P.C.Narayanan Battacharya - Tamil Brahmin - Srivaishnava - Sri Vaikanasa Archakar

Status
Not open for further replies.
திரு. மதிப்பிற்குறிய உலகளாவிய நம் தமிழ் ப்ராமண்ண சமூகத்தினர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்.. நான் சென்னை பூவிருந்தவல்லியில் பாரம்பர்யமாக வசித்து வருகிறேன்.

எனது இயற்பெயர் - ஸ்ரீமான். ஸ்ரீ.உ.வே. P.C.லக்ஷ்மி நாராயணன் என்பதாகும். எனது தகப்பானார் பெயர். ஸ்ரீமான். ஸ்ரீ.உ.வே. S.செல்லப்பா பட்டாச்சார்யார் வயது 76. எனது தாயார் பெயர். ஸ்ரீமதி. இந்திரா அம்மங்கார் வயது 64.

நாங்கள் சென்னைக்கு மேற்கே சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் சுமார் 21 கீமீ தொலைவில் (சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்) அமைந்துள்ள “புஷ்பபுரிக்ஷேத்ரம்” என வழங்கபெறும், “பூவிருந்தவல்லி”யில் சுமார் 14 தலைமுறைகளாக வசித்து வருகிறோம்.

நாங்கள் சுத்த தமிழ் பாரம்பர்ய ப்ராம்மண வகுப்பில், ஸ்ரீவைஷ்ணவ ஐயங்கார் பிரிவில் முதன்மையானதும், மிகவும் போற்றத்தக்கதுமான “ஸ்ரீவைகாநஸ அர்ச்சகர்” பிரிவை சேர்ந்த சுத்த வைதீக ப்ராம்மணர்களாவோம்.

நாங்கள் பூவிருந்தவல்லியில் அமைந்துள்ள 108 வைணவ திருத்தலங்களுக்கு இணையாக போற்றப்படும், ஸ்ரீதிருக்கச்சி நம்பிகள் &ஸ்ரீ வரதராஜ பெருமாள் சன்னதி திருக்கோவிலில் பரம்பரை அர்ச்சகர்களாக கைங்கர்யம் செய்துவருகிறோம்.

ஜ்யோதிஷமும் பரம்பரையாக பார்த்து வருகிறோம்.

எனது பிறந்த ஆண்டு 1969 ஏப்ரல் 10 ஆம் நாள் ஆகும்.

நான், தஞ்சை மாவட்டம் நாகபட்டினத்திற்கு அருகில் இருக்கும் ..( தற்போது பெட்ரோலியம் எண்ணை எடுக்கும் புகழ்பெற்ற “ நரிமணம்” ONGC க்கு) பக்கத்தில் ஓடும் “வெட்டாறு” என்கிற ஆற்றிலிருந்து சுமார் 3-வது கி.மீ.யில் அமைந்துள்ள “வங்கார மாவடி” என்கிற ஒரு அமைதியான குக்கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ”
ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸமேத ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பெருமாள்” ஸந்நதியில், தான் நான் பிறந்தேன். அதனால், எனது பெயரும் லக்ஷ்மி நாராயணன் என்றானது. ஆனால், காலப்போக்கில் எனது பெயரிலுள்ள லக்ஷ்மி மறைந்து நாராயணன் என்றானது. பிறகு, நான் எனது தந்தையின் பூர்விகமான பூவிருந்தவல்லியின் பெயரையும், எனது தந்தையின் பெயர் எழுத்தையும் இனிஷியலாக வைத்து P.C. நாராயணன் என்று அழைக்க பெற்றேன். நான் பெரியவனானதும், எங்கள் அர்ச்சக குலத்திற்கு வழங்கப்பெறும் விசேஷ டைட்டிலான “ பட்டாச்சார்யர்” ( அப்படி என்றால், இறைவனுக்கு சேவையாற்றும் (பூஜை செய்யும்) வேதங்களை அறிந்த வித்வான் என்று பொருளாகும்). என்கிற அடைமொழியையும் சேர்த்து

அரசு ரெக்கார்டு முதற்கொண்டு அனைத்திலும் பதிவுசெய்யப்பட்ட படி.....

“P.C.நாராயணன் பட்டாச்சார்யா “ என்று அழைக்க படுகிறேன்.

நான் பூவிருந்தவல்லியில் +2(phisics-chemistry-Biology-Maths) படித்துவிட்டு, மேற்படிப்பு உடன் படிக்க வசதியில்லாததால், சென்னை விவேகாந்தா பள்ளியில் அலுவலக கணக்கியல் உதவியாளராக பணிக்கு சென்றேன். பிறகு, பணியிலிருந்தபடியே, B.Com., - BCa(இரு வருடங்கள் மட்டும்) - CLIS., - Diploma in Computer Aplication., மற்றும் நம் வைதீக ஸாஸ்த்ர விஷயங்களையும் கற்று தேர்ந்தேன். பிறகு, ஒரு சில நிறுவனங்களில் தற்காலிக பணியாற்றி , பின் கோவில் நிர்பந்தம் காரணமாக, வைதீக துறைக்கு முற்றிலும் மாறினேன். பிறகு, நம் ஸாஸ்த்ர விஷயங்களை அலசி ஆராயும் ஒரு ஆன்மீக பத்ரிகைக்கு சுமார் 10 வருடங்கள் முதன்மை ஆசிரியராகவும், (அவ்வபோது பத்ரிகைகளுக்கு ஜ்யோதிஷ / ஆன்மீக விஷயங்களையும் எழுதும்) பணியாற்றி வந்தேன். எங்கள் பாரம்பர்யமான ஜ்யோதிஷத்தை நான் தற்சமயம் (அதாவது சுமார் 27 வருடங்களாக ) ஆராய்ச்சி செய்தும், மக்களுக்கு பார்த்தும் வருகிறேன். இத்துறையில் பல ஆராய்ச்சிகள் செய்து ஸாஸ்த்ர ரீதியாக பல விஷயங்களை எழுதியுள்ளேன். குறிப்பாக செவ்வாய் தொஷங்களை பற்றியும், வாஸ்துவை பற்றியும் எழுதியுள்ளேன். மேலும் மேலும் ஆராய்ச்சிகளும் செய்துவருகிறேன்.

தற்காலத்தில் பார்க்கப்படும், ஆங்கில எண்கணிதம் முற்றிலும் பொய் என்று எனது வெப் தளத்தில் (குருபலம்.காம்) விளக்கத்துடன் ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளேன். (ஆனால் எனது வெப்தளத்தை என்னால் சரியாக பராமரிக்க போதுமான நேரமே கிடைக்காததால் அது அப்படியே இருக்கிறது).

தவிர, கடந்த 7 வருடங்களாக , நம் ப்ராம்மணர்களுக்காக, வட இந்திய ஆன்மீக யாத்திரையையும் வைதீகமாக நடத்தி வருகிறேன்.

எங்கள் ஸ்ரீவைகாநஸ அர்ச்சக சங்கத்தில் சுமார் 10 ஆண்டுகள் கார்யதரிசியாகவும் பணியாற்றி வந்தேன். எனது 18 வயதுமுதல் தற்காலம் வரை நிரந்தர உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறேன்.

”ஸ்ரீசக்ரத்தாழ்வார் அறக்கட்டளை” என ஒன்றை சுமார் 35 வருடங்களுக்கு முன்பு நிறுவி அதன்மூலம் எங்கள் கோவிலில் அவ்வபோது நடைபெற்று வரும் உற்சவங்கள் / விசேஷ காலங்களில் கோவிலுக்கு வரும் நம் ப்ராம்மண( வைஷ்ணவ) ஸ்வாமிகளுக்கும், வேத/ப்ரபந்த பாராயணத்திற்கு வரும் ஸ்வாமிகளுக்கும் “ஸ்ரீவைஷ்ணவ ததீயாராதனை” ( அன்னதானம்) கைங்கர்யமும் செய்து வருகிறேன்.

எனது தகப்பனார்.. வேதங்களை கற்றும், ஸ்ரீவைகாநஸ ஆகமமும் நன்கறிந்த வித்வானானதால், வயதான / தள்ளாத வயதிலும், கூட பலரின் அன்பு அழைப்பை ஏற்று , இன்று வரை, பல ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தை சேர்ந்த பல விஷ்ணு ஆலயங்களின் “மஹா கும்பாபிஷேக” வைபவங்களில் கலந்துகொண்டும், சில கோவில்களில் தானே கும்பாபிஷேகங்களையும் முன்னின்று நடத்தியும் வருகிறார்.

எனக்கு 2 தம்பிகள் , 1 தங்கை.. எனது 2-வது தம்பிக்கும், 1 தங்கைக்கும் விவாஹமாகி குழந்தைகள் இருக்கிறார்கள் பள்ளியில் படிக்கிறார்கள்.

நான்.... 1. நம் குலத்திற்காக இலவச ஜாதக பரிவர்த்தனை கடந்த 25 வருடங்களாக செய்து வருகிறேன்.

2. ஜ்யோதிஷத்தையும் ஒரு சேவையாக எண்ணி நம் மக்களுக்காக செய்துவருகிறேன்.

3. பலருக்கு வைதீக வாத்யார் கைங்கர்யமும்( சுபத்திற்கு மட்டும்) செய்து வருகிறோம்.

4. ஸ்ரீசக்ரத்தாழ்வார் அறக்கட்டளையின் மூலமும் ஆன்மீக சேவைகளை செய்து வருகிறேன்.

5. “ஸ்ரீவிகநஸயாத்ரா” என்கிற ஒரு ஆன்மீக யாத்ரா சேவையையும் செய்து வருகிறேன்.......


” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்
வேறொன்றும் அறியேன் எந்தன் பராபரமே” .
...... என்கிற தாயுமானவரின் வாக்கிற்கிணங்க ...

நானும், எனது ப்ராம்மண சமூகத்தை சேர்ந்த நலிந்தவர்களுக்கெல்லாம் என்னாலியன்ற வரையில் எனது கடைசி மூச்சுள்ளவரை முமுமையாக சேவையாற்றி வருவதே எனது கடமை என்றெண்ணி...

இன்று வரை என்னை நம் சமூகத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டு சேவையாற்றி வருகிறேன் . . .. என்பதை மிக அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


எனது செல் :- 09962 66 1112 /
எனது இ-மெயில் :- [email protected]

என்னை எப்போதும் நம்மவர்கள் தொடர்பு கொள்ளலாம்......

நன்றி..

மீண்டும் சந்திப்போம்..
 
Status
Not open for further replies.
Back
Top