• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sudarsana Jayanthi - Chakkrathalwar

அபய கரம் நீட்டும் சக்கரத்தாழ்வார்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நாளை 20.06.2021 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜெயந்தி கொண்டாடப்படுகி றது. ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியி ல், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ் வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜயந்தி உற்சவமாக கொண்டாடப்படும்.

மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கி யமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனம் ஆகும். திருமாலின் ஆக்ரோஷ ஸ்வரூபமான ஸ்ரீ சுதர்ஸன மூர்த்தியே திருமா லின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர்.

ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெரு மான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்க ளை அழிக்கவும் செய்கிறது. ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் இம்மூவ ரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவ ரைத் தொழும் ‘நித்யசூரிகள்’. ஸ்ரீ வைகுண்டத் தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசே ஷனாகக் குடையாகவும், நடக்கையில் பாது கையாகவும் இருப்பவர் அனந்தன். பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற் கு அவரை தாங்கி செல்லும் வாகனமாகவும், அவரது தாசனாகவும் திகழ்பவர் கருடன். ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந் தாழ்வார் என இவர்கள் மூவர்கள் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும்.

சுதர்சனர் என்ற சொல்லுக்கு நல்வழி காட்டுப வர், காண்பதற்கு இனியவர் என்று பொருள். ஆனிமாத சித்திரை நட்சத்திர நாளில் சுதர்சன ஜெயந்தி விழா கொண்டாடுவார்கள். பெருமா ளின் கையில் ஆயுதமாக அலங்கரிக்கும் சக்க ரத்தாழ்வார் திருமாலுக்கு இணையானவர் என்று கூறுவர். சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கை யிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தா ழ்வார். ஆனால், சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு.

இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல் லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கு த் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.

பெரியாழ்வார் வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு" என்று வாழ்த்திப் பாடியுள்ளார். திருமாலுக்கு இணையானவர் என்று சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வா ரைப் பலவாறும் போற்றியுள்ளார்.

மகாவிஷ் ணுவின் வாமன அவதாரத்தின் போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்கிரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் சுதர்சனர். இராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான அரக்கர்களை தண்டிக்க கருடாரூடனாய் இல ங்கை சென்ற பகவான், சுதர்சன சக்கரத்தால் அவர்களை அழித்தார்.

சுதர்ஸனர் பல புராணங்களில் பேசப்படுகிறா ர். நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்தவர் சுதர்ஸன ர் தான் என்கிறது புராணம். வாமன அவதாரத் தின் போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்தார் சுக்ராச்சாரியார். அவரின் எண்ணத்தைத் திசை திருப்பியவர் சக்கரத்தாழ்வார்.

காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, "நானே உண்மையான வாசு தேவன்' என்று பௌண்டரக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தான். கருடன் மேல் ஏறிச்சென்ற கண்ணன் ஆழியி னால் அவனை வென்றான்.

தேவர்கோன் முதலான சகல தேவர்களும் பரம சிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து சக்கரத்தாழ்வாரை வழிபட்டு திருவருளைப் பெற்றார்கள். கஜேந்திர மோட்ச வைபவத்தில் சக்கரத்தைக் கொண்டே கஜேந்திரனை கவ்வி பிடித்து இழுத்த முதலையை அழித்து, யானை யைக் காப்பாற்றுகிறார்.

சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள்

சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன.

ஜோதிடத்தில் சக்கரத்தாழ்வார்

ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர் கள், தீயணைப்புத் துறை ஆகியவற்றின் கார கரும் செவ்வாய் ஆகும். சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமாள் கோயில்களில் எட்டு கரங்கள் கொ ண்ட சுதர்சனரையும், 16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும், 32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் காணலாம். பொதுவாக 8 அல்லது 16 கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவார். ‘ஷட்கோண சக்கரம்’ எனும் ஆறு கோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனமும், திரிகோண சக்கரம் எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர்.

சுதர்சனர் தனது 16 திருக்கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என 16 வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார். சுதர்சனர் வழிபாடு மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகிறது. வீரத்தினை குறிக்கும் செவ்வாயின் அதிதேவதை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆகும். மேலே குறிப்பிட்டுள்ள சுதர்சன அம்ஸத்தை காணும்போது முருகனுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் உள்ள ஒற்றுமை புலப்படும்.

ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகத் திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியா கவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாக வும் விளங்குகிறார்.

நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்கு கள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்னைக ளை சந்தித்துவருபவர்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வா ரை வழிபடுவது, சுதர்சனாஷ்டகம் பாராயணம் செய்வது, சுதர்சன ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய் உடையவர்கள் சக்கரத்தாழ்வாரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும்.

சுதர்சன உபாசனை வீரம் அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது. பக்தர்களுக்கு சந்தோஷம் தருபவர். பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தைப் போக்கிக் காப்பவர் சுதர்சனர்.

மனிதனின் நிம்மதியைப் பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் அபிசார தோஷ ங்கள் எனப்படும் பில்லி, சூனியம் போன்றவற் றால் ஏற்படும் உபாதைகளை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை.

சிவன் கோயில்களில் சிவம்சமான பைரவரை போன்றே விஷ்ணுவின் அம்சமான சக்கரத்தா ழ்வார் நமது சகல துன்பங்களிலிருந்தும் விடு இவிக்கும் சக்தி பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவக்கிரகங்களின் தரிசனம் கிடைக்கும்.

பெருமாள் கோயில்களில் நவக்கிரகங்களு க்குப் பதிலாக, பெருமாளையும் சக்கரத்தாழ் வாரையும் தரிசனம் செய்தாலே நவக்கிரகங்க ளின் அனுக்கிரகம் கிடைத்துவிடும் என்பது வைஷ்ணவர்களின் நம்பிக்கை.

ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்குபவர்களுக்கு நோய், எதிரி, விரயம், மரணம் ஆகிய பயம் நீங்குவதோடு தரித்திரியத்தைப் போக்கி சகல செல்வங்களும் அளிக்கும் என்பது நிதர்சனம். முக்கியமாக இன்றைய கோச்சாரத்தில் சந்தி ரனும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுவதால் சந்திர சகோதரியான மகாலக்ஷ்மியின் அருள் நிறையும் என்பது நிதர்சனம்.

ஓம் நமோ நாராயணாய...
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை திருவடிகள் சரணம்...


1624166384011.png
 

Latest ads

Back
Top