞ்சீவி யாக இருப்பதற்கு காரணமான இந்த மங்கள ஸூத்திரத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன்.ஹே ஸெளபாக்கியவதியே நீ நூறு
வருடங்கள் சுகமாக வாழ்ந்திருப்பாயாக.

இந்த சமயத்தில் மண மக்களை ஆசீர்வதித்து, புஷ்பம் போட முன்பாகவே மண்டபத்தில் கூடியிருக்கும் பெரியவர்களுக்கு உதிரி புஷ்பம் கொடுத்திருப்பார்கள்.

மணமக்களின் நேரே மண்டபத்தில் ஒரு பலூனில் நிறைய உதிரி புஷ்பங்கள் நிரப்பி
அதை கட்டி தொங்கவிட்டு வைத்திருப்பார்கள்.
இந்த சமயத்தில் ஒரு எரியும் ஊதுபத்தியினால் பலூனை தொட அது வெடித்து மணமக்கள் மீது மலர் கொட்டும்.
திருமங்கல்யத்தின் முதல் முடிச்சு மணமகனும்
மற்ற இரு முடிச்சுகள் நாத்தனாரும் போட வேண்டும்.. கெளரி கல்யாணம் பாட வேண்டும்.

சரியான முஹுர்த்த நேரத்தில் நடக்க வேண்டும்.
கிரஹ ப்ரீதி நவகிரஹங்களுக்குசெய்ய வேண்டும் இதன் பிறகு மணமகன் மாங்கல்ய சூத்திரம் தரித்த இந்த முஹூர்த்தம் நல்ல முஹூர்த்த
மாக அமைய வேண்டுமென அருள் புரியுங்கள்.
என்று கேட்க அந்தணர்கள் நல்ல முஹூர்த்தம் ஆகட்டும் என பதிலுரைப்பார்கள்.
இம்மாதிரி அந்தணர்கள் சொல்லும்போது அந்தணர்களின் புண்ணியத்தை எடுத்து கொண்டு
அந்த முஹுர்த்தத்தை நல்ல முஹுர்த்த மாக்குகிறது. இதற்காக அந்தணர்களுக்கு அதிக பணம் கொடுக்க வேண்டும் என புரிந்து கொள்ள வேண்டும்.

பாணிகிரஹணமும், சப்த பதியும் முடிந்த பிறகே திருமணம் முடிந்ததாக அர்த்தம், ஆதலால் இப்போது பாதியில், மணமகன், மணமகள் , கை
குலுக்க வேண்டாம். . மணமகள்/ மணமகன், பெற்றோரை கை குலுக்கி கொள்ளுங்கள். திருமணம் விஜாரித்து கொள்ளுங்கள்.

மாங்கல்ய தாரணம் ஆன வுடன் ஆசாஸானா
ஸெளமனஸம் ப்ரஜாம் ஸெளபாக்கியம் தனூம்
அக்னே அனுவ்ரதா பூத்வா ஸந்நஹ்யே ஸுக்ரு தாய நம:
என்று கூறி தர்பையினால் ஆன ஒரு கயிற்றை
கன்னிகையின் இடுப்பின் புடவை மீது மூன்று சுற்றாக அவளது நாபியின் தென் பகுதியில் முடிச்சு வருமாறு மணமகன் கட்ட வேண்டும்.

ஒ அக்கினியே இனி நான் செய்ய போகும் எல்லா வித ஹோமங்களுக்கும், இவள் துணயாக இருக்க போகிறாள். இவள், நல்ல

மனம், சந்ததி,சரீர ஆரோக்கியம், ஸம்பத்து முதலியன வற்றை விரும்புகிறாள். அவைகளை தாங்கள் அளிப்பதற்காகவும்,விவாஹம் செய்து
கொள்வதற்கு ஏற்ற தகுதி உண்டாவதற்காகவும் இந்த ரஸனையை கட்டுகிறேன். என்பதே இந்த மந்திரத்தின் பொருள்.

இப்போது மணமகளுக்கு தாலி முடிந்த நாத்தனாருக்கு பெண்ணை பெற்றவர்கள் மரியாதை செய்ய வேண்டும்.
ஒருவரோ அன்றி பலரோ இருந்தாலும் அவர்களை உட்கார வைத்து சந்தனம், குங்குமம், சக்கரை, கல்கண்டு , தாம்பூலம், புடவை, ரவிக்கை
அல்லது பணமோ வைத்து கொடுக்க வேண்டும்.
முஹூர்த்தம் ஆன கையுடனே வந்திருக்கும் அனை வருக்கும், பானகம், அல்லது, ரஸ்னா, கோகோ கோலா போன்று ஏதாவது கொடுக்க வேண்டும். கேடரர் இதை பார்த்து கொடுப்பார்.

இந்த ஸமயத்தில் பிள்ளை வீட்டார் அனைவருக்கும்,தாம்பூலம்,தேங்காய் கொடுக்க வேண்டும். தற்காலத்தில் இது ஸெலகரிய படாததால் , தேங்காய் சகிதம் உள்ள முஹுர்த்த
பைகளை தேவையான எண்ணிக்கை பிள்ளை வீட்டாரிடமே ஒப்படைத்து, நீங்களே கொடுத்து கொள்ளுங்கள் என்றுகூறி ஏற்பாடு செய்கிறார்கள்.

தாலி கட்டி முடிந்து விட்டதானால் எல்லோரும் பரிசு பொருள் கொடுத்து விட்டு சாப்பிட செல்வார். நோட் புக் பேனா சகிதம் இருவர்
பொறுப்பாக பரிசு, பணம், முதலியவைகள் அவரவர் பெயர் போட்டு எழுதி வைத்து கொள்ள பொறுப்பாக ஒருவரை நியமிக்கவும். முன்பாகவே.

சாப்பிட்டு விட்டு செல்பவர்களுக்கு தாம்பூல பை
வாசலில் தயாராக இருக்க வேண்டும். இரு வீட்டினருக்கும் இருவர் இதை பொறுப்பாக செய்ய வேண்டும்.
8. பாணி க்ரஹணம்.
கரம் பற்றுதல் என்று அர்த்தம். மாங்கல்ய தாரணமானவுடன் பெண்ணின் வலது கரத்தை மணமகன் தன் வலதுகரத்தால்

பிடித்து கொண்டு, அக்னிக்கு அருகில் வந்து அதன் மேற்கு பக்கத்தில் , வடக்கு
நுனியாக போடப்பட்டிருக்கும் பாயில் தம்பதிகளிருவரும், மணமகன் வடக்கேயும், தெற்கே மணமகளுமாக அமர்ந்து

முறைப்படி அக்னியை ப்ரதிஷ்டை செய்து ஹோம கர்மாக்கள் சிலவற்றை செய்த பின் தேவர்களுடன் இந்த கன்னிகைக்கு உள்ள சம்பந்தத்தை மந்திரங்களால் கூறப்படுகிறது.

ஒவ்வொரு பெண்ணையும் சில காலங்கள் வ ரிசையாக,சோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவர்கள், காத்து, ரக்ஷித்து வருவதாக நம்ப
படுகிறது.

இப்போது நான்காவதாக அவளை மணமகன், ரக்ஷிக்கிறான். அதனால் முன்பு குறிப்பிட்ட மூன்று தேவர்களின் பொறுப்பு முடிந்து விட்டது.

அடுத்த படியாக அந்த பொறுப்பை ஏற்க இந்த மூவரது ஸம்மதத்தை பெறுவேனாக என்ற பொருள் பட மந்திரத்தை கூறி, ஏ பெண்ணே ஸோமன் அதாவது சந்திரன் உனக்கு பலத்தையும்

கந்தர்வன் அழகையும், அக்னி தேவன் யெளவனத்தையும் அளித்து நீ தெய்வாம்சத்
துடன் என்னிடம் வந்திருக்கிறாய்; என்று பெண்ணின் சிறப்பை கூறும் மந்திரங்கள் சொல்லு கிறான்.

மணமகன் தனது வலது கரத்தால், மனைவியின்
குவிந்த வலது கரத்தை, கணவனது கரம், அவளது எல்லா விரல்களையும் சேர்த்து பிடித்த வண்ணமும் இருக்க வேண்டும். இந்த சமயத்தில் நான்கு மந்திரங்கள் கூறப்படுகிறது.

க்ருப்ணா மிதே ஸுப்ரஜாஸ்த்வாய ஹஸ்தம் மயா பத்யா ஜாதஷ்டிர் யதா ஸ: பகோ, அர்யமா
ஸவிதா,புரந்திர் மஹ்யம் த்வாதுர் கார்ஹ பத்யாய தேவா:
இதன் பொருள்:-ஏ பெண்ணே பகன், அர்யமா, சூரியன், இந்திரன், மற்றுமுள்ள தேவர்களும், நான் க்ரஹஸ்தாஸ்ரமத்தை நடத்த உன்னை எனக்கு
அளித்துள்ளார்கள். அவர்களது அருளை பெற்று, அவர்கள் ஸாக்ஷியாக நான் உன்னை மணம் புரிந்து கொள்கிறேன்.

நீயும் நானும் கிழவர்கள் ஆனாலும் கூட ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க நான் உன் கையை பிடிக்கிறேன்.

தே ஹ பூர்வே ஜனாஸோயத்ர பூர்வவஹோ ஹிதாம். மூர்த்தன்வான் யத்ரஸெளப்ரவ: பூர்வோ தேவேப்ய ஆதபத்;
ஸரஸ்வதி ப்ரேதமவ ஸுபகே வாஜி நீவதி

தாம் த்வா விஷ்வஸ்ய பூதஸ்ய ப்ரகாயா மஸ்யக்ருத.
ய ஏதி ப்ரதிஷஸ் ஸர்வா நிஷாது பவ மன: ஹிரண்ய ஹஸ்த ஐரம்மஸ ஸத்வா மன்மனஸம்.க்ருணோத்

நல்ல மக்களை பெற்று, வெகு காலம் வாழ்ந்து, கிழத்தன்மை வந்த போதிலும் ,அன்பு குறையாது
மங்களகரமான க்ருஹஸ்தாஸ்ரம தர்மத்தை நடத்துவதற்காக நான் உன் கையை பிடிக்கிறேன்

இங்கு குழுமியுள்ள மனிதர்கள் மட்டுமில்லாது, அக்னி, வாயு, போன்ற தேவர்கள் சாக்ஷியாகவும்,
அங்கிங்கு எனாத படி, எங்கும் நிறைந்திருக்கும், இறைவனது ஸாக்ஷியாகவும் பாணி கிரஹணம் நடை பெறுகிறது. இதனால் அவர்களது சேர்க்கை

இணை பிரியாது வெகு காலம்,வேர் ஊன்றி இருக்கும் என்பது தெள்ள தெளிவாகிறது.

பாணிகிரஹனம் ஆன பிறகு பெண்ணுக்கு அவளது மாமி காலுக்கு மெட்டி போட வேண்டும்.
கட்டை விரலுக்கு அடுத்து உள்ள விரலில் இதை அணிவிக்க வேண்டும்.

இப்போது ஏதாவது கோயில் ப்ரஸாதங்களோ, ஆசார்யாள் ஸம்பாவனை என்று இருந்தால் மந்திரம் சொல்லி மணமக்களுக்கு அளித்து ஆசிகள் வழங்கலாம்.

9. ஸப்தபதி:-
ஸப்தபதி என்றால் ஏழு அடிகள் என்று அர்த்தம்.ஒருவர் மற்றொருவருடன் ஏழு அடி இணைந்து நடந்து வந்தால்

அவர்கள் இருவரும், சிறந்த தோழர்கள் ஆகி விடுகிறார்கள். அதனால் அக்னிக்கு வடக்கு பகுதியில் மணமகன் மணமகளது

வலது கையை தனது வலது கையினால் பிடித்த படியே , மணப்பெண்ணின் வலது காலின் கட்டை விரலை , தனது இடது
கையால் பிடித்து கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ ஏழு அடிகள்
எடுத்து வைக்க செய்ய வேண்டும்.

வலது கை பிடியை விடாதவாறு இம்மாதிரி செய்ய வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போதும் அதற்குரிய ஏழு மந்திரங்க ளையும் மணமகன் சொல்ல வேண்டும்.

நீ முதலாவது அடியை எடுத்து வைத்தாய் உனக்கு வாழ்க்கையில் அன்னம் குறையாமல் அளிப்பதற்காக
ஸ்ரீ மஹா விஷ்ணு , நீ வைத்த இந்த
அடியில் பின் தொடர்ந்து வருவாராக.

நீ இப்போது இரண்டாவது அடி எடுத்து வைத்தாய் அந்த மஹா விஷ்ணுவே உனக்கு
தேவையான பலத்தை அளிப்பாராக.

நீ மூன்றாவது அடி வைக்கும் போது நீ உனது வாழ் நாட்களில் விரதம் முழுவதையும் அனுஷ்டி க்க செய்து, நல்ல கர்மாக்களை நடத்தி வைக்க மஹா விஷ்ணு உன்னை பின் தொடரட்டும்.

நான்காவது அடியை எடுத்து வைத்த உனக்கு அவர் சுகத்தை அளிக்கட்டும்.
ஐந்தாம் அடியை நீ வைக்கும் போது உனக்கு
பசுக்கள் விருத்தி அடையவும்,செல்வத்தை அளிக்கவும் மஹா விஷ்ணு உன்னை பின் தொடரட்டும்.
ஆறாவது அடியை நீ எடுத்து வைக்கும் போது
ஆறு வித ருதுக்களும், உனக்கு அனுகூலமாக
ஆக்க செய்யவும், மஹா விஷ்ணு உன்னை பின் தொடர்ந்து வருவாராக.

நீ வைத்த ஏழாவது அடியில் நீ வாழ்க்கையில் பங்கு கொள்ள வேண்டிய எல்லா வித ஹோமங்க ளையும்,குறைவு ஏதுவுமில்லாமல் நிறை வேற்று

வதற்காக ஸ்ரீ மஹா விஷ்ணு உன்னை தொட ரட்டும். என்றெல்லாம்பொருள் கொண்டவற்றை கூறி , ஏழு அடிகளிலும் ஏழு விதமான பாக்கியத்தை மஹா விஷ்ணு தொடர்ந்து வந்து

அளிக்கட்டும்.என்பதாக கூறபடுகிறது.
இந்த ஏழு அடிகளுமெடுத்து வைத்த பிறகு மண பெண்ணை பார்த்து மணமகன் சொல்லும் மந்திரத்தின் பொருள்;

ஏழு அடிகளை தாண்டிய நீ எனக்கு தோழியாக வேண்டும். நாம் இருவர்களும் நண்பர்கள் ஆகி விட்டோம். உன்னுடன் நட்பை அடைகிறேன். உன் நட்பிலிருந்து நான் விலக மாட்டேன். நம்மை

தெய்வம் ஒன்று கூட்டி வைத்திருக்கிறது.நீ யும் என்னை விட்டு பிரிய க்கூடாது. இருவரும் செய்ய
வேண்டிய கர்மாக்களை எல்லாம் ஒரே விதமாய் சங்கல்பம் செய்வோம்.பரஸ்பரம் நல்ல அன்புடை யவர்களாகவும், ஒருவர்கொருவர் பிடித்த முள்ள வர்கள், ஆகவும், நல்ல மனம் உடையவர் க ளாகவும்,உண்ணும் உணவையும் பலத்தையும்

சேர்ந்தே அனுபவித்து கருத்துகளிலும் ஒருமித்த வர்களாக வாழ்வோம். நாம் மேற்கொள்ளூம் விரதங்களை சேர்ந்தே அனுசரிப்போம்.

நமது விருப்பங்கள் யாவும்,இணைந்தவையாக இருக்கட்டும்.மனமும் வாக்கும் போல , சொல்லும் பொருளும் போல, நீ வாழ் நாள்

முழுவதும் என்னோடு இணைந்திருந்து என்னை பின் பற்றுபவளாக இருந்து , நல்ல சந்ததிகளை பெற்று செல்வத்துடனும், செழிப்புடனும்,
ஒருவரை ஒருவர் பிரியாத படியும்
இன்சொல் படைத்தவர்களாகவும், வாழ்க்கை நடத்த நீ என்னுடன் வா. என்பதாகும். இதுவே ஸப்த பதி எனப்படுகிறது.

ஸப்தபதி முடிந்தவுடன் கணவன், மனைவி இருவரும் பிடித்த கையை விடாமல், அக்னியை
ப்ரதக்ஷிணமாக வந்து, அக்னியின் மேலண்டை இருக்கும் பாயில் அமர வேண்டும்.
பிரதான ஹோமம் இது இவர்கள் இருவருக்கும் பொது, ஆதலால் மனைவி தனது வலது கரத்தால் கணவனை தொட்டுகொண்டிருக்க வேண்டும்.

கணவன் பத்து ஹோம மந்திரங்களையும் 16 ஆஹூதிகளையும் சொல்லி நெய்யால் அக்னியில் ஹோமம் செய்வான். முதன் முதலில் திருமணம் ஆன பிறகு செய்யும் முதல் ஹோமம்

கன்னியாக இருந்து வந்த சமயத்தில் அவளை காத்து வந்த ஸோமன், கந்தர்வன், அக்னி தேவன் ஆகியோருக்கு நன்றி அறிவித்து சொல்வதாகவும்,புகுந்த வீட்டில் நல்ல பற்றுதல்
உடன் இருக்கவும்,நல்ல குழந்தையை பெறவும்.
இந்திர தேவனை வேண்டியும், அக்னி தேவனை நினைத்து ஹோமம் செய்ய படுகிறது.

அம்மி மிதித்தல்:- அம்மி மிதித்தலுடன் ஸப்தபதி நிகழ்ச்சி முடிவடைகிறது.
முதலில் ஹோமம் ஆனதும் , அக்னியின் வடக்கு பகுதியில் கோலம் போட்டு முன்னதாகவே வைத்திருக்கும் அம்மி மீது
ஆதிஷ்டேமம் அஷ்மானம் என்ற மந்திரத்தை சொல்லி , மணமகன், மணமகளின் வலது கால் கட்டைவிரலை பிடித்து ஏற்றி வைத்தல் வேண்டும்.

வாழ்வில் இன்பம் துன்பம் எவை வந்த போதிலும் இருவரும் மனம் கலங்காது, மனம் தளராது,எக்காலத்திலும் இந்த கல்லை போல உறுதியாக திடமாக , எத்தனை எதிர்ப்புகள்
ஏற்பட்டாலும், எதிர்த்து நின்று, எதிரிகளையும் சகித்து கொண்டு, நடக்கும் பண்பு இருவருக்கும் வேண்டும். என்பதை உணர்த்து வதாய் இருக்கும்.

10. லாஜ ஹோமம்.
லாஜ என்றால் நெல் பொரி என்று பொருள். இந்த ஹோமத்தில் அக்னி தேவனுக்கு பொரி போட்டு ஹோமம் செய்ய படுகிறது. அக்னியில்

எந்த பொருளை போட்டாலும் எல்லாம் எரிந்து விடும்.அக்னி சாக்ஷியாக நடை பெறும் எல்லா இடத்திலேயும், திருமணத்திற்கு முன்பு தெரிந்தோ தெரியாமலோ, செய்ய பட்ட எல்லா
தவுறுகளும் எரிக்க பட்டு, பொசுக்க பட்டு விவாஹம் புனித சடங்காக ஆகிறது.

பட்டு பாயில் தம்பதிகள் இருவர் அமர்ந்திருக்க
மணப்பெண்ணின் இரு கரங்களையும் அஞ்ஜலியாக சேர்த்து குழிவாக பிடிக்க செய்து , அதில் சிறிது நெய்யை தடவிய பின், பெண்ணின்

சகோதரன் அவளது கரங்களில் இரு முறையாக
நெற் பொரியை எடுத்து வைக்க , கணவன் அதன்
மேல் நெய் விட்டு,இயம் நாரி உபப்ருதே என்ற மந்திரத்தை கூறி அவளது கரங்களை தனது நுனி விரல்களால்போட்டு ஹோமம் செய்ய வேண்டும்.

இந்த மந்திரத்தின் பொருள்;-ஓ அக்னி பகவானே
இந்த என் மனைவி கணவனான நான் நூறாண்டு காலம் ஜீவித்து இருக்க வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்து கொண்டு இந்த பொரியை ஹோமம் செய்கிறாள்.தாங்கள் அவ்வாறே அருள் புரியுங்கள் என்று அர்த்தம்.

இவ்வாறு பொரியை ஹோமத்தில் போட்ட பின்னர் , துப்யமக்ரே பர்யவஹன் என்ற மந்திரத்தை சொல்லி கொண்டு இருவருமாக
அக்னியை ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். பிரதக்ஷிணத்தின் முடிவில் மீண்டும் ஆதிஷ்டேமம் என்ற மந்திரம் சொல்லி மணமகன்

தனது மனைவியின் வலது கால் கட்டை விரலை பிடித்து, அம்மியின் மேல் நிற்க செய்ய வேண்டும்

இந்த ப்ரதக்ஷிண மந்திரத்தின் பொருள்:-
ஒ அக்னியே, நல்ல சந்ததிகளை பெறக்கூடி யவளும், நீண்ட ஆயுளும்,நல்ல அழகையும் பெற்றவளாக என் மனைவியை ஆக்கி, அவளின்

பதியான நான் நூராண்டு ஜீவித்திருக்க வைக்க வேன்டும்.
பிறகு இரண்டாவது முறையாக முன் போல் அவர்கள் இடத்தில் அமர்ந்து பொரியினால் லாஜ ஹோமம் செய்ய வேன்டும்.

அப்போது அர்யமனம் நு தேவம் என்னும் மந்திரம் கணவனால் சொல்ல படுகிறது.
இதன் பொருள்:- ஓ அக்னியே கன்னிகைகள் பலர் பூஜிக்க தக்க உம்மை லாஜ ஹோமத்தி னால் பூஜித்தனர். ஒருவராலும் ஹிம்ஸிக்க முடியாத

தாங்கள் இந்த பெண்ணை அவளது தந்தை வீட்டை விட்டு என்னுடைய வீட்டில் அன்புள்ளவளாக இருக்க சொல்வீராக.

இது முடிந்ததும் மீண்டும் இரண்டாவது முறையாக துப்யமக்ரே என்று ஒரு ப்ரதக்ஷிண மும் ,ஆதித்யேமம் என்று அம்மி மிதித்தலும் முன் போலவே நடைபெறும்.

மூன்றாவது முறையாக தனது இடத்தில் அமர்ந்து , தம்பதியர் முன் போலவே லாஜ ஹோமம் செய்ய வேண்டும். இப்போது சொல்லப்படும் தவமர்யமா என்னும் மந்திரம்

இந்த விவாஹம் என்பது தேவர்களுக்கு அன்னம் அளிக்க கூடியது. அதனால் தம்பதிகளுக்கு ஸ்வர்க்கம் கிடைக்கும், தம்பதிகள் மனம்
ஒத்து இருக்கும் படி செய்வதால் , மரத்திற்கு ஜலம் விட்டு வளர்ப்பது போல தாங்களை நாங்கள் நெய்யினால் வளர்க்கிறோம்.

இதன் பின்னர் பொரி ஹோமம், துப்யமக்ரே என்ற மந்திரத்தை கூறி மூன்றாவது ப்ரதக்ஷிணம், ஆதிஷ்டேமம் என்ற மந்திரம்கூறி அம்மி மிதித்தல் இவ்வாறு எல்லாவற்றையும் மூன்று முறை செய்ய வேண்டும்.
 
VIVAAHAM-8.
இதன் பின்னர் பரத்வா முஞ்சாமி என்ற மந்திரங்களை கூறி கன்னிகையின் இடுப்பில் முன்பு கட்ட பட்ட தர்ப்பை கயிற்றை அவிழ்த்து
மேற்கு திக்கில் வைத்து கை அலம்பனும்.
பொருள்:- ஓ பெண்ணே இந்த தர்பை கயிற்றின் மூலமாக ஸவிதா உன்னை வருண பாசத்தினால் கட்டினார்.இதை அவிழ்பதின் மூலமாக அந்த
பாசத்திலிருந்து உன்னை விடுவிக்கிறேன். இருவரும் இவ்வுலகில் சுகமாக வாழ்ந்து , நல்ல புண்ய கர்மாக்களை செய்து ப்ருஹ்ம லோகம்
செல்வோம். என்பதாகும்.

லாஜ ஹோமம் முடிந்த பிறகு பொரி இட்ட சகோதரனுக்கு, அவரவர் வசதிப்படி தாம்பூல த்துடன், பணமோ, மோதிரம் அல்லது வஸ்திரம் கொடுக்க வேண்டும்.

பிள்ளை வீட்டை சேர்ந்தவர் மரியாதை செய்ய வேண்டும். பொரி இட்ட சகோதரனுக்கு.
இப்போது சம்பந்தி மரியாதையும் செய்யலாம்.

பெண் வீட்டு சம்பந்திக்கு பிள்ளை வீட்டினரும், பிள்ளை வீட்டு சம்பந்திக்கு பெண் வீட்டினரும்.
தாம்பூலம், சந்தனம்,குங்குமம், புஷ்பம்,பழம், புடவை, வேஷ்டி, சக்கரை கல்கண்டு கொடுப்பது வழக்கம். சம்பாவனையும் கொடுக்கலாம்.

ப்ரவேஸ ஹோமம்;-

ப்ரவேச என்றால் நுழைதல் என்று பொருள்.
அதாவது மணமகள் முதன் முதலாக தனது கணவன் வீட்டில் நுழைந்து அங்கு செய்ய பட வேண்டிய ஹோமம்.

விவாஹம் முடிந்ததுமே, பிள்ளை, பெண் இருவரும் பலகாரமாக ஏதாவது சாப்பிட்டு விட்டு,
பிள்ளை வீட்டிற்கு வந்த பின்னர், இதை செய்வார்கள். ஆனால் இப்போது பிள்ளை தங்கி

இருக்கும் கல்யாண மண்டப அறையிலேயே செய்கிறார்கள்.
பிள்ளை தங்கி இருக்கும் இடத்திலேயே பெண்ணையும், பிள்ளையையும் அழைத்து வந்து

கிரஹ ப்ரவேசம் என செய்து, கோல மிட்ட இடத்தில் பட்டு பாயில் கிழக்கு முகமாக உட்
கார வைத்து பாலும் பழமும் கொடுத்து, சிலர் எள்ளூம், வெல்லமும் கொடுக்கின்றனர்.

பெண்ணுக்கு புடவை, பிள்ளைக்கு உடை என ஓதி கொடுத்து,பிள்ளை வீட்டினர், பெண் வீட்டினரை
உபசரித்து பானகம், கொடுத்து, தாம்பூலம்,பழம், புஷ்பம், சந்தனம் குங்குமம் கொடுத்து ஏதாவது பணம் வைத்து கொடுப்பார்கள்.

இந்த சமயத்தில் பெண் வீட்டினர் ஒரு ஜோடி பருப்பு தேங்காய் கொண்டு வந்து வைக்க வேணும். இம்மாதிரி செய்த பிறகு ஹோமம் செய்ய பழைய இடத்திகு வர வேண்டும்.

அதன் படி மணமகன், மணமகள், இருவரும் பட்டு பாயில் வந்து அமர வேண்டும். பதி மூன்று மந்திரங்கள் சொல்லி, பதிமூன்று ஆஹூதிகள்
செய்ய வேண்டும். ஹோம மந்திரத்தின் பொருள்.

என் மனைவி சொர்கத்தை அடைவிக்கும் நல்ல சந்ததியுடன் செல்வங்கள் உடையவளாக இருக்கட்டும்.இந்த அக்னி தேவன் வீட்டை ரக்ஷிப் பவர்.

எங்களுக்கு செல்வத்தையும், வளர்ச்சியையும் கொடுத்தருள வேண்டும். நாங்கள் இருவரும் இந்த வீட்டில் பிரியாமல் சேர்ந்திருக்க வேண்டும்.
நீண்ட ஆயுளை பெற வேண்டும்.இப்படியான எல்லா நலங்களையும் அளிப்பீராக.

பிறகு மனைவியை பார்த்து இந்த வீட்டில், உனக்கு, ஸந்ததி ,சம்பத்துக்களால் ஆனந்தம்
உண்டாகும்படி தேவர்கள் அருள் புரியட்டும்.வீட்டிற்கு யஜமானியாக இரு.
ஜாக்கிரதையாக இருந்து, உடலை ரக்ஷித்து ஸுகத்தை அனுபவி. என்றும் பொருள் கொண்ட மந்திரங்கள் கூறபடுகின்றன.

ப்ரவேஸ ஹோமம் முடிந்த பிறகு அருந்ததி யையும், துருவனையும் பார்க்க வேண்டும்.
நக்ஷதிரங்கள் உதிக்கும் வரை மெளனமாயிருந்து

உதித்த பின் கிழக்கு நோக்கியோ, வடக்கு நோக்கியோ வெளியே சென்று த்ருவக்ஷிதி த்ருவ யோனி என்ற இரு மந்திரங்கள் சொல்லி அடையாளங்கினால் துருவ நக்ஷத்திரத்தையும்,

அருந்ததி நக்ஷத்திரத்தையும் பார்க்க வேண்டும்.
இவர்களது தாம்பத்ய வாழ்க்கை துருவ நக்ஷத்திரம் போல் நிலை பிறழாதவாறும் ,தருமத்திலிருந்து வழுவாததாக இருக்க வேண்டும். என பொருள்.

ஆக்னேய ஸ்தாலி பாகம்.
தேவர்களுக்கு அக்னியே முகம். அவர் மூலமாக மந்திரங்களை கூறி ஹோமம் செய்தால் தான் தேவர்களிடம் ஹவிஸ்ஸை சேர்க்க இயலும்.

இந்த அக்னியும் சாதாரண தீயாக இல்லாமல், விதிப்படி ப்ரதிஷ்டை செய்தால் தான் தேவர்களிடம் ஹவிஸ்ஸை சேர்க்க இயலும்.
விவாஹத்திற்கான அக்னியிலேயே ஒரு சிறிய பாத்திரத்தில், சிறிது அரிசியை எடுத்து இரண்டு மூன்று முறை நீர் விட்டு கலைந்து வைத்து ,அது நன்றாக வெந்து
சாதமானபின் , அதை அக்னியில் இட்டு ஹோமம் செய்வதே ஸ்தாலீ பாகம் எனப்படும்.
ஆக்னேய என்றால் அக்னியை ஆராதித்து என்று பொருள்.
விவாஹம் செய்து கொன்ட பெண்ணுடன் முதலில் சங்கல்பம் செய்து கொண்டு, மணப்பெண்
அரிசி குத்துவது போல் பாவனை செய்து, அரிசியை மூன்று முறை கலைந்து, அந்த விவாஹ அக்னியில் தண்ணீரையும்,
அரிசியையும் கொதிக்க விட வேண்டும். அரிசி நன்றாக வெந்து சாதமான பின், வடக்கு அல்லது கிழக்கு முகமாக இறக்கி,அதில் சிறிது நெய்யை விட்டு வைக்க வேண்டும்.
பொரச இலையில் அபிகாரம் செய்து ( சிறிது நெய் விட்டு) அந்த அன்னத்தை இரண்டு முறை எடுத்து வைத்து ,இந்த இலையின் அன்னத்தின்
மீதும் நெய் விட்டு, பாத்திரத்தில் மீதியுள்ள அன்னத்தின் மீதும், ஒவ்வொரு முறை அபிகாரம் செய்ய வேண்டும்.
பிள்ளை வீட்டார் ஸ்ரீ வத்ஸ கோத்திரமாக இருந்தால் மூன்று முறை அன்னம் எடுத்து வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதற்கு அவதானம் என்று பெயர்.
பாத்திரத்தின் நடுவில் இருந்து ஒர் முறையும்,
கிழக்கிலிருந்து இரண்டாவது முறையும், மேற்கிலிருந்து மூன்றாவது முறையும் என்றபடி அவதானம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு
முறையும், நமது கட்டை விரலின் முதல் கோடு அளவிற்கு அன்னம் எடுக்க வேண்டும். அதிகமாக வோ குறைவாகவோ எடுக்க கூடாது.
அன்ன பாத்திரத்தை இடது கையால் பிடித்து கொண்டு, அக்னயே ஸ்வாஹா என்று முதல் ஹோமம் செய்து, அக்னயே இதம் ந மம என்று சொல்ல வேண்டும்.

பின்னர் பொரச இலையில் அபிகாரம் செய்து , அன்ன பாத்திரத்தின் வடக்கு பகுதியிருந்து,முன்பு எடுத்த அளவை விட சிறிது அதிகம் ஒரு முறை
எடுத்து. ( ஸ்ரீ வத்ஸம் என்றால் இரண்டு முறை ) அன்னத்தை எடுத்து வைத்து அபிகாரம் இரண்டு முறை செய்து , முன் போல் அன்ன பாத்திரத்தை
இடது கரத்தால் தொட்டு கொண்டு உறக்க அக்னயே ஸ்வஷ்ட க்ருதே ஸ்வாஹா என்று அக்னியில் வடகிழக்கே ஹோமம் செய்யனும்.
பின்னர் அக்னியின் வடக்கு பகுதியில் அக்னியை தூண்டி விட்டுஅதில் இரண்டு பொரச இலைகளினாலும் நெய்யை எடுத்து,ஒரே
சமயத்தில் ஸ்வாஹா என்று சொல்லி ஹோமம் செய்ய வேண்டும். இங்கே 33 தேவதைகள் ஆராதிக்க படுகிறார்கள்.இதுதான் ஸ்தாலி பாகம்.

ஒளபாஸனம்.:-
ஒருவனுக்கு உப நயனம் ஆன பிறகு தினமும் இரு வேளையும் ஸமிதா தானம் மிக முக்கியம்.
விவாஹ மான பிறகு தினமும் இரு வேளை ஒளபாஸனம் முக்கிய மாகிறது. காலையில்
ஸூரியனை குறித்தும், மாலையில் அக்னியை குறித்தும் பச்சை அரிசியினால் செய்ய படும் ஹோமமே ஒளபாஸனம் எனப்படும்.
தம்பதிகள் ஜீவித்திருக்கும் வரை தினந்தோறும் இரு வேளை ஆராதிக்க வேண்டும்.
அக்னி ஹோத்ரி எனப்படுபவர்கள், தமது இல்லங்களில் ஒரு சிறிய பானையில் இந்த
அக்னி அணையாமல் வைத்திருந்து , தினமும் காலையில் இந்த அக்னியை மூட்டி,அக்ஷதையை போட்டு ஒளபாஸனம் செய்வது வழக்கம்.
ஆடவர் வெளியூர் சென்றாலும் இதை வீட்டு பெண்டிர்களும் மந்திரம் இல்லாமல் செய்யலாம்.

அக்னி தேவனுக்கு உண்ண உணவு அளிப்பதே ஒளபாஸனம். கடவுளுக்கு உண்ணும் உணவு வகை களை தினமும் நைவேத்யம் செய்து பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

நன்கு களைந்து ஈரமில்லாத அக்ஷதையை, கையில் எடுத்து கொண்டு, அதை இரண்டாக பிறித்து , இடது கையில் சிறிது அதிகம் எடுத்து கொண்டு,வலது கை நுனியால் அக்னயே ஸ்வாஹா என ஹோமம் செய்ய வேண்டும்.

அக்னய இதம் நமம என்று கூறிய பின் , இடது கரத்தில் உள்ளதை வலது கரத்தில் மாற்றி கொண்டு,
அக்னயே ஸ்வஷ்ட க்ருதே ஸ்வாஹா என உறக்க கூறி வட கிழக்கில் ஹோமம் செய்ய வேண்டும்.
அக்னியே எங்கள் செயலால் உண்டான செல்வத்தை அனுபவிப்பதற்கு நல்ல மார்கத்தில் எங்களை அழைத்து செல்வீர்களாக. எங்களது எல்ல எண்ணங்களையும் நீங்கள் அறிவீர்,

மறைந்திருந்து கெடுக்கும் பாவத்தை நாசம் செய்ய கூடியவர். நமஸ்காரங்களை வெகுவாக சமர்ப்பித்து உம்மை பூஜிகிறோம்.
இந்த ஒளபாஸன கர்மா நன்கு அனுஷ்டிக்க பட்டதாக அமைவதற்காக அநாக்ஞாதாதி மந்திர ஜபமும் ஜபிக்க படுகிறது.
இதன் பொருள்;- ஓ அக்னியே உமது பூஜையான யக்ஞத்திற்கு எவ்வளவு அங்கங்கள் என அறிய மாட்டோம். தெரிந்தோ தெரியாமலோ தவறுதலாக
நாங்கள் ஏதாவது செய்திருந்தால் அவற்றை எல்லாம் ஒழுங்காக்கி பூர்ண பலனை தரும் படி செய்வீராக.குழந்தைகளை பெரியவர் ரக்ஷிப்பது
போல் தாங்கள் எங்களை ரக்ஷிக்க வேண்டும். நாங்கள் அறியாமல் விட்டதெல்லாம் தாங்கள் அறிவீர்.

அந்தந்த தேவர்களை அழைத்து, அந்தந்த காலத்தில், அவரவர்களுக்கு ஏற்றபடி தாங்கள் தான் பூஜை செய்து எங்களுக்கு பலனை தர வேண்டும். என்ற அர்த்தத்தில் மந்திரம் உள்ளது.

மஹா விஷ்ணு த்ரிவிக்கிரம அவதாரம் எடுத்து தமது திருவடிகளால் உலகை அளந்தார். அவரது பாதத்தினால் கர்ம பூமி புண்ணியமாகி கர்மா விற்கு ஏற்ற இடமாகவும் ஆயிற்று.

அவரது திருவடி ஸ்மரணத்தினால் எல்லா வித தோஷமு மகன்று புண்ணியமேற்படும். ஆகையினால் ஒவ்வொரு வைதீக கார்யத்திலும்,

ஹோமத்திலும், ஜபத்திலும்,இதம் விஷ்ணு விச க்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸுரே என்ற மந்திரம் சொல்லபடுகிறது.
ஒளபாஸனம் பகலில் ஸூரியனை குறித்தும், மாலையில் அக்னியை குறித்தும் செய்ய படுகிறது.

கந்தர்வ பூஜை;-

ஒளபாஸனம் ஆனதும் கந்தர்வ பூஜை செய்ய படுகிறது. ஒரு அரசு,ஆல்,அத்தி இதில் ஏதோ ஒன்று வகையை சேர்ந்த ஒரு சமித்து எடுத்து

சந்தனம் பூசி, மணமகன் வேஷ்டியிலிருது ஒரு நூல் எடுத்து, மனமகள் புடவையிலிருந்து ஒரு நூல் எடுத்து இதை சமித்தில் சுற்றி, புஷ்பம் சேர்த்து அலங்காரம் செய்து, அதில் விசுவாவசு

என்னும் கந்தர்வனை ஆவாஹனம் செய்து பூஜை செய்வார்கள்.இந்த கன்னி பெண்ணை இது வரை காத்து வந்த கந்தர்வனுக்கு நன்றி செலுத்தி, வழி அனுப்பி வைப்பதாக இந் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது.

சேஷ ஹோமம்.

இது நான்காவது நாள் பின் ராத்திரியில் எழுந்து செய்ய வேண்டிய ஹோமம். இது தான் வைதீக சடங்குகளில் நிறைவு பகுதி. இதை விடியற்கா லையில் செய்வார்கள்.

ஏற்கெனவே ஒரு ஸமித்தில் சந்தனம் தடவி, பூஜித்த விசுவாவசு என்னும் கந்தர்வனை உதீர்ஷ்வாத்த என்ற இரண்டு மந்திரங்களினால் எழுப்பி, யதாஸ்தானம் செய்வதாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.

அதாவது தண்டத்தில் ஆவாஹனம் செய்ய பட்ட
கந்தர்வ ராஜனை துயில் எழுப்பி தண்டத்தை அலம்பி வேறு இடத்தில் வைக்க வேண்டும்.
சேஷ ஹோமத்திற்கு முன்பாக இதை செய்வர்.
இது நாள் வரை மணப்பெண்ணை காத்து வந்த அந்த தேவனை வணங்கி இது வரை இவளை ரக்ஷித்து வந்த தாங்கள் எனது தகப்பன் வீட்டி
லிருப்பவளும், திருமணமாகாதவளுமான வேறு கன்னிகைகளுக்கு காவலாக இருப்பீர்களாக.
என்னும் கருத்துக்கள் அமைந்த மந்திரங்களை கூறி வழி அனுப்புகிறார்கள்.
இதன் பின்னர் குண்டத்தில் உள்ள அக்னியை எதிரில் வைத்துகொண்டு ஏழு மந்திரங்கள் சொல்லி நெய்யினால் ஹோமம் செய்ய படுகிறது.
நானறியாது ஏதேனும் தோஷங்கள் இவளிடம் இருந்து அது எங்களுக்கு நாசம் விளைவிக்க முற்படுமானால் அவை செல்லட்டும்

ஆதித்யனும், வாயுவும், ப்ரஜாபதியும் இதற்கு உதவு வார்களாக.என்னை வெறுப்பவர்களும் இல்லாமல் போகட்டும்.பன்னிரன்டு மாதங்களுக்கு
உரிய தேவதைகளும் எங்களது சத்ருக்களை அழிக்கட்டும்.என்னும் பொருள் பட மந்திரங்கள் கூறப்பட்டு, இந்த ஹோமம் செய்ய படுகிறது.
சத்துருக்கள் என்பது உங்கள் உடலிலுள்ள காமம், க்ரோதம்,மதம்,மார்ச்சரியம், பொறாமை, பேராசை போன்ற கெட்ட எண்ணங்களே.
இந்த ஹோமங்கள் யாவும் நிறைவு பெற்றபின் ஜயாதி ஹோமம் செய்ய படுகிறது. இதுவரை நாம் செய்த ஹோமங்கள் யாவும் முழுமை பெற இது செய்ய பட வேண்டும்.

சுமார் அறுபது தேவர்களையும், அவர்களது பத்னிகளையும் ஆராதித்து பூஜிக்கிறோம். இதில் சில தேவதைகள் மனோ வ்ருத்திக்கும்,சிலர்
காலத்திற்கும், சிலர் நக்ஷத்திரங்களுக்கும், சிலர் கந்தர்வர்களுக்கும் அதிஷ்டான தேவதை ஆவர்.
ஒரு தேவர்களுடன் இன்னொரு தேவதையை சேர்த்தால் அவரே தனியாக ஒருவராகவும், சேர்க்கையால் ,வேறு ஒருவராகவும் ஆகிறார்.

ஆதலால் முக்கிய தேவதைகளுக்கு ஹோமம் செய்த பின்னர் இவர்களுக்கு ஹோமம் செய்வதும் , இவர்களை ஆராதிப்பதும் ,
முக்கிய தேவதைகளையே பூஜிப்பதாக அமைந்து, மேலும் நல்ல பலன்களை அளிப்பதாக அமையும்.

பின்னர் ஹோமம் செய்து மிகுதியுள்ள நெய்யிலிருந்து மணப்பெண்ணின் சிரத்தில் பூ: ஸ்வாஹா;புவ; ஸ்வாஹா: ஸுவஸ்ஸுவாஹா
;ஒம் ஸ்வாஹா என 4 சொட்டுக்கள் தெளிக்க வேண்டும்.இதனால் மூன்று லோகத்திற்கு அதிபதிகளான தேவதைகள் மனமுவந்து
மணமகளை அவளது கணவனுடன் காப்பாற்று வதாக கருத படுகிறது.
 
VIVAAHAM-8 CONTD.


நாந்தி ஸ்ராத்தம்.
குல தெய்வங்களுக்கு, பூஜை, ஸுமங்கலி ப்ரார்த்தனை, சமாராதனை செய்வது போல் ஸுத்ர காரர்கள், சில கர்மாவின் முடிவிலும் நா ந்தி சிராத்தம் செய்யுமாறு விதித்திருக்கிறார்கள்.

பித்ருக்களில் பல வகை உண்டு. அதில் ஒரு வகை நாந்தீ முக என்பவர். ஸுப காலத்தில் ஆராதிக்க தக்கவர்.
எள்ளீற்கு பதில் ஸோபன அக்ஷதை. ஸத்ய வசு என்ற பெயர் கொண்ட விசுவே தேவர்களே வரிக்க படுகின்றனர்.முதலில் ஸ்த்ரீ வர்கங்களுக்கே வரணம். பூஜை முதலியன.

இப்படி விதி வத்தாக ஹோமம் செய்து, அந்தணர்களை வரித்து, அன்னம் அளித்து சிராத்தமாக செய்வது உத்தமம்.

விதிப்படி அந்தணர்களை வரித்து , வாழை இலையில் அரிசி வாழைக்காய், வைத்து, தக்ஷிணை தாம்பூலம்,
வேஷ்டி, வைத்து, த்ருப்தி ஆசிர்வாதம் கூறும்படி செய்ய வேண்டும். இது மத்திமம். ஆம சிராத்தம் என இதற்கு பெயர்.

இதுவும் செய்ய இயலாதவர்கள் ஹிரண்ய சிராத்தம் என்ற பெயரில் தாராளமாக தக்ஷிணை தர வேண்டும்.
எப்படி செய்தாலும் இதன் பின்னர் இதற்கு அங்கமாக புன்யாஹ வசனம் செய்ய வேண்டும்.

பல தானம்;-

ஹோமங்கள் யாவும் நிறைவு பெற்ற பின் அக்னி உபஸ்தானம் செய்து எங்களுக்கு தக்க காலத்தில் தீர்காயுஸ் உள்ள புத்திரன்
பிறப்பதற்காக பல தான தாம்பூல தானம் செய்கிறேன் என்று ஸங்கல்பம் செய்து

கொண்டு பல தானம் பெறுபவரை உமா மஹேஸ்வர
லக்ஷ்மி நாராயணர் வடிவமாக கருதி , ஆஸனம் முதலிய உபசாரங்கள் செய்து,, மனைவி தீர்த்தம் போட, தக்ஷிணையுடன் அனைவருக்கும்பல

தானம் செய்ய வேண்டும். தட்டில் தாம்பூலம் வைத்து அதில் ஐந்து ரூபாய் நாணயம் வைத்து முதலில் வைதீகர்களுக்கும், அதன் பின்னர் பெண் வீட்டார், பிள்ளை வீட்டார், நெருங்கிய உறவினர்

அனைவரையும் தம்பதி ஸமேதராக அழைத்து ஒவ்வொருவருக்கும்மிதை அளிக்க வேண்டும். மந்திரத்தின் அர்த்தம்:- பலமானது எப்போதும் தானம் செய்பவரது விருப்பத்தை நிறைவு

செய்கிறது. அது புத்ர, பெளத்ர வ்ருத்தி, செல்வம், நன்மை, புஷ்டி, ஆகியவற்றை எல்லாம் எங்களு க்கு தரட்டும். என்பதாகும்.

தாம்பூல சர்வணம்:-

கிரஹஸ்தன் ஆன பிறகு தான் தாம்பூலம் போடலாம். முதன் முதலாக தம்பதிகள் தரிக்கும் நிகழ்ச்சி தான் இது.
மணப்பெண்ணின் சகோதரன் தம்பதிகள் இருவருக்கும், வெற்றிலையில்சிறிது சுண்ணாம்பு தடவி பாக்கு வைத்து மடித்து கொடுக்க வேண்டும்.

மணமக்கள் பிள்ளை செல்வம் பெற்று சீறும், சிறப்புமாக பல்லாண்டு காலம் , மகிழ்ச்சி யாக வாழ ப்ரார்த்தித்து கொண்டு இந்த தாம்பூலம் அளிக்க படுகிறது.

மழ நாட்டு பிரஹசரண பிரிவை சேர்ந்தவர்கள்
. பெண்ணின் நாத்தனார் ஒரு பித்தளை படியில் ஒரு முழு கொட்டை பாக்கை வைத்து, முழுவதுமாக நிரப்பி, அதில் பணம் வைத்து,

கைகளில் ஏந்தி,மணமக்களை மூன்று முறை சுற்றி வர வேண்டும். இதற்கான ஏற்பாட்டை பெண் வீட்டார் செய்து தர வேண்டும். அதில் வைக்க பட்ட பணம் நாத்தனாரை சேரும்.

மஹதாசீர் வாதம்.

விவாஹத்தின் வைதீக நிகழ்ச்சிகள் யாவும் முடிவுற்ற பின்னர் மஹதாசீர்வாதம் நடக்கிறது.
இச்சமயத்தில் பெண்டிர் கெளரி கல்யாணம் பாடி கொண்டு,பொட்டுகடலை வெல்லத்தினால்
செய்ய பட்ட ஐந்து பருப்பு தேங்காய் களை கொண்டு வந்து வைக்க வேண்டும்.இப்போது மணமகள் மணமகனது இடது புறமாக நின்று

இருவரும் மணமகனது மேல் அங்க வஸ்த்ர துணியை விரித்த வண்ணமிருக்க வேத மந்திரங்க ளை ,உச்சரித்து அந்தணர்கள் மங்களாக்ஷதையை தம்பதி மேல் தூவ ஆசீர்வாதம் நடக்கிறது.

வட ஆற்காட்டை சேர்ந்தவர்களானால் தம்பதிகள் எதிரும் புதிருமாக நின்று துணியை பிடித்திருப்பர். பின்னர் மணமக்கள் நமஸ்காரம் செய்து பழைய நிலையில் அமர வேண்டும்.

பின்னர் பிள்ளையின் மாமனார் மோதிர பணம் ஓதியதும் , நாகவல்லி ஆசீர்வாதம் என மணமக்களுக்கு புடவை, வேஷ்டி ஓதபடுகிறது.
பெண்ணின் மாமா, பிள்ளையின் மாமா பெயர் சொல்லி மந்திரம் சொல்லி ஆசீர்வாத பணமோது வார்கள். அதன் பிறகு மற்ற உறவினர்கள், நண்பர்கள் , தங்களது அன்பளிப்பை அளிப்பார்கள்.

இந்த சமயத்தில் எல்லோரும் மேடை ஏறி வாழ்த்தலாம். இதன் பிறகு தம்பதிகளுக்கு ஆரத்தி எடுக்க படும்.பிள்ளை வீட்டிலிருந்து ஒருவரும், பெண் வீட்டிலிருந்து ஒருவரும் ஆரத்தி எடுக்க வேண்டும்.

சிலர் ஆரத்தி தட்டின் நடுவில் ஐந்து முக குத்து விளக்கின் மேற்பகுதியின் ஐந்து முகங்களையும் ஏற்றி வைப்பார்கள்.

ஆரத்தி எடுத்து விட்டு, அந்த ஐந்து முக தீபத்தை எடுத்து விட்டு, ஆரத்தி கரைசலை வாசல் கோலத்தில் கொட்டுவார்கள்.

சிலர் ஆரத்தி கரைசலின் மீது ஒரு வெற்றிலை வைத்து அதன் மேல் சூடம் ஏற்றி வைத்து ஆரத்தி சுற்றி த்ருஷ்டி கழிப்பதும் உண்டு.

திருமணம் பதிவு செய்ய ரிஜிஸ்டிரார் அலுவலகம் செல்ல முன் கூட்டிய ஏற்பாடுகள் செய்து வைக்க வேண்டும். இப்போது இருவரையும் அழைத்து சென்று பதிவு திருமணம் செய்து கொண்டு வர வேண்டும்.

பது மண தம்பதிகள் இருவரையும் அவரவர் இல்லங்களுக்கு ( உள்ளூரிலேயே இருந்தால்)
ராகு காலம், யம கண்டம் இல்லாத நல்ல நேரத்தில் மணக்கோலத்துடனேயே அழைத்து செல்ல வேண்டும்.

பட்டு பாய், பாலும், பழமும், சந்தனம், குங்குமம்.வெற்றிலை பாக்கு, சக்கரை எல்லாம் எடுத்து செல்ல வேண்டும்.

இவ்வாறு செய்வதற்கு முன்பாகவே ஒருவர் அங்கு சென்று,வீட்டின் வாசலில் கல்யாண கோலம் போட்டு, வர வேற்க ஆரத்தி கரைசல் தயாராக வைக்க வேண்டும்.

மணமக்கள் வாசலில் வந்ததும், அவர்கள் இருவரையும் வாசலில் கிழக்கு பார்க்க நிற்க வைத்து,பெண் வீட்டார் ஒருவர், ஆண் வீட்டார் ஒருவர் என ஆரத்தி எடுத்து உள்ளே வர சொல்ல வேண்டும்.

உள்ளே மணமக்கள் வந்ததும் , வரவேற்பு அறையில் கிழக்கு முகமாக பட்டு பாயில் அமர வைக்க வேண்டும். பெண்டிர் ஒவ்வொருவரும் மணமக்களுக்கு பாலும் பழமும் தர வேண்டும்.

மணப்பெண்ணை பிள்ளை வீட்டில் வலது காலை முதலில் எடுத்து வைத்து உள்ளே வர சொல்ல வேண்டும்.

வந்திருக்குமனைவருக்கும் குடிக்க பானம் கொடுக்க வேண்டும்.பெண்டிர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம்,மஞ்சள் , கொடுக்கலாம்.

இதை பெண் வீட்டில் பிள்ளை வீட்டாரும், பிள்ளை வீட்டில் பெண் வீட்டாரும் செய்ய வேண்டும். இதன் பிறகு தம்பதிகள் ஆகாரம் உட்கொள்ளலாம்.

கன்னிகாதானம் செய்தவரும், பூர்ண பலன் பெற ஆகார நியமத்துடன் இருக்க வேண்டும்.
அந்த காலத்தில் இரவு, ஒளபாஸனம், ஸ்தாலீ பாகம் செய்து வந்தார்கள். ஆதலால் பகலிலும் பலகாரம் சாப்பிட்டு வந்தனர்.

திருமணதன்று மதியம் ராகு காலம், யம கண்டம் இல்லாத நேரத்தில் மணபெண்ணின் சகோதரி மணமகனிடம், சென்று வேறு வேட்டி

உடுத்தி கொள்ள கொடுத்து, அவர் கட்டியிருந்த வேட்டியை கொண்டு வந்து மஞ்சள் தூள் கலந்த தண்ணிரில் முக்கி பிழிந்து உலர்த்தி மணமகனி

டம் கொடுப்பார்கள். இதனால் மணமகன் தனது மனைவியின் குடும்பத்துடன் சுமுகமான உறவை நிலை நிறுத்தி கொள்ள வேண்டும்.என்பதை தெளிவு படுத்து கிறது.
இதற்கு பதில் மரியாதையாக பிள்ளை வீட்டார் அந்த பெண்ணுக்கு தாம்பூலம், பழம், புஷ்பம், தக்ஷிணையுடன் கொடுப்பார்கள்.

தற்காலத்தில் வேட்டியை முழுவதும் நனைக்காமல் ஒரு ஓரத்தில் மட்டும், மஞ்சள் தண்ணீர் தெளித்து திருப்பி அனுப்ப படுகிறது.
 
VIVAAHAM-9.
நலங்கு;-

மதியம் மூன்று மணிக்கு மேல் ராகு காலம், யமகண்டம் இல்லாத நேரமாக பார்த்து நலங்கு நடை பெற வேண்டும்.மஞ்சளும், சுண்ணாம்பும்
கலந்த கலவையில் சிறிது நீர் பிசைந்து கால்களில் இடுவதே நலங்கு எனப்படும்.

இது போல் மணமக்கள் இருவரும் இட்டுக்கொண்டு, சில விளையாட்டுகளை செய்யும் நிகழ்வு இது. மணமகளுக்கு அவளது நாத்தனார்

தலை பின்னி பூ வைத்து, விளையாடல் புடவையை உடுத்த செய்து, மணமகள் மணமகனை நலங்கிற்கு வரும்படி அழைக்க

வேண்டும். பெண் வீட்டினர் பிள்ளை வீட்டினரை இதில் கலந்து கொள்ள அழைக்க வேண்டும். இதற்கு கிழக்கு, மேற்காக மணமக்கள் உட்கார

கோலம் போட்டு அதன் மீது பாயை முழுவதுமாக விரித்து மணமக்களை எதிரும், புதிருமாக உட்கார வைக்க வேண்டும்.

அருகில் ஒவ்வொரு கிண்ணத்திலும் கொஞ்சம் அரிசியும், பருப்பும்,உப்பு, சந்தனம், குங்குமம். மஞ்சள் பொடி, நலங்கு கலவை, குடுமி எடுத்த

மஞ்சள் தடவிய தேங்காய், 12 சுட்ட அப்பளங்கள். வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பம், முகம் பார்க்கும் கண்ணாடி;சீப்பு, ஆகியவற்றை தயாராக

வைத்துக்கொள்ள வேண்டும். யாராவது ஒரு வயது முதிர்ந்து அனுபவமிகுந்த பெண்டிர் இதை செய், அதை செய் என்று சொல்லி கொடுப்பார்கள்.

இந்த நேரத்தில் பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என மாறி மாறி நலங்கு பாட்டு பாடுவார்கள்.

பெண் தனது கணவனுக்கு தாம்பூலம் கொடுக்கும் போது பெண் பாட்டு பாடியே ஆக வேண்டும். இது போல் பிள்ளயும் பாடுவான்.

மணபெண் நின்ற படியும், மணமகன் அமர்ந்த படியும் இருக்க , முதலில் மணப்பெண் தனது கணவனது கழுத்திலும், இரு கைகளிலும், நெற்றி யிலும், சந்தனமிட்டு, நெற்றியில் குங்குமம்
இட்டு பின்னர் அவனது வலது காலை நீட்டும் படி சொல்லி, அவன் மறுக்க அவளே காலை பிடித்து இழுத்து நலங்கிட வேண்டும் .

இவை எல்லாம் அந்த காலத்தில் எட்டு வயது சிறுமிக்கும், பத்து வயது சிறுவனுக்கும் கற்று கொடுக்கும் பாடம்.
தற்காலத்திற்கு இவை தேவை இல்லை. மணமக்கள் இருவரும் பேசி பழக வாய்ப்புகள் உள்ளவையாக அமைந்தவை.

இதன் பின்னர் பெண் மணமகனுக்கு தலை யை சீப்பினால் வாரி விட்டு, கண்ணாடியை முதலில் திருப்பி காண்பித்து பிறகு சரியாக காண்பிக்க செய்யும் வேடிக்கைகள் அதிகம் இருக்கும்.

இப்போது பெண்ணிடம் சிறிது அரிசியும், பிள்ளையிடம் சிறிது பருப்பும் கொடுத்து பெண்ணை நான் அரிசி தருகிறேன் பருப்பு தாருங்கள் என்று பிள்ளையிடம் கேட்க சொல்வார்கள்.

அவ்வாறே பெண் கேட்டு, தனது கையிலுள்ள அரிசியில் பாதியை இடது கையில் வைத்து கொண்டு, மீதியை அவனிடம் கொடுத்து பருப்பு வாங்கி இரண்டையும் கலந்து கொண்டு,

வலது கையிலும், இடது கையிலும் பாதி பாதி வைத்து கொன்டு, கைகளை மூடிய வண்ணமாக வலது கையால் இடது பக்கத்திலிருந்து வலமாகவும்,,

இடது கையால் வலப்பக்கமிருந்து இடமாகவும், மூன்று முறை மணமகனின் தலையை சுற்றி, அவனது பின் பக்கத்தில் போட்டு விட வேண்டும்.

இப்போது இரண்டாவது முறையாக பெண் பருப்பை அவனிடம் கொடுத்து பருப்பு தருகிறேன் அரிசி தாருங்கள் என கேட்டு வாங்கி முன் மாதிரியே தலை சுற்றி போட வேண்டும்.

மணமகளிடம் உப்பை கொடுத்து உப்பை தருகிறேன் பருப்பு கொடுங்கள் என்று வாயால் மட்டும் கேட்க சொல்வார்கள். ஆனால் கொடுக்க மாட்டார்கள்.
இவற்றை கொண்டு நான் சமைத்து போடுகிறேன்.

என்று மணமகள் கூறுவதாக அமைகிறது. இதன் பிறகு அப்பளத்தை சுற்றுவாள். உளுந்தினால் செய்ய பட்ட இரு சுட்ட அப்பளங்களை இரு கைகளிலும் வைத்து கொண்டு,பிரதக்ஷிணமாக

வலது கையாலும், அப்பிரதக்ஷிணமாக இடது கையாலும் சுற்றி இரு அப்பளங்களையும் நொறுக்கி உடைத்து மணமகனின் பின் பக்கம் போட வேண்டும்.

இம்மாதிரி மூன்று முறை செய்ய வேண்டும். உடல் பலத்திற்கு அவசியமானது உளுந்து. இதனால் செய்ய பட்ட அப்பளங்களை சுடுவது

போல் வாழ்வில் பல இன்னல்கள் ஏற்பட்டாலும்,இந்த அப்பளங்களை நொறுக்குவது போல் தகர்த்து உடல் பலத்துடனும் ,மன
பலத்துடனும் நாம் இருப்போம்.என்பதை எடுத்து காட்டுகிறது.

மணமகள் தன் இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். தற்பொது மணமகனின் முறையாகும். மணமகள் செய்த மாதிரியே செய்ய வேன்டியது. உட்கார்ந்த படியே.

இதன் பின்னர் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் போட்டி வைப்பார்கள். குடுமி எடுத்து மஞ்சள் தடவி வைத்த தேங்காயை மணமக்கள் அதை உருட்டி விட்டு விளையாட வேண்டும்.

உறவினர் ஒருவர் ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்லும் போது யார் முதலில் தேங்காயை பிடிக்கிறார்களோ, அவரே முதலில் விளையா ட்டை துவக்க வேண்டும்.

பெண் தேங்காயை இரு கைகளாலும் பிடித்து கொள்ளலாம். ஆனால் ஆண் ஒரு கையை மட்டுமே உபயோகபடுத்தலாம்.யார் முதலில்

தேங்காயை பிடிக்கிறார்களோ, அவர் அந்த தேங்காயை இருவருக்கும் நடுவில் பாயில் அழுத்தி பிடித்திருக்க மற்றவர் அதை விடுவித்து

எடுக்க வேண்டும். இவ்வாறு எடுப்பவர் பெண்ணானால் இரு கைகளால் எடுக்கலாம். ஆண் ஆனால் ஒரு கையை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.

இவ்வாறாக ஒவ்வொருவரும் ஒரு முறை செய்ய வேண்டும்.

இதன் பின்னர் இரண்டு வெற்றிலையை நான் காக மடித்து, அதில் ஒருவர் கையில் கெட்டியாக பிடித்து கொண்டு பாயின் மேல் நடுவில்

வைத்திருக்க மற்றவர் விள்ளாமல் முழுவதுமாக கை பற்ற வேண்டும். இம்மாதிரி ஆளுக்கு ஒரு முறை செய்யலாம்.
மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கவும், பழகவும், குணங்களை தெரிந்து கொள்ளவும் உதவும்.

பிறகு மணப்பெண் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு பழம் வைத்து கொன்டு பத்தியம் என்ற பாடலை பாடி தனது கணவனிடம் கொடுக்க வேண்டும்.

இந்த பாடல் தனது கணவனை புகழ்ந்து பாடுவதாகவும் தன்னை காத்து ரக்ஷிக்கும்படி கேட்பதாக இருக்கும்.

மணபெண்ணுக்கு இந்த பாடல் தெரியாவிட்டால் ஏதோ ஒரு பாட்டு பாட வேண்டும். பாட்டு பாடிய பிறகு தான் தாம்பூல தட்டை மணமகன் வாங்குவான். பிறகு மணமகன் முறை பத்தியம் பாட வேண்டும்.

தாம்பூலத்தை கணவனிடம் கொடுத்த பின் மனைவியானவள் கணவனுக்கு நமஸ்காரம் செய்து விட்டு அவனது வலது பக்கத்தில் அமர வேண்டும்.

பிள்ளை வீட்டிலிருந்து ஒருவரும், பெண் வீட்டிலிருந்து ஒருவரும் மணமக்களுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.

ஒரு சிலர் பச்சை வழிப்பது என்று கண் த்ருஷ்டி படாமல் இருப்பதற்காக செய்கிறார்கள்.ஒரு கிண்ணத்தில் நல்ல எண்ணெய் விட்டு

குங்குமத்தை போட்டு நன்றாக கலந்து, இந்த கலவையை தம்பதிகளது முதுகு, இரு தோள்பட்டைகள், கழுத்து, கன்னங்களில் லேசாக

தடவுவது வழக்கம். குறைந்தது ஐந்து பேர். ஒற்றை படையில் இருக்க வேண்டும்.இதை முதலில் மணமக்களின் தாய், அத்தை, மாமி, சகோதரி, மன்னி என ஐவர் தடவுவர்.

பூ ஊஞ்சல் என்ற தொரு நிகழ்ச்சியும் முன் காலத்தில் உண்டு. ஊஞ்சல் முழுவதும் பூ சுற்றி அலங்காரம் செய்து, மணமக்களை அதில் உட்கார

வைத்து எல்லோரும் பாடி மகிழ்வார்கள். தொடுத்த பூ பந்தை சுருட்டி கட்டி அதை ஒருவர் வீச மற்றவர் பிடிக்க என செய்து களிப்பார்கள்.

இப்போது வரவேற்பு என்று வைத்து இசை நிகழ்ச்சி நடத்தி, மணமக்களை நுழை வாயிலில் அமர வைத்து கொண்டாடுகிறார்கள்.

பிறகு இரவு எல்லோரும் சாப்பிடலாம். சாந்தி முஹூர்த்தம் இரவு என்றால் தம்பதிகள் மோர் சாப்பிட கூடாது. பால் சாதம் தான் சாப்பிட வேண்டும்.நல்ல நேரம் பார்த்து தம்பதிகளை உள்ளே அனுப்ப வேண்டும்.

சாந்தி முஹூர்த்தம்.

அந்த காலத்தில் திருமணம் முடிந்த சில தினங்க் களுக்கு பிறகு நல்ல ஏற்ற சிறந்த நாளாக பார்த்து பிள்ளை வீட்டுக்காரர்கள். பிள்ளை வீட்டில்
நெருங்கிய சில உறவு காரர்களை வைத்து க்கொண்டு, காலையில் உதக சாந்தி செய்ய துவங்குவது வழக்கம்.

இதை நல்ல முஹுர்த்தத்தில் செய்வதால்,நல்ல அறிவும், நல்ல செயல்பாடு உள்ளதும் நல்ல எண்ணங்களை கொண்ட ஆண் குழந்தை பிறக்கும் என நம்ப படுகிறது.

அன்று காலை தம்பதிகள் இருவரும், காலயில் ஸ்நானம் செய்து, நெற்றிக்கு இட்டு கொண்டு, மடிசார், பஞ்ச கச்சம் கட்டி கொண்டு,ஸ்வாமிக்கு

விளக்கு ஏற்றி,, இருவரும் ஸ்வாமிக்கும், வீட்டில் உள்ள பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்து விட்டு, மணையில் அமர்ந்து, வழக்கம் போல்

ப்ராஹ்மணர்களை வணங்கி, தக்ஷிணை, தாம்பூலம் கையில் வைத்து கொண்டு, அனுக்ஞை வாங்கி,விக்னேஸ்வர பூஜை செய்து, ஸங்கல்பம்
செய்து கொண்டு, கீழே தரையில், கோலம் போட்டு, அதன் மேல், கோதுமை பரப்பி, அதன் மேல் அரிசி பரப்பி, அதன் மேல் தர்பத்தால்

தாமரை பூ போட்டு, அதன் மேல் பித்தளை குடம் வைக்க வேண்டும். ( கலசம் என்று இப்போது இதற்கு பெயர்.)

இந்த கலசத்தை நூல் சுற்றி, மந்திரம் சொல்லி ஜலம் விட வேண்டும், மாவிலை, கூர்ச்சம், தேங்காய் வைக்க வேண்டும். கலசத்திற்குள்
பச்சை கற்பூரம், ஏலக்காய், பொடி செய்து போட வேண்டும். கலச துண்டு சாற்ற வேண்டும்.
கர்மாவை கெடுக்கும் ராக்ஷஸர்களை கூர்ச்சம் அழிக்கும். மாவிலை தளிர்கள் எல்லா வித தோஷங்களையும் போக்கும்.
சிவனிடமிருந்து கிடைத்த முக்கண் தேங்காய், பாபத்தையும், பீடையையும் போக்கும். இப்பொருள் உள்ள மந்திரங்களே இங்கு சொல்ல படுகிறது.
கலசத்தில் வருணனை ஆவாஹனம் செய்து. மகா விஷ்ணூவையும் ஆவாஹனம் செய்ய வேண்டும். ருது சாந்தி ஜப கர்மாவில் தாங்களை
ருத் விக்காக ,எனக்காக வேலை செய்பவராக வரிக்கிறேன். என்று கூறி பிராமணர்களை வரிக்க வேண்டும். அவர்கள் கலசத்தின் அருகில் அமர்ந்து

108 முறை விஷ்ணு காயத்ரீ,வேதானி ஆபோ, ஹிரண்ய; பவமான, ருத்ர, வருண, ப்ருஹ்ம துர்கா, ஸ்ரீ ஸூக்தம் புருஷ ஸூக்தம், போன்ரவைகளை சொல்லி, பஞ்ச சாந்தி, ரிசாம் ப்ராசி;என்ற மஹா மந்திரங்களையும் ஜபிப்பார்.

நமோ ப்ருஹ்மணே என்பதை மூன்று முறை ஜபித்து, பின் நைவேத்யம் செய்ய வேண்டும். வருணனையும், மஹா விஷ்ணுவையும் யதா
ஸ்தானம் செய்து விட்டு,மந்திர தீர்த்தத்தால் தம்பதிகளை ப்ரோக்ஷிக்க வேண்டும். இந்த கலச தீர்த்தத்தால் கணவன் மனைவிக்கு அபிஷேகம்
செய்ய வேண்டும். அக்னியில் ஹோமம் செய்யனும். இப்போது, ஏற்கனவே ஓதி இடப்பட்ட பிறந்த அகத்து புடவையை பெண் உடுத்தி வர
வேண்டும்.பெண் வீட்டினர் ஒரு ஜோடி பருப்பு தேங்காய் கொண்டு வந்து வைக்க வேண்டும்.
அன்னத்தை பலாச இலையில் வைத்து காயத்ரி மந்திரம் சொல்லி, ஹோமம் செய்ய வேண்டும்.சவித்ரே இதம் நமம. என்று சொல்லி சூரிய பகவானை குறித்து செய்ய படுகிறது.
இவ்வாறு ஹோமங்கள் அனைத்தும் செய்த பிறகு அந்தந்த தேவதையை குறித்து ந மம என்று சொல்ல வேண்டும்.
பிறகு சமித்து, அன்னம், ஆஜ்யம், ஆகியவற்றால் 108 முறை ஹோமம் செய்ய வேண்டும். இதன் பின்னர் ஜயாதி ஹோமம் செய்து அக்னியை உபஸ்த்தானம் செய்ய வேண்டும்.
ஹோமம் துவங்கும் முன்பாக, கர்மாக்களை கவனிக்க ப்ருஹ்மா வாக ஒருவரை வரித்து,உபஸ்தானம் செய்வதற்கு முன்பாக அவருக்கு ப்ருஹ்ம தக்ஷிணை அளித்து, ஜப
ஹோமம் செய்தவர்களுக்கும் தக்ஷிணை அளிக்க வேண்டும். இதன் பின்னர், ஆசீர்வாதம், ஆரத்தி.

மாலையில் ஒளபாஸனம் செய்த பிறகு, குறித்த லக்னத்தில் விக்னேஸ்வர பூஜைசெய்து, கர்ப்பா தான மந்திர ஜபம் செய்ய வேண்டும்.
இப்போது இந்த மந்திரங்களை விவாஹத்தின் போதே கூறி விடுவதும் உண்டு. இட வசதியும்,
அவரவர் ஸெளகரியங்களையும் உத்தேசித்து திரு மண மண்டபத்திலேயே ,விவாஹ தன்றே, இரவு இதை ஏற்பாடு செய்கிறார்கள்.
மந்திரங்களுக்கான விளக்கம்.;-
நாம் பலசாலிகளாக இருந்து,நீ
ண்ட காலம் நீடித்து இருக்கும் தேஜஸ் உள்ளவர்களான குழந்தைகளை உண்டு பண்ணுவோம்.
அரணியிலிருந்து கடைந்த அக்னியை போல ஸத் புத்ரன் உண்டாகட்டும்.குழந்தை ஊன மில்லாத,எந்த தோஷமும் இல்லாமல் முழுமை

யானதாக பிறக்கட்டும்.என்றெல்லாம் கூறுவதாக அமைகிறது. மறு நாள் காலை நாந்தி சிராத்தம் செய்து இந்த நிகழ்ச்சி நிறைவு பெறும்.

சாந்தி முஹூர்த்த தினத்தன்று இரவு, மணமக்களது சயன அறையை, நன்கு சுத்தம் செய்து மாக்கோலங்கள் போட்டு, கிழக்கு பக்கம் பார்த்த வண்ணம் சுவாமி படங்கள்,

நிலை கண்ணாடி, இயற்கை காட்சி படங்கள், குழந்தை படம், வைத்து, பித்தலை குத்து விளக்கு,பூசுற்றி

சந்தனம், குங்குமம் இட்டு,எண்ணெய் திரி போட்டு, சிறிதாக ஏற்றி வைக்க வேண்டும்.

இரண்டு ஜமக்காளங்களை அறையில் விரித்து, அல்லது இரண்டு கட்டில்கள் போட்டு, புதிதாக வாங்கி வைக்க பட்டிருக்கும் இரண்டு மெத்தை கள், நான்கு தலை காணிகள், யாவும் உறை இல்லாது பிறித்து வைக்க வேண்டும்.

படுக்கையின் அடியில் பிள்ளை வீட்டார் ஏதாவது பணம் வைக்க வேண்டும். பக்கத்திலே ஒரு சொம்பில் சக்கரை போட்ட பால் வைக்க வேண்டும்.

ஒரு சொம்பில் ஜலம் குடிக்க ஒரு டம்ப்ளர் உடன் வைக்க வேண்டும். ஒரு தட்டில் எல்லா விதமான பழங்கள்,, இன்னொரு தட்டில் இனிப்பு, கார வகை
பக்ஷணங்கள், ஒரு பாத்திரத்தில் திரட்டி பாலும் வைக்க வேண்டும். சுவாமி இடத்தில் ஒரு ஜோடி பருப்பு தேங்காயும் வைக்க வேண்டும்.

நிறைய புஷ்ப தோரணங்கள், வாசனை திரவியங்கள்,பூக்கள், நல்ல மணம்,கமழும் ஊதுபத்திகள், பன்னீர் முதலியன அங்கு இருக்க வேண்டும்.

வயதான சுமங்கலிகள், இதை வந்து பார்த்து ஆசி வழங்க வேண்டும் என்பர். முன்பே குறிப்பிட்ட நல்ல முஹூர்த்த நேரத்தில், தம்பதிகளை உள்ளே அனுப்ப வேண்டும்.
அறைக்குள் வரும்போது, மணமகன் பட்டு வேட்டி உடுத்தி வர வேண்டும்.

மணப்பெண்ணையும் நங்கு அலங்கரித்து, புத்தாடை உடுத்தி வர வேண்டும்.

சுவாமிக்கும், பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்த பின் மணபெண் சுமங்கலிகள் அனைவருக்கும் தாம்பூலம், பழம், புஷ்பம், சந்தனம், குங்குமம் கொடுக்க வேண்டும்.

அறையில் மணமக்கள் இருவருக்கும் மாற்றுடை வைத்திருக்க வேண்டும்.
அதி காலையில் மணமகள் முன்பாக எழுந்திந்து,வீடாயிருந்தால் வாசல் தெளித்து கோலம் போட்டு,ஸ்நானம் செய்ய வேண்டும்.

காலையில் மணபெண்ணின் சகோதரியே அந்த அறையில் வந்து மெத்தைகளை சுருட்டி வைக்க வேண்டும்.அங்கே வைக்க பட்டிருக்கும் பணம் அவளையே சேரும்.

படுக்கைக்கு அடியில் எந்த பக்கம் பணம் வைத்திருக்கிறார்கள் என பார்த்து அந்த இடத்தில் தலை வைத்து படுக்க வேண்டும்.

ஒரு சிலர் முதல் இரவுக்கு பழைய தலைகாணிகள், பழைய மெத்தைகள் தான் உபயோகி கிறார்கள்.

பாலிகை கரைத்தல்.:-

தான்யங்களை பாலிகையில் விதைத்து, ஐந்து நாட்கள் காலையிலும், மாலையிலும் தண்ணீர் ஊற்றி, முளை வந்தவுடன், மகிழ்ந்து அதில் தே

வதைகளின் சக்திகளை விரதத்தின் போது பூஜித்து, எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து வைக்கும், திசை பாலகர்களை நான் நமஸ்கரி

க்கிறேன்.அவர்கள் நான் செய்யும் கர்மாவை, சுபமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் செய்ய வேண்டும். என்று பிரார்த்தனை செய்து கொண்டு

ஐந்து அல்லது ஏழாம் நாள் ஓடும் ஆற்றில் பகல் வேளையில் விடுவது வழக்கம். ஆனால் தற்கால த்தில் ஒரு பெரிய அடுக்கில் நீரை வைத்து

அதிலேயே அந்த பாலிகையை கரைக்கிறார்கள்.
திருமண தினத்தின் மறு நாள் காலை ராகு காலம், யமகண்டம் இல்லாத நேரத்தில் பாலிகைகள் யாவற்றையும் மண்டபத்தின்

மேடையில் கிழக்கு பக்கமாக வைத்து , மணபெண்ணின் தாயார், தாம்பூலம்,பழம், தேங்காய் ஆகியவற்றை நைவேத்யம் செய்து,

கற்பூரம் காட்ட வேண்டும். அதன் பின்னர் நடுவில் ஒரு பெரிய பித்தளை அடுக்கில் நிறைய ஜலம் வைத்து, பக்கத்தில் பாலிகைகளை கொண்டு வந்து வைத்து,

முதலில் ஒரு கன்னிகை பெண் அப்பாலிகை களில் ஒன்றை எடுத்து, அடுக்கு நீரில்,லேசாக அமிழ செய்து நடு துவாரத்திலுள்ள மண்ணை

அழுத்தி நீரில் கரைக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பெண்டிராக பெண் வீட்டார், பிள்ளை வீட்டார் என எல்லா பாலிகைகளையும் நீரில் கரைத்து வைக்க வேண்டும்.

கரைக்க பட்ட பாலிகைகளை நன்றாக அலம்பி நான்கு பக்கமும் சந்தனம், குங்குமம் இட்டு வைக்க வேண்டும்.
பாலிகைகள் கரைக்கபட்ட நீரை நடுவில் வைத்து, அதை பிரதக்ஷிணமாக சுற்றிய வண்ணம்

மணப்பெண்ணையும் சேர்த்து கொண்டு பெண்டிர்கள் அனைவரும் ஆடி, பாடி கும்மி அடிப்பார்கள்.

அந்த பாலிகை கரைத்த நீரை கால் படாத இடத்தில், செடியிலோ, குளத்திலோ, நதியிலோ கொட்ட வேண்டும். பாலிகைகளை ஒரு கயிற்றில்

கட்டி ஆண் வீட்டார், பெண் வீட்டார், அவர்கள் அந்த காலத்தில் தனி தனியே சுவற்றில் மாட்டி வைத்திருப்பார்கள்.

சம்பந்தி மரியாதை:-

விவாஹத்திற்கு மறு நாள் காலையில் மண்டபத்தில்
உள்ளவர்களுக்கு காபி தர வேண்டும். காலை பத்து மணிக்குள் சமையல் செய்து அங்குள்ளவ ர்களுக்கு சாப்பாடு போட வேண்டும்.

பாலிகை கரைத்த பிறகு , பிள்ளை வீட்டு சம்பந்திகள் அனைவரையும் உட்கார வைத்து, அவர்களுக்கு பறிமார இருக்கும் இலையின்

அடியில் மாக்கோலம் போட்டு, நுனி இலைகளாக போட்டு, எல்லோரையும் தம்பதி ஸமேதராக உட்கார வைத்து விருந்தளிக்க வேண்டும்.

நன்கு உபசரித்து வெற்றிலை, பாக்கு ,சுண்ணாம்பு கொடுத்து உபசரிக்கவும்.
பின்னர் ராகு காலம் யம கண்டம் இல்லாத நேரத்தில், ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் போட்டு நீர் விட்டு கரைத்து கொண்டு பிள்ளை

வீட்டார் பெண் வீட்டார்க்கும், பெண் வீட்டார் பிள்ளை வீட்டார்க்கும், அவர்கள் அணிந்திருக்கும் வேஷ்டியின்/ புடவையின் நுனியில் சிறிது
நனைக்க வேண்டும். இந்த சமயத்தில் மேள வாத்தியம் வாசிக்க வேண்டும். இதை தான் சம்பந்தம் கலப்பது என்கிறோம்.

முற்காலத்தில் ஹோலி பண்டிகை மாதிரி கலர் நீரை ஒருவர் மீது ஒருவர் வாரி இறைப்பதும் உண்டு.

இருவீட்டினரும் கலந்து சண்டை, சச்சரவு எதுவுமில்லாமல்,ஒருமித்து உறவோடு இருக்க வேண்டும் என்பதை எடுத்து காட்டவே இந்த சம்பிரதாயம்.

துணியில் உள்ள மஞ்சள் கரை நீங்காது இருப்பது போல அவர்களது மனதிலும் சம்பந்தி என்று உறவு மறவாது இருக்க வேண்டும்.

பிள்ளை வீட்டவர்களை பெண் வீட்டினர் நாற்காலியில் வரிசையாக அமர சொல்லி, மட்டை தேங்காய், தாம்பூலம், பழம்,புஷ்பம்,

சந்தனம், குங்குமம் கொடுத்து, பரிசு பொருட்கள், பெண்களுக்கு ரவிக்கை துணி வைத்து ஒரு பையில் போட்டு எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

பிறகு பிள்ளை வீட்டினர் இதே மாதிரி பெண் வீட்டினர் அனைவருக்கும் , உட்கார வைத்து தாம்பூல பை அங்கு அப்போதுள்ள எல்லோ

ருக்கும் கொடுக்கவும். பெண்ணும் பிள்ளை வீட்டாருடன் இப்போது கிளம்பி செல்ல வேண்டும் ஆதலால், பெண்ணிற்கு தேவையான உடைகள்

யாவற்றையும் ஒரு பெட்டியில் எடுத்து வைத்து பெண்ணை கொண்டு விடுவதற்காக , யாராவது நெருங்கிய உறவினர், உடன் சென்று கொண்டு விட்டு விட்டு திரும்பலாம்.
இப்போது இரண்டு கட்டு சாத கூடைகள் தயார் செய்து வைத்திருப்பர் கேடரர். பிள்ளை வீட்டினர் உபயோகத்திற்கும் பெண் வீட்டினர் உபயோகத்தி

ற்கும்,தனி தனி யாக வைக்க வேண்டும். கட்டு சாத கூடையில் மிளகாய் பொடி, நல்லெண்ணய் தடவிய இட்லி, புளியஞ்சாதம், தொட்டுகொள்ள
வடகமும், தயிர் சாதம் தொட்டுக்கொள்ள ஊறுகாய். மோர் மிளகாய், புளி காய்ச்சல், முதலியன வைத்திருப்பர். அவரவர் எடுத்து

சாப்பிடும் படி, அளவாக 4 இட்லி, புளி சாதம், தயிர் சாதம் என கட்டி ஒரு ப்ளாஸ்டிக் பையில் தண்ணீர் பாட்டில், எடுத்து சாப்பிட ப்ளாஷ்டிக்

ஸ்பூன், போட்டு கொடுத்தால் அவரவர் ஆளுக்கு தேவையானதை எடுத்து செல்வர். பெண் வீட்டு கட்டு சாத கூடையை பெண் வீட்டினர் தம்மிடையே வைத்து கொள்ளலாம்.

இத்துடன் வாழை இலை, வாழைக்காய், பூஷனி பரங்கி என காய்கள், அரிசி, பருப்பு, தாம்பூல பைகள்,எல்லா பருப்பு தேங்காய் களும் முழுவதுமாக அனுப்பி வைக்க வேண்டும்.

(கல்யாணத்தில் பருப்பு தேங்காயை உடைத்து தருவது கிடையாது.).கூட்டோடு அதை எடுத்து சென்று, பிறகு யாராவது வரும்போது கூட்டை

திரும்ப கொடுக்க வேண்டும். இத்துடன் அவர்களுக்கு சீருக்கு என வைத்த உடைகள், பக்ஷணங்கள், பட்டு பாய், இதர பொருட்களையும்
அவர்கள் எடுத்து செல்ல பிள்ளை வீட்டுகாரர் களுக்கு பெண் வீட்டினர் உதவ வேண்டும்.

பெண் வீட்டின் பழைய மாப்பிள்ளைகளுக்கும் பொட்டு கடலை பருப்பு தேங்காய் , மற்றும் பக்ஷணங்கள் கொடுப்பார்கள்.

திருமண மண்டபம் காலி செய்து கொடுக்க வேண்டிய நேரத்திற்கு தகுந்தாற்போல் ராகு காலம், யம கண்டம் இல்லாத நேரத்தில் பிள்ளை வீட்டினர் செல்வதற்கு வேன் வசதி

செய்து கொடுத்து , அவர்கள் வேனில் ஏறும் போது மேள வாத்தியத்துடன் அனுப்ப வேண்டும்.

திருமண கேடரர் க்கு பிள்ளை வீட்டினர், தாம்பூலம், பழம்,புஷ்பம் ,பணம் வைத்து கொடுக்க வேண்டும். திருமண மண்டப

வேலையாட்களுக்கும், மேளக்காரர், புஷ்ப அலங்காரம், செய்தவர், எல்லோருக்கும் பிள்ளை வீட்டார் பணம் கொடுக்க வேண்டும்.

கேடெரர் பிள்ளை வீட்டினர், பெண் வீட்டினர் எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து, ஒரு வெள்ளை பூசணிகாயில் கற்பூரம் வைத்து ஏற்றி

எல்லோரையும் திருஷ்டி சுற்றி வாசலில் போட்டு உடைக்க வேண்டும். ஒரு தேங்காயும் த்ருஷ்டி சுற்றி போட்டு உடைப்பர். பிறகு எல்லோரையும் வண்டியில் ஏற்றி அனுப்ப வேண்டும்.
சுபம்.
கர்பத்தை கலைக்காதே.ஒரு மரம் நல்ல பழம் அளிக்க .வேண்டுமானால் நல்ல விதை, நல்ல நிலம் நல்ல காலம் நல்ல உரம். பூச்சி கொல்லிகள் , தண்ணீர் வெய்யல் தேவை..

ஆறறிவு படைத்த மனிதனை பிறபிக்க எவ்வளவு நியமம் வேன்டும்
.
நற்புத்ரன் உண்டாகி , அவனும் அவன் பெற்றோரும் நன்மை பெற சில விதிகளை ஸாஸ்த்ரம் கூறுகிறது.
முதல் ஸம்ஸ்காரம் நன்றாக இருந்தால் தான் மற்றவை நன்றாக இருக்கும் .தர்ம நூல் கூறும் தர்ம விதிகளை முதலில் கவனிப்போம்.

ஸ்த்ரீகள் ருதுவான தினம் முதல் 16 நாட்களுக்குள் தான் கர்ப்பம் தரிப்பார்கள். . 2,4,6,போன்ற இரட்டை படை எண்ணாணால் ஆண் குழந்தையும், 1,3,5, போன்ற ஒற்றை படை எண்ணாணால் பெண் குழந்தையும் உண்டாகும்.

இந்த பதிணாறு நாட்களிலும் முதல் நாலு தினங்கள்: அமாவாசை; பெள:ர்ணமி; ஷஷ்டி; அஷ்டமி. ஏகாதசி,:: த்வாதசி, சதுர்தசி:, மாத பிறப்பு:, ஜன்ம நக்*ஷத்திரமாகிய நாட்களில் ஸ்த்ரீ புருஷ ஸங்கமம் கூடாது,,

ரஜஸ் வலையான முதல் நாள் சன்டாளி; இரன்டாம் நாள் ப்ருஹ்மஹத்தி செய்தவள்;. மூண்றாம் நாள் வண்ணாத்தி எனப்படுவார்கள் அதாவது அந்த மாதிரி உள்ளவர்களின் தோஷ ஸாம்யம் என்பது கருத்து.
. நான்காம் நாள் உண்டாகும் ஸிசு அல்பாயுஸ் ஆகும். 5 ல் புத்ரீ; 6ல் மத்யமமான புத்ரன்; ,

9ல் நல்ல புத்ரீ; 10ல் நல் புத்ரன்;
11ல் அதர்மம் செய்யும் பெண்; 12ல் சிறந்த புத்ரன்; 13ல் வ்யபீசாரியான பெண்; 14ல் தர்மஞ்யனும் ஆத்ம ஞ்யானியுமான புத்ரன்; 15ல் நல்ல இடத்தில் வாழ்க்கை படும் பெண்; 16ல் ஸகல நற்குண முள்ள புத்ரன். இப்படி முறையே ஜனிப்பார்கள்.

புருஷனின் வீர்யம் அதிகமானால் ஆணும், ஸ்த்ரீயின் ஷக்தி அதிகமானால் பெண்ணும் பிறக்கும். இரண்டும் சமமானால் நபும்ஸகம் பிறக்கும்.

மூன்று நாட்கள் நியமத்துடன் இருந்,தால் பிறக்கும் குழந்தைகள் க்*ஷேமத்துடன் இருக்கும்.இது ப்ரஜா ஸம்ரக்*ஷணத்திற்காக ஏற்பட்ட வ்ரதம்.

திங்கள், புதன் வியாழன், வெள்ளிக் கிழமைகளில்,ரோஹிணி உத்திரம். உத்திராடம், உத்ரட்டாதி ,ஹஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், ரேவதி, ஆகிய நக்*ஷத்திரங்களில்

, ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுஸு, கும்பம், மீனம், ஆகிய லக்னங்களில்,கூடுவது நல்ல சிசு உதிக்க ஏற்றது.

தம்பதிகள் இருவரும் மனம் ஒருமித்து தார்மீக நன் மகப்பேறு பெற இறைவனை வேண்டி சேர்வது நல்லது.

சுவாசம் வலது மூக்கு வழியாக செல்ல வெண்டும்.. ருது காலத்தில் அவச்யம் ஒரு முறை கர்பாதானம் செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் சிசுவை கொண்ற பாபம் உண்டாகும். பித்ருக்களின் கடன் தீர்ப்பதற்கு ஒரு புதல்வன் அவஸ்யம் வேண்டும். அது வரை ருது சங்கமம் அவஸ்யம். பிறகு நிர்பந்தமில்லை.

பூரண கர்ப்பிணி, இஷ்டம் இல்லாதவள்,வியாதி உள்ளவள் .விறிந்த கேசமுள்ளவள்., பசி உள்ளவள். அதிகமாக புசித்தவள்,ஆகிய ஸ்த்ரீகளிடம் சேர கூடாது,

ஸ்த்ரீகள், ப்ரஸவம் வரை புருஷ ஸங்கமம் வேண்டும் என இந்திரனிடம் வரம் கேட்டிருப்பதால், அவர்கள் கோரினால் ருது காலம் இல்லாத போதும்

அதாவது 16 நாட்கள் சென்ற பின்பும் சங்கமம் செய்வது பாபமல்ல. பகலிலும், இரு ஸந்த்யா காலங்களிலும் இரவு பதினோரு மணிக்கு மேலும் ஸ்த்ரீ சங்கமம் கூடாது. அஸுர குணமுள்ள குழந்தை பிறக்கும்.

சங்கம காலத்தில் இருவரும் கண்களை மூடக்கூடாது. கோபம், துக்கம் இல்லா.மல் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும்.

இந்த விதிகளை அனுசரித்தவர் கிருஹஸ்தராயினும் ப்ருஹ்மசரியத்தை கைகொண்டவராவர். இதில் தவறு செய்தால் அது நமக்கும் பிறக்கும் சிசுவிற்கும் தீமை செய்தது ஆகும்.
இதில் சாஸ்த்ரம் புகுந்து போகத்திற்கும் குறைவின்றி , அதை கட்டுப்படுத்தி முடிவில் மோக்*ஷத்திற்கும் வழி காட்டுகிறது.



அரணியை கடைந்து அக்னி எடுப்பது போலாம் இது என்கிறது வேதம்.

16 நாட்களுக்கு பிறகு சங்கமம் ருது வாகும் வறை செய்து கொள்ளலாம். குழந்தை உண்டாகாது. கர்ப்பம் அழிக்க வேண்டிய வேலையே இருக்காது.

பஞ்சாங்கம் பார்த்து பத்து மாதம் கழித்து பிறக்கும் குழந்தைக்கு கிரகம் அஸ்தங்கதம் (மெளட்யம்), நீசம் இல்லாமலுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இம்மாதிரி பார்த்து உடலுறவு கொள்ள வேண்டும். தாய் மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவைகளை கற்று கொடுக்க வேண்டும். ,
 
ஆஹா, அருமை. ஒரு கல்யாணத்தை நேரில் இருந்து கண்டு அனுபவித்த‌ சந்தோஷம். மிக்க நன்றி.
 
கல்யாணங்களுக்கு 100 நபர்களுக்கு தேவையான பொருட்கள்.





கேரட் ஹல்வா செய்ய:- கேரட்-3 கிலோ; பால் 5 லிட்டர்; சர்க்கரை 4 கி; நெய் 0.750 கி.


முந்திரி 0. 100 கிராம்; ஏலக்காய் 0.050. கிராம்; பச்சை கற்பூரம் 0.005 கிராம்; கேசரி பவுடர் 0.002.கிராம்.





வெஜிடபில் போண்டா:- கடலை மாவு 3 கி; உருளை கிழங்கு 4 கி; பெரிய வெங்காயம் 3 கி; ஆயில் 5 கி; பச்சரிசி மாவு 0.500 கி; உப்பு 0.500 கி; கடலை பருப்பு 0.250 கி;


உ.பருப்பு 0.250 கி; மிளகாய் தூள் 0.250 கி; பச்சை மிளகாய் 0.250 கி; இஞ்சி 0.100 கி;


கடுகு 0.050 கி; பெருங்காயம் 0.050 கி; கறிவேப்பிலை 0.050 கி; கொத்தமல்லி தழை


0.050 கி. பலகார சோடா 0.010 கி;





தேங்காய் சேவை:- பச்சரிசி 3 கிலோ; தேங்காய் 5 நம்பர்; நல்ல எண்ணெய் 0.500 கி


உப்பு 0.250 கி;உ.பருப்பு 0.250; கடலை பருப்பு 0.250 கி; முந்திரி 0.250 கி; நில கடலை 0.250 கி; நெய் 0.250 கி; பச்சை மிளகாய் 0.125 கி; இஞ்சி 0.100 கி; கறிவேப்பிலை 0.100 கி; வர மிளகாய் 0.050கி; கடுகு 0.050 கி; பெருங்காயம் 0.050 கி;





எலுமிச்சை சேவை:- பச்சரிசி 3 கிலோ; எலுமிச்சம் பழம் 15 நம்பர்; எண்ணெய் 0.500 கி


நெய் 0.250 கி; முந்திரி 0.250 கி; நில கடலை 0.250 கி; உப்பு 0.250 கி; உ.பருப்பு 0.250


க.பருப்பு 0.250 கி; பச்சை மிளகாய் 0.125 கி; இஞ்சி 0.100 கி; கறிவேப்பிலை 0.100 கி


புதினா 0.100 கி; வரமிளகாய் 0.050 கி; கடுகு 0.050 கி; பெருங்காயம் 0.050கி; மஞ்சள் தூள் 0.050 கி; ஒரு கிலோ அரிசிக்கு 5 எலுமிச்சம் பழம் தேவை.





சட்னி:- பொட்டு கடலை 2 கிலோ; தேங்காய் 8 நம்பர்; உப்பு 0.500கி; பச்சை மிளகாய் 0.250கி; எண்ணெய் 0.100கி; புளி 0.100 கி; கறிவேப்பிலை 0.100கி; கொத்த மல்லி 0.100 கி; க.பருப்பு 0.100கி; உ.பருப்பு 0.100கி;வர மிளகாய் 0.050கி; கடுகு 0.050கி


பெருங்காயம் 0.050கி;





காசி அல்வா:- பூசணிக்காய் துருவலுக்கு 1:2 சக்கரை போட வேண்டும். முற்றிய பூசணிக்காய் 20 கிலோ; சர்க்கரை 5 கிலோ; ஆயில் 2 கிலோ; பால் 3 லிட்டர்; நெய்0.500கி; முந்திரி0.100கி; திராக்ஷை 0.100கி; சார பருப்பு 0.050கி; வெள்ளரி விதை 0.050கி; ஏலக்காய் 0.020கி; பச்சை கற்பூரம் 0.005கி; ஆரஞ்ச் ரெட் பவுடர் 0.002கி;





வெண் பொங்கல்:- பச்சரிசி 6 கிலோ; பாசி பருப்பு 1.500கி; டால்டா 1கிலோ; ஆயில் 1 கிலோ; நெய் 0.500கி;உப்பு 0.250கி; முந்திரி0.250கி; இஞ்சி0.100கி; மிளகு 0.100கி


ஜீரகம்0.100கி; கறிவேப்பிலை0.100கி;





இட்லி:- ஒரு கிலோ அரிசிக்கு 50 இட்லி கிடைக்கும். இட்லி மாவு நீர்த்து விட்டால் பட்டணம் ரவை சேர்த்து கெட்டி யாக்கலாம்; இட்லி அரிசி 10கிலோ; வெள்ளை உளுந்து 2.500 கிலோ; உப்பு 0.250கி; வெந்தயம் 0.150கி; காடா 3 மீட்டர்;





ஊத்தப்பம்:- புழுங்கரிசி 5கிலோ; வெள்ளை உளுந்து 1.250 கிலோ;வெங்காயம் 2.500கி


ஆயில் 3 கிலோ; உப்பு 0.125கி;





சாம்பார் இட்லி தோசைக்கு:- துவரம் பருப்பு 3 கிலோ;சிறிய வெங்காயம் 3 கிலோ.


முருங்கை காய் 25 நம்பர்; தேங்காய் 5 நம்பர்; தக்காளி 2கிலோ; புளி0.250கி; வர மிளகாய்0.250கி; கொத்தமல்லி விதை0.250கி; உப்பு0.250கி; ஆயில்0.125கி.





க.பருப்பு 0.100கி; உ.பருப்பு 0.100; கருவேப்பிலை0.100கி; கொத்தமல்லி0.100கி


கடுகு0.050கி; வெந்தயம்0.050கி; பெருங்காயம் 0.050; மஞள் தூள் 0.050கி.





இட்லி தோசைக்கு மிளகாய் பொடி:- தேங்காய் 2 நம்பர்; வர மிளகாய் 0.500கி; நல்ல எண்ணெய் 0.200கி; புளி0.200கி; உ.பருப்பு0.250கி; க.பருப்பு0.250கி; எள்0.250கி;


வெல்லம்0.100கி; உப்பு0.100கி; கடுகு0.050கி; பெருங்காயம்0.050கி;





வெஜிடபிள் கட்லெட்:- எலுமிச்சம்பழம் 1 நம்பர்; ஆயில்2 கிலோ; மைதா மாவு0.750கி


வெங்காயம்0.500கி;காரட்0.200கி; பட்டாணி0.200கி;உருளைகிழங்கு0.200கி;உப்பு0.200


ரஸ்க் பெளடர் 0.500;முந்திரி0.250கி; இஞ்சி0.100கி;பச்சை மிளகாய்0.100கி;


மிளகாய் தூள்0.050கி; கடுகு0.050கி;உ,பருப்பு0.050; கருவேப்பிலை0.050கி.





ரவாகேசரி:- பட்டணம் ரவை 3 கிலோ; சக்கரை 4.500கிலோ; ஆயில் 3 கிலோ; நெய்0.500கி; முந்திரி0.100கி; திராக்ஷை0.100கி; ஏலக்காய்0.020கி;பச்சை கற்பூரம்0.005கி; கேசரி பவுடர்0.002கி; ரோஸ் எஸன்ஸ் 2 டிராப்; ஜாதிக்காய்3 நம்பர்.





பாதுஷா:- மைதா மாவு2 கிலோ; சக்கரை 3 கிலோ; எண்ணெய் 3 கிலோ; டால்டா0.500கி;ஏலக்காய்0.020கி; பச்சகற்பூரம்0.005கி;சோடா உப்பு0.005.





காபி 100 பேருக்கு;- 1 கிலோ காபி தூளுக்கு 200 பேருக்கு டிகாக்ஷன் கிடைக்கும்.


ஆரோக்கியா பால் 5 லிட்டர்; தண்ணீர் 2 லிட்டர்; 60:40 காப்பி தூள் 0.500கி; காபி 250 மில்லிக்கு 1.500 சக்கரை தேவை;





100 மில்லி தெர்மோ கப் என்றால் 70 மில்லி பால் 30 மில்லி டிகாக்ஷன்; இன்ஸ்டண்ட் காப்பி தூள் 100 பேருக்கு 200 கிராம் தேவை; சர்க்கரை 0.500 கி. தான் தேவை;





தயிர் பச்சடி வகைகள்:-


வெள்ளரிக்காய் தயிர் பச்சடி:- வெள்ளரிக்காய் 1.500 கிலோ; தயிர் 3 லிட்டர்; தேங்காய்3;


உப்பு 0.250கி; பச்சரிசி0.200கி; பச்சை மிளகாய் 0.100கி; ஆயில் 0.100கி; உ.பருப்பு0.100;


கி; க.பருப்பு0.100கி; வரமிளகாய்0.050கி; கடுகு0.050கி; ஜீரகம்0.050கி; பெருங்காயம்0.050.


கொத்தமல்லி0.050கி;





வெங்காயம் தயிர் பச்சடி:- வெங்காயம் 1.500 கிலோ; தயிர் 3 லிட்டர்; உப்பு0.250கி;


பச்சரிசி0.200கி; பச்சை மிளகாய்0.100கி; ஆயில் 0.100கி; உ.பருப்பு0.100கி; க.பருப்பு0.100கி; வரமிளகாய்0.050கி; கடுகு0.050கி; ஜீரகம்0.050கி;பெருங்காயம்0.050கி


கொத்தமல்லி 0.050கி;





தயிர் பச்சடி வெண்டைக்காய்:- வெண்டைக்காய் 1.500கிலோ; தயிர் 3 லிட்டர்; ஆயில்0.500கி; உப்பு 0.250கி வரமிளகாய்0.050கி; கடுகு 0.050கி; வெந்தயம்0.050கி;பச்சை மிளகாய்0.050கி;கொத்தமல்லி 0.050கி;





தயிர் பச்சடி தேங்காய்:- தேங்காய் 6 நம்பர்; தயிர் 3 லிட்டர்; உப்பு0.250கி; ஆயில்0.100கி;பச்சை மிளகாய்0.050கி; வர மிளகாய்0.050கி;கடுகு 0.050கி


ஜீரகம்0.050கி; வெந்தயம்0.050கி; கொத்தமல்லி0.050கி;





தயிர் பச்சடி கேரட்:- கேரட் 1.500கிலோ; தயிர் 3 லிட்டர்; உப்பு0.250கி; ஆயில்0.100கி


கடுகு0.050கி; வர மிளகாய்0.050கி; பச்சை மிளகாய்0.050கி;கொத்த மல்லி0.050கி;





தயிர் பச்சடி டாங்கர் மாவு:- வறுத்து அறைத்த உளுந்து மாவு 1கிலோ;தயிர் 3 லிட்டர்;


உப்பு0.200கி; பச்சை மிளகாய்0.100கி;கடுகு0.050கி; ஜீரகம்0.050கி;கொத்தமல்லி0.050கி;


கருவேப்பிலை 0.050கி; பெருங்காயம்0.050கி;





தித்திப்பு பச்சடி மாங்காய்:- மாங்காய் 1 கிலோ; வெல்லம்0.500கி;பச்சை மிளகாய்0.100கி;


ஆயில்0.100கி; உப்பு 0.100கி; வர மிளகாய் 0.050கி; உ.பருப்பு0.050கி; கடுகு0.050கி; கறிவேப்பிலை 0.050கி;





வறுவல் வகைகள்;_


உருளை கிழங்கு வறுவல்:- உருளை கிழங்கு 5 கிலோ;ஆயில்3 லிட்டர்; உப்பு0.250கி;


மஞ்சள் தூள் 0.050கி;





நேந்திரங்காய் வறுவல்:- நேந்திரங்காய் 15 நம்பர்; ஆயில் 3 லிட்டர்; உப்பு0.250கி;


மஞ்சள் தூள்0.050கி;





சேனை கிழங்கு வறுவல்:- சேனை கிழங்கு 4 கிலோ; ஆயில் 3 லிட்டர்; உப்பு0.250கி


மஞ்சள் தூள்0.050கி;





கோசுமல்லி வகைகள்:- கேரட் கோசுமல்லி:- கேரட்2கிலோ; எலுமிச்சம்பழம் 5 நம்பர்;


தேங்காய் 2 நம்பர்; உப்பு0.200கி; ஆயில்0.100கி; பச்சைமிளகாய்0.100கி; கடுகு0.050கி


பெருங்காயம் 0.050கி;கறிவேப்பிலை0.050கி;





பாசி பருப்பு கோசுமல்லி:- பாசி பருப்பு 1 கிலோ; எலுமிச்சம்பழம் 5 நம்பர்; தேங்காய் 4


நம்பர்; உப்பு0.200கி; ஆயில்0.100கி;பச்சை மிளகாய் 0.100கி; வரமிளகாய்0.050கி


கடுகு0.050கி; பெருங்காயம்0.050கி; கறிவேப்பிலை0.050கி;





கடலை பருப்பு கோசுமல்லி:- கடலை பருப்பு 1 கிலோ; எலுமிச்சம்பழம் 5 நம்பர்; தேங்காய் 4 நம்பர்; உப்பு0.200கி; ஆயில்0.100கி;பச்சை மிளகாய்0.100கி;வரமிளகாய்


0.050கி; கடுகு0.050கி; பெருங்காயம்0.050கி;கறிவேப்பிலை0.050கி;





தித்திப்பு கோசுமல்லி:- கடலை பருப்பு 2கிலோ; சக்கரை 3 கிலோ; தேங்காய் 5 நம்பர்.








பொரியல்:-


முட்டைகோசு பொரியல்:- முட்டை கோசு 4 கிலோ;தேங்காய் 2 நம்பர்; உப்பு0.200கி;


ஆயில்0.100கி; பச்சை மிளகாய்0.100கி;வரமிளகாய்0.050கி; கடுகு0.050கி; மஞ்சள் தூள்


0.050கி; கறிவேப்பிலை0.050கி;





பீன்ஸ் பொரியல்:- பீன்ஸ் 2 கிலோ; தேங்காய் 3 நம்பர்; உப்பு0.200கி; ஆயில்0.100கி;


கடுகு0.050கி; பெருங்காயம்0.050கி; கறிவேப்பிலை0.050கி;





பருப்பு உசிலி பீன்ஸ்:- பீன்ஸ் 3 கிலோ; துவரம்பருப்பு 1கிலோ;கடலை பருப்பு0.500கி


ஆயில் 1 கிலோ; உப்பு0.200; வரமிளகாய் 0.250கி; உ.பருப்பு0.100கி;கடுகு0.050கி


பெருங்காயம்0.050கி;





கார கறி கத்திரிக்காய் வரமிளகாய் தனியா=கொத்தமல்லி விதை.,கடலைபருப்பு


வறுத்து பொடித்து சேர்க்கவும். கத்திரிக்காய் 2 கிலோ; வெங்காயம் 2 கிலோ;ஆயில்


0.500கி; புளி0.250கி; உப்பு0.200கி; மிளகாய் தூள் 0.200கி;வரமிளகாய்0.100கி;





கொத்தமல்லி விதை0.100கி; கடலைபருப்பு0.100கி; கடுகு0.050கி; மஞ்சள்தூள்0.050கி


பெருங்காயம்0.050கி; கறிவேப்பிலை0.050கி;





கார கறி வாழைக்காய்:- வாழைக்காய் 20 நம்பர்; புளி0.250கி;ஆயில்0.200கி;மிளகாய் தூள்0.200கி;உப்பு0.200கி; வர மிளகாய்0.100கி; கொத்தமல்லி விதை0.100கி; கடலபருப்பு0.100கி;பெருங்காயம்0.050கி; கடுகு0.050கி; மஞ்சள் தூள்0.050கி;


கறிவேப்பிலை0.050கி.





கார கறி உருளை கிழங்கு:- உருளை கிழங்கு 3 கிலோ; பட்டாணி 1 கிலோ;வெங்காயம்


1 கிலோ; ஆயில்0.500கி;மிளகாய்தூள்0.250கி; புளி0.250கி; உப்பு0.200கி; கடலை பருப்பு0.100கி; கொத்தமல்லி விதை0.100கி; வரமிளகாய் 0.100கி; மஞ்சள் தூள்0.050கி; கடுகு0.050கி; கறிவேப்பிலை0.050கி;





அவியல்;- பூசணிகாய்5கிலோ; பரங்கிகாய் 1 கிலோ;முருங்கைகாய் 5 நம்பர்; தேங்காய்


தேங்காய் 8 நம்பர்; வாழைக்காய் 1 நம்பர்; மாங்காய் 1 நம்பர்; உருளை கிழங்கு0.500கி;





சேனைகிழங்கு0.500கி;காரட்0.500கி; வெள்ளரிக்காய்0.500கி;செளசெள0.500; பீன்ஸ் 0.500கி; புடலங்காய்0.500கி; காராமணிக்காய் 0.500கி;தேங்காய் எண்ணெய்0.500கி;





தயிர்0.250கி; உப்பு0.200கி;பச்சைமிளகாய்0.100கி;சீரகம்0.100கி; கறிவேப்பிலை 0.100கி; புளி0.050கி;





பொரித்த குழம்பு:- அவரைக்காய். :- அவரைக்காய் 2 கிலோ; பாசிபருப்பு0.500கி;


தேங்காய் 3 நம்பர்; உப்பு0.200கி; மிளகு0.200கி; வரமிளகாய் 0.100கி;ஆயில்0.100கி; உளுத்தம் பருப்பு 0.100கி;கடுகு0.050கி; கறிவேப்பிலை0.050கி.





வற்றல் குழம்பு:- மணதக்காளி வற்றல்0.500கி;புளி0.500கி;நல்ல எண்ணெய்0.250கி.


உப்பு0.200கி;சாம்பார் பொடி0.200கி;அரிசி மாவு0.100கி;வர மிளகாய்0.050கி;


உ.பருப்பு0.050கி; மஞ்சள் தூள் 0.050கி;வெந்தயம்0.050கி; பெருங்காயம்0.050கி


கறிவேப்பிலை0.050கி;கடுகு0.050கி.





சம்பங்கி பிட்லை;- துவரம்பருப்பு 2 கிலோ; உருளைகிழங்கு 1 கிலோ; கத்திரிக்காய் 1 கி


தக்காளி 1 கிலோ; முருங்கைக்காய் 10 நம்பர்; செள செள0.250கி; தேங்காய் 3 நம்பர்;


புளி 0.250கி; உப்பு0.200கி; ஆயில்0.100கி;வரமிளகாய்0.050கி; உ.பருப்பு 0.050கி


கடுகு0.050கி; பெருங்காயம்0.050கி; கறிவேப்பிலை0.050கி;





சாம்பார் --- முருங்கைகாய் சாம்பார் – – :- முருங்கைகாய் 25 நம்பர்; வெங்காயம்2கிலோ;


தக்காளி2 கிலோ; துவரம்பருப்பு 3 கிலோ;சாம்பார் பொடி0.250கி; புளி0.250கி;


உப்பு0.200கி;ஆயில்0.100கி;கடுகு0.050; பெருங்காயம்0.050; கறிவேப்பிலை0.050;


கொத்தமல்லி0.050கி.





வென்டைக்காய் சாம்பார்:- துவரம்பருப்பு3கிலோ; வென்டைக்காய்2கிலோ; தக்காளி1கி;


தேங்காய் 3 நம்பர்; புளி0.250கி; வரமிளகாய்0.250கி;ஆயில்0.200கி; உப்பு0.200கி.;


கொத்தமல்லிவிதை0.100கி; கடலை பருப்பு0.100கி;வெந்தயம்0.050;மஞ்சள்தூள்


0.050கி; கடுகு0.050; பெருங்காயம்0.050; கறிவேப்பிலை0.050கி;கொத்தமல்லி0.050கி.





பருப்பு உருண்டை சாம்பார்:- துவரம்பருப்பு2கிலோ; வெங்காயம்0.500கி;புளி0.250கி


கி;ஆயில்0.200கி; உப்பு0.100கி; பச்சை மிளகாய்0.100கி; வரமிளகாய்0.100கி;கடுகு0.050


பெருங்காயம்0.050கி; கொத்தமல்லி0.050கி; கறிவேப்பிலை0.050கி;





மிளகு குழம்பு:- குறுமிளகு0.500கி;ஆயில்0.500கி;புளி0.500கி; உ.பருப்பு0.250கி;


கடலை பருப்பு0.250கி;முருங்கைகாய்4 நம்பர்; உப்பு0.100கி; வரமிளகாய்.100கி; கடுகு0.100கி;சீரகம்0.050கி; கொத்தமல்லி விதை0.050;பெருங்காயம்0.050கி; கறிவேப்பிலை0.050கி;





மோர் குழம்பு ;- வெண்டைக்காய் மோர்குழம்பு : தயிர்3 லிட்டர்;தேங்காய் 4


நம்பர்; வெண்டைக்காய்1கிலோ; ஆயில்0.500கி; உப்பு0.200கி;பச்சை மிளகாய்0.150கி;


வர மிளகாய்0.030கி; வெந்தயம்0.030கி;சீரகம்0.080கி;கடுகு0.050கி; கறிவேப்பிலை 0.050கி;





பூசணிக்காய் மோர் குழம்பு;- தயிர் 3 லிட்டர்; பூசணிக்காய் 3 கிலோ; தேங்காய்4 நம்பர்;


உப்பு0.200கி;ஆயில்0.100கி;பச்சைமிளகாய்0.150கி; வரமிளகாய் 0.030கி;கடுகு0.050


கி; சீரகம்0.080கி;வெந்தயம்0.030கி;கறிவேப்பிலை0.050கி;





ரசம்:- பைனாப்பிள் ரசம்:- பைனாப்பிள் 1 நம்பர்; துவரம்பருப்பு2கிலோ;தக்காளி1 கிலோ


ஆயில்0.100கி;உப்பு0.100கி; கடுகு0.100கி;வரமிளகாய்0.100கி; பச்சை மிளகாய்0.100


கி;கடலைபருப்பு0.050கி; கொத்தமல்லிவிதை0.050கி;மிளகு0.050கி; ஜீரகம்0.050கி;


பெருங்காயம்0.050கி;ம் கறிவேப்பிலை0.050கி; கொத்தமல்லி0.050கி;





எலுமிச்சம்பழ ரசம்:- எலுமிச்சம்பழம்8 நம்பர்; தக்காளி1கிலோ; துவரம்பருப்பு1 கிலோ;


பச்சைமிளகாய்0.250கி; உப்பு0.100கி; ஆயில்0.100கி; வரமிளகாய்0.050கி; இஞ்சி 0.050கி; கடுகு0.050கி; மிளகு0.050கி;ஜீரகம்0.050கி;பெருங்காயம்0.050கி; கறி


வேப்பிலை0.050கி; கொத்தமல்லி0.050கி;





தக்காளி ரசம்:- தக்காளி5 கிலோ; துவரம்பருப்பு2 கிலோ; ரசப்பொடி0.200கி;உப்பு0.100கி


ஆயில்0.100கி; கடுகு0.050கி; மிளகு0.050கி; ஜீரகம்0.050கி; பெருங்காயம்0.050கி; கறிவேப்பிலை 0.050கி;கொத்தமல்லி0.050கி;





மைசூர் ரசம்:- துவரம்பருப்பு 2 கிலோ; தக்காளி1 கிலோ; தேங்காய் 3 நம்பர்; புளி0.250கி;


ரசப்பொடி0.200கி; ஆயில்0.100கி; உப்பு0.100கி;மிளகு0.050கி;ஜீரகம்0.050கி;


கொத்தமல்லி விதை0.050கி; கடலை பருப்பு0.050கி;கடுகு0.050கி;பெருங்காயம் 0.050கி; கறிவேப்பிலை0.050கி; கொத்தமல்லி0.050கி;





கலந்த சாதம்:- தேங்காய் சாதம்:- ஒரு படி அரிசிக்கு ஒரு தேங்காய். பச்சரிசி3கிலோ;


தேங்காய்5 நம்பர்; தேங்காய் எண்ணெய்0.500கி;பச்சை மிளகாய்0.250கி; நிலக் கடலை


0.250கி;முந்திரி0.100கி;இஞ்சி0.100கி;உப்பு0.100கி; வரமிளகாய்0050கி; உ.பருப்பு 0.050கி; க.பருப்பு0.050கி;கடுகு0.050கி; ஜீரகம்0.050கி; பெருங்காயம்0.050கி.கரு வேப்பிலை 0.050கி;





எலுமிச்சம்பழ சாதம்:- பச்சரிசி3கிலோ; எலுமிச்சம்பழம்15 நம்பர்; ஆயில்0.500கி;


நிலக்கடலை0.250கி; பச்சை மிளகாய்0.250கி;இஞ்சி0.100கி; முந்திரி0.100கி;


உப்பு0.100கி; மஞ்சள் தூள்0.050கி; வர மிளகாய்0.050கி;கடலை பருப்பு.0.050கி;


உளுத்தம் பருப்பு0.050கி; கடுகு0.050கி; பெருங்காயம்0.050கி;கறிவேப்பிலை0.050கி;





புளி சாதம்:- புளி காச்சல்;- பச்சரிசி 3 கிலோ; புளி 1.500கிலோ; உப்பு0.600கி;


நிலக்கடலை0.500கி; நல்ல எண்ணெய்0.500கி;வெல்லம்0.250கி; க.பருப்பு0.250கி;


உ.பருப்பு0.250கி;கருப்பு எள்0.250கி; கடுகு0.100கி; வரமிளகாய்0.100கி;மிளகாய் தூள்


0.050கி; வெந்தயம்0.050கி; மஞ்சள்தூள்0.050கி; பெருங்காயம்0.050கி;கறிவேப்பிலை


0.050கி;





தயிர் சாதம்=பகாளாபாத்:- பச்சரிசி3கிலோ; பால்6லிட்டர்;தயிர்1லிட்டர்; மாங்காய் 4;


வெண்ணெய்0.500கி;பச்சைமிளகாய்0.250கி; முந்திரி0.250கி;ஆயில்0.100கி; உப்பு


0.100கி;இஞ்சி0.100கி;உளுத்தம்பருப்பு0.100கி;மாவு சுக்கு0.050கி;கடுகு0.050கி;


பெருங்காயம்0.050கி;கறிவேப்பிலை0.050கி;கொத்தமல்லி0.050கி; சீட்லெஸ் பன்னீர்


திராக்ஷை0.200கி; மாதுளம்பழம்2 நம்பர்; ஆப்பிள்2 நம்பர்;





பிசிபேளாஹூளி:- பச்சரிசி3 கிலோ; துவரம்பருப்பு2கிலோ; தேங்காய்3 நம்பர்;முருங்கை


காய்10 நம்பர்;வெங்காயம்0.500கி; உருளை க்கிழங்கு0.500கி;கேரட்0.500கி;செளசெள


0.500கி; பீன்ஸ்0.500கி;நெய்0.500கி;முந்திரி0.250கி; உப்பு0.250கி;புளி0.250கி;


வரமிளகாய்0.250கி; கொத்தமல்லி விதை0.250கி;பச்சைமிளகாய்0.100கி; ஆயில்





0.100கி;லவங்கபட்டை0.050கி;மஞ்சள் தூள்0.050கி; கடுகு0050கி; வெந்தயம்0.050கி


பெருங்காயம்0.050கி; கறிவேப்பிலை0.050கி; கொத்தமல்லி0.050கி;





வடை:- ஆமவடை;- கடலை பருப்பு 1 கிலோ; ஆயில் 2கிலோ; துவரம்பருப்பு.500கி;


வர மிளகாய்0.250கி; உப்பு0.200கி;தேங்காய்3 நம்பர்;கறிவேப்பிலை0.050கி;


டால்டா0.050கி; சோடா உப்பு0.005கி.





மசால் வடை:- கடலை பருப்பு1.500கிலோ;துவரம்பருப்பு0.500கி;வெங்காயம் 2 கிலோ;ஆயில்2 கிலோ; தேங்காய்3 நம்பர்; வர மிளகாய் 0.250கி; உப்பு0.200கி;


பச்சை மிளகாய்0.200கி; இஞ்சி0.100கி;கறிவேப்பிலை 0.050கி; கொத்தமல்லி0.050கி;


டால்டா0.050; சோடா உப்பு0.005கி.





மெது வடை=உளுந்து வடை:- உளுந்து2கிலோ; ஆயில் 2 கிலோ; கடலை பருப்பு0.250


கி;பச்சரிசி0.250கி;உப்பு0.250; வரமிளகாய்0.250கி; பச்சைமிளகாய்0.500கி;இஞ்சி0.100


கி; மிளகு0.050கி; சீரகம்0.050கி;பெருங்காயம்0.050கி; கறிவேப்பிலை0.050கி;





தக்காளி ஜாம்:- தக்காளி 2 கிலோ; பீட்ரூட் 1 கிலோ; சக்கரை0.750கி;நெய்0.050;


ஏலக்காய்0.0.010கி; பச்சை கற்பூரம்0.002கி;





தேங்காய் போளி:- கடலை பருப்பு2 கிலோ; ஆயில் 2 கிலோ;பெரிய தேங்காய்4 நம்பர்;


கோதுமை மாவு அல்லது மைதா மாவு 4 கிலோ; வெல்லம்3கிலோ; ஏலக்காய்0.050கி; உப்பு0.005கி.





குலாப் ஜாமூன்:- குலாப் ஜாமூன் பாக்கெட் 6 நம்பர்; சக்கரை 3 கிலோ;





ரசகுல்லா:- பசும்பால்20 லிட்டர்; சக்கரை 8கிலோ; எலுமிச்சபழம் 4 நம்பர்; மைதா0.500கி;சோடா உப்பு0.050கி; ஏலக்காய்0.050கி;





பாதாம் கீர்:- பால் 8 லிட்டர்; சக்கரை 4 கிலோ; மாஸ்பவுடர் பாக்கெட்2. நம்பர்;


பாதாம்பருப்பு0.100கி; பிஷ்தா பருப்பு0.100கி; சார பருப்பு0.100கி;





பாயச வகைகள்:-சேமியா பாயசம்;- சேமியா 3 கிலோ;ஜவ்வரிசி0.500கி;சக்கரை 6கிலோ; பால் 7லிட்டர்; முந்திரி0.200கி;த்ராக்ஷை0.200கி;ஏலக்காய்0.010கி; ஜாதிக்காய் 3 நம்பர்; பச்சை கற்பூரம்0.002கி; கேசரி பவுடர் 0.002கி;





அவல் பாயசம்:- அவல்1கிலோ; சர்க்கரை6கிலோ; பால் 5லிட்டர்; நெய்0.250கி;முந்திரி 0.100கி; திராக்ஷை0.100கி; ஏலக்காய் 0.050கி; பச்சை கற்பூரம்0.002கி;





பால் பாயசம்:- பச்சரிசி2கிலோ;பால்25 லிட்டர்;சர்க்கரை6கிலோ;ஏலக்காய்0.010கி; பச்சை கற்பூரம்0.002கி;





அரிசி தேங்காய் பாயசம்:- பச்சரிசி 2 கிலோ; தேங்காய்4 நம்பர்; வெல்லம்3 கிலோ; நெய் 0.100கி;முந்திரி0.100கி;ஏலக்காய்0.020கி; பச்சை கற்பூரம்0.005கி;





கடலை பருப்பு பாயசம்:- கடலை பருப்பு3 கிலோ; வெல்லம் 5 கிலோ; பால் 4லிட்டர்; தேங்காய்3 நம்பர்; பச்சரிசி0.250கி;திராக்ஷை0.100கி;ஏலக்காய்0.020கி;





பாசி பருப்பு பாயசம்:- பாசி பருப்பு 2கிலோ; வெல்லம்4கிலோ;பால்4 லிட்டர்; பச்சரிசி 0.200கி;தேங்காய் 3 நம்பர்; முந்திரி0.100கி; திராக்ஷை0.100கி; ஏலக்காய்0.020கி;





ஊறுகாய் வகைகள்:-


மாங்காய் ஊறுகாய்:- மாங்காய்3 கிலோ; மிளகாய் தூள்0.250கி;ஆயில்0.500கி; உப்பு0.150கி;கடுகு0.050கி;மஞ்சள்தூள் 0.050; வெந்தயம்0.050கி;பெருங்காயம்0.025கி.





நெல்லிக்காய் ஊறுகாய்:- நெல்லிக்காய்2கிலோ; ஆயில்0.250கி;மிளகாய் தூள்0.250கி;


உப்பு0.150கி;மஞ்சள்தூள்0.050கி;கடுகு0.050கி;வெந்தயம்0.050கி;பெருங்காயம்0.025கி;





கிடாரங்காய் ஊறுகாய்;- கிடாரங்காய் 2 நம்பர்; ஆயில்0.200கி;மிளகாய் தூள்0.200கி;


உப்பு0.100கி;வரமிளகாய்0.050கி; பெருங்காயம்0.050கி.





எலுமிச்சம்பழம் ஊறுகாய்:- எலுமிச்சம் பழம்30 நம்பர்; ஆயில்0.500கி;மிளகாய்தூள்0.200கி


குருத்து இஞ்சி0.100கி;வர மிளகாய்0.050கி; மஞ்சள் தூள் 0.050கி;கடுகு0.050கி; வெந்தயம் 0.050கி; கடுகு,வெந்தயம், மஞ்சள் தூள், வர மிளகாய் இவற்றை வறுத்து பொடித்து போட வேண்டும்.





எலுமிச்சம் பழத்தை எண்ணெயில் வதக்கி பிறகு வெட்டி ஊறுகாய் போடலாம்.


முழுதாக எலுமிச்சம் பழத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு வெட்டி ஊறுகாய் போடலாம்.





மிளகாய் தொக்கு:- பச்சை மிளகாய் 1கிலோ; நல்ல எண்ணெய்0.500கி;புளி0.350கி;


உ.பருப்பு0.250கி;உப்பு0.200கி; வெல்லம்0.100கி;கொத்தமல்லி தழை0.200கி;கடுகு0.050


கி; பெருங்காயம்0.050கி;








வேப்பிலை கட்டி:- நாரத்தை இலை 6 லிட்டர்; எலுமிச்சை இலை 2 லிட்டர்; உப்பு0.200கி;


வர மிளகாய்0.100கி; ஓமம்0.050கி; பெருங்காயம்0.050கி.





100 அப்பளம் பொரிக்க 2 லிட்டர் ஆயில் தேவை; இலைக்கு நெய் 0.500கி.தேவை;





100 பேருக்கு இலைக்கு பருப்பு 1,500 கி .தேவை; கெட்டி மோருக்கு 10 லிட்டர் பால் தேவை;





100 பேருக்கு இலைக்கு சாதம் 10 கிலோ அரிசி தேவை;
 
காசியில், நண்பர் ஒருவர் திருமணத்தில் அவர் மாமனார் சமிஸ்கிருத வித்வானுக்கு, அவர் ஆஸ்தான வாத்தியார், மந்திரங்களின் அர்த்தத்தை விளக்கிகொண்டே வைதீக காரியங்களை நடத்தினார். இங்கே பெரியவரின் விளக்கம் அதையே ஊர்ஜிதம் செய்தது. புஸ்தக வடிவில் போட்டோக்களுடன் வெளிவந்தால் பாரம்பரியம் காப்பாற்றப்படும். பிராமணர்கள் சங்கத்தின் அடிப்படை லஷ்யமும் நிறைவேறும்.
 

Latest ads

Back
Top