• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sree hanumaan chaaleesaa.

Status
Not open for further replies.
ஸ்ரீ கு3ரு சரன் ஸரோஜ்ரஜ்
நிஜ்மன் முகுர் ஸுதா4ர்|
ப3ரன உ ரகு4வர் விமல் ஜஸு
(யச்)ஜோ தா3யக் ப2ல்சார்||


கண்ணாடி போன்ற என் மனத்தை ஸ்ரீ குருதேவரின் திருப்பாத தூசியால் தூய்மைப் படுத்திகொண்டு; அறம், பொருள், வீடு, இன்பம் என்னும் நான்கு பழங்களாகிய பலன்களைத் தரும் ஸ்ரீ ரகு குல திலகனின் குற்றமற்ற புகழைப் பாட விழைகின்றேன்.


பு3த்3தி4ஹீன் தனு ஜானி கே
ஸுமிரௌ
பவன் குமார் |
ப3ல் பு3த்3தி4 வித்3யா தே3ஹு
மோஹிம் ஹரஹு கலேஸ்(ச') விகார் ||


நானோ குறுகிய அறிவை உடையவன். வாயு புத்திரரான ஆஞ்சநேயரே! உம்மை வணங்குகின்றேன். எனக்கு அறிவு, வலிமை மற்றும் உண்மையான ஞானம் தந்தருளி என்னை எல்லாத் துன்பங்களில் இருந்தும் காத்து அருள்வீர்!
 
# 1 .
ஜெய் ஹனுமான் ஜ்ஞான் கு3ண் ஸாக3ர் |
ஜெய் கபீஸ்(ச்') திஹும் லோக் உஜாக3ர் ||

கடலைப் போன்ற பரந்த அறிவும், நல்ல குணங்களும் நிறைந்த ஆஞ்சநேயரே!
நீர் வானரங்களின் தலைவர் ஆவீர். மூவுலகங்களையும் எழச்செய்யும் உமக்கு
வெற்றி யுண்டாகட்டும்.

# 2.
ராமதூ3த் அதுலித் ப3ல்தா4மா |
அஞ்ஜனி புத்ர பவன்
ஸுத்நாமா ||

ராம பிரானின் தூதனாகிய உம்மிடம் எல்லை இல்லாத ஆற்றல் நிரம்பியுள்ளது. அஞ்சனையின் புத்திரர் நீர். வாயு புத்திரர் என்னும் பெயரும் படைத்தவர்.
 
Last edited:
#3.
மஹா வீர் பி3க்ரம் ப3ஜரங்கீ3 |
குமதி நிவார் ஸுமதி கே ஸங்கீ3 ||

நீர் வீரமும் விக்கிரமும் நிறைந்தவர். உறுதியான உடலைப் பெற்றவர்.
இணையற்ற ஆற்றல் உடையவர். தீய எண்ணங்களைத் துரத்துபவர்.
நல்ல எண்ணங்களின் நண்பர் ஆவீர்.

# 4.
கஞ்சன் ப3ரன் விராஜ் ஸுபே3ஸா |
கானன் குண்ட3ல் குஞ்சித் கேஸா ||

பொன் நிறம் உடையவர் நீர். உயந்த ஆடைகளை அணிந்தவர் நீர்.
ஒளி வீசும் குண்டலங்களைக் காதில் அணிந்து இருக்கின்றீர்.
அலை அலையான உங்கள் கேசம் மிக அழகாக விளங்குகின்றது.
 
# 5.

ஹாத்3 ப3ஜர ஔ த்4வஜா விராஜை |
காந்தே4 மூஞ்ஜ் ஜனேஉ ஸாஜை ||

இந்திரனின் வஜ்ஜிராயுதத்தை நிகர்த்த கதாயுதத்தையும்,
ஸ்ரீ ராமருடைய கொடியையும் கைகளில் ஏந்தியவரே!
மூஞ்ஜ என்னும் புல்லால் ஆன அழகிய பூணூல் உமது
தோளை நன்கு அலங்கரிக்கின்றது.

# 6.

ச'ங்கர் ஸுவன் கேஸரீ நந்தன |
தேஜ் ப்ரதாப் மஹா ஜக்3வந்த3ன் ||

நீர் சிவபெருமானுடைய அவதாரம் ஆவீர். வானரத் தலைவர் கேசரீ
என்பவரின் புதல்வர் ஆவீர். உம்முடைய தேஜஸ் மற்றும் வீரத்தைக்
கண்டு உலகமே வியந்து வணங்குகின்றது.
 
# 7.

வித்3யாவன் கு3ணீ அதி சாதுர் |
ராம் காஜ் கரிபே3 கோ ஆதுர் ||

நீர் அறிவு உடையவர். நற்குணங்கள்
நிரம்பியவர். மிகவும் கூறிய மதியினை உடையவர். ஸ்ரீ ராமருக்குத் தொண்டுகள் புரிய எப்போதும் மகிழ்வுடன் காத்து நிற்பவர்.

# 8.

ப்ரபு4 சரித்ர ஸுனிபே3 கோ ரஸியா |
ராம் லக2ன் ஸீதா மன் ப3ஸியா ||

பிரபுவின் பெருமையையும், புகழையும் கேட்கும் போது நீர் பரவசம் அடைகின்றீர். ராமர், லக்ஷ்மணர், ஸீதை ஆகியோர் உம் உள்ளத்தில் எப்போதும் எழுந்து அருளி உள்ளார்கள்.
 
Dear Mr. S.S,

I believe in administering heavier stuffs in smaller doses-for better

assimilation. I will continue to give 2 dohas per day till all the 40 are over and

then the right method of chanting these dohas also.

with regards,
V.R.

 
# 9.

ஸூக்ஷ்ம ரூப் த4ரி ஸியஹீம் தி3கா2வா |
விகட் ரூப் த4ரி லங்க ஜராவா ||

சிறிய உருவம் எடுத்துக்கொண்டு சீதையின் முன் தோன்றினீர்.
மிகப் பெரிய பயங்கர உருவெடுத்து இலங்கையை எரித்தீர்.

# 10.

பீ4ம் ரூப் த4ரி அஸுர் ஸம்ஹாரே |
ராமசந்த்3ர கே காஜ் ஸம்வாரே ||

ஸ்ரீ ராமருடைய காரியத்தை நிறைவேற்றுவதற்கு,
மிகப் பெரிய உருவம் எடுத்து அரக்கர்களை நீர் அழித்தீர்.
 
# 11 .

லாய ஸ ஜீவன் லக2ன் ஜியாயே |
ஸ்ரீ ரகு4வீர் ஹரஷி உர் லாயே ||

இலக்குவனின் உயிரைக் காக்க, நீர் சஞ்சீவினி பர்வதத்தையே பெயர்த்து
எடுத்த வந்தபோது, ஸ்ரீ ராமர் எத்தனை மகிழ்ச்சியுடன் உம்மை
மார்புறத் தழுவிக்கொண்டார்!

# 12 .

ரகு4பதி கின்ஹீ ப3ஹுத் ப3டா3யீ |
தும் மம ப்ரிய ப4ரத ஸம் பா4யீ||

உமது பெருமைகளை வாயாரப் புகழ்ந்தபின்னர், தம்பி பரதனைப் போன்றே
நீவீரும் தமக்கு மிகவும் பிரியமானவர் என்று ஸ்ரீ ராமர் கூறினார் அல்லவோ!
 
#13 .
ஸஹஸ்ர ப3த3ன் தும்ஹரோ யச்' கா3வைம் |
அஸ கஹி ஸ்ரீபதி கண்ட2லகா3வைம் ||

ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனும், உம்முடைய புகழைப்
பாடுவதாகக் கூறி, ஸ்ரீ ராமரும் உம்மை ஆரத் தழுவினார் அல்லவா?

# 14 .
ஸனகாதி3க் ப்3ரஹ்மாதி3 முனீஸா |
நாரத்3 சாரத்3 ஸஹித் அஹீஸா||

ஸனகன் முதலான முனிவர்களும், பிரம்மனும், பிற தேவர்களும்,
சிவ பெருமானும், நாரத முனியும், கலை மகளும், ஆதிசேஷனும்,...
 
# 15 .
யம் குபே3ர் தி3க்3பால் ஜஹாம் தே |
கவி கோவித்3 கஹி ஸகே கஹாம் தே ||

யமனும், குபேரனும், அஷ்ட திக்பாலர்களும், கவிகளும், புலவர்களும் உம்முடைய
பெருமைகளை விவரிக்க முயன்று தோல்வியையே தழுவி உள்ளார்கள்!

# 16 .
தும் உப்கார் ஸுக்3ரீவஹிம் கீன்ஹா |
ராம் மிலாய் ராஜ் பத்3 தீ3ன்ஹா||

சுக்ரீவனை ஸ்ரீ ராமருக்கு அறிமுகம் செய்து வைத்து, அவனுடைய அரசபதவியை மீட்டுத் தந்தீர். இவ்விதமாக நீர் சுக்ரீவனுக்கு இணையற்ற உதவி புரிந்துள்ளீர் .
 
# 17 .

தும்ஹரோ மந்த்ர விபீ4ஷண் மானா |
லங்கேச்'வர் ப3யே ஸப்3 ஜக்3 ஜானா ||


உம்முடைய அறிவுரைகளின்படி நடந்ததாலேயே விபீஷணன் இலங்கையின்
அரசனானான். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

# 18 .

ஜுக்3 ஸஹஸ்ர யோஜன் பர் பா4னூ |
லீல்யோ தாஹீ மது4ர் ப2ல் ஜானூ ||

ஆயிரம் யோஜனை தொலைவுக்கு அப்பால் உள்ள சூரியனை
ஒரு பழம் என்று நினைத்து நீர் விழுங்கி விட்டீர்!
 
# 19 .

ப்ரபு4 முத்3ரிகா மேலி முக்2 மாஹீம்|
ஜலதி4 லாந்தி4 க3யே அச்ரஜ் நாஹீம் ||

ஸ்ரீ ராமர் தந்த கணையாழியை உமது வாயில் தாங்கி, கடலைக் கடந்து
சென்றீர். உமது அளவில்லாத ஆற்றலைப் பார்க்கும்போது இது ஒன்றும்
பெரிய ஆச்சரியம் அளிக்கவில்லை.

# 20 .

து3ர்க3ம் காஜ் ஜக3த் கே ஜேதே |
ஸுக2ம் அனுக்3ரஹ் தும்ஹரே தேதே ||

எவ்வளவு கடினமான காரியம் என்ற உலகில் இருந்தபோதிலும்,
உம்முடைய அருள் இருந்தால் அது எளிதில் நடந்து விடும்.
 
# 21.

ராம் து3ஆரே தும் ரக்2வாரே |
ஹோத் ந ஆக்ஞா பி3ன் பைஸாரே ||

ஸ்ரீ ராமருடைய ராஜ்ஜியத்தின் பாதுகாவலனாக நீர் விளங்கிகின்றீர்.
உமது அனுமதி இன்றி அதற்குள் யாராலுமே நுழைய முடியாது.

# 22 .

ஸப்3ஸுக்2லஹை தும்ஹாரீ ஸர்னா|
தும் ரக்ஷக் காஹு கோ ட3ர்னா ||

உம்முடைய திருவடிகளைச் சரண் அடைபவர்கள் எல்லா இன்பங்களும்
அடைவார்கள் என்றால் பின்னர் எதற்காக மனிதர்கள் அஞ்சவேண்டும் ?
 
# 23.

ஆபன் தேஜ் ஸம்ஹாரோ ஆபை |
தீனோம் லோக் ஹாங்க் தே காம்பை ||

உம்மால் மட்டுமே உம்முடைய ஆற்றலைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
மூன்று உலகங்களும் உம்முடைய ஆற்றலைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றன!

# 24 .

பூ4த் பிசா'ச்' நிகட் நஹீம் ஆவை |
மஹாபீ3ர் ஜப்3 நாம் ஸுனாவை ||

மஹா வீரராகிய உம்முடைய திரு நாமத்தை ஜபிப்பவர்களிடம்
பூதங்களும், பேய் பிசாசுகளும் நெருங்குவதே இல்லை!
 
# 25.

நாசை' ரோக்3 ஹரை ஸப்3 பீரா |
ஜபத் நிரந்தர் ஹனுமத் பீ3ரா ||

ஆற்றல் மிகுந்த உமது திருநாமங்களை இடைவிடாமல் ஜபித்தால்,
எல்லா வியாதிகளும், பிற துன்பங்களும் அகன்று போய்விடும் .

# 26 .

ஸங்கட் ஸே ஹனுமான் சு2டா3வை |
மன் க்ரம் ப3சன் த்4யான் ஜோ லாவை ||

எவர் ஒருவர் உம்மைத் தம் மனம், மொழி, செயல்களால் தியானிக்கின்றாரோ, அவருடைய எல்லாத் துன்பங்களில் இருந்தும் நீர் அவரை விடுவிக்கின்றீர் .
 
# 27.

ஸப்3 பர் ராம் தபஸ்வீ ராஜா|
தின்கே காஜ் ஸகல் தும் ஸாஜா||

தன்னைக் குறித்துத் தவம் செய்யும் பக்தர்களின் கோரிக்கைகளை ஸ்ரீ ராமர்
நிறைவேற்றுகின்றார். நீரோ எனில் அவர் பணிகளை நிறைவேற்றுகின்றீர்.

# 28 .

ஔர் மனோரத்2 ஜோ கோயி லாவை|
சோயி அமித ஜீவன் ப2ல் பாவை ||

பக்தனின் ஆசைகள் நிறைவேறுவது மட்டுமின்றி,
அவன் தன் வாழ்க்கையின் மாறாத குறிக்கோள் ஆகிய
அழியாக்கனி போன்ற இறைஅனுபூதியையும் பெறுகின்றான்.
 
# 29.

சாரோம் யுக்3 ப்ரதாப் தும்ஹாரா |
ஹை ப்ரசித்3த4 ஜக3த் உஜியாரா ||

உம்முடைய பெருமை சத்யயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களிலும் போற்றப் படுகின்றது. உம்முடைய திருநாமம் உலகம் முழுவதிலும் சிறந்து விளங்குகின்றது!

# 30 .

ஸாது4 ஸந்த் கே தும் ரக்2வாரே |
அஸுர் நிகந்த3ன் ராம் து3லாரே||

நீர் நல்லவர்களையும், ஞானிகளையும் ரக்ஷிக்கின்றீர்.
தீய சக்திகள் உம்மால் அழிக்கப்படுகின்றன. நீர்
ஸ்ரீ ராமபிரானுடைய மனத்துக்கு மிகவும் உகந்தவர்.
 
# 31.

அஷ்ட ஸித்3தி4 நவநிதி4 கே தா3தா |
அஸப3ர் தீ3ன் ஜானகி மாதா ||

நீர் எட்டு சித்திகளையும், ஒன்பது நிதிகளையும் அளிக்கவல்லவர்.
உமக்கு இந்த அறிய ஆற்றலை வழங்கியவர் அன்னை சீதாதேவி.

# 32 .

ராம் ரஸாயன் தும்ஹரே பாஸா |
ஸதா3 ரஹோ ரகு4பதி கே தா3ஸா ||

ஸ்ரீ ராம பக்தியின் சாரமே உம்மிடம் உள்ளது.
நீர் என்றும் அவருக்கு தொண்டனாக இருப்பீர்.
 
# 33.

தும்ஹரே ப4ஜன் ராம்கோ பாவை |
ஜன்ம ஜன்ம கே து3க்2 பிஸ்ராவை ||

ஒருவர் உம்மிடம் பக்தி கொண்டாலே போதும். அவர் ஸ்ரீ ராமனை அடைவார்.
ஜென்ம ஜென்மாந்தரங்களாகத் தொடரும் துன்பங்களின் மூட்டைகள்
அனைத்தும் அவரை விட்டு விலகிச் சென்றுவிடும்.

# 34 .

அந்தகால் ரகு4பதி புர் ஜாயீ |
ஜஹாம் ஜன்ம ஹரிப4க்த கஹாயீ ||

அவர் தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீ ராமரின் உறைவிடம் செல்லுகின்றார்.
அங்கு அவர் ஹரிபக்தனாக மதிக்கப்படுகின்றார்.
 
# 35.

ஔர் தே3வதா சித்த ந த4ரயீ |
ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக்2 கரயீ ||

மனதில் வேறு எந்த தெய்வங்களையும் நிலை நாட்டாமல்,
ஹனுமானை மட்டும் வணங்கினாலும், ஒருவருக்கு
எல்லா இன்பங்களும் கிடைக்கும்.

# 36 .

ஸங்கட் கடை மிடை ஸப்3 பீரா |
ஜோ ஸுமிரை ஹனுமத் ப3ல் பீ3ரா ||

எல்லா வல்லமைகளும் பொருந்தியுள்ள ஹனுமானை நினைப்பவர்களுக்கு
எல்லாத் துன்பங்களும், துயரங்களும் விலகி ஓடிவிடும்.
 
# 37.

ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான் கோ3ஸாயீ |
க்ருபா கரஹு கு3ருதே3வ் கீ நாயீ ||

ஹே ஆஞ்சநேயரே! உமக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
வெற்றி உண்டாகட்டும்! பரமகுருவே! எமக்கு அருள் புரிவீர் !

# 38 .

ஜோ ச'த் பா3ர் பாட்2 கர் கோயீ |
சூ2ட் ஹி ப3ந்தி3 மஹா ஸுக் ஹோயீ ||

ஹனுமானைப் பற்றிய இந்தத் துதிகளை யார் பக்தியுடன் நூறுமுறை படிக்கின்றரோ, அவர் உலகின் பந்த பாசங்கள் அகன்று பரமானந்தத்தை அனுபவிப்பார்.
 
# 39.

ஜோ யஹ் படை4 ஹனுமான் சாலீஸா |
ஹோய் ஸித்3தி4 ஸாகீ2 கௌ3ரீஸா ||

இந்த ஹனுமான் சாலீசாவைப் படிப்பவர்களுக்கு சிவபிரான்
அருள் புரிகின்றார். அவன் பரிபூரணத்வம் அடைகின்றான்.

# 40 .

துளஸீதா3ஸ் ஸதா3 ஹரி சேரா|
கீஜை நாத்2 ஹ்ருத3ய மஹா டே3ரா ||

என்றென்றும் தம்முடைய இதயத்தில் எழுந்தருளி நல்லருள் புரியவேண்டும்
என்று அவரது நித்தியத் தொண்டன் துளஸீதாசன் வேண்டுகின்றான்.
 
# 41.

மங்களம்
புரியட்டும்.

பவன் தனய் ஸங்கட் ஹரன்,
மங்க3ல் மூரதி ரூப் |

ராம்லஷன் ஸீதா ஸஹித்
ஹ்ருத3ய ப3ஸஹு ஸுர் பூ4ப ||

எல்லாத் துயரங்களையும் போக்குபவனும், மங்களகரமான வடிவையுடையவனும், தேவர்களுக்குத் தலைவனும், வாயு புத்திரனுமாகிய
ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சீதா, ராம, லக்ஷ்மணர்களுடன் என் மனத்தில் எழுந்தருளி அருள் புரியட்டும்.
 
முடிவுரை:


பாராயணம் செய்யும் முறை.

உடலைத் தூய்மைப் படுத்திக் கொண்டு, தூய ஆடைகள் அணிந்து, தூய உள்ளத்துடன் ஸ்ரீ ஆஞ்சநேயரை தியானிக்கவேண்டும். நெய் விளக்கு ஏற்றி, தூபம் காட்டிவிட்டு, பதினோரு முறை இந்த ஹனுமான் சாலீசாவை ஓத வேண்டும்.

நூறு முறை ஓத முடிந்தால் மிகவும் சிறப்பு. ஒவ்வொரு முறை ஓதினதும் ஒரு மலரை சமர்ப்பிக்கலாம்.

கோவில் அல்லது பூஜை அறையில் ஆஞ்சநேயர் படத்தின் முன்பு அமர்ந்து பாரயணம் செய்யலாம். செவ்வாய் மற்றும் சனிக்கிழமை பாராயணம் செய்வது மிகவும் நல்லது.

பக்தியுடனும், நம்பிக்கையுடனும் ஹனுமான் சாலீஸாவை ஓதினால் நினைத்த காரியம் நடக்கும் என்பது உறுதி. எல்லாத் துன்பங்களும், துயரங்களும், வியாதிகளும் நீங்கிவிடும் என்பதும் நிதரிசனமான உண்மை.

ஜெய் ஸ்ரீ ஹனுமான்! ஜெய்
ஸ்ரீ ஸீதா ராம்!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top