E
ernarayanan
Guest
![3319026101_02107afebd.jpg](http://saranagathi.org/blogs/embar/files/2009/12/3319026101_02107afebd.jpg)
![20030110015208031.jpg](http://saranagathi.org/blogs/embar/files/2009/12/20030110015208031.jpg)
ஓம் நமோ நாராயணாய
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
![map-0e52cf805e6c.jpg](http://saranagathi.org/blogs/embar/files/2009/12/map-0e52cf805e6c.jpg)
திருப்பாற்கடல்
Thirupparkadal, the 107th vinnulaga divyadesam, can be seen only
after the jeevaathma leaves this body. But for the sake of devotees,
Lord Ranganatha, in an attempt to stop vegavathi, has given a sleeping
posture in a place called Thirupparkadal, near Kaveripakkam on the
Madras (Chennai) - Vellore RajaramMohanRoy highway road.
This sthalam though not 107th but considered as 107th since the
place is called thirupparkadal and Ranganatha is in the river bed.
Sthala puranam:
Lord Brahma, in his attempt to see Lord vishnu as varadaraja with the
four hands, started performing yagas without inviting saraswathi for
the yaga. Saraswathi got angry and started disturbing his yaaga. She had
flown as River Vegavathi , to destroy the yaaga. As Lord Vishnu who
never lets his devotees down, blocked her in sleeping posture intially
at Pallikonda, near vellore, then at Thirupparkadal near kaveripakkam ,
and finally Yathothrakari at Kanchipuram.
You can visit these three temples on the river bed areas of
Vegavathi. Coming back to Thirupparkadal, There is one more special
thing here is that Lord vishnu and Lord shiva in the same statue to
insist they are same. Once a vaishnava came across that temple, it was
sunset so he wanted to visit lord vishnu temple. He saw the temple and
went inside and shocked to see Lord shiva there and returned grudging
and worrying. Lord vishnu in a disguise as old man went to that
vaishnava and asked about the reason for his unsatisfaction. The old man
told the vaishnava to go to temple again and see. Surprisingly, Lord
vishnu was there in the lingam's base insisting both are same .
Vaikunda Ekadasi:
Visiting this sthalam on vaikunda ekadasi insists that, Chitraguptan will reduce the sins from your account.
Thirup paaRkatal
Location: paramapatham (heaven) , Kaveripakkam
Moolavar: paaRkadal VaNNan
Thaayaar: katal makaL naacchiyaar, Sri boomaathEvi
Theerththam: amirtha theerththam,thirup paaRkatal
Vimaanam: ashtaangka vimaanam
Mangalasaasanams:
Periyazhwar's: ( 5 )
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய * பாற்கடல் வண்ணா
உன் மேல் *
கன்றின் உருவாகி மேய்புலத்தே* வந்த கள்ள அசுரன்
தன்னை **
சென்று பிடித்துச் சிறு கைகளாலே * விளங்கா எறிந்தாய்
போலும் *
என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் *
அங்ஙனம் ஆவர்களே ! **
________
பையரவினணைப் பாற்கடலுள் * பள்ளி கொள்கின்ற பரம
மூர்த்தி *
உய்ய உலகு படைக்க வேண்டி * உந்தியில் தோற்றினாய்
நான்முகனை **
வைய மனிசரைப் பொய்யன்றெண்ணிக் * காலனையும்
உடனே படைத்தாய்*
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் *
அரங்கத்தைரவனைப் பள்ளியானே !
________
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை *மெத்தையாக
விரித்து * அதன் மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் * காணலாங்கொல்
என்றாசையினாலே **
உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி * உரோம கூபங்களாய்
கண்ண நீர்கள் *
துள்ளம் சோர துயிலணை கொள்ளேன் * சொல்லாய் யான்
உன்னைத் தத்துறுமாறே
____________
அரவத்தமளியினோடும் * அழகிய பாற்கடலோடும் *
அரவிந்தப் பாவையும் தானும் * அகம்படி வந்து புகுந்து **
பரவைத் திரை பல மோதப் * பள்ளி கொள்கின்ற பிரானை *
பரவுகின்றான் விட்டுச்சித்தன் * பட்டினம் காவற் பொருட்டே
___________
பனிக் கடலில் பள்ளிகோளைப் * பழக விட்டு * ஓடி வந்து என்
மனக் கடலில் வாழ வல்ல * மாய மணாள நம்பீ **
தனிக் கடலே தனிச் சுடரே * தனி உலகே என்றென்று *
உனக்கிடமாய் இருக்க * என்னை உனக்கு உரித்தாக்கினையே
___________
Andaal's - ( 3 )
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி *
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி **
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் *
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் *
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி *
உய்யுமாறு எண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்
__________________
குண்டுநீருறை கோளரீ * மத யானை கோள் விடுத்தாய் *
உன்னைக்
கண்டு மாலுறுவோங்களைக் * கடைக் கண்களாலிட்டு
வாதியேல் **
வண்டல் நுண்மணல் தெள்ளி * யாம் வளைக் கைகளால்
சிரமப்பட்டோம் *
தென் திரைக் கடற்பள்ளியாய் * எங்கள் சிற்றில் வந்து
சிதையேலே
____________
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப் *
புணர்வதோர் ஆசையினால் * என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து *
ஆவியை ஆகுலம் செய்யும்
அங்குயிலே ** உனக்கென்ன மறைந்துறைவு *
ஆழியும் சங்கும் ஒண்தண்டும் *
தங்கிய கையவனை வரக் கூவில் * நீ
சாலத் தருமம் பெறுதி
________________
Kulasekarazhwar's ( 2 )
மாலையுற்ற கடல் கிடந்தவன் * வண்டு கிண்டு நறுந்துழாய் *
மாலையுற்ற வரைப் பெருந்திரு மார்வனை * மலர்க்
கண்ணனை **
மாலையுற்றெழுந்தாடிப் பாடித் * திரிந்து அரங்கன்
எம்மானுக்கே *
மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு * மாலையுற்றது என்
நெஞ்சமே
______________
ஒண்பவள வேலை * உலவு தண் பாற்கடலுள் *
கண் துயிலும் மாயோன் * கழலிணைகள் காண்பதற்கு **
பண்பகரும் வண்டினங்கள் * பண் பாடும் வேங்கடத்து *
செண்பகமாய் நிற்கும் * திருவுடையோன் ஆவேனே *
_____________
Thirumazhisaiaazhwar ( 13 )
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி * நாலு மூர்த்தி நன்மை சேர் *
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி * எண்ணில்
மூர்த்தியாய் **
நாக மூர்த்தி சயனமாய் *நலங்கடல் கிடந்து * மேல்
ஆக மூர்த்தியாய் வண்ணம் * என்கொல் ஆதி தேவனே
________
விடத்த வாய் ஒராயிரம் * இராயிரம் கண் வெந்தழல் *
விடத்து வீள்விலாத போகம் * மிக்க சோதி தொக்க சீர் **
தொடுத்து மேல் விதானமாய * பௌவநீர் அராவணை *
படுத்த பாயல் பள்ளி கொள்வது * என் கொல் வேலை
வண்ணனே
_________
வால்நிறத்தொர் சீயமாய் * வளைந்த வாள் எயிற்றவன் *
ஊன் நிறத்து உகிர்த்தலம் * அழுத்தினாய் உலாய சீர் **
நால் நிறத்த வேத நாவர் * நல்ல யோகினால் வணங்கு *
பால் நிறக் கடல் கிடந்த * பற்பநாபன் அல்லையே
_________
படைத்த பார் இடந்தளந்து * அதுண்டுமிழ்ந்து பௌவநீர் *
படைத்தடைத்ததில் கிடந்து * முன் கடைந்த பெற்றியோய் **
மிடைத்தமாலி மாலிமான் * விலங்கு காலனூர் புக *
படைக்கலம் விடுத்த * பல்படைத் தடக்கை மாயனே
________
பரத்திலும் பரத்தையாதி * பௌவநீர் அணைக்கிடந்து *
உரத்திலும் ஒருத்தி தன்னை * வைத்துகந்து அதன்றியும் **
நரத்திலும் பிறத்தி * நாத ஞான மூர்த்தி ஆயினாய் *
ஒருத்தரும் நினாது தன்மை * இன்னதென்ன வல்லரே
_________
கடைந்து பாற்கடல் கிடந்து * கால நேமியைக் கடிந்து *
உடைந்த வாலி தன் தனக்கு * உதவ வந்த ராமனாய் **
மிடைந்த ஏழ் மரங்களும் * அடங்க எய்து வேங்கடம் *
அடைந்த மால பாதமே * அடைந்து நாளும் உய்ம்மினோ *
_________
விடைக் குலங்கள் எழடர்த்து * வென்றி வேற்கண் மாதரார் *
கடிக் கலந்த தோள் புணர்ந்த * காலி ஆய வேலை நீர் **
படைத்து அடைத்து அதில் கிடந்து * முன் கடைந்து நின்
தனக்கு *
அடைக்கலம் புகுந்த என்னை * அஞ்சல் என்ன வேண்டுமே
_________
அடக்கரும்புலன்கள் ஐந்தடக்கி * ஆசையாம் அவை *
தொடக்கறுத்து வந்து * நின் தொழிற்கண் நின்ற என்னை நீ **
விடக் கருதி மெய் செயாது * மிக்கொர் ஆசை ஆக்கிலும் *
கடல் கிடந்த நின்னலால் ஓர் * கண்ணிலேன் எம் அண்ணலே
_________
தூயனாயும் அன்றியும் * சுரும்புலாவு தண்துழாய் *
மாய நின்னை நாயினேன் * வணங்கி வாழ்த்தும் ஈதெலாம் **
நீயும் நின் குறிப்பினில் * பொறுத்து நல்கு வேலை நீர் *
பாயலோடு பத்தர் சித்தம் * மேய வேலை வண்ணனே
_________
பாலில் கிடந்ததுவும் * பண்டரங்கம் மேயதுவும் *
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் ? ** - ஞாலத்து
ஒரு பொருளை * வானவர் தம் மெய்ப்பொருளை * அப்பில்
அருபொருளை யான் அறிந்தவாறு
________
நாகத்தணைக் குடந்தை * வெக்கா திருவெவ்வுள் *
நாகத்தணை அரங்கம் பேரன்பில் ** - நாகத்
தணைப் பாற்கடல் கிடக்கும் * ஆதி நெடுமால் *
அணைப்பார் கருத்தனாவான்
________
நாக்கொண்டு * மானிடம் பாடேன் * நலமாகத்
தீக்கொண்ட * செஞ்சடையான் சென்று ** என்றும் - பூக்கொண்டு
வல்லவாறு * ஏத்த மகிழாத * வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு
________
ஆய்ந்து கொண்டு * ஆதிப் பெருமானை * அன்பினால்
வாய்ந்த * மனத்து இருத்த வல்லார்கள் ** - ஏய்ந்த தம்
மெய்குந்தமாக * விரும்புவரே * தாமும் தம்
வைகுண்டம் காண்பார் விரைந்து *
________
Thondaradipodiaazhvaar's - ( 1 )
இனிதிரைத் திவலை மோத * எறியும் தண் பரவை மீதே *
தனிகிடந்து அரசு செய்யும் * தாமரைக் கண்ணன் எம்மான் **
கனி இருந்தனைய செவ்வாய்க் * கண்ணனைக் கண்ட
கண்கள் *
பனியரும்புதிருமாலோ * என் செய்கேன் பாவியேனே
_____
Thirumangaiaazhvaar - ( 11 )
கோடியமனத்தால் சினத்தொழில்புரிந்து * திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு *
ஓடியும்உழன்றும் உயிர்களேகொன்றேன் * உணர்விலேன் ஆதலால் *
நமனார்ப்பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் * பரமனே ! பாற்கடல்கிடந்தாய் *
நாடிநான்வந்து உன்திருவடியடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய்
________
ஊனிடைச்சுவர்வைத்து என்புதூண்நாட்டி * உரோமம்வேய்ந்து ஒன்பதுவாசல் *
தானுடைக்குரம்பைப் பிரியும்போது * உந்தன்சரணமேசரணம் என்றிருந்தேன் *
தேனுடைக்கமலத் திருவினுக்கரசே * திரைகொள்மா நெடுங்கடற்கிடந்தாய் *
நானுடைத் தவத்தால் திருவடியடைந்தேன் *நைமிசாரணியத்துள் எந்தாய்
_________
பள்ளியாவது பாற்கடல் அரங்கம் * இரங்கவன்பேய்முலை *
பிள்ளையாய்உயிருண்ட எந்தை * பிரானவன் பெருகுமிடம் *
வெள்ளியான் கரியான் * மணிநிறவண்ணன் என்றெண்ணி *
நாடொறும் தெள்ளியார்வணங்கும்மலை * திருவேங்கடம் அடைநெஞ்சமே *
____________
கறவைமுன்காத்துக் கஞ்சனைக்காய்த்த *
காளமேகத்திருவுருவன் *
பறவைமுன்னுயர்த்து பாற்கடல் துயின்ற *
பரமனார் பள்ளிகொள் கோயில் *
துறைதுறை தோறும் பொன்மணி சிதறும் *
தொகுதிரை மண்ணியின் தென்பால் *
செறிமணிமாடக் கொடிகதிரணவும்*
திருவெள்ளியங்குடியதுவே *
_____________
பண்டுமுன்ஏனமாகி * அன்றுஒருகால் *
பாரிடந்து எயிற்றினில் கொண்டு *
தென்திரைவருடப் பாற்கடல்துயின்ற *
திருவெள்ளியங்குடியானை *
வண்டறைசோலை மங்கையர் தலைவன் *
மானவேல் கலியன் வாயொலிகள் *
கொண்டிவைபாடும் தவமுடையார்கள் *
ஆள்வர் இக்குரைகடல் உலகே
___________
கைம்மான மழகளிற்றைக் * கடல்கிடந்த கருமணியை *
மைம்மான மரகதத்தை * மறையுரைத்த திருமாலை *
எம்மானை எனக்கென்றும் இனியானைப் * பனிகாத்த அம்மானை *
யான்கண்டது * அணிநீர்த் தென்னரங்கத்தே
___________
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் *
திருவடியினிணை வருட முனிவரேத்த *
வங்கமலி தடங்கடலுள் அனந்தனென்னும் *
வரியரவினணைத் துயின்ற மாயோன் காண்மின் *
எங்குமலி நிறை புகழ்நால் வேதம் * ஐந்து -
வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை *
அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத்து *
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே *
__________
வெள்ளை நீர் வெள்ளத்து * அணைந்த அரவணை மேல் *
துள்ளுநீர் மெள்ளத் * துயின்ற பெருமானே *
வள்ளலே ! உன்தமற்கு என்றும் * நமன்தமர் -
கள்ளர்போல் * கண்ணபுரத்து உரை அம்மானே *
_________
மூவரில் முன்முதல்வன் * முழங்கார் கடலுள்கிடந்து *
பூவலருந்தி தன்னுள் * புவனம் படைத்து உண்டுமிழ்ந்த *
தேவர்கள் நாயகனை * திருமாலிரு ந்சோலைநின்ற *
கோவலர் கோவிந்தனைக் * கொடியேரிடை கூடுங்கொலோ !
_________
வங்கத்தால் மாமணிவந்து உந்து முந்நீர் !
மல்லையாய் * மதிள்கச்சி ஊராய் ! பேராய்! *
கொங்கத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன் *
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான் *
பங்கத்தாய் ! பாற்கடலாய் ! பாரின் மேலாய் *
பனிவரையின் உச்சியாய் ! பவள வண்ணா ! *
எங்குற்றாய் எம்பெருமான் ! உன்னை நாடி *
ஏழையேன் இங்ஙனமே உழிதருகேனே *
_____________
கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய -
களிறு என்றும் * கடல் கிடந்த கனியே என்றும் *
அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி *
அணியழுந்தூர் நின்றுகந்த அம்மன் என்றும் *
சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் *
தூமுறுவல் நகைஇறையே தோன்ற நக்கு *
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி ஆங்கே *
மென்கிளி போல் மிகமிழற்றும் என்பதையே !
_______________
Poigaiaahwar (1)
உரை மேல் கொண்டு * என் உள்ளம் ஓவாது * எப்போதும்
வரை மேல் * மரதகமே போல ** - திரை மேல்
கிடந்தானைக் * கீண்டானை * கேழலாய்ப் பூமி
இடந்தானை ஏத்தி எழும்
_______________
Bhoothathaazhvaar (2)
பரிசு நறுமலரால் * பாற்கடலான் பாதம் *
புரிவார் புகப்பெறுவர் போலாம் ** - புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் * துலங்கொளி சேர் தோற்றத்து *
நல்லமரர் கோமான் நகர் *
____________
மனத்துள்ளான் வேங்கடத்தான் * மாகடலான் * மற்றும்
நினைப்பரிய * நீள் அரங்கத்து உள்ளான் * எனைப்பலரும்
தேவாதி தேவன் * எனப்படுவான் * முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன்
__________
Peyaazhvaar (4)
நன்கோதும் * நால் வேதத்துள்ளான் * நறவிறியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன் ** - சங்கோதப்
பாற்கடலான் * பாம்பணையின் மேலான் * பயின்று உரைப்பார்
நூற்கடலான் நுண்ணறிவினான்
__________
இவையவன் கோயில் * இரணியனது ஆகம் *
அவை செய்து அரி உருவம் ஆனான் ** - செவி தெரியா
நாகத்தான் * நால் வேதத்து உள்ளான் * நறவேற்றான்
பாகத்தான் பாற்கடல் உளான்
__________
பாற்கடலும் வேங்கடமும் * பாம்பும் பணிவிசும்பும் *
நூற்கடலும் நுண்நூல தாமரை மேல் * * பாற்பட்டு
இருந்தார் மனமும் * இடமாகக் கொண்டான் *
குருந்தொசித்த கோபாலகன்
__________
பண்டெல்லாம் வேங்கடம் * பாற்கடல் வைகுந்தம் *
கொன்டங்கு உரைவாற்குக் கோயில் போல் ** வண்டு
வளங்கிளரும் நீள்சோலை * வண்பூங்கடிகை *
இளங்குமரன் தன் விண்ணகர்
_________
Nammazhwar ( 9 )
வேதனை * வெண்புரி நூலனை * விண்ணோர் பரவ நின்ற
நாதனை * ஞாலம் விழுங்கும் அநாதனை ** ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் *
சீதனையே தொழுவார் * வின்னுளாரிலும் சீரியரே
___________
பாலாழி * நீ கிடக்கும் பண்பை * யாம் கேட்டேயும் *
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் ** - நீலாழிச்
சோதியாய் ! ஆதியாய் ! * தொல்வினை எம்பால் கடியும் *
நீதியாய் ! நிற்சார்ந்து நின்று
___________
உரைக்கிலோர் சுற்றத்தார் * உற்றார் என்று ஆரே ? *
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் !** - உரைப்பெல்லாம்
நின்னன்றி * மற்றிலேன் கண்டாய் ! * எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றியாகும் துணை
___________
பாம்பணை மேல் பாற்கடலுள் * பள்ளி அமர்ந்ததுவும் *
காம்பனைதோள் பின்னைக்கா * ஏறுடன் ஏழ்செற்றதுவும் *
தேம்பனைய சோலை * மராமரம் ஏழு எய்ததுவும் *
பூம்பிணைய தண்துழாய் * பொன்முடியும் போரேறே
___________
உய்ந்துபோந்து என்னுலப்பிலாத * வெந்தீ வினைகளை நாசம் செய்து * உனது
அந்தமிலடிமை * அடைந்தேன் விடுவேனோ ?*
ஐந்து பைந்தலை ஆட அரவணைமேவிப் * பாற்கடல் யோக நித்திரை *
சிந்தை செய்த எந்தாய் * உன்னைச் சிந்தை செய்து செய்தே
____________
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் * பங்கயக் கண்ணனை *
பயில இனிய * நம் பாற்கடல் சேர்ந்த பரமனை *
பயிலும் திருவுடையார் * யவரேலும் அவர் கண்டீர் *
பயிலும் பிறப்பிடைதோறு * எம்மை ஆளும் பரமரே
___________
மணந்த பேராயா ! மாயத்தால் முழுதும் * வல்வினையேனை ஈர்க்கின்ற *
குணங்களை உடையாய் !அசுரர் வன்கையர்கூற்றமே* கொடிய புள்ளுயர்த்தாய் *
பணங்களாயிரமும் உடைய பைன்நாகப்பள்ளியாய் * பாற்கடல் சேர்ப்பா*
வணங்குமாறு அறியேன் ! மனமும் வாசகமும் * செய்கையும் யானும் நீதானே
___________
இடையில்லையான் வளர்த்தகிளிகாள் * பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்! *
உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும் *ஒன்றும் ஒழியவொட்டாது கொண்டான் *
அடையும் வைகுந்தமும் பாற்கடலும் *அஞ்சனவெற்பும் அவைநணிய *
கடையறப்பாசங்கள் விட்டபின்னை அன்றி *அவன் அவை கான்கொடானே
__________
திருமாலிருஞ்சோலை மலையே * திருப்பாற்கடலே எந்தலையே *
திருமால் வைகுந்தமே *தண் திருவேங்கடமே எனதுடலே *
அருமாமாயத்து எனதுயிரே * மனமே வாக்கே கருமமே *
ஒருமா நொடியும் பிரியான் * என் ஊழி முதல்வன் ஒருவனே
___________