ஸ்டிக்கி த்ரெட் கணபதி,, நவகிரகங்கள், ஹோமம் இதிலும் உள்ளது. விவரங்கள். தமிழில் மேலும் விவரம் இதோ..
அறுபதாம், எழுபதாம் எண்பதாம் கல்யாண விவரங்கள்..
பிறந்த வருஷம், தமிழ் மாதம் பிறந்த நக்ஷதிரம் அன்று செய்ய வேண்டியது.
பத்திரிக்கை அடிக்க முன் கூட்டியே கொடுக்கவும். கை பேசி மூலமும் முன் கூட்டியே தெரிவிக்கவும். குல தெய்வம் கோவிலுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை, செய்யவும். கோவிலுக்கு பணம் கொடுக்கவும்.
உறவினர்கள், நண்பர்கள் , எவ்வளவு பேர் வருவார்கள். அவர்களுக்கு வேன்டிய காபி, சிற்றுண்டி, சாப்பாடு, கேட்டரிங் ஸர்வீஸ் மூலம் ஏற்பாடு செய்து கொள்ளவும். வீட்டில் நட்த்துவதே மிக மிக சிறப்பு..
வீட்டில் செய்வதாக இருந்தால்..: ஷாமியானா, டேபிள், சேர், தண்ணீர், கப், வாழை மரம், .ஜமக்காளம், தலைகாணி. மின்விசிரி, மின் சார லைட், ஜெனரேட்டர்., வாடகைக்கு எடுத்து கொள்ளவும்.
தேங்காய், அல்லது பழம், வெற்றிலை, பாக்கு, கை முருக்கு, லட்டு, அன்பளிப்பு பொருள், முதலியவைகள் போட ப்லாஸ்டிக் பை அல்லது காகித பை இவைகளை வாங்கி வைத்து கொள்ளவும்வீடியோ, போட்டோ எடுக்க ஏற்பாடு செய்து கொள்ளவும்.
உறவினர்களுக்கு வேஷ்டி, புடவை, ரவிக்கை துண்டு, பேண்ட், ஷர்ட், சுடிதார், கொடுக்க,, தேவையானவற்றை வாங்கி வைத்து கொள்ளவும்.
வாத்யார் கொடுத்த .லிஸ்ட் படி பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளவும்..
அறுபது வயதினிலே: சஷ்டி அப்தபூர்த்தி.
9 கலச ஸ்தாபனம்.: நடுவில் ம்ருத்யுஞ்சயர்;. வலது பக்கம் ப்ரும்ஹா; இடது
பக்கம் ருத்ரன்.; ம்ருத்யுஞ்சயருக்கு நேர் கீழே விஷ்ணு.; விஷ்ணுக்கு வலது பக்கம் நக்ஷத்திர தேவதைகள்.;
விஷ்ணுக்கு இடது பக்கம் ஸம்வத்ஸர தேவதை;; ம்ருத்யுஞ்சயருக்கு நேர் மேலே திக் பாலகர்;; திக் பாலகருக்கு வலது பக்கம் ஆயுர் தேவதை; திக் பாலகருக்கு இடது பக்கம் மார்கண்டேயர். ;
12 கலச ஸ்தாபனம்: நடுவில் ம்ருத்யுஞ்சயர்; வலது பக்கம் ப்ருஹ்மா; இடது பக்கம் ருத்ரன்; ;ம்ருத்யுஞ்சயருக்கு நேர் கீழே விஷ்ணு; விஷ்ணுக்கு இடது பக்கம் ஸப்த ரிஷிகள்.;
ம்ருத்யுஞ்சயருக்கு நேர் மேலே நக்ஷத்திர தேவதைகள்; இதற்கு நேர் மேலே நவகிரகங்கள்;; இதற்கு நேர் மேலே திக் பாலகர்; ;நக்ஷதிர தேவதை களுக்கு இடது பக்கம் ஸம்வத்ஸர தேவதை;
இதற்கு இடது பக்கம் மார்கண்டேயர்;நக்ஷத்திர தேவதைக்கு வலது பக்கம் சிரஞ்சீவி ;இதற்கு வலது பக்கம் ஆயுர் தேவதை.;
33 கலச ஸ்தாபனம்; நடுவில் ம்ருத்யுஞ்சயர்; வலது பக்கம் ப்ருஹ்மா; இடது பக்கம் ருத்ரன்; ம்ருத்யுஞ்சயருக்கு கீழே விஷ்ணு; ருத்ரனுக்கு வலது பக்கம் மேலே மார்கண்டேயர்;
ம்ருத்யஞ்சருக்கு நேர் மேலே நக்ஷத்திர தேவதைகள்; இதற்கு இடது பக்கம் ஸம்வத்சர தேவதை. வலது பக்கம் ஆயுர் தேவதை; விஷ்ணுக்கு இடது பக்கம் சப்த ரிஷிகள்; ப்ரும்ஹாவிற்கு வலது பக்கம் சற்று மேலே சிரஞ்சீவிகள் ஏழு பேர்;
ப்ருஹ்மாவிற்கு வலது பக்கம் சற்று கீழே;ஒன்று ;சற்று மேலே ஒன்று; விஷ்ணுக்கு வலது பக்கம்; ஒன்று; இதற்கு கீழே ஒன்று; இதற்கு இடது பக்கம் வரிசையாக மூன்று.
நக்ஷத்திர தேவதை; சம்வத்சர தேவதை, ஆயுர் தேவதைக்கு நேர் மேலே நவகிரகங்களுக்கு ஒன்பது கலசம்; இதற்கு மேலேயும், கீழேயும் பக்கங்களிலும் எட்டு திக் பாலகற்களுக்கு எட்டு கலசங்கள்.
அறுபது கலச ஸ்தாபனம்;
நடுவில் ம்ருத்யஞ்சயர்.;வலது பக்கம் ப்ருஹ்மா; இடது பக்கம் ருத்ரர்; கீழ் பக்கம் விஷ்ணு; ருத்திரருக்கு இடது பக்கம் மார்கண்டேயர்.;ம்ருத்யுஞ்சயர் ப்ருஹ்மா ருத்ரனுக்கு நேர் மேலே ஒன்பது நவகிரகங்கள்;
இதற்கு மேலே கிழக்கு திக் பாலகர்;ப்ருஹ்மாவிற்கு வலது பக்கம் சற்று மேலே ஆயுர் தேவதை; ஆயுர் தேவதைக்கு கீழேயும் விஷ்ணுக்கு கீழேயும் வரிசையாக சிரஞ்சீவீகள் ஏழு பேருக்கு ஏழு கலசங்கள்,
மார்கண்டேயருக்கு மேலேயும் கீழேயும் சஷ்டி ஸம்வத்சரம் ( அறுபது வருடங்கள்) ஒரு கலசம்; ஸப்த ரிஷிகளுக்கு ஒரு கலசம். மார்கண்டேயருக்கு இடது பக்கம் சிரஞ்சீவிகளுக்கு வலது பக்கம்
வரிசையாக பதினான்கு , பதினான்கு கலசங்கள் 28 நக்ஷத்திர தேவதைகளுக்கு; இவைகளுக்கு வெளியே அஷ்ட திக் பாலகர்களுக்கு 8 கலசங்கள்.
நூற்று இருபத்தைந்து கலச ஸ்தாபனம்.
ஏழு ரிஷிகளுக்கு ஏழு கலசங்கள். 60 வருடங்களுக்கு 60 கலசங்கள்; மொத்தம் 125 கலசம் வைத்தும் பூஜை செய்யலாம்.
.வாழை மரம்; தோரணம், விதானத்துடன் மண்டபம் அலங்கரிக்கவும். கோலம் போடவும். ;கலசம் வைக்கும் மேடையை தயார் செய்யவும். 32 கிலோ நெல்/கோதுமை பரப்புக; அதன் மேல்ழை இலை போட்டு 16 கிலோ பச்சை அரிசி பரப்பவும்; அதன் மேல் வாழை இலை போட்டு
அதன் மேல் 8 கிலோ எள்ளு கலந்த உளுந்து பரப்பவும்.அதன் மேல் தங்கம்//வெள்ளி// செம்பு// மண் பாத்திரத்தை கலசமாக ஸ்தாபிக்கவும். கலசங்களை நீர் விட்டு அலம்பி துடைத்து சாம்பிரானி தூபம் காட்டி கலசங்களை தேவதை ஆவாஹனத்திற்கு நூல் சுற்றி தயார் செய்யவும்.
. ஒவ்வொரு கலசத்திலும் ரத்தினங்கள் இடுக. மாவிலை, கூர்ச்சம் .தேங்காய். வைத்து சந்தனம், குங்குமம் இடுக .ஒவ்வொரு கலசத்திற்கும் புது வஸ்திரம் மாலை
அணிவிக்கவும். தாம்பூலம், வாழைப்பழம் ஒவ்வொரு கலசத்திற்கும் வைக்கவும். ஒவ்வொரு கலசமும் ஒரு லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவு இருக்க வேண்டும். கலசத்திற்குள் தண்ணீர் ஊற்ற வேண்டும். பச்சை கற்பூரம்
,ஏலக்காய், கிராம்பு, பொடி செய்து கலசங்களில் போடவும்.விளாமிச்சை வேர் ,வெட்டி வேர் தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை கலசங்களில் ஊற்றலாம். நெய் ஒரு சொட்டு ஒவ்வொரு கலசத்திலேயும் விடவும்.
தங்கம் அல்லது வெள்ளி ப்ரதிமை தயார் செய்து பஞ்ச கவ்யத்தால் புனித படுத்தி கலசங்களின் மேல் வைக்கவும். பிறந்த மாதம் பிறந்த நக்ஷத்திரம் காலை சூர்ய உதயத்தின் போது இருக்கும். அன்று சாந்தி செய்ய வேன்டும்..
அடுத்தடுத்து இரு நாள்களில் காலை சூர்ய உதயத்தின் போது பிறந்த நக்ஷத்திரம் வந்தால் இரண்டாம் நாள் செய்யவும்.ஜன்ம மாதத்தில் ஜன்ம நக்ஷத்திரம் இரு முறை வந்தால் முதலில் வரும் நக்ஷத்திர நாளில் செய்வது வழக்கமாக உள்ளது.
சஷ்டிஅப்தபூர்த்தி ஷாந்திக்கு குறிக்கப்பட்ட நாளுக்கு முந்தய நாள் யஜமானன் அந்தணர்களை அழைத்துக்கொண்டு பெரிய நதி ஒன்றுக்கு செல்ல வேண்டும்.
அநுக்ஞை; ஸங்கல்பம் ஸ்நானம் தானம், அந்தணர்க்கு உணவு;. இரவு கட்டிலில் உறங்கக்கூடாது. உடலுறவு கூடாது.
குறிக்கப்பட்ட நாளன்று காலை அருணோதயத்தில் நதியில் ஸ்நானம் செய்து
காலை சந்த்யா வந்தனாதிகளை முடித்து கிழக்கு முகமாக பார்த்து 60 காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்.
அம்ருத ம்ருத்யுஞ்ஜயர் ஆராதனைக்காக ஆசாரியரை ப்ரார்தித்து அழைத்துக்கொண்டு மண்டபத்திற்கு செல்ல வேண்டும்.
நடுவில் ம்ருத்யுஞ்ஜயர் கலசம்.; அதற்கு தெற்கே ப்ருஹ்மா; மேற்கே விஷ்ணு; வடக்கே ருத்ரன்; சற்று கிழக்கே மார்கண்டேயர்; கிழக்கே இந்திரன் தொடங்கி எட்டு திக் பாலகர்கள். அவரவருக்கு உரிய இடங்களில்.
நவக்ரக கலசங்கள் ஒன்பது; அஷ்வத்தாமா உள்ளிட்ட ஏழு சிரஞ்சீவிகளுக்கு ஏழு; ஆயுர் தேவதைக்கு ஒன்று; நக்ஷத்திர தேவதைகளுக்கு இருபத்தெட்டு;
சஷ்டி ஸம்வத்ஸர தேவதைக்கு ஒன்று; சப்த ரிஷிகளுக்கு ஒன்று; ஆகிய அறுபது கலசங்களை தனித் தனியாக திக் பாலகர்களுக்கும் ப்ரதான கலசத்திற்கும் இடைபட்ட ப்ரதேசத்தில் நிறுவுக;.
யஜமானன் தன் பத்நியுடன் பவித்ரம் பெற்று தரித்துகொண்டு சபைக்கு நமஸ்கரித்து அநுக்ஞை பெற வேண்டும். இரு மஞ்சள் தடவிய தேங்காய்களை அங்குள்ள பெரியோர்களிடம் கொடுத்து நமஸ்கரித்த்தாசி பெற
வேண்டும். ஸ்வாமி படத்திற்கு அருகே குத்து விளக்கு ஏற்றி புஷ்பம் சாற்றி குல தெய்வம் இஷ்ட தெய்வங்களை ப்ரார்த்தனை செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். .
அநுக்ஞை: தாம்பாளத்தில் தாம்பூலம், பழம்; புஷ்பம் ,தக்ஷினை வைத்துக்கொண்டு கீழ் வரும் மந்திரம் சொல்லவும். ஹரிஹி; ஓம் நமஸ்ஸதஸே நமஸ்ஸதஸ: பதயே நமஸ்ஸகீநாம் புரோகாநாம் சக்ஷுஷே
நமோ திவே நம:ப்ருதிவ்யை.
ஸப்ரத ஸபாம் மே கோபாய யே ச ஸப்யாஸ்ஸபாஸத: தாநிந்த்ரியாவத: குரு ஸர்வமாயுருபாஸதாம் ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம; ஆகிய மந்திரங்களுடன் நமஸ்கரிக்கவும்.
அஸேஷே ஹே பரிஷத் பவத் பாதமூலே மயா சமர்பிதாம் இமாம் ஸெளவர்ணமயீம் தக்ஷிணாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ரித்ய என்ற மந்திரத்துடன் அனைவருக்கும் அநுக்ஞைக்கான தக்ஷிணை அளிக்கவும்.
அநுக்ஞைக்கான ஸங்கல்பம்: ((ஏற தாழ இதே வாக்யங்களை விக்னேஸ்வர பூஜா சங்கல்பத்திற்கும், மஹா சங்கல்பத்திற்கும் பயன் படுத்துக

)
----------------------கோத்ரோத் உத்பவஸ்ய………………நக்ஷத்ரே…………………ராசெள ஜாதஸ்ய……………..ஷர்மண; மம ஸஹ குடும்பஸ்ய ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் , மம சஷ்டிதமே அப்தே அதீதே ஏக சஷ்டிதமே வர்ஷே ப்ராப்தே ஜன்ம
மாஸே ஜன்மர்க்ஷேயோ, தோஷஸ் சமஜனி, தத்தோஷ பரிஹார ,த்வாரா மம வேதோக்த ஆயு: அபிவ்ருத்யர்தம்,, திவ்ய, பெளம ,ஆந்தரிக்ஷ, உத்பாத, துஸ் ஸ்வப்ந ,துஸ்ஸகுன, தெளர்மனஸ்ய, துஸ்சிந்தன., துஷ்கீர்த்தி
நிவ்ருத்யர்தம், பரை: க்ருத கரிஷ்யமாண மந்த்ர யந்த்ர, தந்திர, ஆபிசார விஷ சூர்ண ப்ரயோக, -ஆகர்ஷண, வஸீகரண, மோஹந; ஸ்தம்பண, உச்சாடந, பந்தநாதி ,ஜனிதோபத்ரவ நிவ்ருத்யர்த்தம்
ரவி,, அங்காரக, ஜீவார்க, சுக்ர, ஸோம, செளம்ய, ராஹூ; கேது, சார வசாத், சங்ஜனித சர்வ தோஷ நிவ்ருத்யர்த்தம்; க்ரூர க்ரஹ ஜனித , மஹா தசா, அந்தர்தசா,க்ரஹ வேத, மஹா வேதாதி, ஜநித, உபத்ரவ நிவ்ருத்யர்தம்
மம ஜந்ம லக்ன வசாத்-சந்திர லக்ந வசாத் –அம்ஸ லக்ந வஸாஸ்ச – ஹோரா, த்ரேக்காண, நவாம்ஸ்ச , தஸாம்ச< த்வாத ஸாம்ச, த்ரிம்சாம்ச,
சஷ்டி அம்ஸாதி லக்ந வஸாஸ்ச, பாப ஸ்தான ஸ்திதி—பாப ஸ்தாநாதிபத்ய, பாபக்ரஹ நிரீக்க்ஷண ,--பாப க்ரஹ ஸம்யோகாதி ஜனித தோஷ, --துஷ்ட நவகிரஹ ஜனித, ஸர்வ உபத்ரவ நிவ்ருத்யர்தம், சஷ்டி அப்தபூர்த்தி கால விஸ்தாரிபிஹி –கால-யவந-யமள-சுதூம்ராதி துஷ்ட க்ரஹ க்ரித்யைஹி; ஸஞ்ஜநித,, அபம்ருத்யு; ப்ரப்ருதி தோஷ நிவ்ருத்யர்தம்
ப்ருஹ்ம, விஷ்ணு, ருத்ராதி, தேவதா ப்ரஸாத த்வாரா வேதோக்த சதாயு: ஸம்பூர்ணதா ஸித்யர்த்தம் அம்ருத ம்ருத்யுஞ்சய ப்ரஸாதேன இந்த்ராதி அஷ்ட திக் பால- அஷ்வத்தாமாதி ஸப்த சிரஞ்சீவி –மார்கண்டேய ஆதித்யாதி
நவகிரஹ, க்ருத்திகாயாதி அஷ்டாவிம்சதி நக்ஷத்ர , ஆயுர் தேவதா , ஸப்த ரிஷி ப்ரஸாதேன ச ஸர்வாரிஷ்ட நிவ்ருத்யர்த்தம், ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம்சதுர்வர்க சிந்தாமணெள ஸெளநகோக்த ப்ரகாரேண
சஷ்டி அப்தபூர்த்தி ஷாந்தி ஜப ஹோமாக்யம் கர்ம கர்த்தும் யோக்யதா ஸித்திம் அநுக்ரஹாண.
தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து ப்ராஹ்மணர்களிடம் உத்திரவு பெற்றுக்கொள்க
.
நடக்க இருக்கும் கார்யம் தடங்களின்றி நடக்க விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். சங்கல்பம் செய்து கொள்க. அனுமதி வசனம்;: தக்ஷிணாத்யை: ப்ரதோஷ்யைதாந் தேப்யோநுக்யாம் அவாப்ய ச அவிக்ன கர்ம பூர்த்யர்தம் பூஜயேச்ச கணாதிபம்.
புண்யாஹவாசனம் செய்து மண்டபத்தையும் பூஜா சாதனங்களையும் ப்ரோக்ஷிக்கவும். பித்ருக்களை த்ருப்தி செய்ய நாந்தி சிராத்தம் செய்யவும் .நாந்தி ச்ராத்தாங்கம் புன்யாஹம் செய்யவும்.
புண்யாஹவாசனம்; சுத்தமான இடத்தில் கீழே கோதுமையை//நெல்லை பரப்பவும். அதன் மேல் வாழை இலையை போட்டு அரிசியை பரப்பவும். அதன் மத்தியில் பத்மம் வரைந்து ஸ்தண்டிலம் தயார் செய்யவும்.
தனியாக புண்யாஹவாசனம் செய்தால் ஆசமநத்துடன் தொடங்கவும்..
இரு தர்பத்தால் ஆன பவித்ரம் வலது கை மோதிர விரலில் அணியவும்
.
இரு தர்பங்களை பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.