[FONT=arial black,sans-serif]Dear Mr. Pannvalan,
நல்லவற்றைப் பற்றி புகழ்ந்தும்
அல்லனவற்றைப் பற்றி இகழ்ந்தும்
பேசுவது நமக்கு மிகவும் தேவை;
பேசாவிட்டால் அது அல்ல சேவை!
விசாலாக்ஷி ரமணி[/FONT]
வேறு ஊர்களில் வாழ்ந்த நண்பர்கள் இருவர்,
மாறுபட்ட பழக்கவழக்கத்தினர், சந்தித்தனர்.
ஒருவன் உல்லாசத்தை மிகவும் விழைவான்;
ஒருவன் உலக நியதிக்கு மிகவும் அஞ்சுவான்.
கண்டனர் இருவரும் ஒரு பெரிய அறிவிப்பு;
‘கடவுள் பற்றி உள்ளது இன்று சொற்பொழிவு’.
ஒருவன் கூறினான், ” நாம் கதை கேட்போம்”;
ஒருவன் கூறினான், ” நாம் உல்லாசிப்போம்”.
நாடியதைத் தாம் தாம் பெற்றிட விரும்பி,
நண்பர்கள் இருவரும் பிரிந்து சென்றனர்.
ஒருவன் சென்றான் இறைக் கதை கேட்டிட,
ஒருவன் சென்றான் உள்ளூர்ப் பரத்தையிடம்.
கதை கேட்பவன் மனம் கதையில் ஒன்றாமல்,
காரிகை வீட்டையே சுற்றி வட்டமிட்டது;
“நான் தான் தவறு செய்துவிட்டேனோ?
அவனுடன் அங்கு சென்று இருக்கலாமோ?”
பரத்தையின் வீட்டை அடைந்தவன் அங்கே,
பரம சுகத்தை அடையவில்லை அன்று.
“இறைவனின் உயரிய கதையைக் கேளாமல்,
இங்கு வந்து வீணாகிப் போனேனோ நான்!”
பாவமே அடைந்தான், அங்கு பரந்தாமனின்
புகழைக் கேட்டும் மன அமைதி அழிந்தவன்!
பாவத்தைத் தன் உடலால் செய்திருந்ததால்,
பாவமே அடைந்தான் மற்ற நண்பனும்!
எண்ணத்தில் இறைவன் நிறைந்தால்,
எண்ணவோ, பண்ணவோ தோன்றாது,
எந்த வித பாவச் செயல்களையுமே!
இந்த உண்மையே நமக்கு உணர்த்துவது ,
“உள்ளமே நம் உயர்வு, அல்லது தாழ்வுக்கு
உண்மையான காரணம் ஆகும் என்பதை!”
கள்ளம் இல்லா வெள்ளை உள்ளமே,
கடவுள் வாழ்ந்திடும் நல்ல உள்ளம்!
அகழ்வாரைத் தாங்கும் நில மடந்தையிடம்,
இகழ்வாரைத் தாங்கும் பொறுமை கற்போம்;
அனைத்தையும் புனிதமாக்கிய பின் தெளிந்து,
இனிக்கும் நீர் போல மாறிவிடக் கற்போம்.
பொருட்கள் அனைத்திலும் மறைந்து நிற்கும்,
நெருப்பைப் போன்றது ஆத்மா என்று அறிவோம்;
மாற்றம் அடையாமல் மணங்களைப் பரப்பும்,
காற்றிடம் கற்போம் பற்று அறுக்கும் தன்மையை.
நிர்மலமாக எங்கும் என்றும் நிறைந்திருக்கும்
மர்மம் என்ன என்று ஆகாசத்திடம் கற்போம்;
ஆழம் காண முடியாத கம்பீரத்தை அங்கு
ஆழ்ந்து விளங்கும் கடலிடம் கற்போம்.
நூறு குடங்களில் வேறு வேறாகத் தெரியும்
சூரியன் போன்றதே ஆத்மா, அறிந்திடுவோம்;
வளர்ந்து தேயும் சந்திர கலைகள் போன்றே
வளர்ந்து தேயும் மனித சரீரமும், அறிவோம்.
தன் உடலில் இருந்தே உற்பத்தி செய்து,
தன் உடலுள் வலையை மீண்டும் மறைக்கும்
சிலந்தியிடம் காண்போம் நம் இறைவனின்
சிருஷ்டி, பிரளய ரகசியங்களை எல்லாம்!
நினைக்கும் பொருளாக நாம் மாறுவதை,
தினமும் காணும் குளவியிடம் கற்போம்;
தினவு எடுத்து திரியாமல், கிடைத்தைத்
தின்பதை மலைப் பாம்பிடம் கற்போம்.
மலருக்கு மலர் தாவிச் சென்று பல
மலர்களின் தேனைச் சேர்த்து வைத்து,
தேனாலேயே அழியும் தேனீ கற்பிப்பது
தேவைக்கு மீறின செல்வத்தின் ஆபத்து.
கண்களால் நன்கு காணும் திறனையும்,
காதுகளால் நன்கு கேட்கும் திறனையும்
அழகாய் வளர்த்தால், நமக்கு இறைவனும்
அழகிய இயற்கையும் குருவாகவே ஆவர்!
கட்டிக் கொடுத்த சோறும்,
சொல்லிக் கொடுத்த பாடமும்,
எத்தனை நாட்கள் தாங்கும்?
எப்போதுமே துணை வருவன
சுயபுத்தியும், மனத்துணிவுமே!
சுதந்திர, சுந்தர மனப்பாங்கே!
மனிதனின் வாழ்வில் என்றும்
மாறாத நண்பர்கள் இவைகளே!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.