Sri Kari varadaraja perumal temple, Coimbatore, TAMILNADU

Status
Not open for further replies.
Sri Kari varadaraja perumal temple, Coimbatore, TAMILNADU

T_500_1497.jpg



தல சிறப்பு:

பொதுவாக பெருமாள் கோயில்களில் வடக்குமுகமாக சொர்க்கவாயில் அமைந்திருப்பது வழக்கம். ஆனால் இக்கோயிலில் தெற்குமுகமாகவும் வடக்கு முகமாகவும் இரண்டு சொர்க்க வாயில்கள் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. அத்துடன் உத்ராயணம், தட்சிணாயணம் என சொல்லப்படும் இரட்டை நுழைவு வாயில்கள் அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

தலபெருமை:


கொங்கு நாட்டிலுள்ள பெருமாள் கோயில்களில் இக்கோயிலுக்குள்ள தனிச்சிறப்பு. உத்ராயணம், தட்சிணாயணம் என சொல்லப்படும் இரட்டை நுழைவு வாயில்கள் அமைந்திருப்பதுதான். பொதுவாக பெருமாள் கோயில்களில் வடக்குமுகமாக சொர்க்கவாயில் அமைந்திருப்பது வழக்கம். ஆனால் இக்கோயிலில் தெற்குமுகமாகவும் வடக்கு முகமாகவும் இரண்டு சொர்க்க வாயில்கள் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. தற்போது பாதுகாப்பு கருதி தெற்கு வாயில் மூடப்பட்டுள்ளது.

தல வரலாறு:

பல நூறு ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னன் ஒருவன் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தான். ஒரு முறை அவன் கொங்கு தேசம் எனப்படும் இப்பகுதிக்கு வந்தபோது காஞ்சி வரதராஜப் பெருமாளை தரிசனம் செய்ய விரும்பினான். அதன் அடிப்படையில் இங்கு ஒரு கோயில் கட்டி பெருமாளை பிரதிஷ்டை செய்து கரிவரதராஜப் பெருமாள் என திருநாமம் சூட்டி வழிபட்டான். வந்த மன்னன், பெருமாளுக்கு கோவையில் ஒரு கோயில் அமைத்து வழிபட விரும்பினான். எனவே கோவையில் உள்ள கோட்டையில் திருகோயில் அமைத்து, பெருமாளை பிரதிஷ்டை செய்தான்.


Source: Dinamalar
 
Status
Not open for further replies.
Back
Top