ப்ரதிசர பந்தம்:--சொல்ல வேண்டிய மந்திரங்கள். உதக சாந்தி---சொல்ல வேண்டிய மந்திரங்கள்.
ப்ரதிசர பந்தத்திற்கு கீழே கொடுத்துள்ள இந்த வரிசை படி தான் ஜபிக்க வேண்டும்.
1. ருக் வேதத்தின் துவக்க மந்திரம்.2. யஜுர் வேதத்தின் துவக்க மந்திரம். 3. சாம வேததின் துவக்க மந்திரம். 4. அதர்வண வேதத்தின் துவக்க மந்திரம்
.5, ரக்ஷோக்னம் :-- க்ருநுஷ்வ பாஜ;ப்ரஸிதிம் தைத்த்ரீய ஸம்ஹிதையின் 1 ம். காண்டம், 2 ம், ப்ரச்னம், 14 ம் அநுவாகம் முழுவதும் இதற்கு ஜபித்தல். .மதே ஜிதஸ்ய ப்ரருஜந்தி என்ற வாக்கியத்தையும் சேர்த்து ஜபிக்க வேண்டும்.
உதக சாந்திக்கு “’மதே ஜிதஸ்ய வாக்கியம் இல்லாமல் சொல்ல வேன்டு.ம்.
6. அக்னே யச.ஸ்வின் யசஸே என்று தொடங்கும் நான்கு மந்திரங்கள்.
7. சுரபிமதீ மந்த்ரம்; ததிக்ராவிண்ணோ அகாரிஷம்—
----8. அப்லிங்கா மந்திரம்
ஆபோஹிஷ்டா மயோபுவ:=====; 9. கும்பேஷ்டகா அநுவாகம் முழுவதும்—
ஹிரண்ய வர்ணா சுசய: முழுவதும் ஜபிக்கவும். உதக சாந்தியில் முதல் எட்டு வாக்கியம் மட்டும் ஜபிக்க படுகிறது.
10. பவமான ஸூக்தம்2/3 பவமானஸ்ஸுவர்ஜன: என்று தொடங்கும்.பாமானீ.
11.வருண ஸூக்தம்: “”உதுத்தமம் வருண பாசம்என்று தொடங்குவது.
12. ஶ்ரீ ருத்ர ஸூக்தம்.பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர் வ்ருணக்து==திரண்யரூபமவஸே க்ருணுத்வம் முடிய.13. ப்ருஹ்ம ஸூக்தம்:--
ப்ரஹ்மஜஜ்ஞானம்முதல்ப்ரஹ்ம ஸமித்பவத்யாஹீதீனாம்முடிய.
14.விஷ்ணு ஸூக்தம்.:--விஷ்ணோர்நுகம் வீர்யானி+++++++த்வேஷகும்ஹ்யஸ்யஸ்தவிரஸ்ய நாம முடிய.15. துர்கா ஸூக்தம்ஜாதவேதஸே+++++வைஷ்ணவீம் லோக இஹமாதயந்தாம் முடிய.
16.ஶ்ரீ ஸூக்தம்:--ஹிரண்ய வர்ணாம்++++++தீர்க்கமாயு: முடிய. 17, நமோ ப்ருஹ்மணே++++++++ப்ருஹதே கரோமி முடிய மூன்று தடவை சொல்லவும்.
18.ஆயுஷ் காமேஷ்டி மந்திரம்.19. ஆயுஷ்ய ஸூக்தம்..
உதக சாந்தி மந்திரங்கள்.
போதாயன க்ருஹ்ய கர்ம ஸமுச்சயா, மற்றும் கனகசபாபதீய போதாயந பூர்வ ப்ரயோகம். ஆகிய இரு நூல்களிலிருந்து எடுத்து எழுதப்பெற்றது.
மூல ஸூத்ரம்:--ச்ரத்தா வா ஆபஹஎன்று தொடங்கி ஸுசகும் சமயதி என்று முடியும் மந்திரங்களை சொல்லவும்.பவித்ரமான மந்திரங்களை கொன்டு உதக சாந்தி செய்திடுக.
ஆண்டு தோறும் வரும் ஜன்ம நக்ஷத்ர நாளில் , விவாஹம், செளளம். உபநயனம், சீமந்தம் போண்ற சுப கார்யங்களின் போது க்ரஹங்கள் படுத்தாமல் இருப்பதற்காக , நவகிரஹங்கள் தோஷம் தாக்காமல்
இருப்பதற்காக மனிதர்கள், ம்ருகங்கள் பயமின்றி ஸுபிக்ஷமாக இருப்பதற்காக –உதகசாந்தி செய்ய வேண்டும். இரட்டைபடை எண்களில்
குறைந்தது நான்கு ருத்விக்குகள் நான்கு திக்குகளிலும் அமரச்செய்து உதகசாந்தி கலசத்தை ப்ருஹ்ம ஜஜ்ஞானம் என்ற மந்திரத்தை கூறி வைக்கவு,.ம்…
காயத்ரீ சொல்லி கும்பத்திற்கு பவித்ரம் சாற்றவும்.பூர்புவஸுவரோம் என்று சொல்லி கீழே அரிசி போடவும்.தர்பைகளால் கும்பத்தை மூடி
சந்நோ தேவி ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோர் அபிச்ர வனந்து ந. என்று கூறி கும்பத்தை தொடவும்.
கும்பத்தை தர்பையால் தொட்டவாறே காயத்ரீயை பாதம் பாதமாகவும் இரண்டு பாதி பாதியாகவும் மூன்று வாக்யங்களையும் மூச்சு விடாமல் சேர்ந்தால் போல் சொல்லவும்
.பிறகு நான்கு வேதங்களின் ஆரம்ப மந்திரங்களை சொல்லவும்.
ஜபிக்க வேண்டிய மந்திரங்கள்.
1. க்ருணுஷ்வ பாஜ: ப்ரஸிதிம் என்று தொடங்கும் அநுவாகத்தில் மதே சிதஸ்ய என்ற வாக்கியம் நீங்கலாக (ரக்ஷோக்னம்). அதாவது க்ருஷ்ண
யஜுர் வேதம்(தைத்தரீய சம்ஹிதை1,ம் காண்டம். 2ம் ப்ரச்னம், 14ம் அநுவாகம் முழுவதும்=( ஸ-1,2,14 மு).(ப்ரபாடகம்)
2. இந்த்ரம் வோ விஸ்வ தஸ்பரி ஹவாமஹே ஜநேப்ய: என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.( ஸ-1,6,-12 மு.).
3. யத இந்த்ர பயாமஹே.
4 ஸ்வஸ்திதா விசஸ்பதி: என்ற வாறு தொடங்கும் இரு
மந்திரங்கள்.(நாராயணவல்லி யிலிருந்து).
5 மஹாகும் இந்த்ர: ( ஸ-1,4,41&42.).
6 ஸஜோஷா இந்த்ர: என்று தொடங்கும் இரு மந்திரங்கள். (ஸ-1,4,42&43.)
7. யே தேவா: புரஸ்ஸத:என்று தொடங்கும் ஐந்து மந்திரங்கள்.( ஸ-1,8,7ல் 12ஆவது பஞ்சாதி.
8 அக்னயே ரக்ஷோக்னே என்று தொடங்கும் 5 மந்திரம்.(ஸ1,8,7-13)
அச்நிராயுஷ்மாந் என்று தொடங்கும் 5 மந்திரம்.(ஸ-2,3,10-40.
10. –யா வாமிந்த்ரா வருணா என்று தொடங்கும் 4 மந்திரங்கள். (ஸ-2,3,13,-38).
11. யோ வாமிந்த்ராவருணா என்று தொடங்கும் 8 மந்திரம்(ஸ2,3,13-38).
12 அக்னே யசஸ்விந் என்று தொடங்கும் 4 மந்திரம். ( ஸ-5,7,4-14)
13 ருதாஷாட்ருததாமாஎன்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.)
14 நமோ அஸ்து ஸர்பேப்ய:என்று தொடங்கும் மூன்று மந்திரம்.(ஸ4,2,8-35)
15 அயம் புரோ ஹரிகேச: என்று தொடங்கும் 5 மந்திரம் அநுஷங்கத்துடன்
(பஞ்சசோடா).(ஸ-4,4,3,-7&8).
16 ஆசு: சிசான;என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்(அப்ரதிரதம்)(ஸ-4,6,4,மு).
17 .சஞ்ச மே மயஸ்சமே என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும் (சமகம்) (ஸ-4,7,3 முழுவதும்)
18 மமாக்நே வர்ச்சோ விஹவேஷ் வஸ்து என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.(விஹவ்யம் ) (ஸ-4,7,14மு).
19 அக்னேர் மந்வே என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும் (ம்ருகாரம்). (ஸ-4,7,15 மு).
20 ஸமீசி நாமாஸி ப்ராசி திக் என்று தொடங்கும் ஆறு மந்திரங்கள். அநுஷங்கத்துடன் (ஸர்பாஹூதி). (ஸ-5,5,10-42&43)
.
21 ஹேதயோ நாம ஸ்த தேஷாம் வ: புரோக்ருஹா:என்று தொடங்கும் ஆறு மந்திரங்கள்.( கந்தர்வாஹூதி).(ஸ-5,5,10,-44,45,46.).
22. சதா யுதாய என்று தொடங்கும் ஐந்து மந்திரங்கள் (அஜ்யாநீ) (ஸ-5,7,2-6&7).
23. பூதம் பவ்யம், பவிஷ்யத் என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.(ஸ-7,3,-12மு).
24. இந்த்ரோ ததீசோ அஸ்தபி: என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்
அதர்வசீர்ஷம்). (சா-1,5,8மு). க்ருஷ்ண யஜுர் வேத ப்ராஹ்மனம் சாகை 1ம் அஷ்டகம், 5ம் ப்ரஸ்னம் 8ம் அநுவாகம் முழுவதும்).
25. சக்ஷுஷோ ஹேதே மநஸோ ஹேதே என்று தொடங்கி ப்ராத்ருவ்யம் பாதயாமஸி என்பது வரை (ப்ரத்யாங்கிரஸம்). ( சாகை 2,4,2,-12 டு 15).
26. ப்ராணோ ரக்ஷதி விச்வமேஜத் என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும் ( சா, -2,5,1 மு)..
27. சிகும் ஹே வ்யாக்ர உத யா ப்ருதாகெள என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும். (சா. -2,7,7,மு).
28. அஹமஸ்மி என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.(சா-2,8,8மு).
29 .தா ஸூர்யா சந்த்ரமஸா என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்
(சாகை-2,8,9மு).
30 .அக்நிர் ந ஹ பாது (சா-3,1,1,மு).
31. ருத்யா இஸ்ம (சா. 3.1.2.மு).
32. நவோ நவோ ( சா. 3,1,3 மு).என்றவாறு தொடங்கும் 3 அநுவாகங்கள்.
33. அக்னயே ஸ்வாஹா க்ருத்திகாப்ய ஸ்வாஹா என்று( ஸ்வாஹா கார மந்திரம் மட்டும்) தொடங்கும் உப ஹோம மந்திரங்கள்.( சா.3,1,4 டு 6.).
34. ததிக்ராவிண்ணோ என்று தொடங்கும் ஸுரபிமதி மந்திரம்(ஸ- -7,4,19-50.).
35. ஆபோஹிஷ்டா என்று தொடங்கும் அப்லிங்க மந்திரம். (ஸ-7,4,19டு 50).
36,. உதுத்தமம் வருண பாசம் என்று தொடங்கும் வாருணீ மந்திரங்களின் ( ஆறு ருக்குகள்,).தொகுப்பான வருண ஸூக்தம். (ஸ-1,5,11.) (1,2,8). (ஸ-3,4,11.). (ஸ 1,5,11,) ( 2,1,11).
37.ஹிரண்ய வர்ணா: ஸுசய: என்று தொடங்கும் மந்திரம்,(ஸ-5,6,1,).
38. பவமான ஸுவர்ஜன: என்று தொடங்கும் பாவமாநீ மந்திரம்.மற்றும் பூர்புவஸ்ஸுவ: என்னும் வ்யாஹ்ருதீ மந்திரம்.(சா.1,4,8,-46டு 51).
39 .தச்சம்யோ ரா வ்ருஹ்ணீ மஹே என்றும் தொடங்கும் அநுவாகம் முழுவதும் ( அருணம் 1.ம். ப்ரஸ்னம்,9ம் அநுவாகம், 40ஆவது பஞ்சாதி.
40. யோ ப்ருஹ்மா ப்ருஹ்மண என்று தொடங்கும் ஆயுஷ்ய (க்ருத) ஸூக்தம் (சில ருக்) ஆதாரம் கல்பத்தி லுள்ளது என்பர்.
பரிதானீய மந்திரம் மும்முறை ----நமோ ப்ருஹ்மனே என்று தொடங்குவது.
இவற்றை ஜபிக்கவும், ப்ரணவ மந்திரம் கூறி கலசத்தை யதா ஸ்தானம் செய்யவும்.
வ்யாஹ்ருதி முதலான மந்திரங்கள் கூறி ப்ரோக்ஷிக்கவும். எல்லோருக்கும் ப்ரோக்ஷிக்கலாம்.பணியாளர்களுக்கும். மரம்,செடி நாற்கால் ப்ராணி களுக்கும் ப்ரோக்ஷிக்கவும். . நோய்க்கு தக்கவாறு ஒன்பது நாட்கள் தினமும் இதை செய்து ப்ரோக்ஷிக்லாம்.ம்ருத்யுவையும் சமாதான படுத்தலாம்.
ஆசாரியர், ருத்விக்குகள், கர்பிணிகள் எல்லோருக்கும் ப்ரோக்ஷிக்கலாம்.
நவகிரக-தோஷம், பிணித்தொல்லை, பூதாதியர் உபத்ரவம் உள்ளவர் களுக்கும் ப்ரோக்ஷிக்கலாம்
இது மஹரிஷி போதாயனர் வாக்கு.