• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sapthami puujai-1.

kgopalan

Active member
சூரிய நாராயணனுக்கு அன்றாடம் செய்ய வேண்டிய பூஜை:----காலையில் சூரிய உதயத்திற்கு முன் குளித்து விட வேண்டும். சுத்தமான வஸ்த்ரம் தரித்து ஆசமனம் செய்து விட்டு ஓம் ககோல்காய ஸ்வாஹா என்று அர்க்கியம் விட வேண்டும். இது தான் ஸப்தாக்ஷர மந்திரம்.இந்த மந்திரத்தை முடிந்த அளவு சொல்லி பூஜை செய்ய வேண்டும்.


அதன் பின் ஹ்ருதய பூர்வமாக சூரியனை உத்தேசித்து பூஜை செய்ய வேண்டும். பிறகு ப்ராணாயாமம் செய்து , வாயவி, ஆக்னேயி, மாகேந்த்ரி, வாருணி ஆகியோரை த்ருப்திபடுத்தி அந்த ஜலத்தினால் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு அங்கன்யாஸம்.


ஓம் க: ஸ்வாஹா ஹ்ருதயாய நம: ஓம் கம் ஸ்வாஹா சிரஸே ஸ்வாஹா; ஓம் உல்காய ஸ்வாஹா சிகாயை வஷட்; ஓம் யாயா ஸ்வாஹா கவசாய ஹூம்; ஓம் ஸ்வாமி ஸ்வாஹா நேத்ர த்ரயாய வஷட், ஓம் ஹாம் ஸ்வாஹா அஸ்த்ராய பட் என்று செய்ய வேண்டும். இவ்வாறு மந்திர ஜலத்தினால் தன்னையும் ப்ரோக்ஷித்துகொண்டு பூஜைக்குறிய திரவ்யங்கள் , பாத்திரங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.


காலையில் கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும், இரவில் வடக்கு முகமாகவும் ஆறு தள தாமரையில் சூரிய மூர்த்தியை வைத்து ஒருமுக சிந்தனயுடன் தியானிக்கவும். ஹோமத்துடன் காலையிலும், மாலையிலும் பூஜை செய்வது நல்லது.


பிறகு சிகப்பு சந்தனம், சிகப்பு பூக்கள், தூபம், தீபம், நைவேத்யம் காட்ட வேண்டும் .பிறகு சந்திரன் முதலிய நவகிரஹங்கள், இந்திரன் முதலிய அஷ்ட திக்கு பாலகர்கள் , அவர்களின் ஆயுதங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்.


அதற்கு பின் வ்யோம வோனம், தண்ணீர் முத்திரை, ரவி முத்திரை, பத்ம முத்திரை, மஹேஸ்வரா முத்திரை என்ற ஐந்து வகை முத்திரைகளையும் காட்டி பூஜை, ஜபம், த்யானம் அர்க்கியம் ஆகியவைகளை எட்டு திக்கு பாலகர்களுக்கும் சமர்பிக்க வேண்டும்.


இவ்வாறு தொடர்ந்து ஒரு வருடம் பக்தி சிரத்தையுடன் செய்தால் இவ்வுலகில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மோக்ஷமும் கிட்டும்.


சூரிய பூஜை செய்யும் போது சூரியனின் பெயர்கள் சித்திரை மாதம்:---விசாகன்; வைகாசி_:- தாதா; ஆனியில் இந்திரன், ஆடியில் ரவி; ஆவணியில் நபு;


புரட்டாசியில் யமன்; ஐப்பசியில் பர்ஜன்யன்; கார்த்திகையில் த்வஷ்டா; மார்கழியில் மித்திரன்; தை மாதம் விஷ்ணு; மாசியில் வருணன்; பங்குனியில் சூரியன்.


12 மாதங்களில் 12 ஆதித்யர்களை பூஜை செய்ய வேண்டும். முதல் நாள் ஹவிஸ் அன்னம் மட்டும் உட்கொள்ள வேண்டும். மாலையில் ஆசமனம் செய்து சூரிய பகவானின் சாரதி, அருணனை வணங்க வேண்டும்.


அதன் பின் சூரிய பகவானை வணங்கி த்யானம் செய்ய வேண்டும். மறு நாள் விடியற் காலையில் எழுந்து விதிப்படி சூரிய பகவானை பூஜை செய்து அவரது ஸப்தாக்ஷர மூல மந்திரத்தை “ஓம் ககோல்காய ஸ்வாஹா”


என்பதை ஜபிக்க வேண்டும். அக்னியை சூரிய ஜ்யோதியாக பாவித்து ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகு தர்பணமும் செய்ய வேண்டும் .தர்பண புல்லில் நெய்யை நனைத்து ஹோம தீயில் மூல


மந்திரத்தை சொல்லி விட்டு கொண்டிருக்க வேண்டும். பூரணாஹூதியை விரிவாக செய்யவும்..பூர்ணாஹுதி முடிந்த பிறகு தர்பணம் செய்ய வேண்டும் .பிறகு ப்ராஹ்மணர்களுக்கு சாப்பாடு தக்ஷிணை கொடுக்கவும்.
.
12 மாதம் இவ்வாறு செய்து 12 ப்ராஹ்மணர்களைஆதித்யர்களாகவும் 13 ம் மாதம் ப்ரதானஆசாரியரை சூரிய பகவானாகவே பாவித்து சூரிய ரதத்தை தானம் செய்ய வேண்டும். அந்த ரதத்தில்


தங்கத்திலான சூரியனை நடுவில் வைத்து முன்னால் சாரதியாக அருணனையும் வைத்து குதிரையின் ப்ரதிமையும் அமைக்க வேண்டும் .ஏழைகளுக்கு சாப்பாடு போட்டு தானமும் செய்ய வேன்டும்..


மாசி மாதம் சுக்ல பக்ஷம் பஞ்சமி அன்று ஒரு வேளை சாப்பிடுவது, மறு நாள் சஷ்டி அன்று இரவில் மட்டும் சாப்பாடு. மறு நாள் சப்தமி அன்று பாரணை செய்ய வேண்டும்.11-03-2019


சப்தமி அன்று சூரியனை பூஜை செய்ய வேன்டும். சிவப்பு சந்தனம், அரளி பூக்கள். குங்குலிய தீபம், பாயசம் ஆகியவைகள் நைவேத்யம். ஆத்ம சுத்திக்காக கோமயம் கலந்த ஜலத்தால் ஸ்நானம் செய்ய வேண்டும்.13-03-2019


உண்ணும் உணவிலும் கொஞ்சம் கோமயத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். ப்ராஹ்மணருக்கு போஜனம் செய்ய வேண்டும்….


ஆனி மாதம் முதல் நான்கு மாதங்கள் சப்தமியன்று வெள்ளை சந்தனம், வெள்ளை பூக்கள், கருப்பு சுகந்த மணமுள்ள அகர் மர தூபம், உத்தமமான நைவேத்யங்கள் படைக்க வேண்டும்..8-7-2019


ஐப்பசி முதல் நான்கு மாதங்கள் அகஸ்த்திய புஷ்பம், சுபராஜித தூபம், வெல்ல அப்பம் ஆகியவைகள் தேவை .ப்ராஹ்மண போஜனம். ஆத்ம சுத்திக்காக ஜலத்தில் தர்பையை நனைத்து குளிக்க வேண்டும் ..உணவிலும் தர்ப்பை ஊறிய ஜலத்தை சேர்த்து கொள்ளலாம்
.
இவ்வாறு சப்தமி வ்ரதங்களின் முடிவில் மாசி மாதம் சப்தமியன்று ரதத்தை யாத்திரை உற்சவம் கொண்டாடி ரதத்தை தானம் செய்ய வேண்டும்.
ரத சப்தமியை உபவாசமிருந்து கொண்டாடுபவர்கள் கீர்த்தி தனம், படிப்பு, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஆகியவைகளை அடைவர். ரத சப்தமி குறித்து விரத ரத்னாகர், விரத கல்பத்ரும, வ்ருதராஜன், பத்ம புராணம், வாயு புராணம் ஆகியவற்றில் விரிவாக கூறப்பட்டுள்ளன.


மார்கழி மாதம் சுக்ல சப்தமியன்று சூரியனுக்கு சிரத்தை பூர்வமாக அபிஷேகம் செய்ய 13-1-19 வேண்டும்.சக்கரை பொங்கல், சித்ரான்னம் நைவேத்யம் நெய்யுடன் சேர்த்து செய்ய வேண்டும்.


12 -2-2019தை மாதம் சுக்ல சப்தமி அன்று சுத்த பவித்ர ஜலத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.அதன் பின் பக்தி பூர்வமாக பூஜை செய்ய வேணும் மாசி மாதம் க்ருஷ்ண பக்ஷ சப்தமியன்று மங்கள கலசத்தை சதுரமான செங்கல்லால் அமைத்த வேள்வி மேடையில் சூர்ய நாராயணனை நன்றாக ஸ்தாபிக்க 25-02-2019


வேண்டும்.. ஹோமத்தீயில் ஆஹூதிகள் செய்யவும் .ப்ராஹ்மண போஜனம், வேத பாடம்., நடனம், இசை போன்ற உற்சவாதிகள் செய்ய வேண்டும்.


சதுர்த்தியில் விரதமிருந்து , பஞ்சமியில் ஒரு போது சாப்பிட்டு சஷ்டி ஸப்தமியில் இரவு மாத்திரம் சாப்பிட்டு சப்தமி யன்று வேள்வி, ப்ராஹ்மண போஜனம் செய்விக்க வேண்டும். ப்ராஹ்மணருக்கும், பெளராணிகருக்கும்


நல்ல தக்ஷிணை தர வேண்டும். அஷ்டமி அன்று ரத ஓட்டம் நடை பெற வேண்டும். ரதம் நகரில் எல்லா வீதிகளிலும் சென்று வர வேண்டும். புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ சப்தமி வ்ருதம் சூரியனுக்கு மிகவும் பிடித்தமானது.5-10-2019




சூரிய பகவானுக்கு பேரிச்சம் பழம், , இளநீர், மாம்பழம், மாதுளம் பழம் சூரியனுக்கு பிடிக்கும். கோதுமை மாவில் வெல்லமும் நெய்யும் சேர்த்து நைவேத்யம் செய்தால் மிகவும் பிடிக்கும்..


4-9-2019ஆவணி சுக்ல சப்தமி யன்று அபய சப்தமி கொண்டாடப்படுகிறது.. தை மாதம் சுக்ல பக்ஷ சப்தமி அபய பக்ஷ சப்தமி வ்ரதம் 11-2-2019


. கொண்டாடப்படுகிறது. 5-10-2019புரட்டாசி மாதம் சுக்ல சப்தமி திதி அனந்த சப்தமி வ்ரதம். மார்கழி சுக்ல பக்ஷ12-01-2019


சஷ்டியில் காமத விரதம். மார்கழி மாத சஷ்டியில் மந்தார சஷ்டி வ்ருதம். மந்தார பூக்களால் அருச்சிக்க வேண்டும் .ஐப்பசி மாத சுக்ல பக்ஷ சதுர்த்தி யன்று சர்க்கர சப்தமி வ்ருதம் .ப்ராஹ்மண்ருக்கு சக்கரை அல்லது இனிப்பு தானம் செய்ய வேண்டும்.31-10-2019


மார்கழி க்ருஷ்ண பக்ஷ சப்தமி: சர்வதா சப்தமி வ்ருதம் எனப்பெயர். உப்பு எண்ணைய் இரண்டையும் சாப்பாட்டில் ஒதுக்க வேண்டும் 28-12-2018


.பங்குனி மாதம் சுக்ல பக்ஷ சப்தமி வ்ருதம் த்ரிவர்க்க சப்தமி விரதம் எனப்படும்.,நந்தா ஸப்தமி என்றும் இதற்குப்பெயர். ஸந்தான ஸப்தமி என்றும் கூறுகின்றனர் 12-4-2019


ஞாயிற்று கிழமையும் ஹஸ்த நக்ஷத்திரமும் சேர்ந்து வரும் நாளில் செய்யும் விரதம் புத்ர விரதம்.. புத்ரன் வேண்டி செய்யும் விரதம். சூரிய பூஜை செய்து மஹாஸ்வமேத மந்திரத்தை சொல்லி இரவு படுக்க வேண்டும்.29-09-2019


29-9-2019 அன்று ஞாயிற்று கிழமையும் ஹஸ்த நக்ஷத்திரமும் சேர்ந்து வருகிறது.


சுக்ல பக்ஷம், சப்தமி திதி ரோஹிணி நக்ஷத்திரம் ஞாயிற்றுகிழமை சேர்ந்து வந்தால் வட ஆதித்ய வார விருதம் எனப்பெயர் சாயங்காலம் வரை மஹாஸ்வமேத மந்திரம் ஜபிக்க வேண்டும்.. இந்த வருடம் இம்மாதிரி சேர்ந்து ஒரு நாளும் இல்லை..


ஆதித்ய ஹ்ருதய வ்ருதம்:---சங்கராந்தி ஞாயிற்றுகிழமை வந்தால் அன்று வ்ருதத்தை தொடங்கலாம். 14-4-2019அன்று சித்ரை மாத ஸங்க்ரமணம்.ஞாயிறு கிழமை. இன்று சூரிய பூஜை செய்து ஆதித்ய 16-2019;18-8-2019-17-11-2019;


ஹ்ருதயம் படித்து வழிபட வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்து ப்ராம்மண போஜனம் செய்வித்து , இரவில் வெள்ளரிக்காய் கலந்த அன்னத்தை புஜித்து , தரையில் படுக்க வேண்டும்


108 தினங்கள் இதை தொடர்ந்து செய்தால் எல்லா இஷ்டங்களும் நிறைவேறும்..


ரஹஸ்ய ஸப்தமி:--மிகவும் சிலாக்கியமானது. முந்தய பிறவிகளில் செய்த பாவங்களை போக்கவல்லது. வரும் பிறவிகளில் சிறப்பாக வாழ வகை செய்யும். குலத்தில் முன்னோர்கள்


செய்த பாவத்தையும் போக்கி அவர்களுக்கு நற்கதி அளிக்கும்.சித்திரை சுக்ல ஸப்தமியில் துவங்க வேண்டும். சதா சூரியனையே ஸ்மரிக்க வேண்டும். எல்லோருடனும் அன்பாக பழக வேண்டும்.11-05-2019


எக்காரணம் கொண்டும் எண்ணையை தொடக்கூடாது. நீல வர்ண துணிகளை அணியக் கூடாது .நெல்லிக்காய் தவிர்க்க பட வேண்டும். கலகம் எதுவும் செய்யக் கூடாது.


இந்த நாளில் வாய் பாட்டு, வீணை வாத்தியம் வாசிப்பது, நடனமாடுவது, அநாவஸ்யமாக சிரிப்பது, பெண்களுடன் படுப்பது, சூதாடுவது , அழுவது, பகலில் தூங்குவது, பொய் சொல்லுவது,


பிறருக்கு துன்பம் தர எண்ணுவது அடுத்த ஜீவனுக்கு கஷ்டம் தருவது, அதிகமாக சாப்பிடுவது துஷ்டத்தனம் சோகம், ஆகியவை கூடாது.
கோபபடக்கூடாது. கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது.


சித்திரை மாதம் துவங்கும் இந்த விரதத்தை 12 மாதங்களில் 12 ஆதித்யர்களான தாதா, அர்யமா, மித்ரன்,வருணன் ,இந்திரன், விவஸ்வான், பர்ஜன்யன், பூஷா,அம்சு, பகன், த்வஷ்டா, விஷ்ணு , ஆகியோர்களை மாதம் ஒருவராக பூஜை செய்து போஜக ப்ராஹ்மணனுக்கு நெய்யுடன் அன்னமளிக்க வேண்டும். அதன் பிறகு பாலுடன் ஸ்வர்ண பாத்திரத்தை தானம் செய்ய வேண்டும் தக்ஷிணையுடன், சூரிய லோகத்தில் வசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.


ஐப்பசி, கார்த்திகை, மாசி, சித்திரை மாதங்களீல் சிவன் அல்லது விஷ்ணு பூஜை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். ப்ரதமை திதியில் அக்கினி தேவனுக்கு சடங்குகள், ஹோமம் செய்வித்தல் போன்றவற்றை செய்வதால் தனம் தானியம் மற்றும் கோரிய பலன்கள் கிடைக்கும்.


ஆடி, ஆவணி மாதங்களில் சூரியன். ஆஷாட, கர்கடக ராசிகளில் பிரவேசிக்கும் சமயம் த்விதியை சேர்ந்தால் விஷ்ணு பூஜை மிக விசேஷம்.


ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷ த்விதியை அன்று லக்ஷ்மி நாராயண பூஜை செய்வது பல நற்பலன்கள் தரும். கணவன் மனைவி பிரிவு ஏற்படாது. பிறிந்தவர் கூடுவர். 1-9-2019.


6-6-2019வைகாசி மாதம் சுக்ல பக்ஷ த்ருதியை அன்று கங்கை ஸ்நானம் செய்வது விசேஷம், மாசி மாதம் த்ருதியையும் ரோஹிணியும் சேர்ந்தால் விசேஷம்.--
ஐப்பசி த்ருதியையில் தானம் கொடுத்தால் நற்பயன் பெருகும்.,இன்று விசேஷ சித்ரான்னங்களும் , கொழுக்கட்டையும் நைவேத்யம் செய்தல் வேண்டும்.30-10-2019


ஆவணி மாதம் புதன் கிழமையும் த்ருதியையும் சேர்ந்து அமைந்த நாளில் உபவாசம் இருப்பது நல்லது.


சதுர்த்தியும் பரணியும் சேர்ந்த நாளில் யம தேவதைக்காக உபவாசமிருந்தால் எல்லா பாவங்களும் விலகும்.


3-9-2019 புரட்டாசி மாதம் சுக்ல பஞ்சமியில் பூஜையும், உபவாசமும் சிவலோக ப்ராப்தி கொடுக்கும்.


கார்த்திகை, மாசி மாதங்களில் வரும் கிரஹணங்களின் போது குளித்து ஜப தபாதிகள் , உபவாசம் ஏராளமான நற்பயன் தரும்.


5-8-19 சிராவண மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி அன்று நாகங்களுக்கும், ப்ரதிமைகளுக்கும் பால், தயிர், சந்தனம், சிந்தூரம்,கங்கா ஜலம் மூலிகை கலந்த திரவியங்கள் கொண்டு பூஜை செய்தால் பல கோடி திரவியங்கள் கிடைக்கும். குலம் வ்ருத்தி அடையும். வம்சம் செழிக்கும்.
 

Latest ads

Back
Top