Narayana Asthiram (Narayanastra)

|| நாராயண அஸ்திரம் ||

ப்ரம்மாஸ்திரத்திற்கு அடுத்த படியாக மிகவும் சக்தி வாய்ந்த அஸ்திரம் ஸ்ரீமந் நாராயணனின் நராயணாஸ்திரம்.

உலகையே அழிக்க வல்லது !

அதைப் பற்றி பார்ப்போம் !!

அஸ்வத்தாமன் மஹாபாரத போரில் நாராயண அஸ்திரம் செலுத்தும் நிகழ்வு.

இதே போன்ற சம்பவம் மஹாபாரதத்தில் உள்ளது,

மஹாபாரதப் போர் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது.

மஹாபாரதத்தில் கெளரவர் பக்கம் இருந்த மிகபெரும் பலம் அஸ்வத்தாமன், ஆம் அவனின் பலமும் வரமும் இன்னும் சில விஷேச வரங்களும் கொண்டவர்கள் எவருமில்லை, மிக மிக அபூர்வ பிறப்பு அவன், அவன் சாகும் காலம் மானிட குலமே அழியும் காலம் எனும் வரம் அவனுக்கு வழங்கபட்டிருந்தது.

சிரஞ்சீவிகளில் அஸ்வத்தாமனும் ஒருவர்.

இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதாவது அவன் இறந்தால் மானுட குலமே அழியுமாம் இதுபோக பிரம்மாஸ்திரம், பாசுபதாஸ்திரம் நாராயண அஸ்திரம் என மும்மூர்த்திகள் வழங்கிய மிகபெரும் அழிவு ஆயுதம் அவனிடம் இருந்தது.

ஆனால் அவனின் பலம் அறிந்தோர் இருவரே ஒருவர் துரோணர், இன்னொருவர் மாயக் கண்ணன்.

இதனாலே அஸ்வத்தாமனோடு உறவாடி துரியோதனனுக்கு சந்தேகம் ஏற்படுத்தி அவன் படை தளபதி ஆகாதாவறு தடுத்தான் கண்ணனின், கை தேர்ந்த ராஜதந்திரம் அது.

துரோணர் துரியோதனனின் கொடுமதி அறிந்து அதை வெளிச் சொல்லவில்லை ஆம் அவர் நல்லவர்,

அஸ்வத்தாமனின் மிக பெரும் பலம் பற்றி அவர் அஸ்வத்தாமனுக்கோ, துரியோதனனுக்கோ சொல்லவே இல்லை, பின் விளைவுகளை அறிந்த ஞானி அவர்.

இதனால்தான் போரில் பீமன் சிங்கநிகர் அஸ்வத்தாமன் யானையினை கொன்றான் எனும் செய்தியினை யானையினை டம்மியாக்கி, பீமன் அஸ்வத்தாமனை கொன்றான் என துரோணர் காதில் தர்மனை விட்டு ஒலிக்க செய்தான் கண்ணன்.

தர்மன் சொன்னதும் பொய்யோ, வேதம் சொன்னதும் பொய்யோ என அதிர்ச்சியில் ஆயுதத்தை தவறவிட்ட துரோணரை அழித்தான் துருபதன்.

அப்போது அஸ்வத்தாமனின் தந்தையான துரோணாச்சாரியார் கொல்லப்பட்டார்.

இதனால் கடும் கோபமடைந்த அஸ்வத்தாமன் மிகவும் பயங்கரமான ஆயுதமான ‘நாராயண அஸ்திரத்தை’ பாண்டவர்கள் மீது செலுத்த ஆயத்தமானான்.

நாராயண அஸ்திரத்தின் சிறப்புகள்
மிகவும் சக்தி வாய்ந்த நாராயண அஸ்திரத்துக்கு, யாராலும் பதிலடி கொடுக்க முடியாத அளவு சக்தி வாய்ந்தது.

இந்த ஆயுதம் சாதாரண மக்களை கொல்லாமல், கையில் ஆயுதம் ஏந்திய போர் புரியக்கூடிய வீரர்களை ஒட்டுமொத்தமாக அளிக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது.

அதுமட்டுமில்லாமல் போர் புரியும் எண்ணத்துடன் இருந்தாலே அவர்களை கொல்லும் திறன் மிக்கது.

அஸ்வத்தாமன் நாராயண அஸ்திரத்தைப் பயன்படுத்த நினைத்த போது, பாண்டவரின் பக்கபலமாக இருந்த கிருஷ்ணா பரமாத்மா, பாண்டவர்களுக்கு ஒரு கட்டளையிட்டார்.

எல்லா வீரர்களும் தங்கள் கையில் வைத்திருக்கும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, கைகளை கட்டி அமைதியாக நில்லுங்கள்.

போரிடும் எண்ணமும், எதிரிகளை அழிக்க நினைக்கும் எண்ணமும் மனதில் இருந்து நீக்கி சாந்தமாக அமைதியாக இருக்க வேண்டும் என கட்டளையிட்டார்.

அப்படி யாரேனும் போர் புரியும் எண்ணத்தோடு இருந்தால் கண்டிப்பாக நாராயண அஸ்திரம், அவர்களை அழிக்கும்.

அதனால் எல்லோரும் அமைதியாக இருக்க போர் வீரர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர் உத்தரவிட்டார்.

பொதுவாக நாகாஸ்திரத்துக்கு (ஸர்ப்பத்துக்கு) எது பிரதி அஸ்திரம் என்று பார்த்தால், கருடாஸ்த்திரம்.

வருணாஸ்திரத்துக்கு பிரதி அஸ்திரம் ஆக்னேயாஸ்திரம் (அக்னி).

இப்படி ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் ஒரு பிரத்யஸ்திரம் உண்டு.

மஹாபாரத யுத்தத்தில் கோபத்தினால் நாராயணாஸ்திரத்தைப் பிரயோகம் செய்துவிட்டான் ருத்ராம்சமான அஸ்வத்தாமன்.

நாராயணாஸ்திரத்துக்குப் பிரத்யஸ்திரம் என்னவென்று அர்ஜுனன் தெரிந்துகொண்டது கிடையாது.

எதைப் பிரத்யஸ்திரமாகப் விடலாம் என்று கண்ணனைப் பார்த்து அர்ஜுனன் கேட்டான்.

கண்ணன் கூறினார்: தவறான ஆராய்ச்சி செய்வதற்கு இறங்கியிருக்கிறாயா அர்ஜுனா.

உண்மையில் நாராயணாஸ்திரத்திற்குப் பிரதி அஸ்திரம் இருந்தாலல்லவா சொல்வதற்கு !!

“அப்படியானால் அவ்வளவுதானா?

நான் வில்லைக் கீழே போட வேண்டியது தானா?” என்று பதறினான் அர்ஜுனன்.

இதற்குத்தானா நான் இத்தனை பாடுபட்டேன்?” என்று கேட்டான் ஸ்ரீகிருஷ்ணர்.

உன்னை விட்டுவிட்டுப் போவதற்காக நான் இவ்வளவெல்லாம் செய்யவில்லை என்றாராம்.

நாராயணன் அஸ்திரத்துக்கு பதிலாக, பிரதியாக நம்மிடம் பெரிய அஸ்திரம் ஒன்று உள்ளது.

அதை ஒன்றும் வசிஷ்டரிடத்திலோ அல்லது விஸ்வாமித்திரரிடத்திலோ போய்க் கற்றுக்கொண்டு வரவேண்டும் என்பதில்லை காண்டீபா

அது நமக்கே தெரியும் அந்த அஸ்திரம் என்னவென்பது.

இதைப் பற்றி அர்ஜுனனுக்கு உபதேசித்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

கிரீடத்தைக்கழற்றி.
கீழே வை காண்டீபா !

உன் கையில் உள்ள காண்டீபத்தையும் கீழே வை.

கவசத்தையும் கழற்றிக்
கீழேவை.

பாதுகையைக் கழற்று.

மண்டியிட்டுக்கொண்டு கையைக்கூப்பிக்கொள்.

அது ஒன்றுதான் அதற்கு பிரதி அஸ்திரம்.

நீ கை கூப்பும் செய்கையைச் செய்துவிட்டாயானால், நாராயணாஸ்திரம்
உன்னை எதுவும் செய்யாது.

அமைதி ஒன்றுதான் அதற்குப் பிரத்யஸ்திரமாகும்.

ஸ்ரீகிருஷ்ணரின் உத்தரவை அறியாத அஸ்வத்தாமன், நாராயண அஸ்திரத்தை செலுத்தினான்.

யாரும் போரிடும் எண்ணத்தோடு இல்லாததால் அமைதியாக இருந்ததால், நாராயண அஸ்திரத்திற்கு உண்டான நேரம் காலாவதியானது.

அதனால் அந்த அஸ்திரத்தின் வீரியம் குறைந்து அமைதியானது. ஸ்ரீகிருஷ்ணரின் சமயோஜித புத்தியால் பாண்டவர்களின் சேனை காக்கப்பட்டது.

நீதி

எல்லா நேரங்களிலும் இயல்பான நிலை இருக்காது.எல்லா நிலையிலும் போர் வெற்றியை தராது.

சிலநேரம் கோபத்தை தவிர்க்க, நாம் அமைதியாக கைகட்டி இருந்தே ஆகவேண்டிய சூழல் உள்ளது.

ராதே கிருஷ்ணா

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

1628586603265.png
 
Back
Top