• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sri Lalitha Trishati

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ லலிதா த்ரிசதீ ஸ்தோத்ரம்

அஸ்ய ஸ்ரீ லலிதா த்ரிரதீ ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய , பகவான் ஹயக்ரீவ ருஷிஹி , அனுஷ்டுப் ச்சந்தஹ , ஸ்ரீ லலிதா மஹேஶ்வதரீ தேவதா , ஐம் பீஜம் , ஸௌம் ஶக்திஹி . க்லீம் இலகம் ,மம சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தே ஜபே வினியோகஹ

த்யானம்

அதி மதுர சாப ஹஸ்தாம் அபரிமிதாமோத பாண ஸௌபாக்யாம்
அருணாம் அதிஶய கருணாம் அபினவ குலஸுந்தரீம் வந்தே

ஸ்ரீ ஹயக்ரீவ உவாச –

ககார ரூபா கல்யாணி கல்யாண குண ஶாலினீ
கல்யாண ஶைல நிலயா கமனீயா கலாவதி
கமலாக்ஷி கல்மஷக்னீ கருணாம்ருத ஸாகரா
கதம்ப கானனா வாஸா கதம்ப குஸும ப்ரியா
கந்தர்ப்ப வித்யா கந்தர்ப்ப ஜனகாபாங்க வீஷணா
கர்ப்பூர விடீ ஸௌளரப்ய கல்லோலித ககுப்தடா
கலிதோஷஹரா கஞ்ஜ லோசனா கம்ர விக்ரஹா
கர்மாதி ஸாக்ஷினீ காரயித்ரீ கர்மபல ப்ரதா

ஏகாரூபா சைகாக்ஷர் ஏகானே காக்ஷராக்ருதிஹி
ஏதத் ததித் யனிர்தேஶ்யா சைகானந்த சிதாக்ருதிஹி
ஏவமித் யாகமாபோத்யா சைக பக்தி மதர்சிதா
ஏகாக்ர சித்த நிர்தயாதா சைஷணாரஹிதா த்ருதா
ஏலா ஸுகந்தி சிகுரா சைனஹ் கூட விநாஶினீ
ஏக போகா சைகரஸா சைகைஶ்வர்ய ப்ரதாயினீ
ஏகா தபத்ர ஸாம்ராஜ்ய ப்ரதா சைகாந்த பூஜிதா
ஏதமான ப்ரபா சைஜ தனேஜஜ் ஜகதீர்வரி ஏக வீராதி ஸம்ஸேவ்யா
சைக ப்ராபவ ஶாலினீ
ஈகார ரூபா சேஶித்ரீ சேப்ஸிதார்த்த ப்ரதாயினீ
ஈத்ருகித் யவினீர்தேஶ்யா சேஶ்வரத்வ விதாயினீ
ஈஶானாதி ப்ரஹ்மமயீ சேஶித்வா த்யஷ்ட ஸித்திதா
ஈக்ஷித்ரீக்ஷண ஸ்ருஷ்டாண்ட கோடி - ரீஶ்வர வல்லபா
ஈடிதா சேஶ்வரார்தாங்க ஶரீரேஶாதி தேவதா

ஈஶ்வர ப்ரேரணகரீ சேஶ தாண்டவ ஸாக்ஷிணீ
ஈஶ்வரோத் ஸங்க நிலயா சேதிபாதா விநாஶினீ

ஈஹா விரஹிதா சேஶ ஶக்தி ரீஷத் ஸ்மிதானனா
லகார ரூபா லலிதா லக்ஷ்மி வாணீ நிஷேவிதா

லாகினீ லலனாரூபா லஸத் தாடிம பாடலா
லலந்திகா லஸ்த் பாலா லலாட நயனார்சிதா

லக்ஷணோஜ்வல திவ்யாங்கீ லக்ஷகோட்யண்ட நாயிகா
லக்ஷ்யார்த்தா லக்ஷணா கம்யா லப்தகாமா லதாதனுஹு

லலாமராஜ தளிகா லம்பமுக்தா லதாஞ்சிதா
லம்போதர ப்ரஸூர் லப்யா லஜ்ஜாட்யா லயவர்ஜிதா

ஹ்ரீங்கார ரூபா ஹ்ரீங்கார நிலயா ஹ்ரீம்பத ப்ரியா
ஹ்ரீங்கார பீஜா ஹ்ரீங்கார மந்த்ரா ஹ்ரீங்கார லக்ஷணா

ஹ்ரீங்கார ஜப ஸுப்ரதா ஹ்ரீம் மதீ ஹ்ரீம் விபூஷணா
ஹ்ரீம் ஶுலா ஹ்ரீம் பதாராத்யா ஹ்ரீம் காப்பா ஹ்ரீம் பதாபிதா
ஹ்ரீங்கார வாச்யா ஹ்ரீங்கார பூஜ்யா ஹ்ரீங்கார பீடிகா
ஹ்ரீங்கார வேத்யா ஹ்ரீங்கார சிந்த்யா ஹ்ரீம் ஹ்ரீம் ஶரீரிணீ
ஹகார ரூபா ஹலத்ருத் பூஜிதா ஹரிணேக்ஷணா
ஹர ப்ரியா ஹராராத்யா ஹரி ப்ரஹ்மேந்த்ர ஸேவிதா

ஹயாரூடா ஸேவிதாங்க்ரிர் ஹயமேத ஸமர்ச்சிதா
ஹர்யக்ஷ வாஹனா ஹம்ஸ வாஹன ஹத தானவா

ஹத்யாதி பாபஶமனீ ஹரி தஸ்வாதி ஸேவிதா
ஹஸ்தி கும்போத்துங்க குசா ஹஸ்தி க்ருத்தி ப்ரியாங்கனா
ஹரித்ரா குங்குமா திக்தா ஹர்யஶ்வாத் யமரார்ச்சிதா
ஹரிகேஸ ஸகி ஹாதி வித்யா ஹாலா மதாலஸா

ஸகாரரூபா ஸர்வக்ஞா ஸர்வேரீ ஸர்வமங்களா
ஸர்வகர்த்ரீ ஸர்வதாத்ரீ ஸர்வஹந்த்ரீ ஸனாதனீ

ஸர்வானவத்யா ஸர்வாங்க ஸுந்தரீ ஸர்வ ஸாக்ஷியனணீ
ஸர்வாத்மிகா ஸர்வஸௌக்ய தாத்ரீ ஸர்வ விமோவஹினீ

ஸர்வாதாரா ஸர்வகதா ஸர்வாவரகுண வர்ஜிதா
ஸர்வாருணா ஸர்வ மாதா ஸர்வாபரண பூஷிதா

ககாரார்த்தா காலஹந்தரீ காமேஶீ காமிதார்த்ததா
காம ஸஞ்ஜீவினி கல்யா கடினஸ்தன மண்டலா

கரபோருமஹ் கலாநாத முகீ கச ஜிதாம்புதா
கடாக்ஷயஸ்யந்தி கருணா கபாலி ப்ராண நாயிகா

காருண்ப விக்ரஹா காந்தா காந்திதூத ஜபாவவிலிஹி
கலாலாபா கம்புகண்டீ கரநிர்ஜித பல்லவா

கல்பவல்லி ஸமபுஜா கஸ்தூரீ திலகோஜ்ஜ்வலா
ஹகாரார்த்தா ஹம்ஸகதிர் ஹாடகா – பரணோஜ்ஜ்வலா
ஹாரஹாரி குசாபோகா ஹாகினீ ஹல்யவர்ஜிதா
ஹரித்பதி ஸமாராத்யா ஹடாத்கார ஹதாஸுரா

ஹர்ஷ ப்ரதா ஹவிர் போக்த்ரீ ஹார்த்த ஸந்தம ஸாபஹா
ஹல்லீஸ லாஸ்ய ஸந்துஷ்டா ஹம்ஸ மந்த்ரார்த்த ரூபிணீ

ஹானோபாதான நிர்முக்தா ஹர்ஷிணீ ஹரிஸோதரீ
ஹாஹா ஹுஹூ முக ஸ்துத்யா ஹானி வ்ருத்தி விவர்ஜிதா.

ஹய்யங்கவீன ஹ்ருதயா ஹரிகோபாருணாம்ஶூகா
லகாராக்யா லதா பூஜ்யா லயஸ்த்தித்யுத் பவேஶ்வரீ
லாஸ்ய தர்ஶன ஸந்துஷ்டா லாபாலாப விவர்ஜிதா
லங்க்யேத - ராக்ஞா லாவண்ய ஶாலினீ லகு ஸித்திதா

லாக்ஷாரஸ ஸவர்ணாபா லஷ்மணாக்ரஜ பூஜிதா
லப்யே


தரா லப்த பக்தி ஸுலபா லாங்கலாயுதா

லக்ன சாமர ஹஸ்த ஸ்ரீ ஶாரதா பரிவீஜிதா
லஜ்ஜா பத ஸமாராத்யா லம்படா லகுலேஶ்வரீ

லப்த மானா லப்தரஸா லப்த ஸம்பத் ஸமுன்னதிஹி
ஹ்ரீங்காரிணீ ஹ்ரீங்காராதிர் ஹ்ரீம் மத்யா ஹ்ரீம் ஶிகாமணிஹி

ஹ்ரீங்கார குண்டாக்னி ஶிகா ஹ்ரீங்கார ஶஶி சந்திரிகா
ஹ்ரீங்கார பாஸ்கர ருசிர் ஹ்ரீங்காராம்போத சஞ்சலா

ஹ்ரீங்கார கந்தாங்குரிகா ஹ்ரீங்காரைக பராயணா
ஹ்ரீங்கார தீர்க்கிகா ஹம்ஸீ ஹ்ரீங்காரோத்யான கேகினீ
ஹ்ரீங்காராரண்ய ஹரிணீ ஹ்ரீங்காராவால வல்லரீ
ஹ்ரீங்கார பஞ்ஜர ஶுகி ஹ்ரீங்காராங்கண தீபிகா

ஹ்ரீங்கார கந்தரா ஸிம்ஹீ ஹ்ரீங்காராம்போஜ ப்ருங்கிகா
ஹ்ரீங்கார ஸுமனோ மாத்வீ ஹ்ரீங்கார தரு மஞ்ஜரீ

ஸகாராக்யா ஸமரஸா ஸகலாகம ஸம்ஸ்துதா
ஸர்வ வேதாந்த தாத்பர்ய பூமிஸ் ஸத ஸதாஶ்ரயா

ஸகலா ஸச்சிதானந்தா ஸாத்வீ ஸத்கதி தாயினீ
ஸனகாதி முனி த்யேயா ஸதாஶிவ குடும்பினீ

ஸகலாதிஷ்டான ரூபா ஸத்யரூபா ஸமாக்ருதிஹி
ஸர்வ ப்ரபஞ்ச நிர்மாத்ரீ ஸமானாதிகா வர்ஜிதா

ஸர்வோத்துங்கா ஸங்கஹீனா ஸத்குணா ஸகலேஷ்டதா
ககாரிணீ காவ்யலோலா காமேஶ்வர மனோஹரா

காமேஶ்வர ப்ராணநாடீ காமமேஶோத்ஸங்க வாஸினீ
காமேஶ்வரா - லிங்கிதாங்கீ காமேஶ்வர ஸுகப்ரதா

காமேஶ்வர ப்ரணயினீ காமேஶ்வர விலாஸினீ
காமேஶ்வர தபஸ் ஸித்திஹி காமேஶ்வர மனஃப் ப்ரியா

காமேஶ்வர ப்ராணநாதா காமேஸ்வர விமோஹினீ
காமேஶ்வர ப்ரஹ்ம வித்யா காமேஶ்வர க்ருஹேஶ்வரீ

காமேஶ்வர ஆஹ்லாதகரீ காமேஶ்வர மஹேஶ்வரீ
காமேஶ்வரீ காமகோடி நிலயா காங்க்ஷிதார்த்தா

லகாரிணீ லப்தரூபா லப்ததீர் லப்த வாஞ்சிதா
லப்த பாப மனோதூரா லப்தாஹங்கார துர்க்கமமா

லப்த ஶக்திர் லப்த தேஹா லப்தைல்வர்ய ஸமுன்னதிஹி
லப்த புத்திர் லப்த லீலா லப்த யௌவன ஶாலினீ

லப்தாதிஶய ஸர்வாங்க ஸௌந்தர்யா லப்த விப்ரமா
லப்தராகா லப்தபதிர் லப்த நானாகம ஸ்திதிஹி

லப்த போகா லப்த ஸுகா லப்த ஹர்ஷாபி பூரிதா
ஹ்ரீங்கார மூர்த்திர் ஹ்ரீங்கார ஸௌத ஶ்ருங்க கபோதிகா

ஹ்ரீங்கார துக்தாப்தி ஸுதா ஹ்ரீங்கார கமலேந்திரா
ஹ்ரீங்கார மணி தீபார்சிர் ஹ்ரீங்கார தரு ஶாரிகா

ஹ்ரீங்கார பேடக மணிர் ஹ்ரீங்கா - ராதர்ஶ பிம்பிதா
ஹ்ரீங்கார கோஶாஸிலதா ஹ்ரீங்காராஸ்தான நர்த்தகீ

ஹ்ரீங்கார ஶுக்திகா முக்தா மணிர் ஹ்ரீங்கார போதிதா
ஹ்ரீங்கார மய ஸௌவர்ண ஸ்தம்ப வித்ரும புத்ரிகா

ஹ்ரீங்கார வேதோபநிஷத் ஹ்ரீங்காராத்வர தக்ஷிணா
ஹ்ரீங்கார நந்தனாராம நவ கல்பக வல்லரீ

ஹ்ரீங்கார ஹிமவத் கங்கா ஹ்ரீங்காரார்ணவ கௌஸ்துபா
ஹ்ரீங்கார மந்த்ர ஸர்வஸ்வா ஹ்ரீங்கார பர ஸௌக்யதா.
இந்த லலிதா த்ரிசதி பாடல் வரிகளை தினமும் அல்லது பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பாராயணம் செய்தல் நமக்கு பெரும் நன்மையையும் வாழ்வில் பல்வேறு செல்வங்களையும் அளிக்கும்….

லலிதா திரிசதி* ஸ்தோத்திர பலன்கள்:

சக்தி பஞ்ச தசாக்ஷரி மந்திரத்தின் 15 எழுத்துகள் ஒவ்வொன்றும் 20 நாமங்களாக 300 நாமங்கள் கொண்ட
இந்த ஸ்தோத்ரத்தில் சிவாக்ஷரங்களில் தொடங்கும் நாமங்கள் ஸ்ரீ அம்பாளாலும் , சக்தி அக்ஷரங்களில் தொடங்கும் நாமங்கள்
ஸ்ரீ ஈஸ்வரனாலும் இவ்விரண்டும் சேர்ந்த நாமங்கள் இவ்விருவரால் சேர்ந்தும் அருளப்பட்டவை .

இதைத் தினமும் செவ்வாய், வெள்ளி , பௌர்ணமி , சந்த்ர தசை . சந்தர புக்திகளில் தவறாமல் பக்தியுடன் படிப்பவர்களின் எல்லா அபீஷ்டங்களையும் லலிதா தேவி பூர்த்தி செய்வார் .

லலிதா ஸகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்:

சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு.
அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நூலே லலிதா சகஸ்ரநாமம்.

இந்த நூலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நூல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது.

பெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர்.கல்விக்கு அதிபதி.

இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது.

கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர்.

அதன் காரணமாக சக்தியின் வரலாற்றை அறிந்தார்.

சக்திக்கு "லலிதா" என்ற திருநாமம் சூட்டி, அவளது கதையைக் கூறினார் ஹயக்கீரிவர்.

அதைக் கருத்துடன் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், "குருவே! தாங்கள் எனக்கு லலிதா தேவியின் சரித்திரத்தை மட்டும் கூறினீர்கள்.

அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதையும் சொல்லுங்கள்!' என்றார்.

"அது மிக, மிக ரகசியம். தேவியின் அனுமதியின்றி யாருக்கும் சொல்லக் கூடாது. இருந்தாலும் தேவியின் அதிதீவிர இறைபக்தர்களுக்கு இதைச் சொல்வதில் தவறில்லை!' என்று கூறிய ஹயக்கிரீவர், ஆயிரம் நாமங்களையும் கற்றுக் கொடுத்தார்.

அதில் வரும் 480வது ஸ்லோகமான, "பாயஸான்ன ப்ரியாயை' என்பதற்கு, "பால் பாயசத்தை விரும்புபவள்' எனப் பொருள்.

501வது ஸ்லோகமான, "குடான்ன ப்ரீத மானஸாயை' என்பதற்கு, "அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்' என்று அர்த்தம்.

526வது ஸ்லோகமான, "ஹரித் ரான்னைக ரஸியை' என்ற ஸ்லோகத்திற்கு, "மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து உண்பவள்' என பொருள் வருகிறது.

அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, "தத்யான்ன ஸக்த ஹ்ருதயாயை' என்ற ஸ்லோகத்திற்கு, "இவள் தயிர் சாதம் என்றால் இதயத்தையே கொடுப்பவள்!' என்று பொருள்.

"முத் கௌத நாஸக்த...' என்ற ஸ்லோகத்திற்கு, "பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!' என்று அர்த்தம்.

"ஸர்வெளதன ப்ரீதசித்தா' என்ற ஸ்லோகத்திற்கு, "அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!' எனப் பொருள்.

இதையெல்லாம் முடித்த பிறகு 559 வது ஸ்லோகத்தில், "தாம்பூல பூரிதமுகிச்யை' என்ற ஸ்லோகம் வருகிறது.

இதற்கு, "தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!' எனப் பொருள்.

"தாம்பூலம்' என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம்.

இதைத்தவிர அவரவருக்கு என்ன நைவேத்யமாக வைத்து பூஜிக்க முடியோமோ அதை வைத்து வணங்கலாம்.

அம்பாள் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான, ஆத்மார்த்தமான பக்தியே!

நாமும் நமக்கு தெரிந்த முறையில் அம்பாளை மனதார நினைத்து, துதித்து, தாயின் அருளை பெறுவோம்.

இந்த ஸ்தோத்திரத்தின் சரியான உச்சரிப்புக்கு உதவியாக திரு.T.S.ரங்கநாதன் அவர்களின் குரலில் ஒலிக்கும் ஸ்ரீ லலிதா த்ரிசதி பாடலின் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!

 

Latest ads

Back
Top