Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
Tamil Quiz—3 தமிழ் தெரியுமா? Do You Know Tamil?
Score level:
25 –30 You are a Tamil Scholar!
15-25 Well Done! You are good at Tamil.
10-15 Not good at Tamil.
Under Ten- Are you a Tamil?
By London Swaminathan
61.தொல்காப்பியரின் கூற்றுப்படி மனிதனுக்கு எத்தனை அறிவு?
62.பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி --என்று பாடியவர் யார்?
63.எத்தனை குறைகள் எத்தனை பிழைகள், எத்தனை அடியேன் எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்-- என்று பாடியவர் யார்?
64.எல்லவுயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்---யார் கூறியது இது?
65.கொள்ள மாளா இன்பவெள்ளம் கோது இல தந்திடும் என் வள்ளலேயோ—யாருடைய வாசகம் இது?
66.பத்துப்பாட்டு நூல்களில் மிக நீண்ட நூல் எது?எத்தனை வரிகள்?
67.நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்—என்று திருமூலர் எந்த நூலில் கூறுகிறார்?
68.மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று சொன்னவர் யார்?
69.எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி வேறு ஒன்றும் அறியோம் பராபரமே என்று சொன்னவர் யார்?
70.நாமும் கதையை முடித்தோம் இந்த நானிலம் இன்பத்தில் வாழ்க—என்று வாழ்த்துபவர் யார்?
71. இன்பம் இடையறாது ஈண்டும், மன்னுயிர்க்கெல்லாம் இனிது—என்றி இன்பத்தில் திலைப்பவர் யார்?
72. காலன் எனை அணுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே---என்று வேண்டுபவர் யார்?
73.காலா என் காலருகே வாடா, உனை சிறு புல்லென மதிக்கிறேன் என்று வீர முழக்கம் செய்தவர் யார்?
74.நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் என்று கர்ஜித்தவர் யார்?
75.அம்பலத்தேனே அரு மருந்தே ஆனந்தத்தேனே அருள் விருந்தே—என்று சிவனை சுவைபடப் பாடுபவர் யார்?
76. தமிழில் முக்கனிகள் எவை?
77. முத்தமிழ் யாவை?
78.மூவேந்தரின் கொடிகள் யாவை?
79. மூவேந்தரின் மாலைகள் என்ன?
80.சடையப்ப வள்ளல் யார்?
81.பிரபுட தேவ மகாரஜன் யார்?
82.முத்துக் குளிக்க பெயர்பெற்ற பாண்டிய நாட்டுத் துறைமுகம் எது?
83. அறங்கூறு அவையம் சோழ நாட்டில் எந்தவூரில் இருந்தது?
84.திவாகரம், சூடாமணி, பிங்கலந்தை என்பவை என்ன?
85.புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றியவர் யார்?
86.சுவாமிநாத தேசிகர் எழுதிய இலக்கண நூலின் பெயர் என்ன?
87.திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்—என்ற வாழ்த்துடன் துவங்கும் நூல் எது?
88. விவேக சிந்தாமணி என்ற தமிழ் நூலை எழுதியவர் யார்?
89.மாதவியின் மகள் பெயர் என்ன, தாய் பெயர் என்ன?
90.மதுரை நகரை கண்ணகி எரித்த நாள் எது?
***************
விடைகள்:61. ஆறு அறிவு 62. மாணிக்கவாசகர் 63. தேவராய சுவாமிகள் (கந்தசஷ்டி கவசம்) 64. தொல்காப்பியர் 65. நம்மாழ்வார் தி.பி. 3298, 66.மதுரைக் காஞ்சி, 782 வரிகள்,67. திருமந்திரம் 68. திருஞான சம்பந்தர் 69. தாயுமான சுவாமிகள்,70. பாரதியார் (பாஞ்சாலி சபதம்), 71. வள்ளுவர் (குறள் 369, 68), 72. (அருணகிரிநாதர், திருப்புகழ்) 73. பாரதி 74.அப்பர் 75.ராமலிங்க சுவாமிகள் 76. மாம்பழம், பலாப் பழம், வாழைப்பழம் 77. இயல் இசை, நாடகத் தமிழ், 78.சேரன்-வில், சோழன்-புலி, பாண்டியன் மீன் கொடிகள் 79.சேரன்- பனை, சோழன்- ஆத்தி, பாண்டியன்- வேம்பு 80.கம்பனை ஆதரித்த வள்ளல். கம்ப ராமயணத்தில் பாடப்பட்டவர்..81. அருணகிரி நாதரை ஆதரித்த குறுநில மன்னன். திருப்புகழில் பாடப்பட்டவர். 82. கொற்கைத் துறைமுகம், 83 உறையூர்.84. தமிழ் நிகண்டுகளின் பெயர்கள், 85.ஐயனாரிதனார் 86. இலக்கணக் கொத்து 87. சிலப்பதிகாரம், 88.பெயர் தெரியாத புலவர். 89.மகள்—மணிமேகலை, தாய்—சித்திராபதி 90. ஆடி மாதம் அஷ்டமி திதி, கார்த்திகை நட்சத்திரம், வெள்ளிக்கிழமை. contact :[email protected]