• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

shuma irrkara shanga oodi keditana .....

Status
Not open for further replies.

சும்மாக் கிடந்த ஜீன்ஸை...


தமிழில் நகைச்சுவை என்னால் நன்கு எழுத முடியும்; எனவே தமிழில்!


குருகுலவாசம் என்பது காணாமல் போய்விட்ட இந்தக் காலத்தில், எனக்குக் கிடைத்தாள் ஒரு குருகுல சிஷ்யை! எங்கள் உறவில்

ஒரு பெண்; வீணை வாசிக்கக் கற்றுக்கொள்ள, ஒரு மாதம் எங்கள் இனிய இல்லத்தில் தங்கியிருந்து, பாடம் கற்றுக் கொள்வதாகச்

சொன்னாள்! எனக்குக் கிடைத்த புதிய அனுபவமாக எண்ணி, நானும் ஏற்றுக் கொண்டேன்!


இரு நாட்கள் வில்லங்கம் இல்லாமல் சென்றன! நம் சாப்பாட்டையும், பஜ்ஜி, சொஜ்ஜி இத்யாதிகளையும் விரும்பிச்

சாப்பிட்டதால், எனக்கும் பிரச்சனையே இல்லை! ஏன் சொல்லுகிறேன் என்றால்: இதற்கும் இரு ஆண்டுகளுக்கு முன், என்னவரின்

சகோதரி மகன் வந்தபோது, தோசை முதல் அனைத்துச் சிற்றுண்டிகளுக்கும் 'Peanut Butter ' தேய்க்க வேண்டும் எனக் கேட்க,

நீலகிரி ஸ்டோருக்கு சென்ற என்னவரின் பாலையா போன்ற 'பர்ஸ்', தனுஷ் போல ஒட்டி உலர்ந்து போனது!


மூன்றாம் நாள், ஒரு அரை ஜீன்ஸை அவள் அணிந்தபடி நடந்தாள்! அதன் ஓரம் முழுதும் பிய்ந்து போய்த் தொங்கியது! 'ஐயோ,

பாவம்! இதன் ஓரம் தைத்துக் கொடுக்க அவளின் அம்மாவுக்கு முடியவில்லை போல! அமெரிக்காவில் இதற்கெல்லாம் ஏது

வசதி!' என்று எண்ணியபடி, அடுத்த நாள் அதைத் துவைத்து உலர்த்திய பின், என் 'தையல் நாயகி' வேலையை ஆரம்பித்தேன்.

மூன்று ஊசிகளை பலி கொடுத்து, எப்படியோ அந்த ஜீன்ஸின் ஓரத்தைத் தைத்து முடித்தேன்! ஹிமாலய சாதனை செய்தது போல

முகத்தை வைத்துக்கொண்டு, அவளிடம் ஜீன்ஸை நீட்டினேன்! அவள் ஆனந்தத்தில் குதிப்பாள் என்று எண்ணிய எனக்கு, பயங்கர

'ஷாக்'! நான் கட்டையை எடுத்து அடித்தது போல அவள் 'ஓ' என்று அலறி, அழ ஆரம்பித்தாள்! புரியாமல் விழித்த என்னிடம்,

கண்ணீர் மல்கும் விழிகளோடு. 'ஆன்டீ! எத்தனை கஷ்டப்பட்டு, ஒரு காய்கறி வெட்டும் கத்தியால் (!) இதை 'அறுத்து' வைத்தேன்!

இன்னும் ஆறு மாதம் துவைத்தால்தான், நான் நினைத்தபடி நூல் தொங்கும் ஓரம் கிடைக்கும்! அதைத் தைத்துக்

கெடுத்துவிட்டீர்களே!' என்று புலம்பினாள்!


இத்துடன் கதை முடியவில்லை. 'சும்மாக் கிடந்த ஜீன்ஸை, தைத்துக் கெடுத்த நான்' அழாக் குறையாக, அந்த கெட்டித் தையலை,

படாத பாடுபட்டு, இரண்டு மணி நேரம் போராடி, பிரித்து எடுத்தேன்; பெருமூச்சு விட்டேன்!!

:ballchain:
 
Reminds me the story of Ali Baba and the forty thieves

where the thief marks Ali Baba's house and

his servant marks all the other houses.

Soon we won't know which were the original star threads!
:laser:
 
Dear Arun Kumar

Yes, it literally happened - " Summa Irukkira Sangai......... ", in front of my eyes!

The year was 1981 in Union Carbide factory, Tondiarpet Chennai. I had gone to visit a friend,
A.S.Krishnan who was then the Security In-Charge and was on duty.

I don't recall what we were talking about [sweet nonsense, most of the time], and for whatever reason,
he yawned and stretched both his hands. His right hand hit the emergency siren button and there
was chaos all over. All emergency sirens started blaring, red lights flashing etc etc. All the employees just
dropped whatever they were doing and charged out of the emergency exits as taught to them in the
mock drills. Some with presence-of-mind grabbed the wall-mounted fire extinguishers and others started
guiding people to "places of safety".

Employees from other factories too responded to the emergency sirens, stopped work and rushed out.
Traffic on the road came to a standstill. Somebody had called the Fire Service [ those Red contraptions, with their polished bells going Ding-Ding-Ding-Ding those days] - 5 or 6 of them appeared, with their crew, unwinding water
hoses, their captains yelling instructions on their megaphones.

The whole area was a mess and my Lambretta scooter was somewhere there !

Ironically it was ASK who periodically conducted these mock emergency drills and was pretty-much confident
that everybody knew exactly what to do, in case of an emergency to avoid stampede and collateral damage.

He owned-up his lapse, was issued a memo, an enquiry conducted into the incident etc etc.
God! He had a lot of explaining to do.

ASK took VRS long before the 1984 Bhopal gas tragedy in the Union Carbide factory. ASK's wife
Ms Jaya Krishnan was classical vocalist and an AIR artiste, no more now.

This literally is the meaning of "blowing an idle conch "

Guruvethunai
AM
 

ஆனந்தமாய் இருந்த பெண்ணை!


இதோ இன்னொரு கதை அல்ல; நிஜம்!


நன்றாகப் படித்து, மாதம் ஒரு லக்ஷம் ஈட்டும் அளவு உயர்ந்த பெண்; அவள் உயரமும் அதிகம்தான்! அவளுக்கு மூளையில் சிறு

கட்டி தோன்றிவிட, அதற்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. சின்னக் குழாய் ஒன்று, கழுத்தின் அருகில் ஆரம்பித்து,

வயிற்றுப் பகுதி வரை பதிக்கப்பட்டது! அறுவை சிகிச்சையால் பெருகும் நிணநீர், அதன் வழியாக வடியுமாம்.


திருமணத்தில் ஆசை இல்லாத அவளுக்கு,
சம்பளத்திலும், உயரத்திலும் அதிகமாக உள்ள பிள்ளையைத் தேடி அலைந்தனர்.

'எனக்குப் பதினெட்டு; உனக்கு இருபது' என்ற அடிப்படையில், இரண்டு வயது வித்தியாசத்தில் பிள்ளை தேடி அலுத்தபின், ஏழு

வயது வித்தியாசத்தில், அவளது முப்பத்தி இரண்டாவது வயதில், அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்துவிட்டனர். பிள்ளை

வீட்டார், மிக நல்லவர்கள் என்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது! திருமணம் முடிந்தபின், வெளிநாட்டில் வேலை கிடைத்தது என்று

கூறிய மாப்பிள்ளை, அவளுக்கு 'விசா' ஏற்பாடு பின்னர் செய்வதாகச் சொல்லிச் சென்றுவிட்டான்! அவனின் அம்மாவும்,

அக்காவும், தொலைக்காட்சி 'மெகா சீரியல்'களில் வரும் மாமியார், நாத்தனாராக மாறிவிட்டனர்! அவள் சம்பாதித்த பணம் யார்

பெயரில் உள்ளது என்றும், அதைத் தங்களிடம் தருமாறும் நச்சரிக்க ஆரம்பித்தனர். கணவனோ, தொலைபேசியில்

பேசுவதையும் தவிர்த்தான்! பெண்ணுக்கு பயம் வந்துவிட்டது. அதைப் பற்றி விசாரித்த பெண்ணின் தந்தை அவமதிக்கப்பட்டார்!

பின் என்ன? விவாகரத்துக்காக, ஒரு ஆண்டு காத்திருக்க ஆரம்பித்தாள்!


ஆனந்தமாய் இருந்த பெண்ணை, திருமண பந்தத்தில் மாட்டிவிட்டு, அவள் வாழ்வையும் கெடுத்தனர், பெற்றோர்! :sad:

 
Last edited:

ஆனந்தமாய் இருந்த பெண்ணை!


இதோ இன்னொரு கதை அல்ல; நிஜம்!


நன்றாகப் படித்து, மாதம் ஒரு லக்ஷம் ஈட்டும் அளவு உயர்ந்த பெண்; அவள் உயரமும் அதிகம்தான்! அவளுக்கு மூளையில் சிறு

They do not want the daughter-in-law, either with them or with her husband but they want the earnings of the girl from the time she started working , or in other words, even before they knew the existence of such a girl! :doh:
 
It is a lesson to all of us!

Whenever people APPEAR to be very magnanimous beyond reality

there will be catch some where, a warning in finer print not visible

then! :suspicious:

Remember the Ultra Modern Parents in law who made the girl with a

bad * bring everything needed for establishing an entire household???
:popcorn:

Chozhiyan kudumi chumma aadaathu! :nono:

Aadaayam illaamal chetti aththodu poga maattaan!
:nono:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top