M
malgova.mango
Guest
எக்ஸ்க்ளுசிவ்: தீவிரவாதிகளின் உரையாடல்
இந்த பதிவு யாரையோ கிண்டல் செய்ய வேண்டும், நக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லை. நடப்பதை கண்டு வலியிலும், கோபத்திலும் எழுதியது.
தீவிரவாதி 1: நாம பனிரெண்டு பேர அனுப்பி, இருநூறு மக்களை கொன்னுருக்கோம். ஆனா இந்திய அரசு, தீவிரவாதிகளுடனான போரில் வெற்றி, சதி முறியடிப்பு பேசிக்கிறாங்களே?
தீவிரவாதி 2: அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம். ஒரு மாசத்துல மறந்திட்டாங்க. சைக்கிள்ள குண்டு வச்சோம். ரெண்டு மாசத்துல மறந்திட்டாங்க. என்ன பண்ணினாலும் அதிகபட்சம் மூணு மாசத்துல மறந்திடுறாங்க.
தீவிரவாதி 1: அதனால தான் இந்த தடவை, ஏழை, நடுத்தர மக்களை விட்டுட்டு, இந்திய அரசு அக்கறை எடுத்துக்கிற மேல்தட்டு மக்களை தாக்குனோம்.
தீவிரவாதி 2: அதுக்கும் எந்த விதமான பிரயோஜனம் இருக்குற மாதிரி இல்ல. நாம நடத்தின தாக்குதல வச்சி அரசியல்வாதிங்க இப்பவே அவனுங்களுக்காக ஒட்டு பொறுக்க ஆரம்பிச்சிட்டாங்க
cont......