Swamy Koorathalwan

Swamy Koorathalwan

1612237509648.png


கூரத்தாழ்வான் வாழி திருநாமம்!

சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே!

தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே!

பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே!

பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே!

நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே!

நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே!

ஏராரும் தையில் அத்தத்திங்கு வந்தான் வாழியே!

எழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழியே!
 
Back
Top