Shiva Tandava Stotram

praveen

Life is a dream
Staff member
ஜடாடவீகலஜ்ஜலப்ரவாஹபாவிதஸ்தலே
கலேவலம்ப்ய லம்பிதாம் புஜம்கதும்கமாலிகாம் |
டமட்டமட்டமட்டமன்னினாதவட்டமர்வயம்
சகார சம்டதாம்டவம் தனோது னஃ ஶிவஃ ஶிவம் || 1 ||

ஜடாகடாஹஸம்ப்ரமப்ரமன்னிலிம்பனிர்ஜரீ-
-விலோலவீசிவல்லரீவிராஜமானமூர்தனி |
தகத்தகத்தகஜ்ஜ்வலல்லலாடபட்டபாவகே
கிஶோரசம்த்ரஶேகரே ரதிஃ ப்ரதிக்ஷணம் மம || 2 ||

தராதரேம்த்ரனம்தினீவிலாஸபம்துபம்துர
ஸ்புரத்திகம்தஸம்ததிப்ரமோதமானமானஸே |
க்றுபாகடாக்ஷதோரணீனிருத்ததுர்தராபதி
க்வசித்திகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி || 3 ||

ஜடாபுஜம்கபிம்களஸ்புரத்பணாமணிப்ரபா
கதம்பகும்குமத்ரவப்ரலிப்ததிக்வதூமுகே |
மதாம்தஸிம்துரஸ்புரத்த்வகுத்தரீயமேதுரே
மனோ வினோதமத்புதம் பிபர்து பூதபர்தரி || 4 ||

ஸஹஸ்ரலோசனப்ரப்றுத்யஶேஷலேகஶேகர
ப்ரஸூனதூளிதோரணீ விதூஸராம்க்ரிபீடபூஃ |
புஜம்கராஜமாலயா னிபத்தஜாடஜூடக
ஶ்ரியை சிராய ஜாயதாம் சகோரபம்துஶேகரஃ || 5 ||

லலாடசத்வரஜ்வலத்தனம்ஜயஸ்புலிம்கபா-
-னிபீதபம்சஸாயகம் னமன்னிலிம்பனாயகம் |
ஸுதாமயூகலேகயா விராஜமானஶேகரம்
மஹாகபாலிஸம்பதேஶிரோஜடாலமஸ்து னஃ || 6 ||

கராலபாலபட்டிகாதகத்தகத்தகஜ்ஜ்வல-
த்தனம்ஜயாதரீக்றுதப்ரசம்டபம்சஸாயகே |
தராதரேம்த்ரனம்தினீகுசாக்ரசித்ரபத்ரக-
-ப்ரகல்பனைகஶில்பினி த்ரிலோசனே மதிர்மம || 7 ||

னவீனமேகமம்டலீ னிருத்ததுர்தரஸ்புரத்-
குஹூனிஶீதினீதமஃ ப்ரபம்தபம்துகம்தரஃ |
னிலிம்பனிர்ஜரீதரஸ்தனோது க்றுத்திஸிம்துரஃ
களானிதானபம்துரஃ ஶ்ரியம் ஜகத்துரம்தரஃ || 8 ||

ப்ரபுல்லனீலபம்கஜப்ரபம்சகாலிமப்ரபா-
-விலம்பிகம்டகம்தலீருசிப்ரபத்தகம்தரம் |
ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம்
கஜச்சிதாம்தகச்சிதம் தமம்தகச்சிதம் பஜே || 9 ||

அகர்வஸர்வமம்களாகளாகதம்பமம்ஜரீ
ரஸப்ரவாஹமாதுரீ விஜ்றும்பணாமதுவ்ரதம் |
ஸ்மராம்தகம் புராம்தகம் பவாம்தகம் மகாம்தகம்
கஜாம்தகாம்தகாம்தகம் தமம்தகாம்தகம் பஜே || 10 ||

ஜயத்வதப்ரவிப்ரமப்ரமத்புஜம்கமஶ்வஸ-
-த்வினிர்கமத்க்ரமஸ்புரத்கராலபாலஹவ்யவாட் |
திமித்திமித்திமித்வனன்ம்றுதம்கதும்கமம்கள
த்வனிக்ரமப்ரவர்தித ப்ரசம்டதாம்டவஃ ஶிவஃ || 11 ||

த்றுஷத்விசித்ரதல்பயோர்புஜம்கமௌக்திகஸ்ரஜோர்-
-கரிஷ்டரத்னலோஷ்டயோஃ ஸுஹ்றுத்விபக்ஷபக்ஷயோஃ |
த்றுஷ்ணாரவிம்தசக்ஷுஷோஃ ப்ரஜாமஹீமஹேம்த்ரயோஃ
ஸமம் ப்ரவர்தயன்மனஃ கதா ஸதாஶிவம் பஜே || 12 ||

கதா னிலிம்பனிர்ஜரீனிகும்ஜகோடரே வஸன்
விமுக்ததுர்மதிஃ ஸதா ஶிரஃஸ்தமம்ஜலிம் வஹன் |
விமுக்தலோலலோசனோ லலாடபாலலக்னகஃ
ஶிவேதி மம்த்ரமுச்சரன் ஸதா ஸுகீ பவாம்யஹம் || 13 ||

இமம் ஹி னித்யமேவமுக்தமுத்தமோத்தமம் ஸ்தவம்
படன்ஸ்மரன்ப்ருவன்னரோ விஶுத்திமேதிஸம்ததம் |
ஹரே குரௌ ஸுபக்திமாஶு யாதி னான்யதா கதிம்
விமோஹனம் ஹி தேஹினாம் ஸுஶம்கரஸ்ய சிம்தனம் || 14 ||

பூஜாவஸானஸமயே தஶவக்த்ரகீதம் யஃ
ஶம்புபூஜனபரம் படதி ப்ரதோஷே |
தஸ்ய ஸ்திராம் ரதகஜேம்த்ரதுரம்கயுக்தாம்
லக்ஷ்மீம் ஸதைவ ஸுமுகிம் ப்ரததாதி ஶம்புஃ || 15 ||
 
ஜடா டவீ கலஜ் ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே

கலே வலம்ப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம்

டமட் டமட் டமட் டமன் னிநா தவட் டமர் வயம்

சகார சண்ட தாண்டவம் தனோது னஃ சிவஃ சிவம் 1 |



அடர்ந்த காடு போன்ற திருச்சடையிலிருந்து பொங்கும் நீரால் நனைக்கப்படும் அவன் திருக்கழுத்தில், இராசநாகம் மாலை போல் சுழன்றாட, "டம டம" என ஒலியெழுப்பும் உடுக்கையேந்தி திருக்கூத்தாடும் சிவன், அவன் அருள் மழையை எங்கும் பொழிக!



ஜடா கடாஹ ஸம்ப்ரம ப்ரமண் ணிலிம்ப நிர்ஜரீ

விலோல வீச்சி வல்லரீ விராஜ மான மூர்த்தனி

தகத் தகத் தகஜ் ஜ்வலல் லலாட பட்ட பாவகே

கிஷோர சந்த்ர ஷேகரே ரதிஃ ப்ரதிக்ஷணம் மம 2



சுருள்சடையாலான குளத்தில் அலைவீசி ஆடும் கங்கையும், திருநெற்றியில் கனல் வீசும் தீயையும், இளம்பிறையை அணிகல்னாகவும் கொண்டுள்ள சிவனை நான் போற்றுகின்றேன்.



தரா தரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர

ஸ்புரத் திகந்த ஸந்ததி ப்ரமோத மான மானஸே

க்ருபா கடாக்ஷ தோரணீ நிருத்த துர்த ராபதி

க்வசித் தீகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி 3



பரந்த ஞாலத்தின் உயிர்களெல்லாம் வாழத் திருவுளம் கொண்டவனும், மலையரசன் மகளுடன் மகிழ்ந்தாடுபவனும், தன் கடைக்கண்ணோக்கால், துன்பமெல்லாம் தீர்ப்பவனும், திக்குகளையே ஆடையாய் அணிந்து அம்மணமாய்த் திரிபவனுமான சிவனைக் கண்டு, நான் உளம் மகிழ்கிறேன்.



ஜடா புஜங்க பிங்கள ஸ்புரத் பணா மணி ப்ரபா

கடம்ப குங்கும த்ரவ ப்ரலிப்த திக்வதூ முகே

மதாந்த ஸிந்து ரஸ்புரத் வகுத்தரீ யமேதுரே

மனோ வினோத மத்புதம் பிபர்து பூத பர்தரி 4



வாழ்க்கைக்கு ஆதாரமானவனும், கொடியொத்த கழுத்து நாகத்தின் செங்கபில நிற நாகமாணிக்கம் எங்கும் ஒளிவீசித் தென்படத் திகழ்பவனும், பல திசைகளும் நிறைந்து (உன்னைப் போற்றும்) மாதரின் முகங்களில், அந்த மாணிக்கத்தின் கதிர்கள் பலவண்ணக் கோலமிடவும், மதயானையின் உருபோர்த்து அருளொளி வீச அமர்ந்திருப்பவனுமாகிய சிவனைக் கண்டு என்னுள்ளம், களித்தாடுகின்றது.



ஸஹஸ்ர லோச்சன ப்ரப்ருத் யசேஷ லேக சேகர

ப்ரஸூன தூளி தோரணீ விதூ ஸராந்த்ரீ பீடபூஃ

புஜங்க ராஜ மாலயா னிபத்த ஜாட ஜூடக

ஸ்ரியை சிராய ஜாயதாம் சகோரபந்து சேகர 5



சகோரப்பறவையின் தோழனை (நிலா) தலையணிகலனாகக் கொண்டவனும், செந்நாகத்தால் கட்டிய திருச்சடையைக் கொண்டவனும், அரி - இந்திராதி தேவர்களின் தலையிலிருந்து விழுந்த மலர்களின் மகரந்தத் தாதினால் சாம்பல் நிறமாகக் காணப்படும் பாதங்களை உடையவனுமான ஈசன் எமக்கு சகல வளங்களும் நல்குக.



லாட சத்வர ஜ்வலத் தனஞ்ஜய ஸ்புலிங்க பா

நிபீத பஞ்ச ஸாயகம் நமன் னிலிம்ப நாயகம்

சுதா மயூக லேகயா விராஜமான சேகரம்

மஹா கபாலி ஸம்பதே ஸிரோ ஜடா லமஸ்துனஃ 6



இளம்பிறை சூடிய அழகனும், காமனைக் காய்ந்த நுதல்விழிகோண்டவனும் தேவர்களால் துதிக்கப்படுபவனு்மான ஈசனின்ன் திருச்சடையைப் பணிந்து நாம் சகல சித்திகளையும் அடைவோமாக



கராள பால பட்டிகா தகத் தகத் தகஜ் ஜ்வல

தனஞ்ஜயாம் ஹுதீ க்ருத ப்ரசண்ட பஞ்ச ஸாயகே

தரா தரேந்த்ர நந்தினீ குசாக்ர சித்ர பத்ரக

ப்ரகல்பனைக ஸில்பினி த்ரிலோச்சனே ரதிர் மம 7



முக்கண்ணனும், நுதல்விழியிலிருந்து தகதகவென எரியும் தீயால், காமனை எரித்தவனும், மலையரசன் மகளின் மார்பில் தொய்யில் எழுதி மகிழ்பவனுமான ஈசனைப் பணிகின்றேன்.



நவீன மேக மண்டலீ நிருத்த துர்தர ஸ்புரத்

குஹூ நிஷீதி நீதமஃ ப்ரபந்த பந்த கந்தரஃ

நிலிம்ப நிர்ஜரீ தரஸ் தனோது க்ருத்தி சிந்துரஃ

கலா நிதான பந்துரஃ ஸ்ரியம் ஜகத் துரந்தரஃ 8



உலகெலாம் தாங்குபவனும், பிறையணி அழகனும், பொன்னார் மேனியனும், கங்கையணி வேணியனும், முகில் நிறைந்த இரவை ஒத்த கருநிறக் கழுத்தனுமான ஈசன் எமக்கு மங்கலம் அருள்க!



ப்ரபுல்ல நீல பங்கஜ ப்ரபஞ்ச காலிம ப்ரபா

வலம்பி கண்ட கண்டலீ ருசிப் ரபத்த கந்தரம் |

ஸ்மர்ச்சிதம் புரஸ்ச்சிதம் பவஸ்ச்சிதம் மகச்சிதம்

கஜச்சி தாந்தக ச்சிதம் தமந்தக ச்சிதம் பஜே 9



உலகன் கரும்பாவன்கள், மலர்ந்த நீலத்தாமரைகள் எனக் காட்சியளிக்கும் கறைக்கண்டனும், மதனனை எரித்தவனும், முப்புரம் காய்ந்தவனும், பற்றுக்களை அறுப்பவனும், தக்க வேள்வியை அழித்தவனும், அந்தகனை வதைத்தவனும், கயாசுரனை அழித்தவனும் இயமனை உதைத்தவனும் ஆன ஈசனைப் பணிகின்றோம்.



அகர்வ ஸர்வ மங்களா கலா கதம்ப மஞ்ஜரீ

ரஸ ப்ரவாஹ மாதுரீ விஜ்ரும்பணா மது வ்ரதம்

ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம்

கஜாந்தகாந்த காந்தகம் தமாந்த காந்தகம் பஜே 10



வண்டார்க்கும் கடம்ப மலர்களைச் சூடியவனும், மதனன், முப்புரம், பற்றுக்கள் வேள்சி, அந்தகன், கயாசுரன், இயமன் ஆகியோரை ஒழித்தவனுமான ஈசனைப் பணிகின்றோம்.



ஜயத் வதப்ர விப்ரம ப்ரமத் புஜங்க மஸ்ரவஸ

த்வினிர்க மத்க்ரம ஸ்புரத் கராள பால ஹவ்ய வாத்

திமித் திமித் திமித் வனன் ம்ருதங்க துங்க மங்கள

த்வனி க்ரம ப்ரவர்தித ப்ரச்சண்ட தாண்டவஃ சிவஃ 11



திமிதிமி என மிருதங்கம் ஒலியெழுப்ப, அதற்கு இசைந்தாடுபவனும், நுதல்விழியில் தீயைக் கொண்டவனும், தீகக்கும் மூஉச்சைக் கொண்ட நாகம் சீறத் திகழ்கின்றான் சிவன்.



ஸ்புருஷத் விசித்ர தல்பயோர் புஜங்க மௌக்திக ஸ்ரஜோர்

கரிஷ்ட ரத்ன லோஷ்டயோஃ சூக்ருத் விபக்ஷ பக்ஷயோஃ

த்ருணாரவிந்த சக்ஷுஸோ ப்ரஜா மஹீ மஹேந்த்ரயோஃ

ஸமாம் ப்ரவர்திகஃ கடா சதாசிவம் பஜாம்யஹம் 12



மக்களையும் மன்னனையும் நான் ஒன்றாகப் பார்ப்பதெப்போ? புல்லொத்த விழிகளையும் தாமரைக் கண்ணையும் நான் ஒன்றாகக் காண்பதெப்போ? நண்பரையும் எதிரிய்யையும் நான் ன்றாக எண்ணுவதெப்போ? மணியையும் மண்ணையும் ஒன்றெனச் சொல்வதெப்போஒ? மாலையையம் பாம்பையும் ஒன்றெனச் சூடுவதெப்போ? சொல்க என் இறைவா!



கதா நிலிம்ப நிர்ஜரீ நிகுஞ்ச கோதரே வஸன்

விமுக்த துர்மதி ஸதா ஸிரஃ ஸ்த மஞ்சலிம் வஹன்

விலோல லோல லோச்சனோ லலாம பால லக்னகஃ

சிவேதி மந்த்ர முச்சரண் கதா ஸுகீ பவாம் யஹம். 13



கங்கைக் கரைக் குகையில் நான் வாழ்வதெப்போ? என்னேரமும் சிரமேல் கைதூக்கி, என் கொடுங்குணங்கள் கரைந்தோடுமாறு உன் நாமங்களைச் சொல்லி நான் மகிழ்ச்சியாக இருப்பதேப்போ? அதிரும் நுதல்விழி கொண்டவனே, சொல்க.



இமம் ஹி நித்யமேவ முக்த முத்தமோத்தமம் ஸ்தவம்

பதன் ஸ்மரண் ப்ருவண் நரோ விசுத்தி மேதி ஸந்ததம்

ஹரே குரௌ ஸுபக்தி மாசு யாதி நான்யதா கதிம்

விமோஹனம் ஹி தேஹினாம் ஸு சங்கரஸ்ய சிந்தனம். 14



இம்மேலான துதியைப் பாடுவோர், ஞானகுருவாம் சிவனின் அருளும், புனிதமும் பெறுவர். அறியாமை நீங்கி சங்கரன் அருளைப் பெற, இதைவிட வேறு இலகுவான வழியில்லை.



பூஜா வசான ஸமயே தச வக்த்ர கீதம்

யஃ ஸம்பு பூஜானா பரம் பததி ப்ரதோசே

தஸ்ய ஸ்திராம் ரத் கஜேந்த்ர துரங்க யுக்தம்

லக்ஷ்மீம் ஸதைவ ஸுமுகிம் ப்ரததாதி ஸம்புஃ 15



தினமும் மாலையில், பிரதோச வேளையில், பூசையின் முடிவில், தசவக்கிரன் பாடிய இச்சிவதுதியைக் கூறி ஈசனைத் தியானிப்போர், திருமகளும், நாற்படையும் சூழ வளங்கொண்டு விளங்குவாராக.
 
Back
Top