• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

UPANAYANAM DETALS.

kgopalan

Active member
Upa nayana details.

21 muhurtha vidhi சுப முகூர்த்த நிர்ணய விதிகள்-

சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்தத்தை நிர்ணயம் செய்யும்போது கீழ்கண்ட 21 விதிகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும் என கால விதானம் எனும் நூல் கூறுகிறது.


1.உல்கா:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 19 வது நட்சத்திரம் உல்கா எனப்படும்.இதில் சுப முகூர்த்தம் கூடாது.


2.பூகம்பம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 9வது நட்சத்திரம் பூகம்பம் எனப்படும்.இதுவும் சுபமுகூர்த்தத்திற்கு ஆகாது.


3.உபாகம்:
சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் ஏற்படும் நாளும் அதற்கு முன் மூன்று
நாட்களும்,பின் மூன்று நாட்களும் சுப முகூர்த்தத்திற்கு ஆகாத நாட்கள்.


4.குளிகன்(அ)மாந்தி:
ஒவ்வொரு நாளிலும் குளிகன் அல்லது மாந்தி உதயமாகும் நேரத்திற்குறிய
லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.


5.சஷ்டாஷ்டம அந்திய இந்து:
முகூர்த்த லக்னத்திற்கு 6-8-12-ல் சந்திரன் இருக்கக்கூடிய காலம் முகூர்த்தத்திற்கு ஆகாது.


6.அசத் திருஷ்டம்:
முகூர்த்தம் வைத்துள்ள நேரத்திற்கு உரிய லக்னத்தை பாபக்கிரகங்களான
சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர் பார்க்கக்கூடாது.

அவ்வாறு பாபக்கிரகங்கள் பார்க்கும் லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.


7.அசத் ஆரூடம்:
பாபக்கிரகங்கள் அமர்ந்துள்ள ராசியில் முகூர்த்த லக்னம் அமைக்கக்கூடாது.


8.அசத் விமுக்தம்:
பாபக்கிரகங்களாகிய சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர் அமர்ந்திருந்து பெயர்ச்சியான ராசியில் முகூர்த்த லக்னம் வைக்கக்கூடாது.எனினும் இந்த ராசியில் சந்திரன் அமர்ந்திருக்குமானால் அந்த தோஷம் பரிகாரமடைகிறது.


9.சித த்ருக்:
சுக்கிரன் பார்க்கும் ராசியை முகூர்த்த லக்னமாக அமைப்பது தோஷம்.ஆயினும்
சாந்தி முகூர்த்தத்திற்கு இந்த விதி பொருந்தாது.


10.சந்தியா காலம்:
சூரிய உதயத்திற்கு முன் இரண்டு நாழிகையும்(48 நிமிஷம்),சூரிய அஸ்தமனம்
அடைந்த பின் இரண்டு நாழிகையும் சந்தியா காலம் எனப்படும்.இதில் சுப
முகூர்த்தம் வைக்கக்கூடாது.


11.கண்டாந்தம்:
அஸ்வினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திரங்களின் முதல் பாதமும் ஆயில்யம்,கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களின் நான்காம் பாதமும் கண்டாந்தமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைக்கக்கூடாது.


12.உஷ்ணம்:
பின்வரும் நட்சத்திரங்கள் தொடங்கியது முதல் அதில் கொடுக்கப்பட்டுள்ள
நாழிகை வரை உஷ்ண காலமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைப்பது தோஷமாகும்.


A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)


B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)


C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)


D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)


A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)


B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)


C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)


D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)


E.அனுஷம்,பூராடம்,அவிட்டம்,உத்திரட்டாதி(52 TO 60)


F.கேட்டை,உத்திராடம்,சதயம்,ரேவதி(20 TO 30)


13.விஷம்:
தியாஜ்ஜிய காலமே விஷம் எனப்படும்.இதிலும் சுப முகூர்த்தம் கூடாது.


14.ஸ்திர கரணம்:
சகுனி,சதுஷ்பாதம்,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகிய நான்கும் ஸ்திர கரணங்களாகும். இதிலும் முகூர்த்தம் கூடாது.


15.ரிக்தை:
சதுர்த்தி,நவமி,சதுர்தசி இவை ரிக்தை எனப்படும்.இதுவும் விலக்கத்தக்கதே


16.அஷ்டமி:
அஷ்டமியிலும் முகூர்த்தம் கூடாது.தேய்பிறை அஷ்டமி சுபம் என்பது சிலர் கருத்து.


17.லாடம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து மூல நட்சத்திரம் வரை எண்ணி வந்த
தொகையை பூராடம் முதல் எண்ணினால் கிடைக்கும் நட்சத்திரம் எதுவோ அதுவே லாட நட்சத்திரமாகும். இதிலும் சுபத்தை விலக்கவும்.


18.ஏகார்க்களம்:
அன்றைய சூரிய ஸ்புடத்தை 360 பாகையிலிருந்து கழித்து வரும் ஸ்புடத்திற்கு
உதய நட்சத்திரத்திலிருந்து 1,2,7,10,11,14,16,18,20 ஆகிய நட்சத்திரங்கள்
ஏகார்க்களம் ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


19.வைதிருதம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 14 வது நட்சத்திரம் வைதிருதம் ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


20.அஹிசிரசு:
வியதீபாத யோகத்தின் பிற்பகுதி அஹிசிரசு எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


21.விஷ்டி:
வளர்பிறை அஷ்டமி,ஏகாதசியில் 6 முதல் 12 நாழிகை வரையிலும் பௌர்ணமியில்
18முதல் 24 நாழிகை வரையிலும் சதுர்தசியில் 24முதல் 30 நாழிகை வரையிலும்,


தேய்பிறை திருதியையில் 30முதல் 36 நாழிகை வரையிலும் சப்தமியில் 12முதல்
18 நாழிகை வரையிலும் தசமியில் 42முதல் 48 நாழிகை வரையிலும் சதுர்தசியில்
முதல் 6 நாழிகை வரையும் விஷ்டி எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


1.அம்ஹஸ்பதி:
ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்படுமாயின் அது அம்ஹஸ்பதி
எனப்படும்.இதனை அதிமாதம் என்றும் சொல்லுவர்.இந்த மாதத்தில் முகூர்த்தம்
செய்யக்கூடாது.


ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.


2.மலமாதம்:
ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அது மலமாசம் எனப்படும்.இந்த
மாசத்திலும் சுப முகூர்த்தம் செய்யக்கூடாது.


ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.


3.சமசர்ப்பம்:
அமாவாசையே நேரிடாத மாதம் சமசர்ப்பம் எனப்படும்.இந்த மாதத்திலும் சுப முகூர்த்தம் கூடாது.


4.திர்சியதாஹி குரு சிதயோஹோ:
சங்கவ காலமென்று சொல்லக்கூடிய சூரியன் உதித்து 6முதல் 12நாழிகைக்குள்
குரு,சுக்கிரர் தோன்றும் காலம் முகூர்த்தத்திற்கு கூடாது.


5.குரு,சுக்கிர மௌட்யம்:
குருவும்,சுக்கிரனும் அஸ்தமனம் அடைந்துள்ள காலம் சுப முகூர்த்தம்
வைக்கக்கூடாது.(ஒன்று அஸ்தமனமாகி மற்றது நட்பு,ஆட்சி,உச்சம்
பெற்றிருந்தால் அது தோஷமில்லை)


6.குரு சுக்கிர மிதோ திருஷ்டி:
குருவும் சுக்கிரனும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ளும் காலம்
முகூர்த்தத்திற்கு உகந்த காலம் அல்ல.

மேலும்
கீழ்கண்ட கிழமைகளுக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள திதி,நட்சத்திரங்கள்
அமையுமானால் அந்த நாளில் திருமணம் முதலிய சுப காரியங்களை செய்யக்கூடாது.


A.ஞாயிறு-பரணி
திங்கள்-சித்திரை
செவ்வாய்-உத்திராடம்


புதன்-அவிட்டம்
வியாழன்-கேட்டை
வெள்ளி-பூராடம்
சனி-ரேவதி


B.ஞாயிறு-பஞ்சமி&கிருத்திகை
திங்கள்-த்விதீயை&சித்திரை
செவ்வாய்-பௌர்ணமி&ரோகினி


புதன்-சப்தமி&பரணி
வியாழன்-த்ரயோதசி&அனுஷம்
வெள்ளி-ஷஷ்டி&திருவோணம்
சனி-அஷ்டமி&ரேவதி


C.ஞாயிறு-பஞ்சமி&அஸ்தம்
திங்கள்-ஷஷ்டி&திருவோணம்
செவ்வாய்-சப்தமி&அஸ்வினி


புதன்-அஷ்டமி&அனுஷம்
வியாழன்-திருதீயை&பூசம்
வெள்ளி-நவமி&ரேவதி
சனி-ஏகாதசி&ரோகினி


D.ஞாயிறு-சதுர்த்தி
திங்கள்-சஷ்டி
செவ்வாய்-சப்தமி
புதன்-த்விதீயை


வியாழன்-அஷ்டமி
வெள்ளி-நவமி
சனி-சப்தமி .. .



உபநயனம்;--


உத்திராயனத்தில் செய்ய வேண்டும்.


தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்திராயணம்.


யஜுர் வேதிகள் சுக்ராஸ்தமனம் இல்லாத காலத்திலும், ருக் வேதிகள் குரு அஸ்தமனம் இல்லாத காலத்திலும், ஸாம வேதிகள் செவ்வாய் அஸ்தமனம் இல்லாத காலத்திலும், செய்ய வேண்டும்.

சுக்கிரன், குரு , செவ்வாய் நீச மில்லா காலங்களிலும் செய்ய வேண்டும்.

வேதம் பயில க்கூடாத நாட்களிலும் உபநயனம் செய்ய க்கூடாது.


உபநயன லக்னத்திற்கு எட்டாமிடத்தில் எந்த கிரஹமும் இருக்க கூடாது.


பையனுக்கு சந்திராஷ்டம தினத்திலும் செய்ய கூடாது.


பையனின் சஷ்டாஷ்டக ராசியிலும் லக்னமாக வைக்க வேண்டாம்.


சுக்ல பக்ஷம் சிறந்தது. ஜன்ம சந்திர லக்னங்கள் இல்லாத நாட்களில் செய்ய வேண்டும்.


தாரா பலம் சந்திர பலம் நன்றாக உள்ள நாட்களில் செய்ய வேண்டும்.


கசரம் சுத்த மாக இருக்க வேண்டும்.


பஞ்சகம் சுத்தமாக இருக்க வேண்டும்.


கரி நாள் , தனிய நாட்களில் செய்ய கூடாது.


மரண யோகம், உத்பாத யோக நாட்களில் செய்யக்கூடாது.


ஆடி, ஆவணி, புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் செய்யக்கூடாது.


அமாவாசை. பெளர்ணமி, பிரதமை. ரிக்தை ஸப்தமி அஷ்டமி, நவமி த்ரயோதசி, சதுர்தசி ஆகிய திதிகளில் உபநயனம் செய்யக்கூடாது.


பையன் ஜன்ம நக்ஷத்திலிருந்து எண்ணி 2,4,6,8,9 வர வேண்டும்.


1,3,5,7 நக்ஷத்திரங்களில் செய்ய க்கூடாது


அந்தந்த தமிழ் மாத விஷ சூன்ய திதி, நட்சத்திரம் லக்னம் வேண்டாம்.


திதிகளின் விஷ சூன்ய ராசிகளும் வேண்டாம்.


வருஷம், ருது மாதம், திதி, நக்ஷதிரம் முடிவில் செய்யக்கூடாது.


ஒரே நாளில் இரண்டு , நக்ஷத்திரமோ திதியோ உள்ள நாட்களும் வேண்டாம்.


திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் சிறந்தது.


உபநயனம் செய்ய போகும் தமிழ் மாதத்தில் இரண்டு பெளர்ணமியோ அல்லது இரண்டு அமாவாசையோ அல்லது மாதபிறப்பு இரண்டோ அல்லது மாத பிறப்பு இல்லாமலோ இருக்க கூடாது.

திதி , நக்ஷத்திர, லக்ன தியாஜ்யம் இல்லாத லக்னத்தில். உபநயனம் செய்ய வேண்டும்.



பையனின் தாயார் ஆறு மாததிற்கு மேல் கர்பமாக இருந்தால் அந்த பையனுக்கு அப்போது உபநயனம் செய்ய கூடாது.


பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம்,, பூரம், பூராடம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் உபநயனம் செய்வதற்கு சிலாக்கியமில்லை.,


ஸந்தியா காலங்கள், ராத்திரி, அபராஹ்னம் மலமாசம் சிலாக்கியமில்லை..


ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் சுபம்.

ராகு காலம், யம கண்டம், இல்லாமல் இருக்க வேண்டும்.

சுப ஹோரையில் அமைய வேண்டும்.


அக்னி நக்ஷத்திர காலமும் சிலாக்கியமில்லை

வருட, மாத, ருது, முடியும் சமயங்களில் முஹுர்த்தம் வைக்ககூடாது. வருட முடிவிற்கு 15 நாட்கள்; ருது முடிவமாத முடிவு 3 நாட்கள் முன்பாகத்தான் முஹுர்த்த நாட்கள் பார்க்க வேண்டும்.



இவைகளை உங்கள் கணினியில் சேமித்து வையுங்கள். பிற்கால சந்ததியினருக்கு தேவை படும்.
தாரா பலன் பார்க்க:-
உங்கள் பிறந்த நக்ஷத்திரத்திற்கு மிகவும் உத்தமமாக உள்ள தாரா பலன் நக்ஷத்திரம்.

(1) அசுவினி, மகம், மூலத்திற்கு ,நல்ல
தாரா பலன் உள்ள நக்ஷத்திரம்:-
ரோஹிணி,ஹஸ்தம், திருவோணம்.
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி
ஸ்வாதி, சதயம் ரேவதி.


(2) பரணி, பூரம், பூராடத்திற்கு நல்ல
தாரா பலன் உள்ள நக்ஷத்திரம்.
உத்திரம், உத்திராடம்,ரேவதி
மிருகசீர்ஷம், சித்திரை,அவிட்டம்.
அசுவதி,மகம்,மூலம்,புனர்பூசம்.


(3)கிருத்திகை,உத்திரம், உத்திராடதிற்கு:-
ரோஹிணி,ஹஸ்தம்,திருவோணம்,
ஸ்வாதி,சதயம்,பூசம்,அனுஷம்,
அசுவதி,மகம்,மூலம்,உத்திரட்டாதி.

( 4) ரோஹிணி,ஹஸ்தம்,திருவோணத்திற்கு:-
மிருகசீர்ஷம், சித்திரை,அவிட்டம்,
புனர்பூசம்,ரேவதி,உத்திரம்,உத்திராடம்.

(5) மிருகசீஷம், சித்திரை, அவிட்டத்திற்கு:-
சுவாதி,சதயம்,உத்திரம்,உத்திராடம்
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி,
அசுவதி,மகம்,மூலம்,ரோஹிணி.
ஹஸ்தம்,திருவோணம்.

(6) திருவாதிரை,சுவாதி,சதயத்திற்கு:-
புனர்பூசம்,ரேவதி,ரோஹிணி,
ஹஸ்தம்,திருவோணம்,
மிருகசீர்ஷம்,சித்ரை,அவிட்டம்.

(7) புனர்வசு,விசாகம்,பூரட்டாதிக்கு:-
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி,
அசுவதி,மகம்,மூலம்,உத்திரம்,
மிருகசீர்ஷம், சித்ரை,அவிட்டம்,
சுவாதி,சதயம்,உத்திராடம்.

(8) பூசம்,அனுஷம்,உத்திரட்டாதிக்கு:-
சுவாதி,சதயம்,ரேவதி,புனர்பூசம்,
ரோஹிணி,ஹஸ்தம்,திருவோணம்

(9) ஆயில்யம்,கேட்டை,ரேவதிக்கு:-
அசுவதி,மகம்,மூலம்,
மிருகசீர்ஷம்,சித்திரை,அவிட்டம்,
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி.
புனர்வசு,உத்திரம்,உத்திராடம்.

விவாஹ சுப முஹூர்தத்திற்கு ஏற்றவை
இல்லாத பரணி,க்ருத்திகை, திருவாதிரை,
ஆயில்யம்,பூரம்,விசாகம்,கேட்டை,
பூராடம்,பூரட்டாதி இதில் சேர்க்க
பட வில்லை.

உதாரணமாக விவாஹத்திற்கு சுப முஹுர்த்த நாள் பார்க்க வேன்டுமென்றால் பெண் நக்ஷத்திரம் தெரிந்து கொண்டு அதன் படி
பெண் நக்ஷத்திரம் அனுஷம் என்றால் நக்ஷத்திர வரிசையில் ( ) க்குள் இருப்பது பெண் நக்ஷத்திரம். இதில் (8) க்குள் இருக்கும் அனுஷம் பெண் நக்ஷத்திரத்திற்கு அடியில் உள்ள ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம்,

ஸ்வாதி, சதயம், ரேவதி , புனர்வசு ஆகியவைகளில் ஏதாவது ஒரு நக்ஷத்திரம் உள்ள தினங்களாக பார்த்து நாள் குறிக்க வேண்டும். நல்ல தாரா பலன் உள்ள நக்ஷத்திரம் மட்டும் இருக்கிறது.

( ) க்குள் உள்ள நக்ஷத்திரத்திற்கு நல்ல தாரா பலன் உள்ள நக்ஷத்திரங்கள் அதன் அடியில் உள்ள நக்ஷதிரங்கள்.



தேவையான எண்ணிக்கை பத்திரிக்கை அடிக்க வேண்டும்.
முதலில் குல தெய்வம் கோவிலுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை, வஸ்த்ரம் சாற்றி பத்திரிக்கை வைத்து,
கோவிலுக்கு உங்களால் முடிந்ததை காணிக்கை கொடுத்துவிட்டு வேண்டி கொண்டு வர வேன்டும்.
பிறகு காஞ்சி /சிருங்கேரி அல்லது உங்கள் குரு சங்கராசாரியாருக்கு வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பம், காணிக்கை வைத்து பத்ரிக்கை வைத்து கொடுக்க வேண்டும்.
பிறகு மற்ற உறவினர்களுக்கும் சினேஹிதர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
பையனின் தாயாரின் பெற்றோர்களுக்கு மாமா விற்கும் நேரில் சென்று வெற்றிலை, பாக்கு, பழம் புஷ்பம் சந்தனம், குங்குமம் பத்ரிக்கை கொடுக்க வேண்டும்.
வீட்டிலேயே உப நயனம் செய்வதே சாலச்சிறந்தது. உறவினர்களுக்கு கொடுக்க வேண்டிய ஜவுளி வகைகள் வாங்கி வைத்து கொள்ளவும்.
சாப்பாடு, டிபன் காப்பிக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். டேபிள், நாற்காலி, தண்ணிருக்கும், தண்ணிர் கொடுக்க டம்ளர்கள், வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
சுமங்கலி ப்ரார்த்தனை, சமாராதனை செய்ய வேண்டும். இதற்கு தேவையானவைகளை சேகரித்து வைத்து கொள்ளவும்.
கை முறுக்கு, அதிரசம், லட்டு தேவயானவைகளை தயார் செய்து கொள்ள வேண்டும்.
போட்டோ வீடியோ தேவையானவைகளை தயார் செய்து கொள்ளவும்.
தாம்பூல பை, அதற்குள் வைக்க தேங்காய், அல்லது பழம், தாம்பூலம், கை முறுக்கு அதிரசம், பரிசு பொருள், தேவையான எண்ணிக்கை தயார் செய்து கொள்ள வேண்டும்.

அம்மான், பாட்டனார் சீர் ;- தங்க ,வெள்ளி பூணல், பட்டு வேஷ்டி, வெள்ளி பஞ்ச பாத்திர உத்திரிணி, வெள்ளி தாம்பாளம், புடவை, வேஷ்டி, பருப்பு தேங்காய், பிக்ஷை அரிசி,5 கிலோ, ஒரு பித்தளை கிண்ணம்,
கை முறுக்கு,அதிரசம், லட்டு ,பாத்திரத்துடன், ஹாரம், புஷ்பம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், சக்கரை கற்கண்டு கொண்டு வந்து வைக்க வேண்டும்.

ஒரு வாரம் முன்பாக நாந்தி பத்து சாஸ்திரிகளை வர சொல்லி, சாப்பாடு. தக்ஷிணை, வேஷ்டி வாங்கி கொடுத்து செய்யலாம். இது மிகவும் உயர்ந்தது.
வேஷ்டி, அரிசி, வாழைக்காய் கொடுப்பதானால் உபநயனத்து அன்று காலையும் செய்யலாம். முதல் நாள் காலையிலும் செய்யலாம்.
முதல் நாள் உதக சாந்தி செய்ய வேண்டும். பாலிகை தெளித்தல், ப்ரதிசர பந்தமும் முதல் நாள் செய்யலாம்.
உபநயனத்திற்கு தேவையான பொருட்கள்.

முதல் நாள். உபநயன பூர்வாங்கம்:--உதக சாந்தி, ப்ரதிசரபந்தம், பாலிகை.,நாந்தி----ஹோமத்துடன்.

மஞ்சள் தூள். 100 கிராம்; குங்குமம் 50 கிராம்.;; சந்தனம்பொடி 10 கிராம்;

தொடுத்த புஷ்பம் 10 மீட்டர்; தேங்காய்-20 எண்ணிகை; வாழை பழம் (பூவன்)
60 நம்பர்;
வெற்றிலை-200; பாக்கு 100 கிராம்; ;சீவல்;50 கிராம்; பாக்கு பொட்டலம் 100; மட்டை தேங்காய் 10;

மாவிலை கொத்து 8 நம்பர்; பையனுக்கு மாலை 1; கும்பத்திற்கு மாலை 1;

கோதுமை 2 கிலோ; பச்சரிசி 10 கிலோ;; கருப்பு உளுந்து 500 கிராம்; கருப்பு எள் 200 கிராம்; தலை வாழை இலை 20 நம்பர்; .; 10.ம் நம்பர் நூல்கண்டு 1.

பாலிகை 5 நம்பர்; பாலிகை தெளிக்க நெல்; எள், உளுந்து, பயறு. கடுகு ஒவ்வொன்றும் 20 கிராம்; ; பசும் பால் 250 மில்லி;
உதக சாந்தி குடத்துக்குள் போட ஏலக்காய் பவுடர், க்ராம்பு; பச்சை கல்பூரம்; வெட்டி வேர், விலாமிச்சை வேர்; ;

பித்தளை குடம் 1: பித்தளை சொம்பு ( ஒரு லிட்டர் கொள்ளலவு) 2.நம்பர்;
பஞ்சபாத்திர உத்திரிணி 1: தாம்பாளம் 4; கிண்ணங்கள் 4; பாக்குமட்டை கின்னம் 10 நம்பர்; ;
ஹோமத்திற்கு நெய் 500 கிராம்; ஹவிஸ் 100 கிராம்; விசிறி 1. சிராய் தூள் 5 கிலோ; விராட்டி 20 நம்பர்; கற்பூரம் 1 பாக்கெட்; தீப்பெட்டி 1; கத்தி-1;; அரிசி மாவு;. பிக்ஷா தாம்பாளம் 2; டபரா-1.

தீபம் 1: நல்லெண்ணய் தீபத்திற்கு; திரி; தூபக்கால்; தீபக்கால்;; கற்பூர கரண்டி; ஊதுபத்தி 1 பாக்கெட்; ;மணி.
உட்கார தடுக்கு 12 நம்பர்; ஒன்பது ஐந்து முழ வேட்டி 12 நம்பர்; ; 4 முழ வேட்டி 4 நம்பர்; செம்பு பஞ்சபாத்ர உத்திரிணி 10.

வெள்ளி பூணல், தங்க பூணல் ; அம்மி-1; ப்ரும்மோபதேச பட்டு; 1;
சுண்டல். , அப்பம் நைவேத்தியத்திற்கு..; மாந்தோல் கொஞ்சம். தர்ப்பை; ஹோம குச்சி;
பொரசம்குச்சி -100;. ஹாரத்தி கரைசல், தாம்பாளம்.

உபநயனத்திற்கு அம்மான் சீர் வரிசை செய்ய வேண்டியது. வெள்ளி பூணல்; தங்க பூணல்; வெள்ளி பஞ்சபாத்ர உத்திரிணி; வெள்ளி தாம்பாளம்; ப்ரும்மோபதேச பட்டு;
பருப்பு தேங்காய், ஆசீர்வாத வேஷ்டி, புடவை. வெற்றிலை. பாக்கு, பழம், புஷ்பம், மஞ்சள். குங்குமம்;சந்தனம்,
.கை முறுக்கு;
அதிரசம், லட்டு, .அல்லது சோமாசி.. கை முறுக்கு அதிரஸம் லட்டு எவர்சில்வர் டப்பிகளில் வைக்க வேண்டும்.

அம்பட்டனை வரசொல்லி க்ஷவரம் செய்ய சொன்னால் அவனுக்கு வேட்டி, தக்ஷிணை கொடுக்க வேண்டும்.
முன்னாலேயே வர சொல்லி சொல்ல வேண்டும். சலூனுக்கு வண்டியில் சென்றும் தலை முடி வெட்டிக்கொண்டும் வரலாம்.

பிக்ஷை அரிசி முதலில் தாயார் தான் போட வேண்டும். பிக்ஷை போடும் ஸ்த்ரீகள் மடிசார் புடவையுடன் பிக்ஷை போட வேண்டும்.
அவர்களுக்கு தக்ஷிணை , தாம்பூலம், புஷ்பம், சந்தனம், கும்குமம், கை முறுக்கு, லட்டு கொடுக்க வேண்டும்.

பிக்ஷை அரிசியை உங்கள் வீட்டு சமையல் செய்யும் அரிசியுடன் சேர்த்து வைத்துக்கொண்டு உபயோகிக்கவும்.

ஸந்தியாவந்தனம் தினமும் செய்வதற்கு தினமும் ஒரு வாத்யாரை வரச்சொல்லி பையனுக்கு மனப்பாடம் செய்து வைக்க வேண்டும். தலை ஆவணி அவிட்டம் ஆன பிறகு தான் ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம்

சொல்லி கொடுக்க வேண்டும். தற்போது சந்தியா வந்த்னம், ப்ருஹ்ம யக்ஞம்
ஸமிதா தானம் மட்டும் வாத்தியார் ஸ்வரத்துடன் சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்..

பிரும்மோபதேசம் செய்பவர் சந்தியா வந்தன காயத்ரீ ஜபம் தவிர பத்தாயிரம் காயத்ரீ ஜபம் தனியாக தினமும் ஆயிரம் வீதம் காலை 8-30 மணி முதல் 10 மணிக்குள் செய்ய வேண்டும்.

நாந்தி ரித்விக்குகளுக்கு அரிசி வழைக்காய் கொடுப்பதாக இருப்பவற்களுக்கு: 12 வாழைக்கய், ஆறு கிலோ பச்சரிசியும், பாசி பருப்பு 500 கிராம் தேவை.

புகைபடம் எடுப்பதானால் அதற்குள்ள ஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.
குல தெய்வத்திற்கு அபிஷேகம், வேண்டுதல், ப்ரார்த்தனை , கோயிலுக்கு காணிக்கை செய்ய வேண்டும்.

சங்கராசாரியாரிடம் சென்று பத்ரிக்கை வைத்து அநுக்கிரஹம் பெற்றுக்கொண்டு வர வேண்டும். சுமங்கலி ப்ரார்தனை, சமாராதனை செய்ய வேண்டும்..

சிறிய சைஸ் கை முறுக்கு, லட்டு பாக்கெட் வருபவர்களின் எண்ணிக்கை பார்த்து ஆர்டர்செய்யவும்.
வீட்டில் செய்வதாக இருந்தால் ஷாமியானா, டைனிங் டேபிள், நாற்காலி, பென்ச், குடிக்கும் தண்ணிருக்கான கப் ,அன்பளிப்பு,

பொருட்கள், அன்பளிப்பு பைகள் , முதலியவைகள் தேவைக் கேற்றார் போல் வாங்கவும்.//ஆர்டெர் கொடுக்கவும்.

உப நயனம்:-1 அனுக்ஞை; 2விக்னேஸ்வர பூஜை 3. சங்க்கல்பம் 4 கலச ஸ்தாபனம் 5.வ்ருண பூஜை 6. புண்யாஹாவசனம்; 7 கிரஹ ப்ரீதி 8. முன்பே செய்யா விட்டால் அன்னப்ராஸனம் 9.நாந்தி
10. ரக்ஷாபந்தனம். 11. அங்குரார்பணம் 12. செளல ஹோமம்,13. செளள திக் வபனம்; 14.கள்ள பூணல்; 15. குமார போஜனம்; 16. முடி வெட்டுதல்,
17. அம்மி; சமித்து,18 வஸ்த்ரம், 19மெளஞ்சி,20 மான் தோல் 21 ப்ரோ க்ஷணம்; 22.ஹஸ்த கிரஹனம்; 23.பரி ரக்ஷணம்.24.ஹோமம்; 25. குரு உபதேசம்
26.உப நயன சங்கல்பம்;27.உப நயன அனுக்ஞை; 28. கிரஹ ப்ரீதி 29. பாத
ப்ரக்ஷாளனம்;30. ப்ருஹ்மோபதேசம்
31. பலாச தண்ட தாரணம்; 32. ஸூர்ய தரிசனம்;33. ஸமிதாதானம்; 34. குரு சிஷ்ய ஸம்வாதம்; 35. பிக்ஷாசரனம்;
36. ப்ரணவ ஸ்ரத்தா மேதா பூஜை; 37. பலாச ஹோமம்; 38. குரு தக்ஷிணை; 39. ஆசீர்வாதம்; 40. ஹாரத்தி.
பூர்வாங்கம்:- காலையில் எழுந்து ஸ்நானம் செய்து விட்டு, நெற்றிக்கு இட்டு கொண்டு மடி வஸ்த்ரம் கட்டி கொண்டு, சுவாமிக்கும்
பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்து விட்டு
பையனின் பெற்றோரும் ஸ்நானம் செய்து விட்டு பஞ்ச கச்சம், மடிசார் கட்டிகொண்டு, நெற்றிக்கு இட்டுகொண்டு ஸந்தியா வந்தனம் செய்து விட்டு,
சுவாமிக்கும், பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்து விட்டு ஆசமனம் செய்து விட்டு, அனுக்ஞை= பர்மிஷன் பெற்றுக்கொண்டு விக்னேஸ்வரருக்கு 16 உபசார பூஜை செய்து விட்டு, உதக சாந்தி சங்கல்பம், கும்ப ஸ்தாபனம்;
16 உபசார பூஜை. செஉது உதக சாந்தி ஜபம் 6 சாஸ்திரிகளை வரித்து புண்யாஹ வசனம் செய்து
ப்ரோக்ஷணம், ப்ராஸ்னம் , ஸ்நானம் குழந்தைக்கு, பிறகு கிரஹ ப்ரீதி, நாந்தி; ஶோபன தேவதா ஆவாஹனம்,
இதற்கு முன் அன்னப்ராஸ்னம் செய்யாவிட்டால் இப்போது அன்ன ப்ராஸ்னம் செய்து, பிறகு கையில் கங்கணம் கட்டி, ( ப்ரதிசர பந்தம்) =ரக்ஷா பந்தனம் கட்டி கொள்ள
கும்ப ஸ்தாபனம், வருண ஆவாஹணம்; 16 உபசார பூஜை, ருத்ர, வருண ஸூக்தங்கள் ஜபம் செய்து கையில் ரக்ஷா பந்தனம் கட்டி கொள்ள வேண்டும்.

பிறகு அங்குரார்பனம்=பாலிகை தெளித்தல்;
யஜுர் வேதத்திற்கு 5பாலிகை; புண்யாஹ வாசனம், ப்ரோக்ஷணம்; ஓஷதி ஸூக்தம் ஜபித்து பாலிகை பூஜை செய்து அதில் பாலிகை தான்யங்கள் போட வேண்டும்.

பிறகு மடிசார் கட்டிய பெண்களும் பாலிகை தான்யம் போட வேண்டும்.சிலர் பால் மாத்ரம் தான் விட வேண்டும் எங்கின்றனர்.

எட்டு மந்திரங்களால் செளள ஹோமம்,ஜயாதி ஹோமம் செய்து , தலையில் 4 பக்கமும் முடி வெட்ட வேண்டும்.
பிறகு ஸ்நானம் செய்து புது வஸ்த்ரம் தரித்து
பூணல் தரித்து, குமார போஜனம்; அம்மியில் நின்று மந்திரம் சொல்லுதல்; தங்க வெள்ளி பூணல் அணிதல், மெளஞ்சி, மான் தோல் அணீந்து

குரு சிஷ்ய ஸம்வாதம்; குரு உபதேசம்., உப நயன சங்கல்பம், ஹோமம்; ப்ருஹ்மோப தேச அனுக்ஞை; கிரஹ ப்ரீதி; ப்ருஹ்மோபதேசம்;

பலாச தண்டம் தரித்தல்; சூர்ய தரிசன மந்திரம்
சமித்தா தானம்; பிக்ஷாசரணம்; ப்ரணவ ஶ்ரத்தா மேதா பூஜை; அனுக்ஞை; விக்னேஸ்வர பூஜை;
கலச ஸ்தாபனம்; 16 உபசார பூஜை; வஸ்த்ர தாரணம்; பலாச ஹோமம், குரு தக்ஷிணை; ஈசானாதி ஸ்தம்ப பூஜை; ஆசீர்வாதம், ஹாரத்தி;


அன்றன்று மனதினாலும் வாக்கினாலும் உடலினாலும் செய்த பாபங்களை அகற்றுகிற்து இந்த கர்மா .பாபம் அகன்ற பிறகு தான் கர்மாக்ளை செய்தால்

அது பூர்ண பலன் தரும்.பாபங்களை அகற்றி புண்யத்தை தரும் புண்ய கர்மா சந்த்யா.நாம் அடைந்த உயர்ந்த ஜன்மாவிலிருந்து தாழ்ந்த ஜன்மாவை அடையாத படி


நம்மை ரக்*ஷிக்கிரது ஸந்த்யை. எனும் இந்த நித்ய கர்மா.


இதன் கருத்தையும் மந்த்ர அர்த்தத்தையும் உணர்ந்து அநுஷ்டாணம் செய்தால் சித்த சுத்தி, ஞானம்.ஷாந்தி மோக்ஷம் முதலிய சிற்ந்த பலன்களை பெறலாம்.


காயத்ரியும் அர்க்கியம் விட்ட பின் விதிக்கபட்டுள்ள அஸெள ஆதித்யோ ப்ரும்மா என்ற உபாஸனமும் மோக்*ஷ பலன் தருகிறது.


""அக்னிஸ்ச"" ""ஆபஹ"" ""ஸூர்யஸ்ச"" என்பவைகளில் கடைசியில் ஸ்வாஹா என்கிறோம். அது கர்ம ஆசாரத்திற்கு வழிக்காட்டியாம். ப்ராணாயாமம்
 
யோகத்திற்கு வழி காட்டி. அர்க்யமளித்தல் பக்தியின் ஒரம்சம். ""அஸோ ஆதித்ய:"" என்ற த்யானம் க்ஞானத்திற்கு வித்து .பிறவி கடலை தாண்ட வைப்பவை.


பேரின்பத்திற்கு ஸாதநமாக ஸந்த்யை அமைந்துள்ள்து.


குமார ஸம்பவத்தில் பரமசிவனும் ஸந்த்யை செய்ததாக வர்ணிக்கிறார். ராமர். க்ருஷ்ணர். முனிவர்கள். யுத்த ஸமத்திலும் கெளரவர் சந்த்யா காலத்தில் யுத்தத்தை


நிருத்தி விட்டு சந்த்யை செய்துவிட்டு பிறகு இரவிலும் யுத்தம் தொடர்ந்தனர். தீட்டு வந்த போது கூட செய்ய வேண்டிய கர்மா ஸந்த்யை. சுத்த்னோ அசுத்தனோ


காலத்தில் ஸந்த்யை செய்ய வேண்டும்.


காலம் கடந்து விட்டது.இனி செய்து பயனில்லையே என் விட்டுவிடக் கூடாது. அடுத்த வேளை செய்ய வேண்டிய சந்தியா கர்மா வரை விட்டு போனதை செய்ய


வேண்டும். நோய் வாய் பட்டு படுக்கையில் படுத்திருந்தால் அவனுக்காக அவனது நெருங்கியவர் அந்தந்த காலத்தில் சந்த்யை செய்து நோயாளி கையில் சிறிது


ஜலம் விட வேண்டும்.


ஒருவனை ஊருக்கு வழி கேட்கிறோம். அவன் வழியை கூறியவுடன் அவனுக்கு நன்றி கூறுவது நாகரீகம்.. உலகிலும் நம் உடலிலும் உள்ள அசுத்தங்களை


அகற்றுகிறார் சூரியன். ஜீவ கலையை ஊட்டுகிறார். மழையை அளிக்கிறார் .இருளை நீக்கி ஒளியை அளிக்கிறார்.. அத்தகைய சூரியனுக்கு நன்றி செலுத்துவதே


ஸந்த்யை.


நமக்கு சந்த்யா காலத்தில் சந்த்யா வந்தனம் செய்ய வேண்டும் என்பது பகவானது ஆக்ஞை. அதை விட்டு விட்டு மற்றதை செய்தால் அவர் கோபத்திற்கு


ஆளாகிறோம். ஏற்ற காலத்தில் விதை விதைத்தால் ந்ற்பலன் உண்டு.ஒரு ராகம் பாட ஒரு காலம் உண்டு. நீதி ஸ்தலத்தில் குறித்த காலத்தில் நாம் இல்லை


என்றால் வழ்க்கு தள்ளி போட படும். அல்லது எதிரிக்கு ஸாதகமாக தீர்ப்பு சொல்லப்படும். வங்கியில் குறிப்பிட்ட காலத்தில் தான் செல்ல முடியும். வண்டியில்


தெருவில் செல்லும் போது சிவப்பு விளக்கு எரிந்தால் வண்டியை நிறுத்துகிறோம் .


இங்ஙனம் மனிதர் இயற்றிய சட்டத்திற்கு உட்பட்டு வேலை செய்கிறோம். நமது இஹபர நன்மைக்காக பரமாத்மா இட்ட கட்டளையான ஸந்த்யையை விடலாமா/


போதாயன ரிஷி கூறுகிறார்: : பராசக்தியான ஸந்த்யை உலகை படைத்தது. மாயையை கடந்தது .நிஷ்கலமானது ஈஸ்வரியானது. கேவல சக்தியானது.


மும்மூர்த்திகளிடமிருந்து உண்டானது.

மூன்று காலத்திலும் வெவ்வேறு ரூபமாக (அந்த்ந்த காலத்தில் அந்தந்த ரூபிணியாக)த்யானம் செய்து ஒவ்வொரு வேளையிலும் ஏக ரூபமாய் இருப்பதாகவும்


த்யானம் செய்ய வேண்டும். இதற்கு தான் ஸந்த்யை என்று பெயர். சிறிய மனதால் த்யாநம் செய்ய முடியாது. ஆதலால் முதலில் ஸூர்யனையும். ஸூர்ய


மன்டலத்தில் காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி, சமஷ்டி காயத்ரி என்றும் பல வாறாக த்யானம் செய்ய வேண்டும்.


ஒன்றையே மூண்று வேளையிலும் நித்யம் த்யானம் செய்தால் அதே மனதில் தங்கிவிடும் ஒன்று ஒன்றாக த்யானம் செய்தால் ஒன்றில் நிலைக்காமல் த்யான


சக்தி வ்ருத்தியாகும் .நாள் ஆக ஆக இந்த உருவங்ளையும் விட்டு விட்டால் மனம் ஒன்றையும் நினையாமல் அசைவற்று நிற்கும்.மநோ வ்ருத்திகள் ஒழிந்தால்


தான் க்ஞானம் நிலைத்து நிற்கும்..முக்தி உண்டாகும்.படி படி யாக மோக்ஷ ஸாதநமே.


ஸந்த்யா வந்தனத்திற்கு பாஹ்ய அங்கம்: ஸ்நாநம்; பஞ்சகச்சம் அணிதல்; புண்ட்ரம் தரித்தல்; சுத்தமான பூணல். குடுமி; ; பூர்வாங்கம்: ஆசமனம், சங்கல்பம்,


மார்ஜனம், ப்ராசனம்;ப்ரோக்*ஷனம், ஜப ஸங்கல்பம் ;ப்ராணாயாமம்; உத்திர அங்கம்+ நவகிரஹாதி தர்பணம்;ப்ரானாயாமம். திக் வந்தனம்.ஸந்த்யா கர்மாவின் ஜீவ


நாடி=அர்க்ய ப்ரதானம், அஸாவாதித்யோ என்று செய்யும் த்யானம்; காயத்ரீ ஜபம், உபஸ்தானம்.


எதையும் " இதை எதற்காக செய்கிறோம்; என்ன பயன் பூஜிக்கபடும் தெய்வம் எது அது எத்தகைய குணமுள்ளது." என்பவைகளை நன்கறிந்து செய்ய வேண்டும்.


ஆசமனம்: மூன்று முறை ஜலத்தை ப்ரும்ம தீர்த்தத்தால் உட்கொண்டு இரு முறை உதட்டை துடைத்து கேசவாதி நாமாக்களை கூறி குறிப்பிட்ட அவயவங்களை


தொடுவது ஆசமனம். எனப்படும். கை விரல்களின் நுனியால் ஜலம் விடுவது தேவ தீர்த்தம். கட்டை விரல் பக்கமாக விடுவது பித்ரு தீர்த்தம்.அடிப்ப்ரத்தால்


விடுவது ப்ரும்ம தீர்த்தம். சுண்டு விரல் பக்கமாக விடுவது ரிஷி தீர்த்தம்.


ஒவ்வொரு கர்மாவின் ஆரம்பத்தி லும் முடிவிலும் ஆசமனம் அவஸ்யம் செய்ய வேண்டும். ஆசமனத்தில் பல வகை உண்டு. அவரவர் முனோர்கள் செய்து வந்த


படியே செய்யவும். புதிதாக ஒன்றை ஆரம்பிக்கக் கூடாது. ஜலத்தில் நின்று க்கொண்டு ஆசமனம் செய்தால் முழங்கால் மறையும் அளவிற்கு ஜலத்தில் நிற்க


வேண்டும். இடது கையால் ஜலத்தை தொட வேண்டும். வலது கையால் ஆசமனம் செய்யவும்.


குளம் நதிகளில் உட்கார்ந்து செய்வதானால் வலது காலை கரையில் வைத்து கொண்டு உட்கார்ந்து இடது காலை ஜலத்தில் வைத்துகொண்டு இடது கையால்


ஜலத்தை தொட்டுக்கொண்டே வலது கையால் ஆசமனம் செய்ய வேண்டும். வீட்டில் செய்வதானால் இரு கால்களையும் குத்திட்டுகொண்டு இரு


முழங்கைகளையும் அதற்குள் வைத்துகொண்டு ஆசமனம் செய்ய வேண்டும்.


சுண்டு விரலையும் மோதிர விரலையும் நீட்டி விட்டு மற்ற மூண்று விரல்களையும் சிறிது வளைத்தால் உள்ளங்கை குழிவாக இருக்கும்.அதில் ஜலத்தை


எடுத்துக்கொண்டு அந்த ஜலம் இருதயம் வரை போகும் அளவு உட் கொள்ள வேண்டும்.முதலில் அருந்தியது உட்சென்ற பிறகே மற்றுமிருமுறை உட் கொள்ள


வேண்டும் மூன்றையும் சேர்த்துக் குடிக்கலாகாது.. அந்த ஜலம் ஒரு உளுந்து முழுகும் அளவு இருக்க வேன்டும்.


அந்த ஜலம் உஷ்ணமாகவோ நுரை உள்ளதாகவோ உப்பு அல்லது வேறு எந்த ரசம் கலந்ததாகவோ இருக்ககூடாது. குழாயில் அல்லது மேலிருந்து விழும் நீரால்


ஆசமனம் செய்ய கூடாது. ஸமுத்திர ஜலத்தால் ஆசமனம் செய்ய கூடாது தர்பணம் செய்யலம்.வைதீக ஸத் கர்மாக்களை ஆரம்பிக்கும் போது ஆசமனம்


செய்தால் அது இந்திரியங்களை சுத்தமாக்கி சுறுசுறுப்புடன் அதை செய்ய யோக்யதையை உண்டு பண்ணுகிறது. பிறர் ஆசமனம் செய்த மிகுதி ஜலத்தால்
ஆசமனம் செய்ய கூடாது.
.

இந்த ஆசமனம் தைத்ரீய ஷாகையில் ப்ரும்ம யக்ஞத்திற்காக வேதங் கூறியதை பின் பற்றி மஹரிஷிகளால் விதிக்கப்பட்டது.


கேசவ நாராயண என்று கட்ட விரலால் வலது,இடது கன்னங்களையும் ,மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும், விஷ்ணோ


மதுஸூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்கையும், த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதரா ஹ்ருஷீகேச


என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும், தாமோதரா என்று கூறி எல்லா விரல்களாலும் சிரசிலும்


தொட வேண்டும்.


எந்த கர்மாவையும் ஸங்கல்பம் செய்து கொண்டு தான் ஆரம்பிக்க வேண்டும். விநாயகரை நாடி தலையில் குட்டி கொள்ளுதல். ப்ராணாயாமம் செய்தல்


பின்னர் வலது துடை மீது ,இடது கை கீழும் வலது கை மேலும் வைத்துக்கொண்டு கால தேஸங்களை கூறி இப்பயனுக்காக இந்த கர்மாவை செய்கிறேன் என்பதே


சங்கல்பத்தின் கருத்து.
ப்ராணாயாமம்.
நமது சரீரத்தில் ஸஞ்சரிக்கும் வாயுவை அடக்குவது ப்ராணாயாமம் என்ப்படும்.ப்ரதி தினம் நம் முயற்சி இல்லாமல் 21700 மூச்சு விட்டு கொண்டு


இருக்கிறோம்.தங்கத்திலிருக்கும் தோஷம் தீயில் வைத்து ஊத ஊத செல்கிறது. ப்ராணா யாமம் செய்ய செய்ய நம் பாபம் அகலுகிறது.கல்ப ஸூத்ரமும்


கர்மாகளிடையே "ப்ராயஸ்சித்தம் ப்ராணாயாமம்" என்று இதை ப்ராயஸ்சித்தமாக வர்ணிக்கிறது தர்ம ஸாஸ்த்ரமும் தினமும்16 முறை ப்ராணாயாமம் முறையாக


செய்பவர் ஸகல பாபமும் அகன்று சுத்தமாவர் என்கிறது.


ஆதலால் சந்த்யா வந்தனத்திலும் ஜபத்திலும் இது விதிக்கபட்டுள்ளது.அதற்குறிய மந்த்ர ஜபத்துடன் மூச்சை அடக்குவது ஸகர்ப்ப ப்ராணாயாமம்

. ஜபம்
தியானம் இல்லாமல் மூச்சை மாத்ரம் அடக்குவது அகர்ப்ப ப்ராணாயாமம்.கர்ம அங்கமாக செய்யும் போது சகர்பமாகவும், மனதை அடக்க அகர்பமும்


செய்யலாம்.வலது மூக்கை கட்டை விரலால் பிடித்துக்கொண்டு இடது மூக்கால் உள்ளே வாயுவை இழுப்பது பூரக ப்ராணாயாமம்.


இரு மூக்கையும் அடைத்து மூச்சே விடாமலிருப்பது கும்பகம்.இடது மூக்கை மோதிர விரலால் பிடித்துக்கொண்டு வலது மூக்கால் காற்றை வெளியே விடுவது


ரேசகம் எனபடும். இந்த பூரகம். கும்பகம், ரேசகம் மூன்றும் சேர்ந்தே ஒரு ப்ராணாயாமம் எனப்படும். பூரகத்திலும் ரேசகத்திலும் மெதுவாக ஸப்தம் கேளாமல்


வாயுவை இழுத்து விட வேண்டும்.


பூரக ப்ராணாயாமத்தில் நாபியின் நடுவில் ப்ரஹ்மாவையும் கும்பகத்தில் ஹ்ருதயத்தில் விஷ்ணுவையும் ரேசகத்தில் நெற்றியில் சிவனையும் த்யானம் செய்ய


வேண்டும்.ப்ராணாயாமம் செய்யும்போது , ஆள் காட்டி விரலையும் நடு விரலையும் மடக்கிகொண்டு கட்டை விரலாலும் , மோதிர,சுண்டு விரல்களால் மூக்கை


பிடித்துகொண்டு ப்ராணாயாமம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ப்ராணாயாமம் முடிந்த பின் வலது காதை தொட வேண்டும். வலது காதில் கங்கை இருப்பதால்


கையை சுத்தம் செய்து கொள்கிறோம்.


ப்ராணாயாமத்தில் முதலில் ப்ரணவம்.பிறகு ஏழு வ்யாஹ்ருதிகள். பிரகு காயத்ரி. அதன் பிறகு காயத்ரி ஸிரஸ். என்ற நான்கு மந்த்ரங்கள்


கூறுகிறோம்.ப்ரணவம் சுத்த ப்ருஹ்மத்தையும், ஏழு வ்யாஹ்ருதீகள் ப்ரணவத்துடன் கூறப்படுவதால் பரமனால் படைக்கப்பட்டு பரமணாகவே உள்ள ஏழு


லோகங்களையும், தலையை இழுத்தால் வாலும் வருவது போல் கீழே உள்ள பாதாளாதி ஏழு லோகங்களும் ஆக 14 லோகங்களையும்


காயத்ரியை கூறுவதன் மூலமாக நமது புத்திக்கு, ஷக்தி அளித்து தூண்டுபவரான பரமாத்மாவையும் காயத்ரீ ஸிரஸ் மூலம் ஜலமாகவும், ஜ்யோதிஸாகவும்,


ரஸமாகவும்,முவ்வுலகமாயுள்ள பரப்ருஹ்மத்தையே த்யானம் செய்கிறோம்.
மார்ஜனம்:

எல்லா வேதத்தையும், யோக சாஸ்ரத்தையும் அனைத்து நன்மைகளையும் குறுக்கி சொல்லப்பட்டது தான் சந்த்யா வந்தனம். இன்னும் ஒரு செய்தி இதை பற்றி சொல்லஆசை படுகிறேன் - ஆசமனம் செய்யும் பொது உட்காரும் விதம் ஒரு யோகா சாஸ்த்ரத்தை குறிக்கிறது - நமது கால்களை மடக்கி நம் எடையை பாத நுனியில் தாங்குவது குண்டலினி சக்தியை கொண்டுவர எளிதாகுமாம் - இதை ஒட்டி பிராணாயாமம் செய்தால் மிகுந்த பலன் அளிக்கும். இது பயிற்சி செய்ய செய்ய தான் பலன் தெரியும் - இது போன்று நிறைய தத்துவங்கள் சந்த்யா வந்தனத்தில் மறைந்திருக்கிறது.



உபநயனம் என்றால் பிரம்மத்திற்கு சமீபத்தில் ஆச்சார்யன் சிஷ்யனை அழைத்துச்செல்லுதல் என்று அர்த்தம்.

1 .இந்த சுப திதியில் இன்ன நக்ஷத்திரத்தில் இன்ன ராசியில் பிறந்தவனும் இன்ன சர்மா என்ற பெயருடையவனுமாகிய இந்த குமாரனுக்கு உப.நயன கர்மாவின் அங்கமாக உதக சாந்தி ஜப கர்மாவை செய்கிறேன்.

2. அங்குரார்பண கர்மாவை செய்கிறேன் .(பாலிகை)
3. ப்ரதிஸரபந்த கர்மாவை செய்கிறேன். (கையில் கயிறு கட்டுதல்).
4. நாந்தி முக பித்ரு தேவதைகளுக்கு ப்ரீதி கர்மா செய்கிறேன்..

இவ்வாறு ஸங்கல்பித்து பூர்வாங்க கர்மாக்களை முடித்து விட்டு உபநயன
கர்மாவை ஆரம்பிக்க வேன்டும். .

வேதத்தை கற்பதற்கு வேத விதிப்படி செய்ய வேன்டிய ஸம்ஸ்காரம் உபநயனம் எனப்படும். எந்த கர்மாவில் ஆசாரியனால் வேத வித்தைக்காக நல்ல முஹூர்தத்தில் மாணவன் தன்னருகில் கூட்டிக் கொள்ளபடுகிறானோ அதற்கும் உபநயனம் எனப்பெயர்.

தாயிடம் முதல் பிறப்பும், உபநயனத்தின் போது மெளஞ்சி பந்தனத்தால்
இரண்டாம் பிறப்பும் ஏற்படுவதால் த்விஜர்கள் என் அழைக்கபடுவர்.

உபநயன ஸ்தானத்தில் ஸ்த்ரீகளுக்கு விவாஹம் கூறப்பட்டுள்ளது.

ஞானமின்றி உபநயனம் செய்து வைப்பவனும் உபநயனத்தால் ஞானத்தை நாடாதவனும் இருளிலிருந்து இருளிலேயே புகுவர் என் வேதம் கூறுகிறது.

புண்யாஹ வசனம்.;- பூமியை பசுஞ்சாணியால் மெழுகி அதன் மேல் நெல்லை பரப்பி அதன் மேல் அரிசியை பரப்பி அதன் மேல் பித்தளை சொம்பில் தண்ணீர் ஊற்றி மாவிலை, தேங்காய, கூர்ச்சம் வைத்து பவித்ரமணிந்து ,தர்பையிலமர்ந்து ஸங்கல்பம் செய்க

.மங்கள கரமான இந்த திதியில் ஆத்ம சுத்திக்காகவும் எல்லா உபகரணங்களின் சுத்திக்காகவும் சுத்தி புண்யாஹவசனம் செய்கிறேன்.என்று சங்கல்பித்து தென் மேற்கு திக்கில் தர்பையை போட்டு விட்டு ஜலத்தை தொடவும்…

ப்ரதிஷ்டை செய்த கும்பத்தில் இமம் மே வருண:, தத்வாயாமி என்ற இரு மந்திரங்களால் வருண தேவனை ஆவாஹணம் செய்க. .பிறகு ஆஸனம், பாத்யம்,அர்க்யம், ஆசமணீயம், ஸ்நானம், ஸ்நானத்திற்கு ஆசமணியம், வஸ்த்ரம், உபவீதம், சந்தனம், குங்குமம், அக்ஷதை, புஷ்ப அர்ச்சனை, தூபம், தீபம், நைவேத்யம்,,தாம்பூலம், கற்பூரம், மந்திர புஷ்பம், ஸுவர்ண புஷ்பம்.
இவ்வாறு 16 உபசாரங்கள் செய்க.

பிறகு நான்கு ப்ராமணர்களை இந்த புண்யாஹவசன கர்மாவில் உங்களை ருத்விக்காக இருக்க ப்ரார்திக்கிறேன். என்று ஜபத்திற்கு அனுமதி பெற வேண்டும்.

. உங்களால் அநுமதிக்க பெற்று புண்யாஹ வசனம் செய்விக்கிறேன். அங்ஙணமே மந்திர ஜபம் செய்யலாம்.என்று அவர்கள் அனுமதி கொடுக்க வேண்டும்..

இக்கர்மாவுக்கு இது சுப தினம் என்று நீங்கள் கூறியருளுதல் வேண்டும் என ப்ரார்த்தனை. எல்லா உபகரணங்களுக்கும் சுத்தி பெரும் காரியங்களுக்கு நீங்கள் ஆசி கூறுதல் வேண்டும்

.எல்லாம் குறைவின்றி பரிபூர்ணமாக நடக்க ஆசி; இந்த நாள் மங்களம் நிறைந்த நாள் என ஆசி; இந்த கர்மா மங்களமானதென ஆசி; சாந்தியும், புஷ்டியும், ஸந்தோஷமும், நிறைவும், விக்கினமின்மையும், ஆயுளும், ஆரோக்கியமும் கூடியிருக்கட்டும்;

அக்னி திக்கில் என்ன தீங்கு உன்டோ அது அழியட்டும். எல்லா சம்பத்துகளும் கூடியிருக்கட்டும். எல்லா மங்களங்கலும் கூடியிருக்கட்டும். இவை அனைத்தும் ஒருங்கே அமைய ப்ராமணர்கள் ஆசீர்வதிக்க வேண்டும். பின்னர் ப்ராமணர்களுடன் பவமான மந்திரங்கள் ஜபிக்க பட வேண்டும்..

ஜபித்து முடிந்தவுடன் தத்வாயாமி ப்ருஹ்மணா வந்தமானஸ் ----------ப்ரமோஷி; என்ற மந்திரத்தால் வருணனை யதாஸ்தானம் செய்ய வேண்டும்.

கும்பத்திலிருந்து ஜலம் எடுத்து ப்ரோக்ஷிக்க வேன்டும். தீர்த்தம் உட்கொள்ளுதல் .

3. யக்ஞோபவீத தாரணம். இந்த சுப திதியில் , இன்ன நக்ஷதிரத்தில் இன்ன ராசியில் பிறந்தவனும் இன்ன சர்மா என்ற பெயர் கொண்டவனும் ஆன இந்த குமாரனுக்கு உபநயனம் செய்விக்கிறேன் என ஸங்கல்பம்.

இந்த குமாரனுடைய உபநயன கர்மாவில் பூணல் சுத்தியின் பொருட்டு புண்யாஹ வசனம் செய்கிறேன். என்று ஸங்கல்பித்து புண்யாஹ மந்திர ஜபம் செய்து அந்த தீர்தத்தால் பூணலை ப்ரோக்ஷித்து பெரியோர்களின் ஆசி பெற்று மாணவனுக்கு மெளனமாய் ஆசமனம் செய்விக்க.

இந்த சுப திதியில் இன்ன நக்ஷதிரத்தில் இன்ன ராசியில் பிறந்தவனும் இன்ன சர்மா என்ற பெயர் கொண்டவனுமான இந்த குமாரனுக்கு ஸ்ருதிகளிலும்
ஸ்மிருதிகளிலும் விதிக்கப்பெற்ற நித்திய கருமங்களை

அனுஷ்டிக்கும் தகுதி ஏற்படுவதற்காகவும் பிரம்ம தேஜஸ் விருத்தி அடைவதற்காகவும் பூணலை அணிவிக்கிறேன் என்று ஸங்கல்பித்து , கிரகங்களுக்கு ப்ரீதியாக தானம் செய்க.

ஆசாரியன் தன் கைகளையும் குமாரன் கைகளுடன் சேர்த்து பூணலை பிடித்து மந்திரத்தை குமாரனும் கூட சொல்லியே தரித்துக்கொள்ள செய்ய வேண்டும்..

பரிசுத்தியளிக்க கூடியவற்றுள் சிறந்ததும் ஆதியில் ப்ருஹ்மா தோன்றும் போதே அவருடன் தோன்றியதும் , ஆயுளையும் முதன்மையையும் அளிக்க கூடியதுமான வெண்மையான பூணலை தரிக்கிறேன். ஞான ஒளியும் பலமும் இதனால் நிலை பெற வேண்டும்.

மெளனமாக ஆசமனம். யக்ஞோபவீத தாரண வேளை நல்ல வேளையாக இருக்க வேண்டும் என்று பெரியோர்கள் அனுக்கிரஹத்தை ப்ரார்த்திக்க, அவர்கள் நல்ல முஹூர்த்தமாக அமையட்டும் என ஆசீர்வதிக்க வேண்டும்..

பூணலை அதற்குறிய மந்திரத்தை மாணவனை சொல்லச்செய்து அவனுக்கு போட வேண்டும். குமார போஜனத்தில் காயத்ரியை சொல்லி ஆசாரியனே ப்ரோக்ஷிக்க வேன்டும் என்று செளனகர் கூறி உள்ளார்.
4. குமார போஜனமும் வபனமும்.
செளளம் ====குடுமி வைத்தல். மூன்றாவது வயதில் செய்ய வேன்டிய கர்மா.இது. இதற்கு பூர்வாங்கமாக உதக சாந்தி, அங்குரம், ப்ரதிசரம், நாந்தி இவைகளை செய்து முடித்து செளளம் செய்யவேண்டும்.

இப்போது உப்பு, புளி, காரம் இல்லாமல் ஆஹாரம் செய்து வைக்க வேன்டும். .ஸங்கல்பம் :-இன்ன நக்ஷதிரம், ராசியில், பிறந்த, பெயர் சர்மா உள்ள குழந்தையை செளள ஸம்ஸ்காரம் உள்ளவனாக செய்கிறேன்.

பிறகு உபநயனத்தின் போது மறுபடியும் ஆஹாரம், வபனம் உண்டு இப் போது பொங்கல், கருவடம், குழம்பு சாப்பிட வேண்டும். உபநயனத்தின் போது குமார போஜனம்

என்று இரு அல்லது ஒரு ப்ருஹ்மசாரிக்கு வஸ்த்ரமளித்து கூட உட்கார்ந்து சாப்பிட சொல்கிறோம். ஆனால் சாஸ்திரம் உப்பு புளிகளை சேர்க்க வேண்டாம் என்று கூறுகிறது.

ஆதலால் உபநயனத்தன்று செளளமும் சேர்த்து செய்ய வேண்டுமென்றால் இரண்டு முறை வபனம் இரண்டு முறை ஆஹாரம் செய்ய வேன்டும். . இம்மாதிரி நேரும் போது முதல் முறை சக்கரை,நெய்,பால், ஆகிய இவைகளால் போஜனம் செய்வித்து வபன மந்திரத்தை மாத்ரம் சொல்ல வேண்டும்.

பிராமணர்கள் உத்திரவு பெற்று விக்னேஸ்வர பூஜை செய்யவும். சங்கல்பம் செளள கர்மா செய்விக்கிறேன் என்று.விகேஸ்வர யதா ஸ்தானம், போஜனம்.

லெளகீக அக்னியை ப்ரதிஷ்டை செய்து வடபுறம் பாத்ர ஸாதனம் செய்யும்போது உஷ்ண ஜல பாத்ரம், சீதள ஜல பாத்ரம், தர்ப்பை, நெல் தான்யம், தர்பை கதிர், காளை மாட்டு சாணி, முள்ளம்பன்றி முள், , கத்தி இவைகளை மற்றவைகளுடன் சாதனம் செய்ய வேண்டும். ஆஜ்ய பாகம் வரையிளுள்ள பூர்வாங்கத்தை ((முகாந்தம்)) செய்து முடிக்க வேண்டும்.

குமாரனை தொட்டுக்கொண்டே தாதா ததாது முதல் 4 யஸ்த்வா முதல் 4 மந்த்ரங்களை கூறி ஹோமம் செய்ய வேண்டும். மந்த்ரார்த்தம்:-- தாதா,

ஈசானன் எங்களுக்கு செல்வத்தை தரட்டும். இஷ்டத்தை பூர்த்தி செய்யட்டும். ப்ரஜை முதலியவைகளை அளிக்கும் தாதாவே உலகத்தை படைத்தவர். அவரே யஜமானனுக்கு புத்ரனை அளிப்பவர் அவருக்கு ஹவிஸ்ஸை தருகிறோம். அவர், முன்னோர்களுக்கு தந்தது போல் எங்களுக்கும் செல்வம் தரட்டும். அவர் ஸத்ய ஸந்தர். பக்தரிடம் அன்பு கொண்ட அவரை த்யானம் செய்வோம். மற்ற அமரரும் நம் வீட்டில் அமரட்டும்.

யஸ்த்வா---ஹே அக்னே, அமராரன உம்மை மனதோடு துதிக்கிறேன். உண்ண உணவை தாரும். நற்கர்மாவை செய்பவருக்கு ஸுகத்தை அளிக்கிறீர். ஹே இந்த்ரா. உம்மிடம் விரும்பதக்க பொருள்கள் இருக்கின்றன.

உம்மை விட உயர்ந்தவர் யாரும் இல்லை. யக்ஞத்தில் ஸோமரஸம் உம்மை சந்தோஷ படுத்தட்டும்.
கஷ்டம் வரும் போது எல்லோரும் உன்னை சரண் அடைகிறார்கள்.
 

Latest ads

Back
Top