Sulaba Pooja for Ganesh Chaturthi

Status
Not open for further replies.
Sulaba Pooja for Ganesh Chaturthi

September 14, 2015
courtesy:Sri.Varagooran Narayanan

home_page_text.png


பூஜை:

ஆசமனம்:

உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு,

ஓம் அச்சுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:
என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும்.

விக்னேஸ்வர பூஜை:

மஞ்சள் பிள்ளையார் கூம்பு வடிவத்தில் பிடித்து வைத்து சந்தன குங்கும அக்ஷதைகள் சேர்த்து ஒரு சின்ன பித்தளை தட்டில் வைத்துக் கொள்ளவும்.

ganesh%204%20.jpg



பஞ்சுத் திரி நெய் கொண்டு ஐந்து முக விளக்கொன்றை ஏற்றி

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் சர்வவிக்னோ (உ)ப சாந்தயே
என்று ஜபித்து, வலது தொடை மீது வலது கை வைத்து இடது கையால் வலது கையை மூடிக்கொண்டு சங்கல்பம் செய்து கொள்ளவும்.

மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர
ப்ரீத்யர்த்தம் ததேவலக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்திரபலம் ததேவ வித்யாபலம் தெய்வபலம் ததேவ


த்யானம்:
கணானாம் த்வாம் கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்ஹணாம் பிரம்மணஸ்பத ஆனஹ
ஸ்ருன்வன்னோதிப்ஹிஸ்சீத சாதனம்

ஆவஹனம்

இஷ்டதெய்வத்தை மனதில் த்யானித்துக் கொண்டு, பூ அக்ஷதை சமர்ப்பணம் செய்து, மஞ்சள் பிள்ளையாருக்கு பூஜிக்கவும்

.
அஸ்மின் பிம்பே ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆசனம் சமர்ப்பயாமி (பூ போடவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: அர்க்யம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆசமநீயம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: மதுபர்க்கம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஸ்நானம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஸ்நானாநந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: வஸ்த்ரம் சமர்ப்பயாமி (பூ அக்ஷதை சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: உபவீதம் சமர்ப்பயாமி (பூ அக்ஷதை சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆபரணம் சமர்ப்பயாமி ( (பூ அக்ஷதை சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: கந்தான் தாரயாமி (சந்தனம் இடவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் சமர்ப்பயாமி (குங்குமம் இடவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: புஷ்பை பூஜயாமி ( (பூ அக்ஷதை சேர்க்கவும்)


புஷ்பத்தால் அர்ச்சனை செய்யவும்.

ஓம் சுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலச்சந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்பகர்னாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
ஓம் சித்திவினாயகாய நம:
ஓம் ஸ்ரீ மகாகணபதயே நம:


உத்தர பூஜை

தூபம்: ஊதுவத்தி காண்பித்து : தூபம் ஆக்ஹ்ராபயாமி

தீபம்: நெய் ஜோதி விளக்கு காண்பித்து: தீபம் சந்தர்ஷயாமி

உத்தரணி ஜலம் எடுத்து கிண்ணத்தில் சேர்த்து : தீபானந்தரம் ஆசமநீயம் சமர்பயாமி

நைவேத்யம்:


தேங்காய் பழங்கள் மீது தண்ணீர் தெளித்து:

ஓம் பூர்புவஸ்ஸுவ: அம்ர்தோபஸ்தரனாமஸி, பிராணாய: ஸ்வாஹா, அபானாய ஸ்வாஹா, வ்யானாய ஸ்வாஹா, உதானாய ஸ்வாஹா, சமானாய ஸ்வாஹா, பிரம்மனே ஸ்வாஹா, நைவேத்யம் நிவேதயாமி, நைவேத்யானன்தரம் ஆசமநீயம் சமர்பயாமி

தாம்பூலம் சமர்பித்து:

தாம்பூலம் சமர்பயாமி

கற்பூர நீராஞ்சனம்: கற்பூர நீராஞ்சனம் சமர்பயாமி

உத்தரணி ஜலம் எடுத்து கிண்ணத்தில் சேர்த்து : கற்பூர நீராஜனனந்தரம் ஆசமநீயம் சமர்பயாமி

வந்தனம்: மந்த்ரபுஷ்பம் சமர்பயாமி
ஆத்ம பிரதக்ஷிணம்

(தன்னையே பிரதக்ஷிணம் செய்து கொண்டு)
யானி கானிச்ச பாபானி ஜன்மாந்தர க்ரிதானிச தானி தானி வினஸ் யந்தி பிரதக்ஷின பதே பதே

பிரார்த்தனை:

நமஸ்காரம் செய்து:

நமோ நமோ கணேசாய நமஸ்தே விஸ்வ ரூபிணே
நிர்விக்னம் குருமே காமம் நமாமி த்வாம் கஜானன

அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்னிசம்
அநேக தந்தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே

விநாயக வரம் தேஹி மகாத்மான் மோதகப்ரிய
அவிக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷு சர்வதா

வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவா சர்வகார்யேஷு சர்வதா

ப்ரதக்ஷிண நமஸ்காரான் சமர்பயாமி

பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று
விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா
என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும்.






https://sathvishayam.wordpress.com/




For More detailed Puja

http://gaana.com/album/sri-vigneshwara-pooja-vidhanam


http://play.raaga.com/tamil/song/al...Vrata-Pooja-AD001568/Vigneshwara-Pooja-429284

http://www.gruhinii.com/bhajans-and...a-vidhanam-vinayaka-vrathakalpam-ganesh-pooja

http://www.ganeshchaturthi.com/#
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top