Thousand Year Old Temples in India

இந்தியா ஒரு ஆன்மீக நாடு. எல்லா மதமும் சம்மதம் என்பதற்கேற்ப இந்தியாவில் அனைத்து மத வழிபாடும் நீடூடி செழித்து நடக்கின்றன.

அவற்றில் ஆதி மதமாக கருதப்படும் இந்து மதங்களை பின்பற்றுவோர்கள் கடவுளுக்கென்று கோயில்கள் கட்டுகின்றனர்.

அதை புனிதமான இடமாகக் கருதி மிகவும் நேர்த்தியாகவும், பிரம்மாண்டமாகும் கட்டுகின்றனர். அந்தவகையில் ஆயிரம் வருங்களுக்கு முந்தைய பழமையான கோயில்கள் பற்றி நாம் பார்க்கலாம்.

அமர்நாத் கோயில்

ஸ்ரீநகரிலிருந்து, சுமார் 145 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அமர்நாத், இந்தியாவின் பிரதான யாத்ரீக ஸ்தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து, சுமார் 4175 அடி உயரத்தில் அமைந்துள்ள இத்தலம், இந்துக்கள் வணங்கும் அழிவுக் கடவுளான சிவபெருமானின் பக்தர்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு, இயற்கையாக அமையப்பெற்றுள்ள பனியினாலான சிவலிங்கம், முக்கிய ஈர்ப்பு அம்சமாக திகழ்கிறது. இந்த யாத்ரீக ஸ்தலம் தன் பெயரை, அழிவற்ற என்ற பொருள் கொண்ட ‘அமர்', மற்றும் கடவுள் என்பதைக் குறிக்கும் "நாத்", ஆகிய இரு இந்து வார்த்தைகளிலிருந்து பெற்றுள்ளது.

தஞ்சை பெரியகோயில்

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை.

வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.
வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.

கைலாசா கோயில்

இந்திய சிற்பக் கலையின் பொக்கிஷமாக போற்றப்படும் எல்லோராவின் தொன்மையான குகைக் கோயில்கள் ஔரங்கபாத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்திருக்கிறது. யுனேஸ்கோ அமைப்பால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த எல்லோரா குகைக் கோயில்கள் ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டது.

மகாபலிபுரம் கடற்கரை கோயில்

பஞ்ச பாண்டவ ரதங்கள், வராக மண்டபம் மற்றும் கடற்கரை கோயில் ஆகியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். மேலும், மாமல்லபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் சோழமண்டல் கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

சோம்நாத் கோயில்

"தெய்வீக சந்நிதி" என்றும் அழைக்கப்படும் சோம்நாத் மஹாதேவ் கோயில், குஜராத்தின் சோம்நாத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் ஏழு முறை அழிவிற்கு உள்ளாகி, பின்னர் புனரமைக்கப்பட்டுள்ளது.

சென்னகேசவா கோயில்

தலக்காடு நகரத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சோமநாதபுரம் கிராமத்துக்கும் விஜயம் செய்யலாம். இந்த கிராமம் இங்குள்ள ஷீ வேணுகோபால ஸ்வாமி கோயில் மற்றும் ஸ்ரீ சென்னக்கேசவா கோயிலுக்காக பிரசித்தி பெற்றுள்ளது.

கேதர்நாத் கோயில்

இமயமலைத்தொடர்களின் அங்கமான கேதார்நாத் மலைகளில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் இந்தியாவில் ஹிந்துக்களின் முக்கியமான புனித யாத்திரைஸ்தலமாக புகழ் பெற்றிருக்கிறது.

ஆதி கும்பேஸ்வரர் கோயில்

கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார்.

ஜகத்பிதா பிரம்மா கோயில்

வரதராஜபெருமாள் கோயில்

கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர்.

பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1649330930600.png


1649330940346.png

1649330950451.png


1649330961417.png


1649330971826.png

1649330980415.png

1649330990323.png

1649330999231.png

1649331008835.png
 
Back
Top