• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

thithi pujai.

kgopalan

Active member
விரதங்கள் பற்றி பவிஷ்ய புராணம் கூறுகிறது.

தேவர்களுக்கு வேள்விகள் மூலம் யாகம் செய்ய முடியவில்லை என்றால்
இல்லறத்தார் என்னென்ன திதியில் என்னென்ன விரதம் உபவாஸம் இருந்தால் தேவர்களை த்ருப்திபடுத்தலாம் என்று சுனந்து முனிவர் கூறினார்.

ப்ரதமை திதியில் பாலையும், த்விதியை திதியில் உப்பையும் தவிர்க்க வேன்டியது. த்ருதியை திதியில் எள்ளுஞ்சாதம் சாப்பிட வேண்டும்.

சதுர்த்தியில் பால் ஆஹாரம், பஞ்சமியில் பழம், சஷ்டியில் காய், சப்தமியில் வில்வ ஆஹாரம் செய்ய வேண்டும்.

அஷ்டமியன்று பொடி சாதம், நவமியன்று அக்னியில் சமைக்காத உணவு;
தசமி அன்றும் ஏகாதசியன்றும் பால்; துவாதசியன்று கீரை; த்ரயோதசியன்று கோமியம், சதுர்தசியன்று பார்லி உணவும் சாப்பிட வேண்டும்.

அமாவசையன்று ஹவிஸ்; பெளர்ணமியன்று தர்ப்பை புல்லில் நனைத்த ஜலமும் சாப்பிடவேண்டும். இவ்வாறு விரதமிருந்தால் அந்தந்த திதிக்குறிய தேவதைகள் த்ருப்தி யடைகிறார்கள்.,

இந்த விருதம் நான்கு வர்ணத்தாரும் செய்யலாம். இந்த விரதம் ஆண், பெண் எல்லோரும் செய்யலாம்..

ஒரு பக்ஷம் இம்மாதிரி ஆகாரம் செய்தால் பத்து அஸ்வமேத யாக பலன் கிடைக்க பெறுகிறார்கள்.. நான்கு, மாதம், எட்டு மாதம், 12 மாதம் இவ்வாறு விரதம் இருந்தால் பல மந்வந்தரங்கள் சூரிய லோகத்தில் சுவர்க்க அநுபோகங்களை அநுபவிப்பான்.

இந்த விரதத்தை அதாவது ஒவ்வொரு திதியிலும் திதி உபவாசம் எப்படி இருக்க வேண்டுமென்பது;-

இந்த விரதத்தை ஐப்பசி நவமி; மாசி ஸப்தமி; வைகாசி த்ருதியை; கார்த்திகை பெளர்ணமியில் ஆரம்பித்தால் உத்தமம்.

நீண்ட ஆயுள் கிடைக்கும். சூர்ய லோகத்தில் சுகமாக இருக்கலாம்.
முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனாக இப்பிறவியில் விரதம், உபவாசம் ஆகியவைகளை செய்து , தானம் கொடுத்து , தர்ம வழியில்

நடந்து , தாய், தந்தை, குரு ஆகியோருக்கு சேவை செய்து, விதிப்படி தீர்த்த யாத்திரை செய்து , அற வழியில் நீண்ட ஆயுள் கழித்த புண்ணிய பலனை மேலும் உயர்த்திக் கொண்டு மேலுலகில் நற்பதவி பெறுகிறான்.,

இந்த உலகில் வாழும் போது எல்லா பொன் பொருள்களும், சிரேஷ்டமான உயர்ந்த மனைவி, நம்பிக்கையான வேலைகாரர்கள் ஆகியவை கிடைக்கும்.
கடுமையான வ்யாதிகளிலிருந்து விடுபடுவர். பந்து ஜனங்களின் புகழும், , புத்திரன், பேரன்களை பார்த்து மகிழவும் முடியும்.

இம்மாதிரி விரதம், உபவாசம், தானம் என்று செய்யாவிட்டால் ஒற்றை கண், குருடு, முடம், நொன்டி, ஊமை, படிப்புஅறிவின்மை தீராத நோய், தரித்திரம்
ஆகியவைகளால் பாதிக்கபடுவர். .

முதலில் பரமாத்மா சிருஷ்டிக்காக ஜலத்தை உற்பத்தி செய்தார். அதிலிருந்து ஒரு முட்டை(அண்டம்) உண்டாகி அதில் ப்ருஹ்மா தோன்றினார்.இதுதான் ப்ருஹ்மாண்டம். ப்ருஹ்மா அதை இரண்டாக பிளந்து ஒன்றில் பூமியையும் மற்றதில் ஆகாயத்தையும் செய்தார்.

அதன் பின் திசைகள்., உப திசைகள். தெய்வம், அசுரன் என்று உற்பத்தி செய்தார்.
எந்த திதியில் இதை உற்பத்தி செய்தாரோ அதுவே ப்ரதி பதா என்கிற ப்ரதமை திதியாயிற்று. . இதிலிருந்துதான் மற்ற திதிகள் உண்டாயின.

ப்ரதமை விரதத்தை கார்த்திகை பெளர்ணமி; அல்லது மாசி ஸப்தமி அல்லது வைகாசி சுக்ல த்ருதியை முதல் தொடங்குவது விசேஷம். .இதற்கு முன்னால் வரும் சதுர்தசி அன்றே இந்த விரத சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். .அன்று சாப்பிடலா.ம்.

அடுத்து அமாவாசையன்று மூன்று வேளை குளிக்க வேண்டும். ஆகாரம் கூடாது. காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்..விரதத்தை துவங்கும் நாளில் விடியற்காலையில் எழுந்து சிரேஷ்டமான அந்தணனை சந்தனம், தாம்பூலம்

கொடுத்து மரியாதை செய்யவும். தேவையான அளவு பால் கொடுத்து குடிக்கச் சொல்லவும். அதன் பின் அவரை ஆசனத்தில் அமர்த்தி , ப்ருஹ்மாவாக மனசில் கருத வேண்டும்.

“”ப்ருஹ்ம தேவரே எனக்கு காட்சி தர வேண்டும் என வேண்டிக்கொள்ளவும்.. ப்ருஹ்மதேவரின் அருள் கிடைக்கும். அதன் பின் விரதமிருப்பவர் பசும் பால் குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வருஷம்

காயத்ரியுடன் விரதத்தை செய்து வருஷ கடைசியில் ப்ருஹ்மாவிற்கு விசேஷ பூஜை செய்ய வேண்டும்.

இவ்வாறு விரதமிருப்பதால் எல்லா பாபமும் விலகும். ஆன்மா தூய்மை ஆகும். நீன்ட ஆயுளுடன் தர்மவானாகவும், தனவானாகவும், ஆரோக்கியமுள்ளவராகவும் எல்லா

போகங்களையும் அநுபவிப்பராகவும் இருப்பார். விண்ணுலகில் தேவதைகளுக்கு சமமாக கருதபடுவார்..அதன் பின் சத்ய யுகத்தில் பத்து பிறவிகள் வாழ்வாங்கு வாழ்வார்.

இந்த விரத மிருப்பதால் அந்தணர் அல்லாதவரும் அந்தணராகி விடுவர்.
விசுவாமித்ரர் இந்த விரதமிருந்த பிறகு தான் ப்ருஹ்ம ரிஷி எனப்பெயர் பெற்றார்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு மறுநாள் ப்ருஹ்மாவை 16 உபசார பூஜை செய்ய வேண்டும். ஓராண்டு முடிந்தபின் பெளர்ணமியன்று

ப்ருஹ்மாவிற்கு விசேஷ பூஜை செய்ய வேண்டும். அதன் பின் சங்கம், மணி, பேரி, வாத்யம் முதலியவற்றால் விசேஷ பூஜை செய்ய வேண்டும்.

வெள்ளை நிற பசுவின் பஞ்சகவ்யத்தாலும், தர்ப்பை ஜலத்தாலும் ப்ருஹ்மாவிற்கு ப்ருஹ்ம ஸ்நானம் செய்விக்க வேண்டும்..

கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று ப்ருஹ்மாவின் ரத யாத்திரை துவங்க வேண்டும்.. அருகில் காயத்ரி அமர்ந்திருக்க ப்ருஹ்மா மாந்தோல் ஆஸனத்தில் அலங்காரமாக காக்ஷி அளிப்பார்.

முன்னும் பின்னும் வேத கோஷம், வாத்யம் முழங்க பவனி வர வேண்டும் .ப்ருஹ்மாவின் விக்கிரஹம் அருஹில் ஒரு வேத விற்பன்னர் பூஜை செய்து மக்களுக்கு ப்ரசாதம் வழங்க அமர்ந்திருக்க வேண்டும்

இரவு நிலைக்கு திரும்ப வேண்டும். ரதம் ஓட்டி வந்தவர்களுக்கும், வாத்ய கோஷ்டி ; வேத விற்பன்னர்களுக்கும் அன்னம், பானம், சன்மானம் கொடுக்க வேண்டும்.

ஜன்மாந்திரங்களில் செய்த பாவங்கள் தொலையும்.

. மார்க்கசிரம் சுக்ல பக்ஷ ப்ரதமையில் பகலில் சாப்பிடாமல் இரவில் விஷ்ணு பூஜை செய்து சாப்பிட வேண்டும்.. நக்ன விரதம் என்றால் பகலில் சாப்பிடாமல் இரவில் சாப்பிடுவது.

த்விதீய திதி விரதம்.

இந்த த்விதீய விரதத்தால் அஸ்வினி குமாரர்களுக்கு தேவர் குல அங்கீகாரமும் ஆவிர்பாகமும் கிடைத்தன. கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ த்விதியை அன்று துவங்கி ஒரு வருடம் காலம் கழித்து பூஜை முடித்து பிராம்ணருக்கு பொன்னால் ஆன தாமரையை தானம் செய்தால் மேலுலகில் பல கற்ப காலங்கள் வாழ்ந்து விட்டு பூமியில் ராஜாவாக பிறக்கலாம்..

இந்த வருடம் வரும் அசூன்ய ஸயன வ்ருதம் .. ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷம் த்விதியை அன்று துவங்க வேண்டும். இதனால் பெண்கள் விதவை ஆகாமல் தடுக்க முடியும். கணவன் மனைவி பிரியாமல் வாழ முடியும்.

பள்ளி கொண்ட பெருமாளையும் அவரது மனைவியையும் பூஜை செய்து பின் வரும் துதியை சொல்ல வேண்டும்.

ஶ்ரீ வத்ஸ தாரீ ஶ்ரீ காந்த ஶ்ரீ வத்ஸ ஶ்ரீ பதே அவ்யய
கார்ஹஸ்த்யம் மா ப்ரணாசம் மே பாது தர்மார்த்த காமதம்.
காவஸ்ச மா ப்ரணஸ்யந்து மா ப்ரணஸ்யந்து மே ஜனா:


ஜாமயோ மா ப்ரணஸ்யந்து மத்தோ தாம்பத்ய பேததஹ
லக்ஷ்ம்யா வியுஜ்யே அஹம் தேவ ந கதாசித் அதா பவான்
ததா களத்ர ஸம்பந்தோ தேவ மா மே வியுஜ்யதாம்


லக்ஷ்ம்யா ந சூன்யம் வரத யதாதே சயனம் சதா
சய்யா மமாப்ய சூன்யஸ்து ததா தே மதுஸுதன.

இவ்வாறு மஹா விஷ்னுவிடம் வேண்டிகொண்டு அவரை எப்போதும் ப்ரியாத மஹா லக்ஷ்ம்யையும் வேண்டி பூஜைசெய்தால் நிரந்த்ரமான பிரிவில்லாத படுக்கை சுகம் கிடைக்கும்.

காய்ந்து போன மிகவும் பழுத்த, கனிந்த பழம் நிவேத்யம் செய்ய க்கூடாது.
பேரீச்சை, மாதுளை, அத்தி பழங்கள், இளநீர் மஹாவிஷ்ணுவிற்கு பிடிக்கும்.

எப்படி மஹா லக்ஷ்மி இல்லாத படுக்கை மஹா விஷ்ணுவிற்க்கு கிடையாதோ அதைபோல சோபை அற்ற படுக்கை வேண்டாம். லக்ஷ்மிகரமான மனைவி பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ஸகலமும் கிடைக்கும்.

திருதியை வ்ரதம்.: அக்ஷய த்ருதியை மற்றும் ரம்பா த்ருதியை.

பெண்கள் எவ்வகையில் நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அவ்வகையில் பெண்களுக்கு உதவ கூடியது திருதியை வ்ரதம்.

எக்காரணம் கொண்டும் உப்பு சேர்க்க கூடாது.

இந்த உபவாசத்தை ஆயுள் பூராவும் செய்தால் ரூபம், லாவண்யம், செளபாக்கியம் அனைத்தும் பெறுகிறார்கள்..

கன்னி பெண்கள் இந்த விரதம் அநுஷ்டித்தால் நல்ல கணவனை பெறுவார்கள்.

தங்கத்தில் கெளரியின் உருவத்தை செய்து ஒருமனப்பாட்டுடன் கெளரி பூஜை செய்ய வேண்டும். இரவு உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். அதன் பிறகு சம நிலையாக படுக்க வைக்க வேண்டும். அடுத்த நாள் அந்தணருக்கு சாப்பாடு போட்டு தக்ஷிணையும் தர வேண்டும்.

இம்மாதிரி நியமப்படி பூஜை செய்யும் கன்னிகை உன்னதமான பதியை அடைவாள். நீண்ட காலம் போக போக்கியங்களை அநுபவித்து கடைசியில் தன் கணவருடன் உத்தம லோகத்தை அடைவாள்.

விதவை இந்த விரதத்தை செய்தால் மேல் லோகத்தில் தன் பதியுடன் சேர்வாள். அவருடன் நீண்ட காலம் கணவன் மனைவியாக வாழ்வாள்.

இந்த்ராணி இந்த பூஜை செய்து ஜயந்தனை பெற்றாள். அருந்ததி இந்த பூஜை செய்து வசிஷ்டருடன் வானத்தில் ஸப்த ரிஷி மண்டலத்தில் அமர்ந்தாள்.

ரோஹிணி இந்த பூஜை செய்து சந்திரனின் அன்பு காதல் மனைவியாக வாழும் வாய்ப்பை பெற்றாள்.

வைகாசி, புரட்டாசி, மாசி மாதங்களில் இப்பூஜை செய்வது உத்தமம்.மாசி மாதம் செய்யும் த்ருதியை பூஜைக்கு பின் உப்பு, வெல்லம், இரண்டையும் தானம் செய்தால் ஆண், பெண் இருவருக்கும் மிக மதிப்பை கொடுக்கும். நல்லது.

புரட்டாசி மாத த்ருதியை வ்ருதத்தின் போது வெல்ல அப்பம் நிவேத்யம் செய்திடல் வேண்டும். மாசி த்ருதியையின் போது கொழுக்கட்டை மற்றும் சொர்ண தானம், செய்திடல் வேண்டும்.

வைகாசி மாத த்ருதியையின் போது சந்தனம் கலந்த நீரையும், கொழுக்கட்டையையும் நைவேத்யம் செய்தால் எல்லா தேவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

வைகாசி மாத த்ருதியை அக்ஷய த்ருதியை என அழைக்கபடுகிறது. இன்று சாப்பாடு, ஜலம், வஸ்த்ரம். தங்கம் தானம் செய்தால் குறைவில்லா பல நன்மைகள் உண்டாகும்.. இன்று உபவாசம் இருப்பவர்களுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் ஏராளமாக கிடைக்கும்.


திதி பூஜைகள் தொடர்ச்சி. சதுர்த்தி விரதம்.

சுக்லபக்ஷம் சதுர்த்தியில் பிள்ளையாருக்கு கந்த மூலாதிகளால் வாசனையான திரவியங்கள், , பலகாரங்கள் ஆகியவற்றுடன் பூஜை செய்ய வேண்டும். அரளி பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும்.

பிள்ளையார் முன்பு அந்தணர்கள் ஸ்வஸ்திவாசகம் சொல்ல பூஜை ஆரம்பிக்க வேன்டும். அதன் பின் பார்வதி, சங்கரன் என்று தொடங்கி கணேச பூஜையை துவங்க வேண்டும், பித்ருக்களுக்கும், நவகிரஹங்களுக்கும் பூஜை

செய்ய வேண்டும். நான்கு கலசங்கள் வைத்து அதில் கோரோசனை, குங்கிலியம், மருந்து வாசனை சாமான்களை போட்டு, புனித நீரால் கலசங்களை நிரப்ப வேண்டும். கணேசரை அழகிய சிம்மாசனத்தில்
அமர்த்த வேண்டும். கலச பூஜை செய்தபின் அடியிற்கண்ட மந்திரத்தால் கணேசரை பூஜை செய்ய வேண்டும்.

சஹஸ்ராக்ஷம் சததாரம் ரிஷிபி: பாவனம் கிருதம்
தேன அபிஷிஞ்சாமி பாவமான்ய: புனந்து தே.
பகம் தேவருணோ ராஜா பகம் ஸூர்யோ ப்ருஹஸ்பதி:

பகம் இந்த்ரஸ்ச வாயுஸ்ச பகம் சப்தர்ஷயோ தது:
யத்தே கேஸேஷூ தெளர்பாக்கியம் சீமந்தேயச்ச மூர்த்தனி
லலாடே கர்ணயோ: ரக்ஷணோ ஆபஸ்ததுந்தம் தேசதா:

இந்த மந்திரங்களை கணேசருக்கு அபிஷேகம் செய்வித்த பின் சொல்ல வேண்டும். அதற்கு பின் யாக ஹோம பூஜைகளையும் செய்ய வேண்டும். அதற்குபின் கையில் புஷ்பம், அறுகம்புல் மஞ்சள் கடுகு எடுத்துக்கொண்டு

கணேசனின் தாயார் பார்வதியை மூன்று முறை புஷ்பாஞ்சலி செய்ய வேண்டும்.. மந்திரத்தை சொல்லி ப்ரார்த்தனை செய்ய வேண்டும்.

ரூபம் தேஹி யசோ தேஹி பகம் பகவதி தேஹி மே;
புத்ரான் தேஹி, தனம் தேஹி, சர்வான் காமாம்ஸ்ச தேஹிமே
அசலாம் புத்தி மே தேஹி தராயாம் கியாதி மே வ ச

ப்ரார்த்தனைக்கு பின் அந்தணருக்கு சாப்பாடு போட்டு வஸ்த்ரம், தக்ஷிணை கொடுக்க வேண்டும் இவ்வாறு கணேசரையும் கிரஹங்களையும் பூஜை செய்தால் செய்யும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும் லக்ஷ்மி கடாக்ஷமும் கிடைக்கும்..

கணேச காயத்ரி சொல்லி வழிபாடு செய்யலாம்.
மஹா கர்ணாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
கணேசருக்கு பூஜை செய்ய நாள், நக்ஷத்திரம் உபவாசம் எதுவும் தேவையில்லை .சிரத்தையுடன் பூஜை செய்தால் போதும்.

புரட்டாசி மாதம் சுக்ல சதுர்த்தியில் செய்ய படும் கணேச பூஜை சிவா (க்ஷேமம்) என்று அழைக்க படுகிறது.
அன்று ஸ்நானம், தானம், உபவாசம் ஆகிய நற் கருமங்கள் செய்தால் கணபதியின் அருள் பார்வை கண்டிப்பாக கிடைக்கும்.பூஜை முடிந்த பிறகு வெல்லம், உப்பு, பால் ஆகியவை தானம் செய்ய வேன்டும்.

பிராமணருக்கு சாப்பாடு போடுவதுடன் குருவாக கருதி உபசரிக்க வேண்டும். தானத்தின் போது வெல்லம், உப்பு, எள்ளு உளுந்து கொழுக்கட்டைகளும் வடை பாயசமும் கொடுக்க வேண்டும்.

மாசி மாதம் சுக்ல சதுர்தியில் செய்யும் கணபதி பூஜை “சாந்தா” என்று அழைக்கப்படும். .இன்று உபவாசமிருந்து கணபதிக்கு ஹோம பூஜைகள் செய்த பிறகு பிராமணர்களுக்கு உப்பு, வெல்லம், காய்கறி, இனிப்பு பண்டங்கள் தானம் செய்ய வேண்டும்.

எந்த மாதத்தில் செவ்வாய் கிழமையுடன் இணைந்து சுக்ல சதுர்த்தி வருகிறதோ அதை “சுகா” என்று அழைப்பார்கள்.

இந்த விரதம் பெண்களுக்கு ஸெளபாக்கியம், உத்தமமான பேரழகு சுகம் ஆகியவைகளை கொடுக்கும். பகவான் பரமசிவன் பார்வதியுடன் இணைந்து பூமா தேவி மூலம் சிகப்பு வர்ணம் கொண்ட மங்கள சொரூபனை உற்பத்தி

செய்தார். அதனால் அவன் பூமி குமாரன், குஜன், ரக்தன், விரன், அங்காரகன் என்ற பெயரில் உலகில் அழைக்கப்படுகிறான் .சரீரத்தில் அங்கங்களை பாதுகாப்பதால் அங்காரகன் என்றும் மங்களங்களை தருபவன் ஆதலால் மங்களன் என்றும் அழைக்கபடுகிறான்.

செவ்வாய் கிழமையுடன் கூடிய சுக்ல சதுர்த்தியில் ஆணோ அல்லது பெண்ணோ உபவாசத்துடன் கணேசரையும், அங்காரகனையும் சிவப்பு பூக்கள், சிகப்பு சந்தனம் ஆகியவைகளால் பூஜை செய்தால் சகல செளபாக்கி யங்க ளையும் பெறுவர்.

முதலில் குளித்து சங்கல்பம் செய்து கணேசரை மனதால் நினைத்து , கையிலே சுத்தமான மண்ணை எடுத்துக்கொண்டு மந்திரத்தை சொல்ல வேண்டும்..

இஹ த்வம் வந்திதா பூர்வம் கிருஷணோ னோத்தரதா கிலா தஸ்மான் மே தஹ பாப்மானம் யன்மயா பூர்வ சஞ்சிதம்..

அதன் பின் மண்ணை சுத்தமான ஜலத்துடன் கலந்து சூரியன் முன்னால் வைத்து கீழ் கண்ட மந்திரம் சொல்ல வேண்டும்.

த்வம் ஆபோ யோனி: சர்வேஷாம் தைத்ய தாவைத் யோகஸாம்.
ஸ்வேதாண்டஜோதபிதாம் சைவ ரஸானாம் பதாயே நம:

இதன் பிறகு குளிக்க வேன்டும். .பிறகு பவித்ரம் தரித்து வீட்டுக்குள் செல்ல வேண்டும். அதன் பின் அறுகம்புல் ,வன்னி இலை, அரசு இலை, மாவிலை போன்றவற்றை மந்திரம் உச்சரித்து சமர்பிக்க வேண்டும்.பிறகு பசுமாடு ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.,
கோபி சந்தனம் அணிந்துகொண்டு சமித்துகளால் கொழுந்து விட்டெறியும் அக்னியில் பால், பார்லி, எள், போன்றவைகளால் செய்த பதார்த்தங்களை போட வேண்டும். அப்போது

அடியிற் கண்ட மந்திரத்தை சொல்லவும் .ஓம். சர்வாய ஸ்வாஹா; ததா ஓம் லோஹிதாங்காய ஸ்வாஹா என்ற ப்ரத்யேக மந்திரத்தை 108 தடவை சொல்லி ஆகுதி அளிக்க வேண்டும். .

பிறகு தங்கம் அல்லது வெள்ளி , சந்தனம் அல்லது தேவதாரு மரத்தினால் செவ்வாயின் மூர்த்தியை செய்து ஆவாஹனம் செய்ய வேண்டும். நெய்.

குங்குமம் சிகப்பு சந்தனம், சிகப்பு புஷ்பம், நைவேத்யம் என்று வரிசையாக பூஜை செய்ய வேண்டும். பிறகு “அக்னி மூர்தெள” என்று தொடங்கும் யஜுர் வேத மந்திரத்தை சொல்ல வேண்டும். பூஜை முடிந்த பிறகு செவ்வாயின்

மூர்த்தியை பிராமணருக்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் அரிசி, வெல்லம், நெய், பால், கோதுமை ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.கருமிதனமாக இருக்க கூடாது.

நான்கு முறை பூஜை செய்தபின் ஒரு தூய்மையான சத்தான பிராமணருக்கு இந்த கணபதி, செவ்வாய் மூர்த்தியை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் விரதம் பூர்த்தியானதாகும்.

அதன் பின் அந்த பக்தன் சந்திரனை விட சாந்தியாகவும், சூரியனை விட தேஜஸாகவும், வாயுவை விட பலவானாகவும் இருப்பான். கணபதி அருளால் நீண்ட ஆயுள் பெறுவான். மிகுந்த செல்வத்துடன் செல்வாக்குடன் இருப்பான்..

நாக பஞ்சமி;:--ஆஸ்தீக முனிவர் நாகங்களை வேள்வி தீயிலிருந்து காப்பாற்றியது இந்த பஞ்சமியில் தான். இதனால் தான் நாகங்களுக்கு பஞ்சமி உகந்த நாள் எனக் கருதபடுகிறது. பின் கண்ட மந்திரத்தை சொல்வது மிகவும் உத்தமம்

சர்வே நாகா ப்ரீயந்தாம் மேயே கேசித் ப்ருத்விதலே.
யே சே ஹோலி மரீசிஸ்தா யே சுந்தர திவி சம்ஸ்திதா:
யே நதீஷீ மஹாநாகா யே சரஸ்வதி காமின:

யே சே வாபி தடாகேஷு தேஷீசர்வேஷீ வை நம:

இந்த பூமியிலே, ஆகாசத்திலே, ஸ்வர்கத்திலே , சூரிய கிரணங்களிலே, சரோவர்களிலே ஏரி, கிணறு, குளங்களிலே ப்ரசன்னமாயிருக்கும் எல்லா நாகங்களுக்கும் நமஸ்காரம்.

இவ்வாறு நியமப்படி பஞ்சமியன்று நாகங்களுக்கு பூஜை செய்து ப்ராஹ்மண போஜனம் செய்வித்து அதன் பிறகு தானும் தன் குடும்பத்துடன் முதலில் இனிப்பையும் அதன் பிறகு மற்ற ப்ரசாதம் சாப்பிடுகிறானோ , அவன் இறந்த

பிறகு நாக லோகம் சென்று போக போக்யத்துடன் வாழ்கிறான். அதன் பின் த்வாபர யுகத்தில் மிகுந்த பராக்ரம சாலியாக ஆரோக்கியமாக பேரன் பேத்திகளோடு அரசாள்கிறான்.
.
சதுர்த்தியன்று ஒரு வேளை சாப்பிட்டு பஞ்சமியன்று நாக பூஜை செய்ய வேண்டும்..12 மாதம் சுக்ல பஞ்சமியும் பூஜை செய்ய வேண்டும். வ்ரத பாரணை செய்ய வேண்டும். ஏராளமான ப்ராஹ்மணர்களுக்கு தங்க நாகர் தானம் செய்ய வேண்டும்.

அனந்தன், வாசுகி, சங்கன், பத்மன், கம்பளன், கார்கோடகன், அஸ்வதர், த்ருதராஷ்டிரன், சங்கபாலன், காளியன், தக்ஷகன், பிங்களன் என்று 12 நாகங்களுக்கும் 12 மாதம் கிரமமாக பூஜை செய்ய வேண்டும்.

பூமியில் நாகங்களின் சித்திரங்களை தங்கத்தாலோ , மரத்தாலோ , மண்ணாலோ செய்ய வேண்டும். அரளி, தாமரை, மல்லிகை பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் .தூப, தீப , நைவேத்யம் செய்ய வேண்டும். கீரை, லட்டு ஆகியவைகளை ஐந்து ப்ராஹ்மணர்கள் உண்ண ச்செய்ய வேண்டும்.

பஞ்சமி யன்று பால், வெள்ளரிக்கய் சமர்பிக்க வேண்டும்.சிரவண சுக்ல பஞ்சமியன்று பால், தயிர், அறுகம்புல், சந்தனம் அக்ஷதை மற்றும் அநேக பதார்தங்களுடன் வணங்க வேண்டும்.

புரட்டாசி சுக்ல பஞ்சமியில் நாகங்களை பல விதமாக சித்தரித்து பலவிதமாக பூஜித்தால் தக்ஷகன் என்ற நாகத்தின் ஆசி கிடைக்கும்
.ஐப்பசி சுக்ல பஞ்சமியில் தர்ப்பை புல்லால் நாகர் செய்து தயிர், பால், ஜலத்தால் ஸ்நானம் செய்விக்க வேண்டும்.. கட்டி தட்டிய பால், கோதுமையினால் செய்த பலகாரம் சமர்பிக்க வேண்டும்

.இதனால் வாஸுகி த்ருப்தியடைவார். எந்த இடத்தில் :ஓம் “குருகுலவே ஸ்வாஹா”என்ற மந்திரம் ஜபிக்க படுகிறதோ அங்கு பாம்பு பயம் ஏற்படாது.

சஷ்டி விரத மஹிமையும் கார்த்திகேயரும்.:--
புரட்டாசி சஷ்டியின் போது எண்ணையினால் அபிஷேகம் செய்ய க்கூடாது..

புரட்டாசி சஷ்டி மிகவும் சிரேஷ்டமானது.இன்று செய்யும் ஸ்நானம், பூஜை, தானம் ஆகியவைகள் பன் மடங்கு பயனளிக்கூடியது.. இரவு பலகாரம் சாப்பிடவேண்டும்.
 

Latest ads

Back
Top