அன்புள்ள நண்பருக்கு,
லக்னப் பத்திரிகையின் மாதிரி ஒன்றைக் கீழே தந்துள்ளேன். இது இரு குடும்பத்தினருக்கும் பொதுவான ஒன்று. இரண்டு பிரதிகள் எடுத்து இரு குடும்பத்தினரும் கையெழுத்திட்டுப் பரிமாறிக்கொள்ளுவது வழக்கம்.
லக்னப்பத்திரிக்கை வைபவம் ஒரு சமூக விழா. வைதீகச் சடங்குகளோ ஹோமம் வளர்த்து மந்திரங்கள் சொல்லுவதோ இல்லை என்று நினைக்கிறேன். மேலும் இது பற்றிய விபரங்களை விஷயம் தெரிந்த பெரியவர்கள் சொன்னால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.
கிருஷ்ணமூர்த்தி
--------------------------------------------------------------------------------
விஷயம் தெரிந்த பெரியவர்கள் சொல்ல
ஸ்ரீ ராம ஜெயம்
விவாஹ வாங் நிச்சய சுப முஹூர்த்த லக்னப் பத்திரிகை
அநேக நமஸ்காரம்.
நிகழும் மங்களகரமான .... வருஷம் ..... மாதம் ...ஆம் தேதி (--2011) கிழமை ...... திதி ..............நக்ஷத்திரம் ............யோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை மணிக்கு மேல மணிக்குள்
------------------------------------------------------------------------------
...........அவர்களின் பௌத்திரனும், ..........அவர்களின் தௌஹித்ரனும் .........
..........அவர்களின்
(ஜேஷ்ட/ கனிஷ்ட)குமாரனுமாகிய ...................(க்கு)
..................அவர்களின் பௌத்ரியும், .........................அவர்களின் தௌஹித்ரியும் ...................அவர்களின் (/கனிஷ்ட)ஜேஷ்ட குமாரியுமான
சிரஞ்சீவி
............ (க்கு) சௌபாக்யவதி
......... (யை)
கன்னிகாதானம் செய்துகொடுத்து பாணிக்ரஹணம் செய்துகொள்ளுவதாக ...... பரிபூரண கிருபையாலும், .......பீடம் ஜகத்குரு சங்கராசாரிய ஸ்ரீ ..............
பரிபூரண அனுக்ரஹத்துடனும், பெரியோர்களின் ஆசியாலும், இரு குடும்பங்களின் பரிபூரண சம்மதத்துடனும், நிச்சயிக்கப்பெற்று, விவாஹ சுப முஹூர்த்தத்தை இரு தரப்பினருக்கும் சௌகரியமான நன்னாளில் ........ மாநகரில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு, இன்று இந்த சுபமுஹூர்த்தத்தில் இங்கு கூடியிருக்கும் பெரியோர்கள், உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் முன்னிலையில் இந்தத் தாம்பூலம் நிச்சய தாம்பூலமாக இருதரப்பினருக்கிடையே பரிவர்த்தனை செய்து கொள்ளுகிறோம்.
............. இப்படிக்கு