prayaschitha gayathri japam.

kgopalan

Active member
Sri:
भुक्त्वात् पार्वणश्राद्धं शतमष्टोत्तरं जपेत्।
त्रिंशत्सहस्रमेकाहं जपंकुर्वीत वैद्विजः॥
सापिण्ड्ये दशसाहस्रं नग्नप्रच्छादनेऽपि च।
जपेदष्टसहस्रं तु नवश्राद्धे जपेद्विजः॥
एकोत्तरेतु साहस्रं तथैवामप्रतिग्रहे।


மேற்கண்ட ச்லோகம்தான் தர்மசாஸ்திரத்தில்
“73. ச்ராத்தாதிகளில் போஜனஞ்செய்த தோஷத்திற்காக
செய்யவேண்டிய காயத்ரீ ஜபஸங்க்யாநிர்ணயம்”
என்கிற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ளது.


அதன் விளக்கமாவது--
வருடாந்திர பார்வண ச்ராத்தத்தில்
புஜித்தவர் 108 காயத்திரியும்,
11ம் நாள் ஏகாஹத்தில் புஜித்தவர் 30000 காயத்ரியும்,
ஸபிண்டீகரணத்தில் புஜித்தவர் 10000 காயத்ரியும்,
நவச்ராதத்திற்கு 8000,
ஏகோத்ரவ்ருத்திக்கு மற்றும்
ப்ரதிக்ரஹத்திற்கும் 1000 காயத்திரிகள்
ஜபிக்கவேண்டும் என காணப்படுகிறது.






இதன்படி ஸபிண்டீயில் அனைத்து ஸ்தானத்திற்கும்
10000 காயத்ரிகள் ஜபிக்கவேண்டும் என்றாகிறது.
ஆனால் வழக்கத்தில்
ப்ரேத வர்ணம் -15000
பித்ரு வர்ணம் - 10000
விச்வேதேவர் - 7500
விஷ்ணு - 4500 காயத்ரிகள் ஜபித்தால் போறும்
என்று சொல்கிறார்கள்.


7 நாள் வரை பொறுத்திருந்து அதன்பிறகு
ஜபம் ஆரம்பிக்கவேண்டும்.


ஒரு நாளைக்கு அதிகபக்ஷம் 1000 காயத்திரிக்குமேல்
பண்ணக்கூடாது, ஆனால் அதிகபக்ஷம் ஒரு
வருடத்திற்குள் பண்ணிமுடித்துவிடவேண்டும்.


இதில் கருத்துவேறுபாடுகள் உள்ளன.

taken from brahmins net.com
 
Back
Top