Rahu Kala Durga Ashtakam in Tamil

praveen

Life is a dream
Staff member
ராகுகால துர்கா அஷ்டகம்


வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள்
உண்மை ஆனவள் எந்தன் உயிரை காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

செம்மை ஆனவள் துர்கா செபமும் ஆனவள்
அம்மை ஆனவள் அன்பு தந்தை ஆனவள்
இம்மை ஆனவள் துர்கா இன்பம் ஆனவள்
மும்மை ஆனவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உயிரும் ஆனவள் துர்கா உடலும் ஆனவள்
உலகம் ஆனவள் துர்கா எந்தன் உடமை ஆனவள்
பயிரும் ஆனவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

துன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையும் ஆனவள் இன்ப தோணி ஆனவள்
அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

குருவும் ஆனவள் துர்கா குழந்தை ஆனவள்
குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே
திருவும் ஆனவள் துர்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என் இடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னை தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னை காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே


கன்னி துர்க்கையே இதய கமல துர்க்கையே

கருணை துர்க்கையே வீர கனக துர்க்கையே

அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே

அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

photo_2021-11-23_08-32-54.jpg


 
Back
Top