The eight directions and their benefits as described in Vastu Shastra....

வாஸ்து சாஸ்திரம் கூறும் எட்டு திசைகளும் அதன் பலன்களும்.

கிழக்கு ;

சூரியன் உதிக்கும் திசை, பூமியானது இத்திசை நோக்கியே சுழல்கின்றது சூரியனின் ஆற்றீல் அறிந்த நமது முன்னோர்கள் இத்திசை “சூரிய நமஸ்காரம்” செய்தனர். இந்த திசை இந்திர பகவானுக்கு உரிய திசையாகும்.

மேற்கு :
சூரியன் மறையும் திசை, பூமி சுற்றும் திசைக்கு எதிர்ப்புறம், இந்த திசைக்கு உரிய பாலகர் வருண பகவான் ஆகும்.

வடககு :
சூரியன் உதிக்கும் திசை நோக்கி நாம் இருக்கும்போது நமக்கு இடப்புறம் உள்ள திசையாகும். இந்த திசைக்கு உரிய பாலகர் குபேர ஆவார். வாஸ்து சாஸ்திரத்தில் இது மிக முக்கியமானது திசையாக கருதப்படுகின்றது.

தெற்கு :
சூரியன் உதிக்கும் திசைக்கு வலது புறம் உள்ள திசை, இந்த திசைக்கு உரிய பாலகர் “எமன்” ஆவார். வாஸ்து சாஸ்திரத்தில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பல விவரங்கள் கூறபட்டடுள்ளது.

வடகிழக்கு :
வடக்கும், கிழக்கும் சேரக்கூடிய திசை வடகிழக்கு திசையாகும். இது வாஸ்து சாஸ்திரத்தில் மிக இன்றிமையாத, ஈசனுக்கு உரிய தெய்வ சக்தி உடையது. பாலகர், ஈசான்கள். இந்த திசை சரியாக ஒர் இல்லத்தில் அமைந்தால் அனைத்து நலன்களூம் குறைவில்லாமல் கிடைக்கும்.

தென்கிழக்கு :
தெற்கும் கிழக்கும் சேரும் பகுதி - தென்கிழக்கு திசையாகும், அக்னிக்கும் உரியது பாலகர். அக்னிக்கு உரியது பாலகர். அக்னிபகவான் விட்டில் பெண்கள் நலம், வம்பு, வழக்கு, புகழ், வரவுக்கு அதிகமான செலவு, பகைவரால் தொல்லை முதலியவைகள் இந்த பகுதி அமையும் விதத்தை பொருத்தே அமைகின்றது.

#வடமேற்கு :
வடக்கும் மேற்கும் சேரும் பகுதி வடமேற்கு வாயுப்பகுதி, பாலவர், வாயு பாகவான். பெண்களின் நலன், திருமண வாழ்க்கை, குணம், நடத்தை, குடும்பத்தின் ஒற்றுமை, செல்வத்தின் அமைப்பு, வழக்கு விவகாரங்கள், புகழ் அரசியல் செல்வாக்கு முதலியவை இந்த திசையை வைத்தே அமைகின்றது.

#தென்மேற்கு :
தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம் தென்மேற்க்கு என்று அழைக்கப்பகிறது. நைருதிக்கு உரியது இந்த மூலை. “நைருதிமூலை” என்று அழைக்கப்படுகிறது. ஈசனிய மூலைக்கு நேர் எதிர் மூலை இது. ஈசான்யம் ஜனனம் என்றால் இது மரணம். ஈசான்யம் வரவு என்றால் இது செலவு. எனவே ஈசான்யத்தைப் போல் இது முக்கியமான திசையாகும். இது “கன்னி மூலை” என்று அழைக்கப்படுகின்றது.
 
Back
Top