• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Vaikunda Ekadasi Fasting and Amavasyai

Status
Not open for further replies.
Vaikunda Ekadasi
When to observe fasting for vaikumda ekadasi?
The day before the Sorga Vaasal Thirappu or on the day of Sorga Vaasal Thirappu ?

This year Ekadasi thithi starts 11-52 am on 31-12-2014.

what if Vaikunda Ekadasi thithi starts 10-00 pm on a day


Amavasai Tharpanam

This year 2014 one amavasayai started around 12-30 noon (roughly) and ended on next day 11-20am . But Sasthrigal advised to do the Tharpanam on day one only, though there is no amavasyai thithi on the morning. While doing Sankalpam, will you pronounce Amavasyai or Chathurthasi ? How it is decided ?
 
Please note Vaikunta Ekadasi is to be observed in the Margazi month

Fasting is generally observed from Sunrise to next day morning.

some observe from the start of the Ekadasi Thithi and Break it at the beginning of Dwadasi thithi.


please check up the timings with your Sasthrigal

Swarga Vasal or Paramapada opening is at 4.30 am on January 1 , 2015

Consider your health conditions and observe Fasting accordingly; even Partial fasting is rewarded with Bliss

Please follow your Sasthrigal Advice reg Amavasa Tharpanam


Vaikunta Ekadashi 2015 Date ~ Hindu Blog
2014 Vaikuntha Ekadashi, Mukkoti Ekadashi Vrat, fasting date and Parana time for Lansing, Michigan, United States
How to observe Vaikunta Ekadasi? - Vaikunda Ekadashi fasting ~ Hindu Blog
 
Last edited:
Vaikunda Ekadasi
When to observe fasting for vaikumda ekadasi?
The day before the Sorga Vaasal Thirappu or on the day of Sorga Vaasal Thirappu ?

This year Ekadasi thithi starts 11-52 am on 31-12-2014.

what if Vaikunda Ekadasi thithi starts 10-00 pm on a day


Amavasai Tharpanam

This year 2014 one amavasayai started around 12-30 noon (roughly) and ended on next day 11-20am . But Sasthrigal advised to do the Tharpanam on day one only, though there is no amavasyai thithi on the morning. While doing Sankalpam, will you pronounce Amavasyai or Chathurthasi ? How it is decided ?

Shri RS_Raman,

It is our custom (we follow the Tirunelveli Panchangam fyi) to reckon the tithi and nakshatra of any day according to the tithi and nakshatra at sunrise on that day. Hence, 31-12-2014 is not vaikunta ekadasi; it falls on the New Year Day. People who want to fast, may observe it on 01-01-2015.

As regards Tarppanam, Sraaddham etc., (Pitru Kaaryams) it is the condition that the tithi or Amavasya must be there after mid-noon also for certain minimum time. Therefore, Ekadasi Tithi will be on 31-12-2014, and Dwadasi Tithi Sraaddhams will be conducted on 01-01-2015.

If amavasyai commenced around 12-30 noon and ended on next day 11-20 am, Tarpanam has to be done on the first day only. Please note that the practice of doing Tarpanam in the early morning is against Saastram (Saastra viruddham) but we have been doing this wrong thing because most brahmanas have to go to office work and so they cannot do Tarppanam after Madhyahnikam, which is the time as per Saastram.


In the Tarppana Samkalppam it will be more appropriate to say "amaavaasyaayaam Shubhtithou" because we are doing the rite for the amaavaasya and not for the Chaturdasi.
 
வைகுண்ட ஏகாதசி

திருமலை: ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 30ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தலைமைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 1ம் தேதி வைகுண்ட ஏகாதசியும், 2ஆம் தேதி துவாதசியும் வருவதையொட்டி, 1ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் விஐபிகள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து 5 மணி முதல் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
 
சூர்ய உதயத்தின் போது 1-1-2015 அன்று தான் ஏகாதசி திதி உள்ளது. ஆதலால் வியாழன் அன்று தான் உபவாசம் இருக்க வேண்டும் எந்த நாளின் சூர்ய உதயத்தின் போது திதி உள்ளதோ அன்று விரதம், உபவாசம் இருக்க வேண்டும். எந்த நாளின் சூர்ய அஸ்தமனந்தி போது உள்ள திதியில் அமாவாசை தர்பணம், சிராத்தம் முதலியவை அன்று காலையில் செய்ய வேண்டும்.

காலையில் சதுர்தசி திதி என்று சொல்லியே அமாவாசை புண்யகால சிராத்தம் தில தர்பண ரூபேன அத்ய கரிஷ்யே என்று சங்கல்பம் செய்ய வேண்டும்.28-4-2014 அன்று அப்படி தான் வந்தது. ரிஷிகளும் முனிவர்களும் இம்மாதிரிதான் செய்ய வேண்டும் என்று அந்த காலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
 
Shri.R.S.Raman
Quote:- In the Tarppana Samkalppam it will be more appropriate to say "amaavaasyaayaam Shubhtithou" because we are doing the rite for the amaavaasya and not for the Chaturdasi.


In the tharpana sankalpam we must say only as "amaavaasyaayaam punyathithou" and not subhathithou.


 
Last edited:
வைகுண்ட ஏகாதசி!

வைகுண்ட ஏகாதசி!

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.



ஏகாதசியன்று செய்யக்கூடாதது: ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

ஏழு பிரகாரம்: இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களைக் கொண்ட கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மட்டுமே. இந்தப் பிரகராங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி. அதாவது 156 ஏக்கர். ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. உடலின் நடுவே ஆத்மா <உள்ளது போல, கோயிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.

துவாதசிக்கு அகத்திக்கீரை: வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.

ஏகாதசி விரத முறை: கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி! ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.

மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி (பேச்சு வழக்கில் முக்குட்டி ஏகாதசி, முக்கோட்டை ஏகாதசி) என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாள் இது.

Festival
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top