Thirumeyachur – a maha-kshetram

Status
Not open for further replies.

Thirumeyachur – a maha-kshetram


goddesslalithadevi.jpg


மிகவும்
பிரசக்தி பெற்றது இத்திருத்தலம். இங்குள்ள இறைவன்மேகநாதசுவாமி. இறைவிசாந்தநாயகி அம்மன்.

இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளம் இரயில் நிலையத்திற்கு மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பேரளம் பஸ்நிலையத்திலிருந்தும் அதே தூரம் தான். மயிலாடு துறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் பேரளம் என்ற ஊர் அமைந்திருக்கிறது.


இத்தலப் பெருமை யாதெனில் திருமீயச்சூர் திருக்கோயிலும், திருமீயச்சூர் இளங்கோயிலும் ஒரே ஆலயத்துள் விளங்கும் சிறப்புடையன. திருமீயச்சூர் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகம் ஒன்றையும், இளங்கோயில் திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருப்பதிகம் ஒன்றையும் பெற்று விளங்குவன.


இத்திருத்தலத்தில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பூஜை செய்தல் மிகவும் விசேஷம். ஒருமுறை ஸ்ரீஹயக்கிரீவர் அகஸ்தியருக்கு லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்கையில் ஸ்ரீ லலிதாம்பிகையை எங்கு தரிசிக்கலாம்? என்று வினவ, அவர் அருணனும், சூரியனும் பூஜை செய்த ஸ்தலம் பூலோகத்தில் மீயச்சூர் எனும் ஊரில் உள்ளது. அங்கு சென்றால் அன்னையை தரிசிக்கலாம் என்று கூறினாராம். மேலும் அங்கு லலிதா சகஸ்ரநாமத்தை வாசிப்பதனால் பெற வேண்டிய பலன்களை நிச்சயம் பெற முடியும் என்றும் கூறினார்.


இதைக் கேட்ட அகத்தியரும் உடனே திருமீயச்சூருக்கு வந்து அப்போது சூரியனால் ஈஸ்வரன் பூஜிக்கப்படும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார். சூரியன் ஈஸ்வரனுக்கு செய்த பூஜையாகியஆம்லா பலாதி பூர்ண கிரண பூஜைசெய்யும் முறையை அறிந்து தானும் அவ்வாறே செய்து ஈஸ்வரனின் அருளையும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பூஜையினால் அம்பாளின் பூரண அனுக்கிரஹத்தையும் பெற்றார்.


இந்த சூரிய பூஜை ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21 முதல் 27ம் தேதி முடிய நடைபெறுகிறது.
இங்கு கொலுவீற்றிருக்கும் அம்பிகை மிகவும் அழகானவள், அருள் பாலிப்பவள். கலியுகத்தில் அன்னையின் லீலையைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு சிறு சம்பவம்.


நம்மை மிகவும், இல்லை, இல்லை, அத்திருக்கோயிலைச் சார்ந்தவர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஒரு நிகழ்ச்சி.


பெங்களூர் வாசியான ஒருவர் மிகவும் தெய்வபக்தி நிரம்பியவர். அன்னையின் திருநாமத்தை நாமணக்கச் சொல்லி மகிழ்பவர். அவர்களின் கனவில் ஒருமுறை அம்பிகை தோன்றி தான் இருக்கும் இருப்பிடத்தைச் சொல்லி தனது கால்களுக்கு கொலுசு வாங்கி அணிவிக்குமாறு கேட்டாளாம். விழித்தெழுந்த அந்த அம்மாவிற்கு என்னவென்று முதலில் எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அம்பிகை தன் கனவில் தோன்றியருளிய செயலைச் செய்வது என்று முடிவெடுத்து கொலுசுகளை வாங்கிக் கொண்டு திருமீயச்சூர் நோக்கி பயணித்தார். அங்கு சென்று அங்கு பூஜை செய்யும் அர்ச்சகரிடம் அம்பாளுக்கு கொலுசு அணிவிக்க வேண்டும் அன்று கூற, அவர்கள், நாங்கள் நெடுங்காலமாக அம்பாளுக்கு பூஜை மற்றும் அபிஷேகம் செய்து வருகிறோம். ஆனால் அம்பாளின் கால்களில் கொலுசு அணிவிப்பதற்கு வசதியாக துவாரம் இருப்பதாகத் தெரியவில்லையே என்று கூற, வந்திருந்த அந்த பெண்மணி தன் கனவில் நடந்ததை விவரித்தார். பிறகு அர்ச்சகர்கள் அம்பாளின் கால்களை நன்கு ஆராய்ந்து துவாரம் இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தார்களாம். இத்துணை நாளும் அபிஷேக ஆராதனை செய்வதால் துவாரம் இருந்த பகுதி அழுக்கினால் மறைந்திருப்பதைக் கண்டு பிறகு நன்றாக சுத்தம் செய்து அப்பெண்மணி வாங்கி வந்திருந்த கொலுசுகளை அணிவித்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர்.

இந்த
அம்பிகை மிகவும் வரப்பிரசாதி. வணங்கும் அடியவர்களைக் கைவிடாது காத்து இரட்சிப்பவள்.



அம்பாளுக்கு ஒரு மண்டலம் அதாவது நாற்பத்து எட்டு நாட்கள் (48) லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால், நினைத்த காரியம் கைகூடும். நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும். புத்திரப்பேறு, கன்னிகாதானம், நோய் நொடியிலிருந்து விடுதலை போன்ற பல துன்பங்களிலிருந்து விடுபட்டு இன்பம் அடையமுடியும்.

பௌர்ணமி தினத்தில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்தல் மிகவும் நற்பலனைத் தரக்கூடியது. லலிதா நவரத்தின மாலை பாடி அன்னையின் அருளைப் பெறுவதும் மிகவும் நல்லது.


மீயச்சூரில் மனோன்மணியாக அமர்ந்திருக்கும் அம்பிகையை தனது லோபா முத்திரையுடன் அகத்தியர் வந்து ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் சொன்னபோது அம்பிகை அவர்களுக்கு நவரத்தினங்களாகக் காட்சி தந்தாளாம். அப்போது அகத்தியர் இயற்றியருளிய ஸ்தோத்திரமேஸ்ரீலலிதா நவரத்ன மாலை‘. இத்துணை சிறப்பு வாய்ந்த மீயச்சூருக்கு அம்பிகை எவ்வாறு வந்தாள்?


பண்டாசுரன் என்ற அரக்கனை அழிக்கவே லலிதாம்பிகை, ஸ்ரீசக்கர ரதத்தில் வேள்வி குண்டத்திலிருந்து அவதரித்து, பின்னர் அவனுடன் போர் செய்து அழித்தாள். தேவர்கள் மகிழ்ந்தனர். ஆனாலும், அம்பிகையின் உக்கிரம் தணியாததால் பரமேசுவரன் சாந்த சொரூபிணியாகமனோன்மணிஎன்ற நாமத்தில் பூமியில் ஸ்ரீபுரவாசினியாக தபசில் இருக்கும்படி கூறினார். அதன்படியே அம்பிகை திருமீயச்சூர் வந்து கோபம் தணிந்து மகிழ்ச்சியுடன் காட்சி தருகிறாள். அவள் தனது திருமுகத்திலிருந்து வசின்யாதி தேவதைகளை தோற்றுவித்தாள். இவர்கள் அன்னையைப் போற்றிப் பாடிய பாடல்களே ஸ்ரீலலிதா சகஸ்ரநாமமாக விளங்குகின்றன.


அன்னையை மட்டுமே வர்ணித்தால் போதுமா? பரமேசுவரனுடைய சிறப்புக்களை பார்க்கலாம். ஸ்ரீமேகநாதசுவாமி சுயம்புலிங்கமாகத் தோன்றியவர். பிரண்டை அன்னத்தை தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

சாபத்தால் பீடிக்கப்பட்டிருந்த சூரியன் ஈஸ்வரனை வழிபட்டு தனது கருமை நீங்கி, செவ்வொளி பெற்று இன்புற்றான். இத்தலத்தில் ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் செய்தல் சிறப்பு. கருடன், அருணன், வாலி, சுக்ரீவன், எமன், சனீச்வரன் ஆகியோர் இத்திருத்தலத்தில் தான் பிறந்துள்ளனர். சுவாமியை வழிபடுவோர்க்கு சர்ப்ப தோஷம் நீங்கும். அவரவர் ஜன்ம நட்சத்திரத்தில் ஆயுஷ்ய ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்ய சுவாமியின் அருளால் பூர்ண ஆயுள் கொண்டு நோய் நொடியிலிருந்து விடுபட்டு சகல சௌபாக்யங்களுடன் வாழ்வர் என்பது உறுதி.


சூரியன் பரமேசுவரனை வழிபட்டதாக சொன்னோம். ஏன் சூரியபகவான் இத்திருத்தலநாதரை வணங்கினார்? அவருடைய சாபம் நீங்கவே. சூர்ய மூர்த்திக்கு சாபமா? ஆம்! சூரிய பகவானின் தேரோட்டி அருணன். அவர் ஒரு சமயம் பெண்ணுருக்கொண்டபோது சூரிய பகவான் அவளிடம் தவறாக நடந்து கொண்டதால் சாபம் பெற்றார். அச்சாபம் நீங்கவே இத்தல ஈஸ்வரனை வணங்கி வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். சூரிய பகவானின் கருமை நீங்கி, பொன்னிறமானர்.



சக்தி நிறைந்த ஐயனும், அம்பிகையும் வீற்றிருக்கும் இத்திருக்கோயிலின் மூலவிமானம் தனியழகு உடையது. இத்திருக்கோயிலில் உள்ள பஞ்ச பூதலிங்கங்கள், அஷ்டதிக்பாலகர்கள், சப்தபாலகர்கள், சப்தமாதாக்கள் பூஜித்த லிங்கங்கள் ஆகியவைகளை தரிசிக்க பேரருள் கிட்டும்.


க்ஷேத்திரபுராணேசுவரர், கல்யாண சுந்தரர், துர்க்கை, சூரியன் சதுர்முக சண்டிகேசுவரர், திருவுலா நாயகர்களில் சோமாஸ்கந்தர், வில்லேந்திய முருகன் ஆகியோர் திருவுருவங்கள் கலையழகு வாய்ந்தவை.
இத்துணை பெருமை வாய்ந்த இத்திருத்தலத்திற்கு சென்று அன்னையின் அருள்பெறுக. பரமேசுவரனை வழிபட்டு துன்பங்களிலிருந்து விடுபடுக.

Please read more from here

Thirumeyachur ? a maha-kshetram ? due for kumbabishekam in Feb 2015 | Sage of Kanchi
 
Status
Not open for further replies.
Back
Top