Sabta Kanniyar Thuthi

சப்த கன்னியர் துதி


ப்ராஹ்மி.


மஞ்சள் பட்டு அணியும் தேவி
கஞ்சனின் சக்தி நீயே
நெஞ்சினில் உன்னை வைத்தேன்
தஞ்சமே ப்ராம்மி தாயே!

மாஹேஸ்வரி.

சூலமே கரத்தில் ஏந்தி
ஞாலமே போற்றும் வண்ணம்
சீலமாய் வெண்பட்டுடுத்தி
முக்காலமும் காத்திடுவாய் முக்கண்ணன் தேவியே!
மாஹேஸ்வரித் தாயே!

கௌமாரி.

வாகனம் மயில் உனக்கு
வடிவேலன் துணை உனக்கு
தாராயோ அருள் எனக்கு
சீரான கௌமாரியே!

வைஷ்ணவி.

சங்கடம் யாவும் நீக்க
சக்கரம் கரமே கொண்டு
சடுதியில் வருவாய் தாயே
சரணடைந்தேன் வைஷ்ணவியே!

வாராஹி.

தண்டமுடன் கலப்பைதனை ஏந்திடும் தாயே!
சண்டையிடும் தீவினைகளை மாய்க்க வேண்டி
தெண்டனிட்டேன் வந்தருள்வாய்
அண்டம் புகழ் அம்பிகையே வாராஹியே!

இந்த்ராணி.

கருவண்ண இந்திரையே!
அருநலம் தான் உன்னருளே!
பெருங்குணமே கொண்டு காப்பாய்
தரு நிழலே இந்திராணியே!

சாமுண்டி.

புகை வண்ண தேவி நீயும்
பகை ஒழித்தருள் நாளும்
சூலமதைக் கரத்தில் தாங்கி
ஞாலமதை நாளும் காத்து
சீலமாய் வாழ வைக்கும் சாமுண்டியே!
 
Back
Top