• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

upanayanam rules

is upanayanam possible as per vedic tradition to a boy born to brahmin boy with non brahmin girl and vice versa
நாந்தீ ஸ்ராத்தம்:--

வாழ்ந்து மறைந்த மூன்று தலை முறையை சேர்ந்த தகப்பனார், தாத்தா,தகப்னாரின் தாத்தா, இவர்களின் மனைவிகள், தாயின் தந்தை, தாயின் தாத்தா, தாயின் தகப்பனாரின் தந்தை., .முதலிய முன்னோகளுக்கு , நாந்தி சோபன பித்ருக்கள்==மங்களமான பித்ருக்கள் எனப்பெயர்.

இவர்கள் நமது வீட்டில் மங்களமான நிகழ்ச்சிகள் நடக்க இருக்கும் போது
ஒரு சில நாட்கள் முன்னதாகவே நம்முடைய இருப்பிடத்திற்கு , ஸந்தோஷத்துடன் ஆசி கூற அவர்களாகவே வருகிறார்கள்..

அவ்வாறு வரும் அவர்களுக்கு சாப்பாடு போட்டு நல்ல வஸ்த்ரம் கொடுத்து
அவர்களை ஸந்தோஷபடுத்தி அவர்களின் ஆசியை பெறும் செயல் தான் நாந்தி.முன்னோர்களின் அநுக்கிரஹம் கிட்டும்… ச்ராத்தம் என்றால் சிரத்தையுடன் செய்வது என அர்த்தம்.. ஈடுபாட்டுடன் செய்வது என்று அர்த்தம்..

இதில் அமங்களம் எதுமில்லை.. இதுவும் மங்களமானதுதான். உபநயனம், விவாஹத்திற்கு முன் அவச்யம் செய்ய வேண்டும். நாநிஷ்ட்வா து பித்ரூன்
ச்ராத்தே, வைதிகம் கர்ம ஸமாசரேத், என்பதாக ஆபஸ்தம்பர், முதலிய அனைத்து மஹரிஷிகளும் வலியுருத்தி கூறுகிறார்கள். நாந்தி பித்ருக்களை பூஜிக்காமல் வேதத்தில் கூறப்பட்ட எந்த கர்மாவும் செய்யக்கூடாது. .

செய்யாமல் விட்டால் பித்ருக்களின் தோஷம் ஏற்படும். ஆதலால் மங்கள நிகழ்ச்சிகளுக்கு முன்னால் நாந்தியை கட்டாயம் செய்ய வேன்டும்.

“”ஸீமந்த, வ்ருத, செளள நாமகரண, அன்னப்ராசனோபாயன , ஸ்நான, ஆதான, விவாஹ, யஞ்ய, தநயோத்பத்தி, ப்ரதிஷ்டாஸூ ச பும்ஸுஹ்யாவஸத ப்ரவேசன, ஸூதாத் யாஸ்யாவலோக ,ஆச்ரம, ஸ்வீகார,

Dear kgopalan37, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends


க்ஷிதிபாபிஷேக தயிதாத் யர்தெள ச நாந்தி முகம். என்பதாக ஸீமந்தம், கல்யானத்திற்கு முன் செய்யும் நான்கு வேத வ்ரதங்கள், , குடுமி வைத்தல்,பெயர் சூட்டுதல், சோறூட்டுதல், பூணல் போடுதல்; ,

ஸமாவர்த்தனம், அக்னி ஆதானம், திருமணம், யாகம், குழந்தை பிறத்தல், கும்பாபிஷேகம், பும்ஸுவனம், புது வீட்டில் குடி புகுதல். ஸன்யாச ஆச்ரமம் ஸ்வீகாரம், , ராஜ பட்டாபிஷேகம், ப்ரதமார்தவ சாந்தி முதலிய மங்கள

கார்யங்களில் கட்டயம் நாந்தி செய்ய வேண்டும் என்கிறார் ஆபஸ்தம்ப மஹரிஷி.

விவாஹம், உபநயனம் போன்ற மங்களமான நிகழ்ச்சிகளுக்கு சில தினங்கள் முன்னதாகவே , நாந்தி சிராத்தத்தை, எட்டு அல்லது பத்து ப்ராஹ்மணர்களை வரித்து , சாப்பாடு போட்டு, பித்ரு வர்க்கம்,

மாதாமஹ வர்கம், ஆகிய இரண்டு வர்கத்திற்கும் ஹோமம் செய்து மற்ற சிராத்தங்கள் போல் அன்னரூபமாக செய்ய வேண்டும். இதில் கருப்பு எள்ளு, ஸ்வதா என்ற சொல் உபயோகிக்க கூடாது.

அல்லது ஹோமம் இல்லாமல் சங்கல்பமாக செய்யலாம். . அரிசி, வாழைக்காய் முதலியன கொடுத்து ஹிரண்ய சிராத்தமாக வாவது கட்டாயம் செய்ய வேன்டும்.

தந்தை உள்ளவர் ஒரு சில காலங்களில் நாந்தி தானே செய்யலாம். உத்வாஹே புத்ர ஜந்நே பித்ரேஷ்ட்யாம், ஸெளமிகே மகே தீர்தே ப்ராஹ்மண ஆயாதே ஷடே தே ஜீவத: பிது: என்கிறது தர்ம சாஸ்த்ரம்.

பிறந்த குழந்தைக்கு செய்யபடும் ஜாத கர்மாவிலும். சாதுர்மாஸ்ய, யாக, ஸாகமேத, பர்வா பித்ர்யேஷ்டியிலும், , ஸோம யாகத்திலும், காசி முதலிய

புண்ய க்ஷேத்ரங்களிலும் உத்தமரான ப்ராஹ்மணர் வருகை தரும் போதும் தந்தை இருப்பவரும் நாந்தி சிராத்தம் தானே செய்யலாம்.. ஒரு சில வற்றில் நாந்தியை தந்தை தான் செய்ய வேண்டும்.

குழந்தையின் ஜாத கர்மா, நாமகரணம், அன்ன ப்ராசனம், செளளம், உபநயனம், மற்றும் விவாஹம் வரை உள்ள நாந்தியை குழந்தயின் தந்தை தான் செய்ய வேன்டும். விவாஹத்திற்கு பிறகு செய்யும் நாந்தியை தானே செய்ய வேன்டும். விவாஹ நாந்தியை தந்தை தான் செய்ய வேண்டும்.

தந்தை அல்லாத பெண்//பிள்ளைகளுக்கு அண்ணா, சித்தப்பா, பெரியப்பா முதலியவர்கள் ஜாத கர்மா, உபநயனம், விவாஹம் முதலிய ஸம்ஸ்காரங்கள் செய்து வைக்கும் போது “”அஸ கோத்ரஹ ஸகோத்ரோ வா ய ஆசார்ய உபாயனே ததோ பனேய பித்ராதீன் உத்திச்ய அப்யுதயம் சரேத்.

என்னும் வசனப்படி , உபநயனத்தில் மட்டும் , பூணல் போட்டு வைக்கும் ஆசார்யன் , பூணல் போட்டு வைக்கபடும் பையனின் கோத்ரத்தை சேர்ந்தவனாயினும், வேறு கோத்ரமாக இருப்பினும் உபநயனம் செய்து வைக்கப்படும் பையனின் பித்ருக்களை குறித்து தான் நாந்தி சிராத்தம் செய்யபட வேன்டும். உறவினர்களின் முதன் முதலில் உபசரிக்க வேன்டியவர்களில் பித்ருக்களே முதன்மையானவர்கள். .

முறைப்படி இரண்டு வர்கங்களுக்கும் , ஹோமம் செய்து சாப்பாடும் போட்டு பார்வண விதியாக செய்யும் நாந்தியை ஸோம யாகம் போன்ற யாகங்களில் 21 நாட்கள் முன்னதாக வும், செளளத்தில் மூண்று நாட்கள் முன்னதாகவும், உபநயனத்தில் ஆறு நாட்கள் முன்னதாகவும் நாந்தி செய்யலாம்.

நாந்தி ஆம ரூபமாகவோ, ஹிரண்ய ரூபமாகவோ செய்வதாயின் இந்த விதி பொருந்தாது.

ஸகல தேவதைகளையும் ஸந்தோஷப் படுத்திய பின்பே விவாஹம் முதலிய சுப கார்யங்கள் செய்ய வேண்டும். குல தேவதை பூஜை, ஸமாராதனை, சுமங்கலி ப்ரார்தனை செய்கிறோம்.. அதை அநுசரித்து , ஸூத்ரகாரர்கள் சில
கர்மா ஆரம்பத்திலும், சில கர்மா முடிவிலும் நாந்தி ஸ்ராத்தம் செய்யும் படி விதிக்கிறார்கள். இதை ப்ராமணன் போஜயித்வா என்றும் அசிஷோ

வாசயித்வா என க்கூறுகிறார்கள். இதற்கு நாந்தி சிராத்தம் செய் என அர்த்தம். பித்ருக்களில் பல வகை உண்டு,.. அதில் நாந்தி முக என்பவர் சுப காலத்தில் ஆராதிக்க தக்கவர். இதையும் சுப கார்யங்களுக்கு முன்னால் செய்ய வேண்டும்.

அப்ப்யுதயம்=இந்த சொல் தர்மம், அர்த்தம்,காமம், ஆகியவற்றின் வளர்ச்சியை குறிக்கும். அவை வளர்வதற்காக பித்ரு தேவதைகளுக்கு செய்யும் ஆராதனைக்கு அப்யுதய சிராத்தம் என்று பெயர். தேவதையின் ஆசியை கோறுதல்= நாந்தி என்ற சொல்லால் குறிக்கபடுவதால் அப்யுதய சிராத்தத்தை நாந்தி என்றும் சொல்வது வழக்கம்.
முடிவில் செய்யும் ப்ரார்தனை. :- இனிமையானதே நான் மனதால் எண்ண வேண்டும். இனிமையானதே செய்ய வேண்டும் .இனிமையானதே பேச வேன்டும்
.இனியதையே தேவர்களிடத்தும் மனிதர்களிடத்தும் செய்யும் படியும் தேவர்கள் அருளட்டும் . பித்ருக்கள் ஆமோதிக்கட்டும். என்பதே.
 

Latest ads

Back
Top