VAR JAYANTHI.SARPABALI, RAKSHA BANDAN,

kgopalan

Active member
03-08-2020 & 22-08-2021.sarpa bali. சிராவண மாத பெளர்ணமி.
ஸர்ப்ப பலி ஹோமம்;- ஜாதகத்தில் ஸர்ப்ப தோஷம் விலக முறையாக வேதத்தில் கூறப்பட்ட ஸர்ப்ப பலி என்னும் இந்த கர்மாவை செய்யலாம்..

ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அஸ்தமிதே ஸ்தாலீபாக: என்னும் ஆபஸ்தம்ப மஹர்ஷியின் வாக்யப்படி ச்ராவண மாத பெளர்ணமி யன்று மாலையில் ஒளபாஸனம் செய்துவிட்டு பலாஸ புஷ்பங்களாலும்,

சரக்கொன்னை ஸமித்துகளாலும் ஸர்ப்ப தேவதைகளுக்கு அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். பிறகு செடிகள் அடர்ந்த இடத்தில் அரிசி மாவு முதலியவற்றால் ஸர்பங்களுக்கு மந்த்ரம் சொல்லி பலி போட வேண்டும்.


இதுவே ஸர்ப்ப பலி எனப்படும். ருக், யஜுர், ஸாம வேதம் ஆகிய மூண்று வேதத்தை சேர்ந்த விவாஹமான அனைவரும் இதை செய்யலாம். குடும்பத்தில் சர்ப்ப தோஷம் விலகி காலத்தில் குழந்தைகள் பிறந்து வம்ச வ்ருத்தி உண்டாகும்.

03-08-20-.& 21-08-2021. ரக்ஷா பந்தனம்.:--
ச்ராவண பெளர்ணமியன்று மாலை பெண்கள் தங்களது சஹோதரர்களின் வலது கையில் மஞ்சள் கயிற்றை கட்டி விடுவதே ராக்கி அல்லது ரக்ஷா பந்தனம் என்று கூறப்படுகிறது.

மஹா விஷ்ணு வாமன மூர்த்தியாக அவதரித்து மஹாபலி சக்ரவர்த்தியை ஆட் கொண்டார். மஹா பலியால் அர்பணிக்கப்பட்ட உலகத்தை பாதுகாக்க அங்கேயே தங்கி விட்டார்.

தனது கணவரின் பிரிவை தாங்க முடியாத ஶ்ரீ மஹாலக்ஷிமியும் ஸாதாரண பெண்ணாக உருவம் தாங்கி ஶ்ரீ விஷ்ணுவிடம் சென்றடைந்தார்.. அப்போது

மஹா பலி சக்ரவர்த்தியை தனது ஸஹோதரனாக பாவித்து ஶ்ரீ மஹா லக்ஷ்மி மஹா பலிக்கு ரக்ஷா பந்தனம் செய்வித்ததாக புராணம் கூறுகிறது.


அதை ஒட்டியே இன்று ஒவ்வொரு பெண்மணியும் மஞ்சள் கயிற்றை தெய்வ ஸன்னதியில் வைத்து ப்ரார்தித்துக்கொண்டு அதை எடுத்து தாங்கள் சகோதரர் கையில்

ராஜா தாநவேந்த்ரோ மஹா பல: ந த்வாமபி பத்னாமி ரக்ஷே. மா சல மாசல.

ஸஹோதரன் நலமாக வாழ வேண்டும் என்னும் எண்ணத்தோடு அஸுர ராஜாவும் பலசாலியுமான மஹா பலி சக்ரவர்த்தி கையில் ரக்ஷயை
கட்டிகொண்டாரோ , அதே ஸஹோதர நலன் எண்ணத்துடன் இந்த ரக்ஷை

கயிற்றை உனது கையில் கட்டி விடுகிறேன். ஏ ரக்ஷை கயிறே நீ கையிலிருந்து விலகாமல் இருந்து, இவரை பாதுகாத்து அருள் செய். என்னும் மந்திரம் சொல்லி பெண்ணானவள்

தன் ஸஹோதரனுக்கு ரக்ஷயை கட்டி விட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

இந்த ரக்ஷையை ஏற்றுக்கொள்வதால் அந்த ஸஹோதரன் அந்த பெண்ணின் வாழ்க்கை நலத்திற்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன் என்பதை ஏற்று கொள்கிறான்.

இந்த ரக்ஷா பந்தனத்தை 3-8-20 & 21-08-2021 அன்று மாலை 2 முதல்5-மணி வரையிலும் கட்டிக்கொள்ளலாம்.

இவ்வாறு ரக்ஷை கட்டி விட்ட தன் சஹோதரிக்கு சஹோதரன் அன்பு பரிசுகளை தந்து தன் சஹோதரியை மகிழ்விக்க வேண்டும்.

3-8-20. & 21-08-2021.ஹயக்ரீவ ஜயந்தி.

சிராவண பெளர்ணமியும் திருவோண நக்ஷத்திரமுமான இன்று நாமும் ஹயக்ரீவரை பூஜித்து ப்ரார்தித்து நன்மை அடைவோம்.

ப்ருஹ்மாவை சிருஷ்டித்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவரே ஹயக்ரீவர் என்கிறது ச்வேதாச்வதர உபநிஷத்.

மது; கைடபர் என்ற இரு அசுரர்களும் ப்ரஹ்மாவிடம் சண்டை யிட்டு நான்கு வேதங்களையும் அபகரித்து சென்று விட்டனர். ஶ்ரீ மஹா விஷ்ணு வெள்ளை குதிரை முகம் கொண்டு ஹயக்ரீவராய் தோன்றி மது கைடபரை

கொன்று வேதங்களை மீட்டார்.அனைத்து கலைகளுக்கும் வித்யைகளுக்கும் –மந்திரங்களுக்கும் தலைவராக ப்ரகாசிக்கும் ஶ்ரீ மஹா விஷ்ணுவின் வடிவமே ஹயக்ரீவர்..
 
Back
Top