• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Pongal 2018

Status
Not open for further replies.
As per thrikanitha panchangam suryan enters makara rasi at 1-44 P.M. so timing for pongal pani is 1-50 p.m. onwards.
 
Tku. I understand from someone that since makara masam starts at 5 pm on 14th, sankaranthi and tharpanam should b done on 15th. Just for your info please.
 
பகலின் பகுதிகள் அதன் நேரங்கள்.


காலை 6 மணி முதல் 8-24 மணி வரை ப்ராதஹ் காலம்; 8-24 முதல் 10-48 மணி வரை ஸங்கவ காலம்; 10-48 முதல் 01-12 மணி வரை மாத்யானிஹ காலம்;1-12 மணி முதல் 3-36 மணி வரை அபராஹ்ன காலம்; மாலை 3 36 மணி முதல் 6 மணி வரை ஸாயங்காலம் எனப்பெயர்.

இந்த ஸங்கவ காலத்தின் தான் ஆரம்பிக்க வேண்டும் .:- விதை தான புண்யாஹாவசனம், ஜாத கர்மா, நாம கரணம், ஆயுஷ்ய ஹோமம். சீமந்தம், உபனயனம்,விவாஹம், சஷ்டி அப்த பூர்த்தி, சாந்தி பூஜைகள் எல்லாமே. பிறந்த நக்ஷத்திரம் அன்று இந்த 8-24க்குமேல் ஒரு மணி நேரமாவது இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் முதல் நாளே அப்த பூர்த்தி செய்தாக வேண்டும்.




11-30 மணி முதல் 12-30 மணி வரயில் உள்ளதை குதப காலம் என்று கூறுவர். இந்த நேரமே சிராத்தம், அல்லது தர்ப்பணம் செய்ய வேண்டிய நல்ல நேரம்.


சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றஒரு ராசிக்கு நுழையும் நேரத்தயே மாத பிறப்பு எங்கின்றோம்.
மொத்தம் 12 ராசிகள்; 27 நக்ஷத்திரங்கள். ஆக ஒரு ராசிக்கு இரண்டே கால் நக்ஷத்திரங்கள். சித்திரை மாத ம் பஞ்சாங்கத்தில் சூரியன் ராசி கட்டத்தில் எந்த கட்டத்தில் உள்ளதோ அதற்கு மேஷ ராசி என்று பெயர்.


வைகாசி மாத ராசி கட்டத்தில் சூரியன் ரிஷப ராசிக்கு வரும் நேரம் வைகாசி மாத பிறப்பு என்று பெயர். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுஸ், மகரம், கும்பம், மீனம் . என ராசிகளின் பெயர் பிரதகக்ஷிண மாக வரும்.12 மாதங்களுக்கும்.
இதில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளுக்கு சர ராசிகள் என்று பெயர்.சரம் என்றால் வேகமாக செயலாற்றும் குண முடையது.


ரிஷபம், சிம்மம், விருச்சிகம். கும்பம் இவைகளுக்கு ஸ்திர ராசிகள் என்று பெயர். மெதுவாக செயலாற்றும்.
மிதுனம், கன்னி, தனுஸ், மீனம் இவைகளுக்கு உபய ராசி என்று பெயர்.வேகமாக்வும் இல்லை, மெதுவாகவும் இல்லை இம்மாதிரி செயலாற்றும்.


உபய ராசிகளான புரட்டாசி, ஆனி, பங்குனி, மார்கழி மாதங்களில் சூரியன் ப்ரவேசிக்கும் போது ஷடசீதி புண்ய காலம் என்று பெயர்.
ஸ்திர ராசிகளான வைகாசி. ஆவணி, கார்த்திகை, மாசி மாத பிறப்புகளுக்கு விஷ்ணு பதி புண்ய காலம் என்று பெயர்.


சர ராசிகளான சித்திரை, ஆடி, ஐப்பசி.தை மாத பிறப்புகளில் தை மாதத்திற்கும், ஆடி மாதத்திற்கும் உத்திராயணம், தக்ஷிணாயனம் புண்ய காலம் என்று பெயர். சித்திரை ,ஐப்பசி மாத பிறப்புகளுக்கு விஷு புண்ய காலம் என்று பெயர்.


சர ராசிகளுக்கு லக்னத்திலிருந்து 11 ம் வீட்டுக்காரன் பாதகாதி பதி ஆவார்.
ஸ்திர ராசிகளுக்கு லக்னத்திலிருந்து 9 ம் வீட்டுக்காரன் பாதகாதிபதி ஆவார்.
உபய ராசிகளுக்கு லக்னத்திலிருந்து 7 ம் வீட்டுக்காரன் பாதகாதிபதி ஆவார்.


லக்னத்திலிருந்து ப்ரதக்ஷிணமாக த்தான் வீடுகளை எண்ணிகொண்டு வர வேண்டும்.


பாதகாதிபதி பாதகம் விளைவிப்பார். ஆனால் இந்த பாதகாதிபதியை லக்னாதிபதியோ, 5ம் வீட்டு அதிபதியோ, 9ம் வீட்டு அதிபதியோ பார்த்துவிட்டால் பாதகம் செய்ய மாட்டார்.


இந்த மாத பிறப்பு நேரத்திற்கு முன்பு, 6 மணி நேரமும், பின்பு 6 மணி நேரமும் புண்ணிய காலம் என்பது பொது விதி.என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
சிறப்பு விதியாக ஒவ்வொரு மாதமும் மாத பிறப்பு புண்ணிய காலம் நேரம் மாறுபடுகிறது.


மாதம்-----------------ராசி------------------புண்ய கால நேரம் .
------------------------------------- நேரம்--முன்பு------ நேரம்---பின்பு


சித்திரை-------------மேஷம்---------------4 மணி-----------------4மணி
வைகாசி--------------ரிஷபம்---------------6மணி 24 நிமிஷம்----6 மணி 24 நிமிஷம்.
ஆனி-------------மிதுனம்---------------இல்லை-----------------24 மணி .


ஆடி--------------கடகம்------------------8மணி -----------------இல்லை.
ஆவணி-----------சிம்மம்----------------6மணி24 நிமிடம்--------6 மணி 24 நிமிடம்.
புரட்டாசி------------கன்னி----------------இல்லை--------------------24 மணி.


ஐப்பசி--------------துலாம்----------------4மணி----------------------4மணி.
கார்த்திகை--------விருச்சிகம்-------------6மணி 24 நிமிடம்---------6மணி 24 நிமிடம்.
மார்கழி-------------தனுஸு-----------------இல்லை-------------------24 மணி


தை---------------மகரம்-------------------இல்லை--------------------8மணி
மாசி---------------கும்பம்----------------6மணி 24 நிமிடம்---------6மணி 24 நிமிடம்.
பங்குனி-------------மீனம்--------------------இல்லை--------------------24 மணி


மாலை 3-36 மணி முதல் ஸாயங்காலம் நேரம். ஆதலால் மாலை 3-36 மணிக்கு மேல் தர்ப்பணம் செய்யக்கூடாது. தை மாதம் 5 மணிக்கு பிறந்தது. 3-36க்குமேல் தர்ப்பணம் செய்ய க்கூடாது. மாலை


5 மணிக்கு தை மாத பிறப்பு தை மாத புண்ய காலம் இரவு ஒரு மணிக்கு முடிகிறது.


தை மாதமொன்றாம் தேதி ஸூர்ய உதயம் 6-40 மணிக்கு. ஆதலால் 1-40 மணி வரை புண்யகாலம் .பிறகு புண்ய காலம் இல்லை. ஆதலால் 15ம் தேதி செய்யக்கூடாது. இம்மாதிரி பார்த்து செய்ய வேண்டும்.


2019ம் ஆண்டு தை மாதம் 14ம் தேதி இரவு 7-50 மணிக்கு உத்திராயண புண்ய காலம். 15-01-2019 விடியற்காலை 4-30 மணி மட்டுமே புண்ணிய காலம்.


இம்மாதிரி வரும்போது 15ம் தேதி காலையில் தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். காலையில் 8-30 மணிக்கு மேல் வேலைக்கு செல்பவர்களும், 10-30 மணிக்கு ஓய்வு பெற்றவர்களும் செய்ய வேண்டும்.


மற்ற பஞ்சாங்கத்தில் பார்த்து தீர்மானம் செய்ய வேண்டும்.


இந்த கால கட்டங்களில் பொது விதியான 6 மணி நேரம் முன்பும் பின்பும் ஸரியாக வருகிறதா அல்லது மற்ற பஞ்சாங்கத்தில் தை மாத புண்ணிய காலம் வேறு நேரம் கொடுக்கப்பட்டிருந்தால் அதன் படி எப்படி வருகிறது என்றும் பார்த்து தர்ப்பண நேரம் தீர்மானிக்க பட வேண்டி இருக்கிறது.


இந்த வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தில் தை மாத பிறப்பு 1-44 மணிக்கு என்று கொடுக்க பட்டிருப்பதால் 2 மணிக்கு தர்ப்பணம், பிறகு ஸூர்ய நாராயண பூஜை 3 மணிக்குள் முடித்து சாப்பிடலாம் என தீர்மனிக்க வேண்டியிருக்கிறது. ஸூர்ய அஸ்தமனம் மாலை 5-59 மணிக்கு. இதன் பிறகும் ஸூர்ய பூஜை செய்யக்கூடாது.


தை மாத பிறப்பு தர்ப்பணம் தை மாதம் உத்திராயணம் பிறந்த பிறகு தான் செய்ய வேண்டும், ஆடி மாத தக்ஷிணாயன புண்ய கால தர்ப்பணம் உத்திராயண காலம் முடிவதற்குள் செய்து விட வேண்டும். தக்ஷிணாயனத்தில் செய்ய க்கூடாது என்றும் அந்த காலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.


ரிஷிகளும், முனிவர்களும் நமது நன்மைக்காகவே , ஜீவாத்மா பரமாத்வாவுடன் அவர்களுக்கு கலந்து விட்டதைபோல் நமக்கும் கலக்க வேண்டும் என்ற நன்மைக்காகவே எழுதி வைத்திருக்கிறார்கள்.

கூடிய வரையில் புண்ய காலம் ஆரம்பத்தில் தான் செய்வதால் பலன் அதிகம் உள்ளது. புண்ய காலம் முடிவில் செய்வதால் பலனும் குறைந்து கொண்டு வருகிறது.


இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் மற்ற பஞ்சாங்கமும் மற்ற விஷயங்களுக்கு உங்கள் வழக்கமாக உபயோகிக்கும் பஞ்சாங்கத்தையும் உபயோகிக்க வேண்டியது தான்.
 
Status
Not open for further replies.
Back
Top