• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

SURYA SASHTI-KUMAARA DARSAN.; DOORVAASHTAMI; vAMANA JAYANTHI

Status
Not open for further replies.

kgopalan

Active member
ஆவணி மாத விரதங்கள்.


ஸூர்ய சஷ்டி--குமார தரிசனம். 27-08-2017. ஞாயிறு.
பாத்ர பத மாதம் சுக்ல பக்ஷ சஷ்டி திதியில் காலை சூர்ய உதயத்திற்கு முன்பாக ஸ்நானம் செய்ய வேண்டும். பஞ்ச கவ்யம் சாப்பிட வேண்டும். நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு கிழக்கு பார்த்து


உட்கார்ந்து ஸூர்ய நமஸ்காரம், ஸூர்ய கவசம், ஸூர்ய ஹ்ருதயம், ஸூர்ய ஸ்தோத்ரங்கள் , ஆதித்ய ஹ்ருதயம் சொல்லவும். ஸூர்யன் நமஸ்கார ப்ரியர். முடிந்த அளவு நமஸ்காரங்கள் செய்யவும்.


. அசுவமேத யாகம் செய்த பலனை விட அதிக மாக கிடைக்கும் என்கிறது தர்ம ஸிந்து என்னும் நூல் 64ம் பக்கம். ""சுக்லே பாத்ரபதே சஷ்டியாம் ஸ்நானம் பாஸ்கர பூஜனம் ப்ராசனம் பஞ்ச கவ்யம் ச அசுவமேத பலாதிகம்"


மாலை குமரன் இருக்கும் ஆலயம் சென்று முருகனையும் வழிபடலாம் சஷ்டி திதியாகையால் .


அரவிந்த் ஹெர்பல் லேப்ஸ் மருந்து கடையில் பஞ்சகவ்யம் பாட்டிலில் கிடைக்கிறது.




29-08-2017 தூர்வாஷ்டமி.
ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும். இன்று அருகம் புல்லுக்கு பூஜை செய்ய வேண்டும். அருகம் பில் வாங்கி வந்து சுத்தம் செய்து தண்ணீர் விட்டு அலம்பி ஒரு தாம்பாளத்தில் வைத்து சந்தனம் குங்குமம் இடவும்.


நிர்ணய ஸிந்து வில் உள்ள இந்த ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்தித்து நமஸ்காரம் செய்யவும்.
ஸெளபாக்கியம் ஸந்ததிம் தேஹி ஸர்வ கார்யகரீ பவ யதா சாகா ப்ரகாசாபிர் விஸ்த்ருதாஸி மஹீதலே ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வம ஜராமரம்..





வாமன ஜெயந்தி 02-09-2017;
பாகவதத்தில் உள்ள வாமனாவதாரம் பகுதியை படிக்கலாம். மாத்யானிகம் ப்ருஹ்மயக்ஞம் செய்துவிட்டு வாமனனுக்கு அர்க்கியம் தரலாமே. வாமன ஜயந்தி புண்ய காலே அர்க்கிய ப்ரதானம் கரிஷ்யே என சங்கல்பம் செய்து கொள்ளவும்.


ஜலத்தால் அர்க்கியம். நமஸ்தே பத்மநாபாய நமஸ்தே ஜல சாயினே துப்யம் அர்க்கியம் ப்ரயஸ்சாமி பால வாமன ரூபிணே வாமனாய நம: இதமர்க்கியம்.

நம: சார்ங்க தநுர் பாண பாணயே வாமனாயா ச யக்ஞபுக் பவதாத்ரே ச வாமனாய நமோ நம: வாமனாய நம; இதமர்க்கியம்.. அஹங்காரம் நீங்க இதை பக்தியுடன் செய்யலாம். ஆண்கள் பெண்கள் எல்லோரும் செய்யலாம் .
 
Status
Not open for further replies.
Back
Top