• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Uneducated brilliance

Status
Not open for further replies.

JR

Hare Krishna
From: Facebook

டயர் கம்பெனி ஒன்றில் திடீரென்று விற்பனை குறைந்தது. விலை ஏற்றமில்லை, தரத்தில் கோளாறு இல்லை, சப்ளை தாமதம் இல்லை, இப்படி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விற்பனை குறைந்தது பெரிய விவாதத்தை உண்டு பண்ணியது.
யாராலும் மேனேஜ்மெண்ட்டுக்கு திருப்தியான பதில் சொல்ல முடியவில்லை. எம்டிக்கு என்ன பதில் சொல்வது என்று கவலையோடு ஒர்க்ஸ் மேனேஜர் போய்க் கொண்டிருந்த போது, ஹவுஸ் கீப்பிங் சூப்பர்வைஸர் பெருக்குகிற பெண்ணைத் திட்டிக் கொண்டிருந்தார்.
“என்னம்மா பண்றீங்க நீங்கள்ளாம்? வாரா வாரம் புதுத் தொடைப்பம...் கேக்கறீங்க. ஆஃபீஸ்ல இருக்கிற பொம்பளைங்க ஒரு துடைப்பம் வாங்கித் தந்தா மாசக் கணக்குல வச்சிருக்காங்க”
அதற்கு அந்தப் பெண், “பட்சவர்தானே நீங்க? இங்கேயும் ஆஃபீஸ் மாதிரி மொஸைக் போடச் சொல்லு, மாசக் கணக்குல தொடைப்பம் தேயாது” என்று முகத்திலடித்தாற் போல பதில் சொன்னாள்.
இதைக் கேட்ட ஒர்க்ஸ் மேனேஜர், “ம்ம்.. ம்ம்.. சூப்பர்வைஸர் கிட்டே அதிகப் பிரசங்கித் தனமா பதில் பேசாதே” என்று அதட்டி விட்டுப் போய்விட்டார். உள்ளூர சந்தோஷம்; பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விட்டது.
ஸ்வீப்பர் சொன்ன பதிலைக் கேட்ட மேனேஜருக்கு டக்கென்று பொறி தட்டியது. கோல்டன் குவாட்ரிலேட்டரல் திட்டத்தில் சாலைகள் பூரா புதுப்பிக்கப்பட்டது ஞாபகம் வந்தது. ரோடு நன்றாக இருந்தால் தேய்மானம் குறைவு. தேய்மானம் குறைந்தால் விற்பனை குறைவுதானே?
பெருக்கிற பெண் சொன்னாள் என்றா மீட்டிங்கில் சொல்வார்? ஸ்டாண்டர்ட் டெஸ்ட் கண்டிஷன்ஸ், ஃபீல்ட் கண்டிஷன்ஸ், ஃப்ரிக்‌ஷனல் கோயஃபிஷியண்ட் என்று பெரிய வார்த்தைகளை உபயோகித்து இறுதியில் கோல்டன் குவாட்ரலேட்டரலுக்கு வந்தார்.
இந்த மனப்பான்மையை திருவள்ளுவர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டார்.
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்
என்று வள்ளுவரும் இந்த மனப்பான்மைக்கு subscribe செய்கிறார். படிக்காதவர்களின் புத்திகூர்மை என்னதான் சிறப்பாக இருந்தாலும், படித்தவர்கள் அதை ஏற்கிறதில்லை. இது ஒரு காம்ப்ளெக்ஸ்தான். கொஞ்சம் நோண்டிக் கெட்டால் அவர்கள் சொல்லும் யுக்திகளுக்கு ரிப்பீட்டபிலிட்டி கிடையாது, அனலிட்டிக்கல் ரீசனிங் இல்லை, ரேண்டம் சொல்யூஷன்ஸ் என்றெல்லாம் பஜனையாக பதில் சொல்வார்கள்.
நீங்கள் எப்படி?
படிக்காதவர்கள் புத்திசாலித்தனமாக ஏதாவது செய்தால் பாராட்டுவீர்களா? உதாரண சம்பவங்கள் ஏதும் உண்டா?
 
can anybody say..how far the old age homes are dependable....is it really worth living there? pls
advice

hi

i have practical experiences of three old age homes chennai.....my mom still there...i dont name them...all are having

some kind same problems everywhere....paper ad is different...reality is different...
 
Status
Not open for further replies.
Back
Top