• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

shat thila ekaadasi

Status
Not open for further replies.

kgopalan

Active member
ஷட் திலா ஏகாதசி

7-2-2017 ஏகாதசிக்கு ஷட் திலா ஏகாதசி என்று பெயர்.. கருப்பு எள்ளை இன்று ஆறு விதமாக உபயோக படுத்த வேண்டும்.

கருப்பு எள்ளை அறைத்து உடலில் பூசிக்கொண்டு கறுப்பு எள் கலந்த நீரில் ஸ்நானம் செய்தல்

கறுப்பு எள்ளால் ஹோமம் செய்தல். கறுப்பு எள் கலந்த நீரால் தர்ப்பணம் அல்லது தானம் செய்தல்.

கறுப்பு எள் அல்லது நல்ல எண்ணைய் தானம் செய்தல்.

துவாதசி அன்று எள்ளு சாதம் சாப்பிட வேண்டும்.

ஆகாரம் எதுவும் சாப்பிடாமல் மேற்கூறிய வாறு செய்து விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபட்டு வேண்டுதல் செய்தால் பாபங்கள் பல நீங்கும் .

ஸ்ம்ருதி கெளஸ்துபம்- 480 படி மறு நாள் துவாதசி அன்று நல்ல எண்ணைய் விளக்கு விஷ்ணு சன்னதியில் ஏற்றி எள்ளு சாதம் நிவேதனம் செய்து

விநியோகம் செய்வதால் பாபங்கள் போம்.எல்ல சுகங்களும் கிடைக்க பெறும்.

மாக மாத சுக்ல பக்ஷ துவாதசி திதியன்று தான் விஷ்ணு பகவான் கடுந்தவம் புரிந்து தனது உடலிலிருந்து கறுப்பு எள்ளை வெளிபடுத்தினார்.


 
Status
Not open for further replies.
Back
Top