Kuzhi tharpanam. Iyer aapaSthampa sutram yajur vedam.
பத்து நாள் பங்காளிகள் இறந்தவரை விட வயதில் சிறியவர்கள் க்ஷவரம் பண்ணிக்கொண்டும், பெரியவர் க்ஷவரம் இல்லாமலும் இந்த தர்ப்பணத்தை பண்ண வேண்டும்.
கல் ஊன்றிய இடத்தில் செய்யும் போது தான் வாஸோதகம் செய்ய வேண்டும். வேறு இடத்தில் செய்யும் போது திலோதகம் மாத்திரம் தான் செய்ய வேண்டும்.
ஸந்தியா வந்தனம் 10 காயத்திரி ஜபம் தினமும் உண்டு. இந்த தீட்டு காலத்தில்.
பத்தாம் நாள் வெள்ளி கிழமையோ அல்லது அமாவாசையோ வந்தால் 9ம் நாள் க்ஷவரம் செய்து கொண்டு பத்தாம் நாள் ஞாதிகள்=தாயாதி=பங்காளி தர்ப்பணம் செய்ய வேண்டும்.
சந்தியா வந்தனம் செய்து விட்டு ஈர ஒற்றை வேஷ்டியுடன் ஒரு தர்பையால் செய்த பவித்ரம் வலது கை மோதிர விரலில்
போட்டுக்கொண்டு கிழக்கு முகமாக தரையில் தடுக்கு அல்லது பலகை யில் உட்கார்ந்து கொண்டு உட்காருமிடத்தில் ஒரு கட்டை பில்லும் , பவித்ரத்துடன் ஒரு கட்டை புல்லும் போட்டு கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.
வீட்டிற்குள் இந்த தர்ப்பணம் மட்டும் செய்ய கூடாது. மொட்டை மாடியில் தண்ணீர் குழாய் வசதி இருந்தால் சிறிது மணலோ, அல்லது மண்ணோ போட்டுக்கொண்டு, மேற் கூரையில்லாத இடத்தில் செய்யலாம்.
வீட்டின் கொல்லயிலும், மரம், செடிக்கு அடியிலும் செய்யலாம்.கார் ஷெட்டில் மேற் கூரை இருப்பதால் செய்ய கூடாது.காம்பெளண்ட் சுவருக்கும் வீட்டிற்கும் உள்ள இடை வெளியிலும் மேற் கூரை இல்லா இடத்தில் செய்ய வேண்டும்.
நின்று கொண்டு ஆசமனம் செய்ய கூடாது. கையில் பவித்ரம் போட்டுக்கொண்டு ஆசமனம் செய்ய க்கூடாது. பவித்ரம் கழட்டி காது இடுக்கில் வைத்து கொண்டு ஆசமணம் செய்ய வேண்டும். பிறகு ஞாபகமாக போட்டுக்கொள்ள வேண்டும்.
முதலில் ஆசமனம்:- அச்சுதாய நம; அநந்தாய நம: கோவிந்தாய நம:
கேசவ என்று சொல்லிகொண்டே வலது கட்டை விரலால் வலது கன்னத்தில் தொட வேண்டும். இம்மாதிரியே நாராயணா கட்டை
விரல் இடது கன்னம்; மாதவா பவித்ர விரல் வலது கண், கோவிந்தா பவித்ர விரல் இடது கண்; விஷ்ணோ ஆள் காட்டி விரல் வலது மூக்கு; மதுஸுதன ஆள் காட்டி விரல் இடது மூக்கு; த்ரிவிக்கிரம சுண்டு விரல் வலது காது;
வாமன சுண்டு விரல் இடது காது; ஸ்ரீ தர நடுவிரல் வலது தோள்; ஹ்ருஷிகேச நடுவிரல் இடது தோள்; பத்ம நாப ஐந்து விரல்களும் மார்பு; தாமோதர ஐந்து விரல்களாலும் தலையிலும் தொட வேண்டும். இதற்கு அங்க வந்தனம் என்று பெயர்.
விநாயகர் வந்தனம்:- சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸ்ஸன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.ஐந்து தடவை இரு கைகளாலும் நெற்றி ஒரங்களில் குட்டிக்கொள்ளவும்.
ப்ராணாயாமம்:- ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம் ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி
தியோ யோன: ப்ரசோதயாத்; ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்ம ஓம் பூர்புவஸுவரோம் என்று சொல்லி வலது காதை தொடவும்.
ஸங்கல்பம்:- இடது உள்ளங் கையை வலது தொடை மீது நிமிர்த்தி வைத்துகொண்டு அதன் மேல் வலது உள்ளங் கையை கவிழ்த்து வைத்து கொள்ளவும்.
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா அப்யந்தர ஸுசி: மானஸம் வாசிகம் பாபம்
கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீ ராம ஸ்மரணே நைவ வ்யபோஹதி ந ஶம்சய: ஸ்ரீ ராமா, ராம, ராம திதிர் விஷ்ணு: ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணு ரேவச யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஞ்யயா ப்ரவர்த்த மானஸ்ய ஆத்ய ப்ருஹ்மண: த்விதீய பரார்த்தே
ஸ்வேத வராஹ கல்பே , வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே , சாலிவாஹன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே
பிலவ நாம ஸம்வத்சரே aயணே -------ருதெள ------- மாசே --------- பக்ஷே --------- புண்ய திதெள -------- வாஸர யுக்தாயாம் --------- நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணு யோக விஷ்ணு கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ---------- புண்ய திதெள
பூணல் இடம் =ப்ராசீனாவீதி
-------------- கோத்ராNaam ------ sarmana: மம ஞாதி பூத ப்ரேதாnaam: அத்ய தசம தினே அஹனி தஹன ஜனித க்ஷுத்ருணா தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதா ஆப்யாயனார்த்தம்
ப்ரேதா த்ருப்தியர்த்தம் குண்ட தீரே அதீத ப்ரதம தினம் ஆரப்ய அத்ய தசம தின பர்யந்தானி அஹரஹஹா கர்தவ்யானி த்ரி சப்ததி வாஸோதகானி , பஞ்ச சப்ததி திலோதகானி கரிஷ்யே.தத் காலே க்ருச்சர ஆசரணஞ்ச கரிஷ்யே.
பவித்ரத்துடன் உள்ள கட்டை பில்லை மாத்திரம் தெற்கே சேர்க்க வேண்டியது. ஐந்து ரூபாய் நாணயம் கொஞ்சம் கறுப்பு எள் சேர்த்து கொண்டு ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: ஶாந்திம் ப்ரயஸ்சமே.
வாஸோதக திலோதக புண்ய காலே திதி வார நக்ஷத்ர லக்ன யோக கரணை: யோ தோஷ: ஸமஜனி தத் தோஷ பரிகாரார்த்தம்,
ப்ராஜாபத்ய க்ருச்சர ப்ரத்யாம்ணார்த்தம் வாஸோதக திலோதக ப்ரதானி கர்த்தும் யோக்யதா ஸித்திம் அனுகிரஹாணார்த்தம்
யத் கிஞ்சித் ஹிரண்யம் ஸ்ரீ நாராயணாய ஸம்ப்ரததே என்று சொல்லி தீர்த்தம் சேர்த்து கட்டை விரல் வழியாக விட்டு விட வேண்டியது. அச்யுத ப்ரீயதாம்.
மண் அல்லது மணலில் ஒரு வட்டமான குண்டம் செய்து அதில் ஓர் குழி செய்து அதற்குள் ஒரு தர்ப்பை பில் கூர்ச்சம் தெற்கு நுனியாக வைக்க வேண்டியது. கூர்ச்சம் நகர்ந்து விடாமல் இருக்க அதன் மேல் ஒரு கல்லையும் வைக்க வேண்டியது.
ஆயாஹி ஞாதி பூத ப்ரேதே ஸோம்யா கம்பீரை: பதிபி; பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்சா ------------- கோத்ராnaam ----------- sharmanam மம ஞாதிபூத ப்ரேதம் அஸ்மின் கூர்ச்சே ஆவாஹயாமி.
ஞாதிபூத ப்ரேதே இதமாசனம் என்று கட்டை பில்லை வைக்க வேண்டியது.
இதம் தே அர்ச்சனம் என்று சொல்லி சிறிது எள்ளு கை மரித்து போடவும்.
ஒரு தர்பத்தை கட்டை விரலில் சுற்றிகொண்டு கட்டை விரல் நுனி வழியாக எள்ளும் ஜலமும் விடவும்.
தஹன ஜனித க்ஷுத் த்ருஷ்ண தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதா ஆப்யாயனார்த்தம் ப்ரேதா த்ருப்தியர்த்தம் ----------- கோத்ராயை மம ஞாதிபூத ப்ரேதாயை அதீத ப்ரதம தின கர்த்தவ்யம் ஏதத் திலோதகம் ததாமி.
என்று சொல்லி குண்டத்திற்குள் எள்ளும் ஜலமும் விட வேண்டியது.
இது போல் மூன்று தடவை முதல் நாளுக்கு. அடுத்த ஒவ்வொரு நாளுக்கும் ஒரு முறை கூட்டி கொண்டு போகவும்.
அதீத ப்ரதம தின 3 தடவை; அதீத திவிதீய தின 4 தடவை; அதீத த்ருதீய தின 5 தடவை; அதீத சதுர்த்த தின 6 தடவை; அதீத பஞ்சம தின 7 தடவை; அதீத சஷ்டம தின 8 தடவை; அதீத ஸப்தம தின 9 தடவை; அதீத அஷ்டம தின 10 தடவை; அதீத நவம தின 11 தடவை; அஸ்ய தசம தின 12 தடவை
மொத்தம்75 தடவை வந்து விடும்.
ப்ரதம தினம், த்விதீய தின என்று சொல்லி செய்ய வேண்டும். முதல் 9 நாட்களுக்கு அதீத என்று சொல்ல வேண்டும். பத்தாம் நாள் அஸ்ய என்று சொல்ல வேண்டும்.
ஸ்த்ரீகளுக்கு :- ஆயாஹி மம ஞாதீபூத ப்ரேதே ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத் வஞ்ச ஶதஸாரதஞ்ச . -------- கோத்ரான் -------- naamneem மம ஞாதிபூத ப்ரேதாம்
அஸ்மின் கூர்ச்சே ஆவாஹயாமி. ஞாதிபூத ப்ரேதாயா: இதமாஸனம்.
ஒரு தர்பத்தை கட்டை விரலில் சுற்றிக்கொண்டு கட்டை விரல் நுனி வழியாக எள்ளும் ஜலமும் விடவும்.
தஹன ஜனித க்ஷுத்த்ருஷ்ண தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதா ஆப்யாயனார்த்தம் ப்ரேதா த்ருப்தியர்த்தம் ---------- கோத்ரான் -------- naamneem மம ஞாதிபூத ப்ரேதாயை அதீத ப்ரதம தின கர்தவ்யம் தாதவ்யம் ஏதத் திலோதகம் ததாமி. என்று சொல்லி குன்டத்திற்குள் எள்ளும் ஜலமும் கை மறித்து விட வேண்டியது.
திலோதகம் முடிந்த பிறகு கை கட்டை விரலில் சுற்றியுள்ள தர்பத்தை போட்டு விட்டு கை யை கூப்பிக்கொண்டு
--------------- கோத்ரான் ---------- sarmana /naamneem: மம ஞாதிபூத ப்ரேதே மயா க்ருதானி அதீத ப்ரதம தின ஆரப்ய அத்ய தசம தின பர்யந்தானி அஹரஹ: கர்தவ்யானி ஏதானி வாசோதகானி உபதிஷ்டா ஏதானி திலோதகானி உபதிஷ்டா என்று கை காண்பித்து அத்ர ஸ்னாஹி
ஜலம் பிபா த்ருப்தா பவா, சீதா பவ என கட்டை விரல் வழியாக தீர்த்தம் விட்டு மார்ஜயந்தாம் மம ஞாதிபூத ப்ரேதா என சொம்பு ஜலத்தால் கூர்ச்சத்தை அப்பிரதக்ஷிணமாக சுற்றி தெற்கில் கவிழ்த்து
வைத்து பிறகு வேறு ஜலத்தால் சொம்பை ப்ரோக்ஷித்து நிமிர்த்தி வைத்து விட்டு உபவீதம் செய்து கொண்டு தெற்கு பக்கம் சேவிக்க வேண்டியது. அபிவாதி கிடையாது,.
சேவித்த பின் ப்ராசீனாவிதி போட்டுக்கொண்டு ------------- கோத்ரான் ------------- sarmana:: / naamneem மம ஞாதீபூத ப்ரேதே அஸ்மாத் தர்பாத் உத்திஷ்டா இத: ப்ரயாஹி என்று சொல்லி ஆவாஹணம் செய்திருந்த ஒரு பில் கூர்ச்சத்தின் மேல் எள் சேர்த்து யதாஸ்தானம் செய்ய வேண்டியது.
கூர்ச்சத்தை எடுத்து முடிச்சு அவிழ்த்து விட்டு , உபவீதம் செய்து கொன்டு கையில் உள்ள பவித்ரத்தையும் அவிழ்த்து போட்டு விட வேண்டியது. ஆசமனம் பண்றது.
ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்பாணமஸ்து அச்யுத ப்ரீயதாம் என்று சொல்லிவிட்டு திரும்பவும் ஸ்நானம் செய்து விட்டு வீட்டிற்குள் வர வேண்டியது